Saturday, August 13, 2016

🌋 இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டதென்னிந்தியா 🌋






(குமுதம் - 17/08/2016)

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

#புலித்தேவன், #மருது_சகோதரர்கள், #மருது_பாண்டியர், #வேலு_நாச்சியார், #கட்டபொம்மன், #சிப்பாய்_கலகம், #வேலூர்_கலகம், #பழசிராஜா, #சென்னம்மா, #கிட்டு_ரெட்டி, #RoleofSouthIndiainthefreedommovement

posted from Bloggeroid

Thursday, August 11, 2016

சில முக்கிய தகவல்தாள்கள் - இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியிலிருந்து

நடந்து முடிந்த இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சிக்கு சென்றிருந்த போது எனக்கு கிடைத்த விளம்பர மற்றும் தகவல் தாள்களில் சில முக்கியமானவற்றை இங்கே இணைத்துள்ளேன்:



🌼 ஸ்ரீஸ்ரீ-யில் கிடைத்த Ecozyme தயாரிப்பு மற்றும் உபயோகிப்பு பற்றிய தகவல் தாள். எனக்கு கிடைத்த தகவல்களிலேயே மிக முக்கியமானதாக நான் கருதுவது இதைத் தான். 👌 இதைக் கொண்டுதான் ஸ்ரீஸ்ரீ சேவைக் குழுமம் டில்லியில் ஓடும் யமுனை நதியினை சுத்தப்படுத்திக் கொண்டிடுக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.



🌼 ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் பற்றிய தகவல்தாள். இவர்களிடம் எங்கும் மலிந்து கிடைக்கும் தாவரவகைகள் முதல் மிகவும் அரிதான தாவரவகைகள் வரை பல்வேறு வகையான தரமான கன்றுகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. சென்னையில் மாதவரம் பால் பண்ணைக்கருகில் அவர்களது விற்பனையகம் உள்ளது. செங்கல்பட்டில் அவர்களது பெரிய விற்பனையகம் இருக்கிறது.

இன்று இப்புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை நம் புவியின் வெப்பத்தையும் & மாசையும் குறைப்பதாகும். நகர (நரக) வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு, "தனது வேலைகளை எவ்வளவு தூரம் தானே செய்யாமல் மற்றவர்களை வைத்து செய்கிறானோ அவனே பெரிய ஆள்" என்ற கொள்கை உடைய சமூகத்தில் வாழ்ந்துகொண்டு நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் மரங்களை நட்டு வளர்ப்பதே! 😔


🌼 திருவெண்காட்டிலிருந்து செயல்படும் சிவா நர்சரி கார்டனின் தகவல்தாள். "மேற்சொன்ன பரந்த கொள்கைகள் எல்லாம் எனக்கில்லை. மரம் வைப்பதால் எனக்கென்ன லாபம்?" எனக் கேட்கும் சுயநல பார்ட்டிகளையும் மரம் வைக்கத்தூண்டும் ஒரு வழிதான் நட்சத்திரம், ராசி, கோள், திசை முதலிய தூண்டில்கள். 😀 எப்படியாவது புவிப்பந்தின் பசுமைப் போர்வை வளர்ந்தால் நல்லது!


🌼 "இணையத்தில் சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயில்" - என்ன ஒரு கம்பீரமான எழுச்சித்தரும் வாசகம். 👏👍 இந்த வாசகத்துக்குரிய இணையதளம் (இணைய கோயில்) - www.shaivam.org. இதற்குப் பின்னணியில் இருப்போர் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களது உழைப்பை (இணையதளத்தை) உபயோகப்படுத்துவதே! 🙏

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid

Wednesday, August 10, 2016

கண் திறந்த யேசுநாதர் சிலை 😂


இதுவே இங்கே சாய்பாபா படங்களிலிருந்து விபூதி வெளிவந்தாலோ, பிள்ளையார் சிலைகள் பால் குடித்தாலோ, மூடநம்பிக்கை, முட்டாள்தனம், அறிவிலிகள் என்றெல்லாம் படம் காட்டியிருப்பார்கள் இந்த பரங்கி பன்னாடைகள்!! 😂

அங்கே நடந்தால் Miracle! அதை ஆராயும் முண்டங்களுக்கு Paranormal Investigators என்று பட்டம்!! 😠

எனக்கென்னவோ இதே "அற்புதம்" இங்கே நடந்திருந்தாலும் இந்த பன்னாடைகள் ஏற்றுக் கொண்டிருக்காது என்றே தோன்றுகிறது. 😕

யேசுநாதருக்கும் இந்தியாவுக்கும் உள்ளத் தொடர்புகளை (அவர் கற்றது காசியில் அத்வைதம் & திபெத்தில் பெளத்தம்; போதித்தது அத்வைதம்; மன்னர் சாலிவாகனன் சபையை அலங்கரித்தது; மற்றும் பல) மறைத்தும், மறுத்தும் வரும் திமிர் பிடித்த கூட்டம் தானேயிது! 😡

posted from Bloggeroid

Monday, August 8, 2016

🔥 மகான் மன்சூர் அல்-ஹலாஜ் 🔥



(ஈஷா காட்டுப்பூ - ஆகஸ்ட் 2016)

காட்டுமிராண்டிகளிடம் போயா "அகம் பிரம்மாஸ்மி" என்பார்! 😕

🍺 எனது சொர்க்கத்தில் 2 ஒயின் ஆறுகள் ஓடும் (அங்கே 1 தான் 😉),
🍹 எனது சொர்க்கத்தில் மேலாடையும் கீழாடையும் இல்லாத அழகான பெண்கள் சேவை புரிவார்கள் (அங்கு மேலாடை மட்டும் இருக்காது, கீழாடை இருக்கும் 😀),
🍸 குளிக்கவே தேவையில்லை (அங்கு மழிக்க மட்டும் தேவையில்லை 😁)
🍷 8 பெண்களை "மணமுடிக்கலாம்" (அங்கு 4 தான் 😁)
🍻 "த" என்ற 1 எழுத்தை 1 முறை சொன்னாலே விவாகரத்து கிடைத்துவிடும் (அங்கு 3 எழுத்து வார்த்தையை 3 முறை சொல்லவேண்டும். எவ்வளவு கடினமான செயல். 😂)

என்பன போன்ற மார்க்கப் பற்று ஏற்படும்படியான விதி முறைகளை வகுத்துக் கொடுத்திருந்தால், பிழைத்திருப்பார்! அல்லது, நம் மண்ணிலேயே சமாதியாகியிருக்கலாம். நமக்கு ஒரு புனிதத்தலம் கிடைத்திருக்கும். 🙏

posted from Bloggeroid

Saturday, August 6, 2016

தலைவர் மாற்றிப் படித்துவிட்டார் என்று நினைக்கிறேன்!! 😉


(தினமலர் - சென்னை - 06/08/2016)

கடந்த 69 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி மற்றும் இடஒதுக்கீடு திட்டங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை பட்டியலிட்டுவிட்டார்!! 😂

💥 பல ஜாதி மாணவர்கள் கடினமாகப் போராடுகையில், சில ஜாதி மாணவர்கள் சுலபமாக கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இடம்பெற முடிவதால், மாணவர்களிடையே பாகுபாடு, சலிப்பு மற்றும் சோர்வு.
💥 பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு, மொழிக்கு இந்தியக் கதவுகளைத் திறந்துவிட்டதால் குருவந்தனம் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாமல் போய்விட்டது. ஆசிரியர்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. அடாவடி செய்யும் மாணவனை கண்டிக்க இயலாமல் அதே சமயம் தமது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் ஆசிரியர்கள் சலிப்பும் சோர்வும் அடைந்துள்ளனர்.
💥 ஊரை அடித்து உலையில் போட்ட அரசியல்வியாதிகள் கையில் கல்வி மாட்டிக்கொண்டதால், அது வியாபாரமாகி, மீள முடியாத நிலைக்குச் சென்று, நமக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதால் ஆசிரியையைக் கொல்லும் மாணவனும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவனோடு ஓடிப்போகும் ஆசிரியையும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவியை கர்ப்பமாக்கும் ஆசிரியனும், 5வது மாடியிலிருந்து நாயை தள்ளிவிட்டு சிரித்து மகிழும் மருத்துவனும் தான் கடந்த 69 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி திட்டத்தால் விளைந்த சிறந்த விளைவுகள்!! 😡😡😡

கல்வியைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அருமையான விளக்கம்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது!! 👏👌👍

இந்த இரத்தின வார்த்தைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாக்கப்படும் எந்த கல்வி திட்டமும் வியாபாரமே - மெக்காலே திட்டமே!

posted from Bloggeroid

Tuesday, August 2, 2016

8வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - 2016



ஏ.எம். #ஜெயின் #கல்லூரி வளாகம்
மீனம்பாக்கம்
சென்னை

(ஹோண்டா கார்கள் விற்பனையகத்திற்குப் பின்புறம்)

ஆகஸ்ட் 3 - 8 வரை
காலை 9:30 - மாலை 8:00

posted from Bloggeroid