என்னப்பா, டிசம்பர் 25கூட வந்துவிடும் போலிருக்கிறது, இன்னும் "I am that I am" சடங்கு நடக்கவில்லையே? 🤔
இன்று காகிதத்தாலும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலாலும் துடைத்துக் கொண்டிருந்த 🤢-இனமான வெள்ளை நரித்துவயினம், ஒவ்வொரு டிசம்பர்-25 சமயத்தில் ஒரு பிட்டை வெளியிடும். அதாவது, அவர்களது டுபாக்கூர் புத்தகத்திலுள்ள "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை சரியாக குறிப்பிடுவதாக பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ அருளியுள்ளார் என்று பில்டப் கொடுக்கும். எந்த சூழ்நிலையில், யாருக்காக சொல்லப்பட்டது என்ற தகவல்களை மறைத்துவிட்டு, மேற்கண்ட பிட்டை மட்டும் சமூகவலைத்தளங்களில் சுற்றிவரவைக்கும்.
தன்னிடம் வருகின்றவர்களின் மனநிலைக்கேற்ப பகவான் பதிலளிப்பார். வந்திருப்பவர் உண்மையான தேடுதலிருப்பவர் எனில் சரியான வழியைக் காட்டுவார். வந்திருப்பவர் ஏடாகூடமானவர் எனில் அவர் விரும்பும் பதிலையளித்து கிளம்ப வைத்துவிடுவார். அல்லது, பேசாமலும் இருந்துவிடுவார். ஒரு முறை, தன்னிடம் வந்த குறிமதக் கூட்டத்திடம், அவர்களது புருடானில் இருப்பவைதாம் பகவத்கீதையிலும் இருப்பதாகக் கூறினார்! 😛
"I am that I am" பிட்டில் குறிப்பிடப்படும் நிகழ்வு நடந்தபோது நிலவிய சூழ்நிலை பற்றி எந்த தகவலுமில்லை. பகவானிடம் வந்த பரங்கியர்களில் ஒரு சிலரே உண்மையான தேடுதலுடன் வந்தவர்கள். ஏனையோர் பகவானை ஆழம் பார்க்க, தங்களது தசமபாக தொழிலே சிறந்தது என ஊழியம் செய்ய, உளவாளிகளாக, உள்ளூர் குட்டையை குழப்ப வந்தவர்களே!
எல்லாவற்றிற்கும் மேலாக, "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை தெளிவாக குறிப்பிடுகிறதென்று பகவான் நினைத்திருந்தால்,
தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "அருணாசலா"
என்று பாடாமல்,
தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "I am that I am"
என்று பாடியிருப்பாரே! 😂
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக பகவான் பயன்படுத்திய சொற்களில் சில:
நான், தான், உள்ளபொருள், தந்தை, அப்பன், அண்ணாமலை, அருணாசலம்
🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽♂️ பயன்படுத்திய சொற்களில் சில:
வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், [பொறிவாயில்] ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், மாசிலன், வாய்மை, தூய்மை, பகவன்
சொற்களுக்கு அப்பாற்பட்ட உள்ளபொருளை சொற்களால் விளக்கமுடியாதென்பதால் குறிப்பால் உணர்த்த முயற்சித்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இப்பெயர்கள் உள்ளபொருளுக்கும் பொருந்தும்; உள்ளபொருளாய் சமைந்த பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கும் பொருந்தும்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌸🌸🌸🌸