#விழாநாதர் (#உற்சவர்) #நம்பெருமாள் (சிலை) திரு நம்மாழ்வாரைக் குறிக்கும். விழாநாதர் வடக்கு வாசல் (வைகுந்த/சொர்க்க வாசல்) வழியாக வெளிவருவது என்பது நம்மாழ்வார் அவரது கபாலத்தின் வழியே வெளியேறியதை (கபால மோட்சம்) குறிக்கும்.
விழாநாதருடனோ அல்லது தனியாகவோ வடக்கு வாசல் வழியாக வெளிவந்துவிட்டால் #நிலைப்பேறு (#வைகுண்டம்) நமக்கு கிடைத்துவிடுமா? உறுதியாக கிடைக்காது!!! 😀
மனம் அழிந்தால் மட்டுமே நிலைபேறு கிடைக்கும். மனதை அழிக்காமல், யோகப் பயிற்சியினால் கபால பிளவு ஏற்பட்டு, அதன் வழியாக உயிர் வெளியேறினாலும் நிலைபேறு கிட்டாது (எ.கா.: திரு காவியகண்ட கணபதி முனிவர்). மேலும், மனம் அழிந்த பின்னர் உயிர் எப்படி வெளியேறினால் என்ன? குடம் உடைந்த பின்னர், குடத்தின் உள்ளும் புறமும் எப்படி கலந்தால் என்ன?
திரு நம்மாழ்வார் போன்ற மெய்யறிவாளர்களை வணங்குவது, போற்றுவது, மரியாதை செய்வது என்பது அவர்களது அறிவுரைகளை கசடறக் கற்று, அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதேயாகும்.
யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே
(திருநம்மாழ்வார், 3107, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)
பதம் பிரித்து...
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே
இப்பாடல் முழுவதும் அத்வைதம் வெளிப்படும். ஆனால், வைணவத்திற்கு ஏற்றவாறு பொருள் கூறியிருப்பார்கள்!! 😀 இது பற்றி #பகவான் திரு #ரமணர் அருளியதை கீழே இணைத்துள்ளேன். (Day by Day with Bhagavaan, Dhevaraaja Muthaliyaar)
🌼🌷🌺🌻🌼
திரு நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு இவ்வளவு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், *அவர் சமாதியானது திருக்குருகூரில்* (#ஆழ்வார் #திருநகரி) தான். திருவரங்கத்தில் (மூலவருக்கு கீழே) சமாதியாகி உள்ளது 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌸🙏 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வார். பின்னர் வந்த ஆச்சார்யார்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.
🌼🌷🌺🌻🌼
ஏகாதசியன்று பட்டினி இருந்து, துவாதசியன்று அயல்நாட்டுக் காய்கறிகளை தவிர்த்து, உள்ளூர் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்து உண்ணுவது என்பது உடல்நலம் சார்ந்தது. பட்டினி கிடந்து உடல் வாடும் போது, மனதின் குவியும் திறன் அதிகரிக்கின்றது. இதைப் பயன்படுத்த தெரியாவிட்டால் ஆன்மிக பலன் ஏதும் கிடைக்காது. மற்றபடி இதற்கும் வைணவத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. இதே போன்றது தான் ஏனைய மற்ற நாட்களும் (பிரதோஷம், சஷ்டி, "அமாவாசை முழுஇரவு உபவாச ஜெபம்" 😁).
#உபவாசம் எனில் "அருகில் இருத்தல்". எதனருகில்? "நான் என்னும் தன்மையுணர்வின்" அருகில்! இறை, இறையுணர்வு என்பதெல்லாம் இதுவே. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் நமது கவன ஆற்றலை (மனம் - அனுமார்) வெளிப்புறமாகவே இருக்கச் செய்துவிடும். இந்த கவன ஆற்றலை நம் மீது திருப்பி, நமதியல்பை சற்று நேரமாவது உணரவே தினசரி வழிபாடு, பூசை என சில ஏற்பாடுகளும், அடுத்த நிலையாக மாதத்தில் ஒரு சில நாட்கள் அருள் பெறவும் (#அருள் எனில் அருகில் இருத்தல்; இறையுருவிற்கு போடப்படும் மலர்மாலை எவ்வளவு அருகில் உள்ளதோ அவ்வளவு அருகில்) உடல் சீராகவும் ஒதுக்கி வைத்தனர் (இன்று, தினசரி மனதைக் கெடுத்துக் கொள்ள திறன்பேசிகளும், மாதம் சில முறை உடலை கெடுத்துக் கொள்ள உணவகங்களையும் தேடிச் செல்கிறோம் 😝).
🌼🌷🌺🌻🌼
💮 #திரு எனில் தன்மையுணர்வில் நிலைபெறுதலைக் குறிக்கும். மெய்யறிவாளர்களுக்குப் (ஞானிகளுக்கு) பொருந்தும்.
💮 #சைவம் எனில் அசைவற்று / உள்ளும் புறமும் ஒன்றுபட்டு என்று பொருள். சைவர்கள் அணியும் உருத்திராக்கம் அசைவற்றத் தன்மையைக் குறிக்கும். காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாத அசையாத வெண்திரை போன்றவர்கள் என்று பொருள்.
💮 #வைணவம் எனில் உள்ளும் புறமும் அற்று என்று பொருள்.
(சைவம் - கிறிஸ்டோபர் நோலன், வைணவம் - முருகதாஸ் 😁)
posted from Bloggeroid