Sunday, July 31, 2016

பரங்கியர்களுக்கு ஏன் காளிதேவியின் மேல் இவ்வளவு அக்கறை? 😕


(தினமலர் - சென்னை - 03/07/2016)

💥 முதலில் பெரிய கருங்காலிகளை தேவையான இடங்களில் (அரசாங்கம், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்) உட்கார வைத்துவிடவேண்டும்.

💥 அடுத்து, சிறிய கருங்காலிகளை வைத்து யாரும் அறியாதவாறு, இவர்களுக்கு ஏற்றவாறு (அதாவது, "இந்து சமயத்தை, கலாச்சாரத்தை, வரலாற்றை அழிக்கவேண்டும்" என்ற குறிக்கோளுக்கு ஏற்றவாறு) ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதவைக்கவேண்டும்.

💥 அடுத்து, பெரிய கருங்காலிகள் அந்தக் கட்டுரைகளை ஏற்று, அங்கீகரித்து பதிப்பிக்கவேண்டும்.

💥 பின்னர், அவற்றை உலகின் முக்கியமான பகுதிகளில், முக்கியமான கல்வியாளர்களின், சிந்தனையாளர்களின் (அதாவது, பரங்கிநாடுகளில் அமர்ந்து கொண்டு மற்ற நாடுகளை, கலாச்சாரங்களை, சமயங்களை எவ்வாறு அவர்களைக் கொண்டே சிதைக்கலாம், அழிக்கலாம் என்று சிந்திக்கும் மேதாவி பரங்கியர்களின்) பார்வையில் படும்படி ஏற்பாடு செய்யவேண்டும்.

💥 அந்த கல்விமான்கள், சிந்தனையாளர்கள், மேதாவிகள் அவற்றை போற்றிப் புகழவேண்டும்.

💥 அடுத்து, பன்றி டோனிகர் என்பது போன்ற "அமெரிக்க வாழ் இந்தியலாளரை" வைத்து புத்தகம் எழுத வேண்டும். 😛

💥 அடுத்து, அந்தப் புத்தகங்களை "த சிண்டு" போன்ற தேசிய வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😜

💥 அடுத்து, அந்தப் பன்றி டோனிகரின் புத்தகத்தை தமிழாக்கம் செய்யவேண்டும். அதை "த தமிழ் சிண்டு" போன்ற மாநில வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😝

💥 அடுத்து, இதை வைத்து மற்ற வேசி ஊடகங்கள் வழியாக "இதெல்லாம் சரி போலிருக்கிறது" என்ற மாயையை / சலசலப்பை ஏற்படுத்தவேண்டும்.

அப்புறமென்ன? சட்ட திட்டங்கள் மாறும், இடஒதுக்கீடு மாறும், புது கருங்காலிகள் சேர்வர், .... 😠

மேலோட்டமாகப் பார்த்தால், நமது சமயத்தை அளித்துவிட்டு அவர்களது மதத்தை பரப்புவதாகத் தோன்றும். ஆனால், அவர்களது உண்மையான திட்டம் நம்மை ஆட்டு மந்தைகளாக்குவது தான். அவர்கள் அசையச் சொன்னால் நாம் அசைய வேண்டும். எதை வாங்கச் சொல்கிறார்களோ அதை வாங்க வேண்டும். யாரை அவர்கள் ஆட்சியில் அமரவைக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு நாம் ஓட்டுப் போடவேண்டும். "இன்று 1 கோடி மேகி குப்பை தயாரித்து விற்கப்பட வேண்டும்" என்று பரங்கியர்கள் ஆணையிட்டால்,
நாமே தயாரித்து,
நாமே விற்று,
நாமே வாங்கிச் சாப்பிட்டு,
நாமே அவனது ஆங்கில மருத்துவரிடம் சென்று,
நாமே அவனது ஆங்கில மருந்துகளை வாங்கி உண்டு, ஏற்படும் பக்க விளைவுகளை சரி செய்து கொண்டு ஓரளவு பணம் சேர்ந்தவுடன்,
நாமே அவர்களது நாடுகளுக்குச் சுற்றுலா சென்று, சம்பாதித்தை அவர்கள் நாட்டிலேயே தீர்த்துவிட்டு ...
மீண்டும் 1 கோடி மேகி குப்பை தயாரிக்க ஆணை வராதா என ஏங்கி ...

புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 😉

நமக்கு நமதைப் பற்றிய சரியான அறிவு இல்லாததாலேயே பரங்கிகளால் இவ்வளவு தூரம் ரோடு போட முடிந்திருக்கிறது. ஆகையால், காளிதேவியைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி - காளம் - கருமை - கருப்பு ("காத்து கருப்பு"-ல் உள்ள கருப்பு).

(இவரை சிவனின் அம்சம் என்பார்கள். அந்த சிவன் மேலேயே நிற்பது போன்று வரைந்தும் இருப்பார்கள். வேறொரு இடத்தில் சக்தியின் அம்சம் என்பார்கள். பெருமாளின் சகோதரி என்பார்கள். ஏன் இப்படிக் குழப்புகிறார்கள் என்று பின்னர் பார்ப்போம்.)

அண்டத்தில் உள்ள கருப்பான "வெளி"யே இவர். பரங்கி அறிவியல் இவரை Dark Matter / Energy என அழைக்கும். அவர்களுக்கு இவரைப் பற்றி இன்னும் புரியவில்லை. நம்மவர்கள் இவரை ஆராய்ந்து, புரிந்து, உணர்ந்து உருவமில்லா இவரும், உருவமுள்ள ஏனையப் பொருள்களும் ஒன்றே (சிவனும் சக்தியும் ஒன்றே) என்று படைப்பின் உச்சந்தொட்டார்கள். 👍

உருவமில்லா கருந்துகள் (Dark Matter) சிவம் (மொத்த அண்டமும் சிவம்தான் - ஒரே இறைவன் தான்; நிலைகளை விளக்கும் போது, முதல் நிலை சிவம் என்றும், முதல் பொருள் கருந்துகள் என்றும் பெயரிட்டுள்ளனர் நம் பெரியோர்). இந்தத் துகள் உருவநிலையை அடைய (சக்தியாக) தேவையான விசை காளி எனலாம். அல்லது, உருவமில்லா (அருவ) நிலையிலிருந்து உருவநிலையை அடையும் முன்னர் உள்ள ஒரு மிகச்சிறிய நிலை காளி எனலாம்.

அருவ நிலையிலிருந்து (சிவ நிலையிலிருந்து) கணக்கிடும் போது இவர் சிவனின் அம்சமாகிறார். உருவ நிலைக்கு (சக்தி நிலைக்கு) முன்னர் என்று கணக்கிடும் போது இவர் சக்தியின் அம்சமாகிறார்.

அண்டத்திலுள்ள அத்தனை விஷயங்களும் அருவத்திலிருந்து காளி நிலை வழியாக உருவ நிலைக்கு வந்திருப்பதால் அனைத்திற்கும் இவர் அன்னையாகிறார். "யாதுமாகி நின்றாய் காளி" என்றார் முண்டாசு கவிஞர். இப்படி அனைத்தையும் இவரே செய்வதால், சிவன் படுத்துக் கிடப்பதைப் போலும், காளி அவர் மேல் நின்று கொண்டிருப்பது போலும் வரைந்த ஓவியங்களைக் காணலாம்.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது". நம் பிண்டத்தில் எங்கு காளி வருகிறார் என்று பார்ப்போம்.

"நான் இன்னார்" என்பதே அனைவரின் பொதுவான அனுபவம். இன்னார் என்பது நம் உடல், அது பிறந்த குலம் & கோத்திரம், அதன் படிப்பு, அது பெற்றிருக்கும் பதவி மற்றும் பல. ஆனால், உண்மை இதுவல்ல! நாம் இவ்வுடலல்ல!! இவ்வுடல் நமது உடமை மட்டுமே. நமது உடமை நாமாக முடியாது. இந்த "இன்னார்" கழண்டு "நான்" மட்டும் தனியாக நிற்பதே ஞானம் (அறிவு) எனப்படும். இந்த ஞானம் அனுபவமாகும் முன்னர் பயம் தோன்றும். இது எமபயம் எனப்படும். திருக்கடவூரில் சமாதியாகியிருக்கும் மார்க்கண்டேய மகரிஷியின் வரலாறு இந்த எமபயத்தை முக்கியப்படுத்திக் காட்டும்.

இந்த பயத்தை தாண்டியவுடன், இலக்கை நோக்கி ஒரு வித வெறி & கோபத்துடன் நம் சாதனை தொடரும். இறுதியாக, இறை நிலைக்கு (சிவநிலைக்கு) அருகில் (சாமீபம்) சென்றவுடன் பிரமித்து நமது சாதனை நின்று போகும். அக்கணம் உள்ளிருந்து ஒரு சக்தி தோன்றி நம்மை (நமது தனித்துவத்தை) கபளீகரம் செய்துவிடும் (ஆட்கொண்டுவிடும்). "நான்" "தானாகி" விடும்!!

மேற்சொன்ன சாதனையில், தோன்றும் வெறி "பைரவர்" எனப்படும். கோபம் "காளி" எனப்படும். அருகில் சென்றவுடன் தோன்றும் பிரமிப்பு "சமிசீனா" எனப்படும். சாதனை நின்று போதல் "சரணாகதி" எனப்படும். ஆட்கொள்ளுதலே "ஞானமடைதல் / சாயுஜ்யமடைதல் / பரலோகமடைதல் / இறைவனின் திருவடியடைதல் / கைலாச பதவியடைதல் / வைகுண்டம் செல்லுதல் / நிர்வாணம் (பெளத்தம்) / சொர்க்கம் செல்லுதல் (Heaven - கிறித்துவம்)" என பலவாறு அழைக்கப்படுகி்றது.

பிரமிப்பு எனப்படும் சமிசீனா நிலையில் இருப்பவர், "அம்மையே" என்று ஸ்ரீகைலாசபதி (கைலாசத்தில் சமாதியாகியிருக்கும் மகான்) அழைக்கும் பேறுபெற்ற காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டில் இவர் சமிசீனாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இதற்கு பொருள் "அருகிலிருந்து வியந்தவள்". "இறைவனுக்கு / இறைநிலைக்கு அருகிலிருந்து வியந்தவள்" என விரிக்கலாம்! 🙏

சாதாரண கோபத்தினால் பாதிப்புகள் தான் ஏற்படும். ஆனால், காளி எனும் கோபத்தினால் சிவநிலையே கிட்டும்.

சிவனை சுடுகாட்டில் வசிப்பவர் என்பர். அதாவது, சிவனுக்கு (ஞானிக்கு) இவ்வுலகம் எரிக்கப்பட்டு உருக்கலையாத சாம்பல் போல் தோன்றும். சிவனின் அம்சம் காளி என்பதால் காளிக்கு சுடுகாட்டின் மற்ற அடையாளங்களான மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள் என அணிவித்துவிட்டனர்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி வழிபாடு தான் வைணவத்திற்கு அடிப்படை! இதனால் தான் காளி பெருமாளுக்கு (பெருமைக்குரிய / பெரிய ஆள் = விஷ்ணு = விண்டு = விண்) சகோதரியாகிறார்! ☺ சமண பெளத்த மதங்கள் தங்கள் மதிப்பை இழந்ததும், சைவத்திற்குள் நுழைய முடியாது என்ற காரணத்தினால், பெளத்தத்திலிருந்து ஒரு கூட்டம் இதற்கு மாறியது. பெண்ணை ஆணாக மாற்றியது. ஆணைப் பெண்ணாக மாற்றியது. பெண்ணை ஆணின் பாதத்தில் வைத்தது. சிவலிங்கம் என்ற வார்த்தைக்கு "சிவநிலையில் இருப்பவரின் அடையாளம்" என்ற பொருளை ஒதுக்கி "வேறு" பொருள் கற்பித்தது. அது தோண்டிய குழியில் அதுவே விழுந்தது. அவர்கள் கற்பித்த "வேறு" பொருளுக்கு சமமான "ஒரு" அடையாளத்தை போட்டுக்கொண்டது. 😬 எதற்காக இவ்வளவு திள்ளுமுள்ளுகள்?

இக்கேள்விக்கான பதிலும், மேலே நான் எழுப்பிய "ஏன் இப்படி குழப்புகிறார்கள்?" என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றே: மனிதனின் சுயநலம், பேராசை, சோம்பல், குறுகிய சிந்தனை மற்றும் தான் & தனது விஷயங்கள்.

மன்னனின் வரி வருமானத்தில் ஒரு பங்கும், மக்களின் வருமானத்தில் ஒரு பங்கும் சமூகத்தின் வழிகாட்டிகளுக்கும், அறிவு வங்கிகளுக்கும் செல்லும். (ஐயர்கள், பிராமணர்கள், பரதேசிகள், பண்டாரங்கள், போதகர்கள் என்போரைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்). எல்லா மத அமைப்புகளும் எப்போதுமே முக்கோண வடிவம் தான்! இருப்பது ஒரு பெரிய முக்கோணம் என்று வைத்துக் கொண்டால், மன்னனும் மக்களும் கொடுக்கும் பணம், அந்தப் பெரிய முக்கோணத்தின் மேலிருந்து கடை நிலைக்கு வருவதற்குள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விடும். ஆகையால், ஆட்டம் தெரிந்தவர்கள் ஒரு புது முக்கோணத்தை ஆரம்பித்து, தனியாக கல்லா கட்டுவார்கள். இன்று அரசியல் கட்சிகளில், ஜாதி அமைப்புகளில், தொழிலாளர் நலச்சங்கங்களில் இது நடப்பதைக் காணலாம்.

"தான் உழைக்கக் கூடாது. அதே சமயத்தில் சமூகத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும். மற்றவர் தன் சொல்படி நடக்க வேண்டும். தான் என்ன செய்தாலும் அதை எல்லோரும் பெருமதிப்புடன் பார்க்கவேண்டும்." என்பன போன்ற சுயநலக் கொள்கைகள் தாம் முக்கோணங்கள் உருவாகக் காரணங்கள். அன்று ஜின்னா இந்தியாவை பிரித்ததற்கும் இதுவே காரணம். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவானதற்கும் இதுவே காரணம். 😡

இந்த "சமூக ஒட்டுண்ணிகளான" முக்கோண அமைப்புகள் சமண & பெளத்தர்களிடமிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. இவர்களின் வருகைக்கு முன் அப்படி ஒரு தேவை இருந்ததாகத் தெரியவில்லை. திருவள்ளுவரின் மனைவியாகிய வாசுகி அம்மையாருக்கும் கொங்கணவ சித்தருக்கும் நடந்த உரையாடலே இதற்கு சான்று ("கொக்கென்று எனை நினைத்தாயோ, கொங்கணவா?").

ஒரு சாதாரண இல்லத்தரசியும், இறைச்சித் தொழில்புரிபவருமே அன்று உயர்ந்த "சகஜ ஞான" நிலையில் இருந்திருக்கின்றனர். அதற்கென்று அவர்கள் தனியாக பயிற்சிப் பெற்றதாகத் தெரியவில்லை. தேவையுமில்லை. "ஆன்மவித்தை அதி சுலபம்" என்பார் பகவான் ஸ்ரீரமணர். தன் பாதத்தில் 108 முறை விழுந்து கும்பிட முயன்ற பெண்ணிடம், "எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? உண்மையான குருவின் (இறைவனின்) பாதம் உன்னுள்ளது. அதைப்பிடித்துக் கொள்." என்றார். "எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வர விரும்புகிறேன்" எனக் கேட்ட எத்தனையோ பேரை பகவான் தடுத்துள்ளார். மேற்கொண்டு, "நீங்கள் மட்டும் வந்துள்ளீரே" எனக் கேட்டவர்களுக்கு, "உங்கள் தலைவிதி அதுவாயின் என்னிடம் கேட்க மாட்டீர்கள்" என பதிலுரைப்பார்.

ஒவ்வொரு கணமும் நேரடி அனுபவமாகும் (பிரத்யட்சமாகும்) ஒரு விஷயத்தை, ஏன் எங்கோ இருப்பதாகக் காட்டவேண்டும்? பின்னர், உபதேசம், ஞானஸ்நானம் என்று ஊரை ஏமாற்றவேண்டும்? சிவன், சக்தி, காளி என்பதெல்லாம் பெரும் உண்மைகளின் உருவ வடிவமே என்று பாமரனும் உணரும்படி செய்திருந்தால் பரங்கியரால் இவ்வளவு தூரம் ரோடு போட்டிருக்க முடியுமா? பன்றி டோனிகரின் புத்தகங்கள் தான் விற்றிருக்குமா? இன்று காளி தத்துவம் எள்ளி நகையாடப் பட்டிருக்குமா? 😡😡😡

posted from Bloggeroid

Thursday, July 28, 2016

தாவர இருபெயரீட்டின் முன்னோடி தொல்காப்பியம் 👍👍👍


(தினமலர் - சென்னை - 28/07/2016)

எதில் தான் நாம் முன்னோடிகள் இல்லை? உலகில் உள்ள அனைத்து உருப்படியான விஷயங்களுக்கும் நாம் தான் முன்னோடிகள். இறை, அண்டம், பிண்டம், நாகரீகம், மொழி, உணவு, கடல், மருத்துவம், கலைகள், சமூக அமைப்பு என பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது (நேற்று தான் "வைசேஷிகம் என்பது தமிழரின் அளவையியல்" என்றும், இது பற்றிய குறிப்புகள் சிவஞானசித்தியாரில் உள்ளது என ஒரு வேர்சொல் ஆராய்ச்சியாளர் எழுதியதை படிக்க நேர்ந்தது). 👏

நாம் முன்னோடிகளாக, செழிப்பாக, வளமாக இருந்ததால் தான் அத்தனை படையெடுப்புகளைக் கண்டோம்! ஆனால், வந்த ஒவ்வொரு ஜந்துவும் நம்மை வளமாக்க வந்ததாகக் கதை விடும்:

😛 ஆரியர்கள் - தேவர்கள்; அனைத்தும் அறிந்தவர்கள்; அறிவு வங்கிகள்; சமூக காவலர்கள் மற்றும் பல அரும்பணிகளை செய்தவர்கள். 😁

😜 சமண & பெளத்தர்கள் - நமது "போலி திராவிட அரசியல்வியாதிகளை" பொறுத்தவரையில், இவர்கள் வந்து தான் நாம் சமைந்தோம் (பக்குவமானோம்). கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே நாம் தோன்றியிருந்தாலும் இவர்கள் வரும்வரை காளகேயர்களைப் (பாகுபலி படத்தில் வருவோர்) போல் வாழ்ந்தோம் போலிருக்கிறது. 😀

😯 முகம்மதியர்கள் - இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்! அன்பு மார்க்கம்!! 😂😂 (நம்புங்கள்)

😝 பரங்கிகள் - இவர்களைப் பற்றி பேசினால், "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" என்ற கர்ணன் படப்பாடல் வரிகள் தான் நினைவுக்கு வரும். 😀 உலகம் அழியவேண்டி ஓயாது உழைப்பவர்கள். புவியை சூடாக்கியுள்ளார்கள். இயற்கையை அழித்துக்கொண்டே வருகிறார்கள். புதிது புதிதாக வியாதிகளையும் அதற்கான தடுப்பு மருந்துகளையும் உடனுக்குடன் கண்டுபிடிப்பார்கள். நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டும் அறிவுஜீவிகள். பாரபட்சமின்றி அரசுகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் ஆயுதம் விற்பார்கள். சமாதான விரும்பிகள். நமது தேசியக் கொடியிலுள்ள வெள்ளை நிறம், ஒரு விதத்தில், இவர்களைக் குறிக்கும். அதாவது, நமக்கும் (காவி) முகம்மதியர்களுக்கும் (பச்சை) இடையில் நின்று நாட்டை காப்பவர்களாம்! (வெட்கக்கேடு) 😤

"தாவரங்களை இருபெயர் கொண்டு தொல்காப்பியர் தான் முதன்முதலில் குறிப்பிட்டார்" என்பதை அறிஞர்கள் அரங்கில் அறிவிப்பதோடு மட்டும் நில்லாமல், இத்தகைய செய்திகளை இப்போது பிறந்துள்ள குழந்தை முதல் நாளை இறக்கவிருக்கும் முதியவர் வரை எடுத்துச் செல்லவேண்டும். இல்லையேல், நாளைய தலைமுறையும் "தமிழர்கள் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள்" என்பதை மனனம் செய்து தேர்வில் எழுதி மதிப்பெண் பெற்றுவிட்டு, "வாஸ்கோடகாமா தான் இந்தியாவைக் கண்டுபிடித்தான்" என்றும் மனனம் செய்து தேர்வில் எழுதி மதிப்பெண் பெற்றுவிட்டு.... 😒

ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது சுலபமான காரியமில்லை. வெளியிலிருந்து கொடுக்கப்படும் தொல்லைகள் ஒரு புறமிருந்தாலும், இங்கேயே நிறைய கருங்காலிகள் உள்ளனர். இறையருள் தான் துணைபுரிய வேண்டும். 🙏

posted from Bloggeroid

Wednesday, July 27, 2016

கபாலியால் பிரபலமான புத்தகம் 📑


(தினமலர் - சென்னை - 26/07/2016)

நாளை நோக்கியா நிறுவனத் தலைவரின் மகன் "எனது தந்தையின் இந்திய நோக்கியா" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டாலோ அல்லது ஹுண்டாய் நிறுவனத் தலைவரின் மகள் "எனது தந்தையின் சென்னைக் கிளையில் சில காலம்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டாலோ சுவராசியமாக இருக்கும்! 😉

ஆட்சி, அதிகாரம், எண்ணிக்கை யார் கையில் இருக்கிறதோ அவர்கள் அநியாயம் செய்யத் தான் செய்கிறார்கள். ஒரு ஜாதிக்கு மாற்று இன்னொரு ஜாதி அல்ல!!

posted from Bloggeroid

Thursday, July 21, 2016

🔯 "திருவொற்றியூரான் அடிமை" த ப ராமசாமி பிள்ளை 🔯


(தினமலர் - சென்னை - 21/07/2016)

"1930-களில் கூட வடசென்னை சைவ மடங்கள் பல்கலைகழகங்களாக செயல்பட்டன" என்பதை படிக்கும் போது சிறிது ஆச்சர்யமாக இருந்தது! இன்றைய வட சென்னை இருக்கும் நிலை.... 😔

"சுதந்திரம்", "மக்களாட்சி", "திராவிடம்" எனும் மாய அலைகளால் அழிந்து போன பல விஷயங்களில் இந்த மடங்களும் ஒன்று போலிருக்கிறது.

இணைப்பு செய்தியை படித்து முடிக்கத் தேவையான பொறுமை கூட இன்று நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும் என்று தெரியவில்லை! 😑

posted from Bloggeroid

🌋 வழிப்பறிநாதர்கள் நிறைந்த என் நாடு!! 😡😡




மேலுள்ள இரண்டு செய்திகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்: ஒன்றில் ஒரு தனி மனிதன், மற்றொன்றில் ஒரு கூட்டம் (அல்லது அக்கூட்டத்தை இயக்கும் ஒரு அரசியல்வியாதி)! 😀

ஒரு உதாரணத்திற்காக, சற்று மாற்றி யோசிப்போம். பல ஆராய்வுத் தரகுகளின் அடிப்டையில், ரஜினி நீதிமன்றம் சென்று, "மீனவர்களால் எனக்கு நல்ல வருமானமில்லை. ஆகையால், எல்லா மீனவர்களையும் ரூ.120/- நுழைவுசீட்டு வாங்கி எனது படங்களை பார்க்குமாறு உத்தரவிடக் கோருகிறேன்" என்று கோரிக்கை வைத்தால் எப்படியிருக்கும்? 😂

அப்படித்தான் இருக்கிறது இவர்கள் வாதம். மீனவர் பிரச்சினைக்கு குரல் கொடுக்காததால் படத்தை வெளியிடக்கூடாதாம். குரல் கொடுத்தால், "நடிகன் நீ. நடிப்பதை மட்டும் செய்." என்பார்கள் (இர்ஃபான்கான் ஒட்டகங்கள் கொல்லப்படுவது பற்றி கருத்துக் கூறியதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பதில் இது).

மக்களின் பணத்தினால் கோடீஸ்வரனாகி விட்டாராம். அவருக்கு மேற்கொண்டு பணம் சேரக் கூடாதாம். இப்படியொரு கல்லெறியப்பட்டிருக்கிறது. எந்தத் தொழில் தான் மக்களின் பணத்தினால் நடக்கவில்லை? சட்டப்படி குற்றத் தொழில்களான திருட்டு, வழிப்பறிமுதல் சட்டப்படி குற்றமில்லாத பகல் கொள்ளை (அரசாங்கம்) வரை எல்லாம் மக்கள் பணம் தான்!

ஆந்திராவில் (திருட்டுத்தனமாக மரம் வெட்டச் சென்ற) தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லையாம். இப்படியே போனால், அவனவன் வீட்டுச் சாக்கடை அடைத்துக் கொண்டதற்குக் கூட "ரஜினி குரல் கொடுக்கவில்லை" என்பார்கள்! 😂

நம் மக்களிடம் சில குணங்கள் உண்டு. பணத்திற்காகப் போராடுவார்கள். ஆனால், பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மோசம் என்று நினைப்பார்கள். தனக்கு கீழ் 4 பேர் வேலை செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அப்படி 4 பேர் வைத்திருப்பவர்கள் எல்லாம் அதிகார வர்க்கம் என்பார்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள முனைவார்கள். தெரிந்து கொள்ள முடியவில்லை எனில் புறம் கூறுவார்கள். இப்படி பல "நியாயமான" குணங்கள் நம்மவர்களுக்கு உண்டு. நியாயம் என்ற வார்த்தைக்கு பொருள் கண்ட பூமியின் இன்றைய நிலை இது. 😔

வெற்றிகரமான விற்பனை யுக்திகளுள் ஒன்று: மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை விற்பது (அது குப்பையாக இருந்தாலும்). நம் மக்களின் "நியாயமான" குணங்களை புரிந்து கொண்ட சிலர் (அரசியல்வியாதிகள், தலீவர்கள், ...), மக்கள் விரும்பும் தகவல்களை விற்று, அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, ரஜினி / தாணுவிடம் தேவையான பொரையைப் பெற்றுக் கொண்டு மறைந்துவிடுவார்கள். ஆனால், தூண்டிய உணர்வுகளின் விளைவுகள்? 😱

ருசி கண்ட பூனை சும்மா இருக்காது. ரஜினி / தாணுவிடம் ஆரம்பிக்கும் இந்த வழிப்பறி யுக்தி நாளை கடைக்கோடி மனிதனிடமும் நடத்தப்படும். (ஏதோ இப்போது நடக்காதது போலவும், இனிமேல் தான் நடக்கப் போவதாக எழுதியிருக்கிறேன். உண்மையில் காலகாலமாக ஏய்த்துப் பிழைத்தல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது இன்னும் அதிகமாகும். பரவலாகும்.)

இதனால், நியாயமானவர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள், திறன்மிக்கவர்கள், நல்ல சிந்தனையாளர்கள், தலைமைப் பண்பு உள்ளவர்கள், சிறந்த வணிகர்கள் என நாட்டின் ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கைக்குத் தேவையானவர்கள் அனைவரும் புலம் பெயருவார்கள் அல்லது சோர்ந்து அமருவார்கள். பின்னர், நாடு "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்" கதைகளில் வரும் "ஆர்க்ஸ்" இனம் வாழும் "மிடில் எர்த்" எனும் பகுதி போல் ஆகிவிடும். அல்லது, சுமார் கி.பி. 700 முதல் 1600 வரை நம்மைக் கொள்ளையடித்தே வாழ்க்கையை ஓட்டிய காட்டுமிராண்டிகள் வாழ்ந்த அரபு நாடுகளைப் போலாகிவிடும்.

இறுதியாக, கிரண்பேடியின் "கழிவறைக் கட்டினால் 2 கபாலி நுழைவுச் சீட்டு இலவசம்" திட்டம். ரஜினி என்ற பெயரை வைத்து மக்களை திருத்த முடியும் என்று புதுச்சேரி ஆளுநர் நினைக்கிறார் என்பதையே இந்தத் திட்டம் காட்டுகிறது. இதையே அவர் "கழிவறைக் கட்டினால் 2 மீன்கள் இலவசம்" என்று அறிவித்திருந்தால் என்னவாகியிருக்கும்? 😝

இந்தத் திட்டம் அறிவித்தவுடன், "இதற்காகவாவது ரஜினி பயன்படட்டும்" என சில மேதாவிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்தியப் பொருளாதாரத்திற்கு கபாலியின் பங்களிப்பை மட்டும் சிறிது பார்ப்போம்...

படத்தின் மதிப்பு சுமார் 100 கோடிகள். இதில் சம்பளங்கள் மட்டும் 50 கோடிகள் இருக்கலாம். மீதமுள்ள 50 கோடிகள் ஏனைய செலவுகளாக இருக்கலாம். சம்பள பணத்தில் வருமான வரி 15 கோடிகள் அரசுக்கு கிடைக்கும். மீதமுள்ள 50 கோடியில் சேவை வரியாக சுமார் 7.5 கோடிகள் அரசுக்கு கிடைக்கலாம். சேவை கொடுத்த நிறுவனங்கள் வருமான வரியாக சுமார் 1 - 1.40 கோடி கட்ட வாய்ப்புள்ளது. நான் 1 கோடி என்றே எடுத்துக் கொள்கிறேன். ஆக, 100 கோடி செலவில் அரசுக்கு மட்டும் சுமார் 23.5 கோடிகள் கிடைக்கின்றது.

இவர்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் மதிப்புத் தெரியவில்லை. அதில் கிடைக்கும் வருமானத்தில் 66% இலவச மின்சாரத்திற்குச் செல்கிறது.

ஒரு படம் தயாரிக்க எவ்வளவு வாகன எரிபொருள் செலவாகிறது என்று தெரியவில்லை. இது பல லட்சங்களில் இருக்கும். அதிலும், அரசு 66% லாபம் ஈட்டுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் மட்டும் 300 கோடிகள் கிடைக்கும் என வைத்துக்கொள்வோம். இதில் அரசாங்கம் 6 கோடிகளை கேளிக்கை வரியாகப் பெறும் (அரசு வருமானம் இதுவரை 29.5 கோடிகள்). தயாரிப்பாளர்களின் பங்காக சுமார் 176 கோடிகள் வரும். இதில் படச்செலவான 100 கோடிகளை கழித்தால் 76 கோடிகள் நிற்கும். இது முழுவதும் லாபம் என எடுத்துக்கொள்ள முடியாது. நிறுவனச் செலவுகள் இருக்கும். ஒரு வாதத்திற்காக இது அனைத்தும் லாபம் என்று எடுத்துக்கொண்டால், அதில் 23 கோடிகளை வரியாக செலுத்த வேண்டும் (அரசு வருமானம் இதுவரை 52.5 கோடிகள்).

அடுத்து, வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளின் வருமானமாக சுமார் 118 கோடிகள் நிற்கும். இதில் 10% லாபம் நிற்கிறது என்று வைத்துக்கொண்டால் (12 கோடிகள்), அதில் வரியாக அரசுக்கு 3.6 கோடிகள் கிடைக்கும் (அரசு வருமானம் இதுவரை 54.1 கோடிகள்). திரையரங்குகள் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தில் 66% இலவச மின்சாரத்திற்குச் செல்கிறது மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

படம் பார்க்கச் செல்வோரால் கிடைக்கும் இதர வருமானம் (300 கோடி நுழைவு சீட்டு வருமானம் என்ற கணக்கில்) (வாகன எரிபொருளில் 66%, தின்பண்டங்களில் சேவை வரியாக 15%, அந்த நிறுவனங்களின் லாபத்தில் 30% வரி):
- வாகன எரிபொருள் - 75 கோடி
- தின்பண்ட சேவை வரி - 22.5 கோடி
- லாபத்தில் வருமான வரி - 9 கோடி
ஆக, சுலையாக 106.5 கோடிகள் பார்வையாளர்களால் அரசுக்கு கிடைக்கிறது.

அனைத்தையும் சேர்க்கும்போது அரசின் மொத்த வருமானம் 160.6 கோடிகள். இது மிகவும் மேம்போக்கான கணக்கு. சரியான தரகுகள் இருப்பின் இதை இன்னும் துல்லியமாகக் கணக்கிடலாம். அப்படிக் கணக்கிட்டால் இது சுலபமாக 200 கோடிகளைத் தொடும். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் படக்குழுவினர் கூட இவ்வளவு பணம் பார்க்கமாட்டார்கள். இந்தப் பணம் ஏங்கே போகப்போகிறது? அரசாங்கம் ஏப்பம் விட்டது போக, மீதம் இவர்களுக்குத் தானே வரப்போகிறது? 100 நாள் திட்டம், இலவசங்கள், மலிவு விலை அங்காடிகள், மலிவு விலை டீசல், ....

ஒரு தனி மனிதனால் இந்தியப் பொருளாதாரம் 200 கோடி பயன்பெறுகிறது எனும் போது, அம்மனிதருக்கு உரிய மதிப்பை நாம் கொடுக்கவேண்டும். இல்லையேல், இவர் போன்றோர் புலம் பெயறவோ, வெறுத்து ஒதுங்கிவிடவோக்கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில் அதிகம் நஷ்டமடைவது இப்போது தொந்தரவு கொடுக்கும் கூட்டம் தான். இக்கூட்டத்தைத் தூண்டிவிட்டு பொரை சம்பாதிக்கும் கூட்டத்தை கண்டுபிடித்து அழிப்பதை விட, நம் மக்களிடமுள்ள "நியாயமான" குணங்களில் ஒன்றான "அடுத்தவனைப் பார்த்து வயிறெரிதல்" என்பதைக் ஒழித்தால் போதும். இது நடக்க இன்னொரு கிருஷ்ணர், புத்தர், ஆதிசங்கரர், ஞானசம்பந்தர் வரவேண்டுமே! 😑

(இணைப்பு: தினமலர் - சென்னை - 18/07/2016)

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

பி.கு.: இன்று நான் எந்த நடிகனின் ரசிகனுமல்ல. நல்ல நடிப்பின், நல்ல உழைப்பின் ரசிகன்!

posted from Bloggeroid

Tuesday, July 19, 2016

யார் பரங்கியர்களை முதலில் எதிர்த்தது?


(தினமலர் - பட்டம் - சென்னை - 19/07/2016)

பரங்கிகள் தான் உலக வரலாற்றை மறைத்து, மாற்றி, அழித்து & இழித்து என அனைத்து திள்ளுமுள்ளு வேலைகளை செய்து வருகின்றனர் என்றால், வடநாட்டவர்களும் அதே வேலையை இந்திய அளவில் செய்கின்றனர்!

💥 1780-களிலேயே பரங்கிகளை எதிர்த்துப் போராடிய ராணி வேலு நாச்சியார் என்னவானார்?

💥 1790-களில் எதிர்த்துப் போரிட்ட கட்டபொம்மன் என்னவானார்?

💥 1800-களில் எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்கள் என்னவாயினர்?

💥 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் என்னவாயிற்று?

இதெல்லாம் சுதந்திர போராட்டம் என்ற கணக்கில் வராது போலிருக்கிறது. 1857-ல் வடநாட்டில் நடந்தது தான் முதல் சுதந்திர போராட்டம் போலிருக்கிறது. ஒரு வேளை, 1780-ஐ விட 1857 பெரிய எண் என்று நினைத்து விட்டனரோ!? 😂😂😂

சும்மாவா சொன்னார்கள், ஒரு இனத்தை அந்த இனமே தான் ஆளவேண்டுமென்று!! 😑

பி.கு.: மங்கள் பாண்டேவையோ, அவர் ஆரம்பித்த சுதந்திரப் போராட்டத்தையோ குறைத்துக் கூறுவது என் நோக்கமல்ல. நம் முன்னோர்களின் தியாகம் இரட்டடிப்பு செய்யப்படக்கூடாது மற்றும் நமக்குரிய முக்கியத்துவத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதே எனது இந்த இடுகையின் நோக்கம்.

posted from Bloggeroid

Saturday, July 16, 2016

🔯 Saadhanai doesn't mean remaining idle for hours 🔯


If you are on the path to discovering your Self (*), the following gem would prove to be an invaluable one! 👌

This gem was delivered by Saadhu Om Swaamigal, an ardent & fiery devotee of Bhagavaan Sri Ramanaa (who else could have delivered this gem? ☺) on 10/07/1978:

Many people believe that their progress in saadhanai can be measured by the amount of time they are able to remain without thoughts; but, remaining without thoughts for sometime is not the true aim of saadhanai. Its aim is only knowledge, which means clear awareness of oneself. What is the use of remaining for five hours without thoughts if all one's desires, anger and other such defects return during the sixth hour? One may remain for three hundred years without knowing the body; but if one does not know oneself, what benefit can one derive from it?

Therefore when we practice saadhanai, our aim should not be to remain without thoughts for as long as possible; but, should only be to know our self. We investigate "Who Am I?" in order to gain knowledge of our self. Having understood that all our problems are due to our incorrect knowledge "I am the body", we must strive only to obtain correct knowledge of our self.

(Source: Mountain Path, July 2016)

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

(*) - Of course, "discovering your Self" is not a famous phrase. Equivalent & famous phrases are:

கைலாயம் அடைதல்
சிவனடி சேர்தல்
வைகுண்டம் அடைதல்
எம்பெருமான் திருவடி சேர்தல்
பரிநிர்வாணம் அடைதல்
சொர்க்கம் அடைதல்
பரலோகம் அடைதல்
முக்தி அடைதல்
ஞானம் அடைதல்
Salvation
Reaching the Kingdom of Heaven

மேலும், செய்தி மட்டும் போதாது. அது எந்த மொழியில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். சிலருக்கு அவரவர் தாய் மொழியில், இரு கூட்டங்களுக்கு சமற்கிருதத்தில், ஒரு கூட்டத்திற்கு ஆங்கிலத்தில், பாமரனுக்கு ஒரு மொழியில், "படித்தவனுக்கு" ஒரு மொழியில் என செய்தியை விட மொழி முக்கியமாகிவிடுகின்றது. 😄

(பகவான் ஸ்ரீரமணர் இந்த அளவு விரித்துக் கூறவில்லை என்றாலும், அவருக்கே உரிய பாணியில் நறுக்கென்று சில வார்த்தைகளில் மனிதனின் இந்த மொழிப் பற்றை கிண்டலடித்திருக்கிறார் 😃)

posted from Bloggeroid

☀ கரிநாள் - தமிழனின் அறிவியல் திறனுக்கு ஓர் சான்று 👊👊👊

கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே!

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். இவை வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள்.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :
சித்திரை - 6, 15,
வைகாசி - 7, 16, 17
ஆனி - 1, 6
ஆடி - 2, 10, 20
ஆவணி - 2, 9, 28
புரட்டாசி - 16, 29
ஐப்பசி - 6, 20
கார்த்திகை - 1, 10, 17
மார்கழி - 6, 9, 11
தை - 1, 2, 3, 11, 17
மாசி - 15, 16, 17
பங்குனி - 6, 15, 19

நம் உடல், மனம், நாம் வாழும் புவி, அது சுற்றும் ஞாயிறு என அனைத்தின் அறிவும் பெற்றிருந்தால் மட்டுமே இந்தத் தேதிகளை கணித்திருக்கமுடியும். 👏👌👍 இதை நினைக்கும் போது பிரமிப்படையும் மனம், அடுத்து "அந்த அறிவு இன்று என்னவாயிற்று?" என்ற கேள்வி எழும் போது கனக்கிறது. 😔

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1761894744083274&id=100007882965810)

💥 பி.கு: "கலீலியோ, கெப்ளர், நியுட்டன் போன்ற பெயர்கள் வராமல், ஏதேச்சையாக ஆப்பிள் மரத்திலிருந்து விழாமல், "யுரேகா" என்று குளியல் தொட்டியிலிருந்து திகம்பரனாக எழுந்து ஓடாமல், கண்டுபிடிப்புக்காக சர்ச் சிறை வைக்காமல் இதெல்லாம் என்ன பெரிய கண்டுபிடிப்பு?" எனும் ரீதியில் பேசும் கருங்காலிகளைக் கண்டால் பிய்ந்து போன பழைய செருப்பாலும், தேய்ந்து போன தென்னைமாராலும் விளாசவும்!! 😠

posted from Bloggeroid

🌋 பெரும்பான்மையினராக உள்ள சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக நடத்தப்படும் இந்துக்கள் 🌋


(தினமலர் - சென்னை - 16/07/2016)

எவ்வளவுத் தேடினாலும் தாக்குதல் நடத்தியவன் பெயரோ அவன் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவன் என்ற செய்தியோ இருக்காது. இந்தச் செய்தியில் மட்டுமல்ல. இவர்கள் சம்பந்தப்பட்ட எந்த தீவிரவாத செய்தியாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலானா செய்தித்தாள்கள் இப்படித்தான் செய்தி வெளியிடுகின்றன.

அதே நேரத்தில் அது ஒரு இந்து சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் பெயர், குலம், கோத்திரம், ஜாதகம், படம் மற்றும் "இந்து தீவிரவாதி" என்ற வார்த்தைகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும், பரங்கிநாட்டு செய்திதாள்கள் இந்த வார்த்தைகளை மிகவும் பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஏன் இந்தப் பாகுபாடு? நாம் உலக சிறுபான்மையினர் என்ற காரணத்தினாலா? "சகிப்புத்தன்மை" என்ற எருமைமாட்டுத்தனத்தினாலா?

😤😠😡

posted from Bloggeroid

Tuesday, July 12, 2016

🐜 HOMEMADE MOSQUITO (PEST) TRAP 🐝🐞

Have you noticed the Mosquitos are already out! Here is a homemade trap to help keep you and the kiddos from being a blood donor!!!

🔷 ITEMS NEEDED:
1 cup of water
1/4 cup of brown sugar
1 gram of yeast
1 2-liter bottle

🔶 HOW:
1. Cut the plastic bottle in half.
2. Mix brown sugar with hot water. Let cool. When cold, pour in the bottom half of the bottle.
3. Add the yeast. No need to mix. It creates carbon dioxide, which attracts mosquitoes.
4. Place the funnel part, upside down, into the other half of the bottle, taping them together if desired.
5. Wrap the bottle with something black, leaving the top uncovered, and place it outside in an area away from your normal gathering area. (Mosquitoes are also drawn to the color black.)

Change the solution every 2 weeks for continuous control.


(Source: https://www.fb.com/marya6)

posted from Bloggeroid

Biopiracy - Bill Gates' new Microsoft 😁

Vandana Shiva, Scientist, Writer & Activist, in Acres, January 2016:

Biopiracy is an epidemic. The most serious piracy involves plundering the innovation by farm-ers of the Third World who have evolved climate-resilient crops. 🔥Today the Monsantos and the Bill Gateses of the world are presenting the pirated climate-resilient crops as their inventions.🔥 Bill Gates wrote an article about it — “Oh, Melinda and I were visiting a farmer who is using seeds we introduced” — seeds that tolerate flooding. Well, it didn’t come out of Bill Gates’ labs, it came from Indian farmers. They pirate the seeds and take a patent. Monsanto, Bayer and Syngenta have 1,500 patents on climate-resilient crops! They are looking toward the climate crisis as a way to deepen their monopoly. If you look at the last few years, every time there has been a disaster — an earthquake, a tsunami, a cyclone — they have arrived with their GMO seeds. 🔥After the earthquake damaged Nepal so badly in April we kept getting calls — half of their seed banks had been damaged in the earthquake, buried under homes. The earthquake happened in April, by May we had to get the seeds there. We put the seeds together. At the border, the customs officer saw a very strange circular saying, “No seed except ...” — and there was a list of companies, Monsanto and a Monsanto subsidiary.🔥 Only those seeds could enter. We checked with Nepal’s agriculture minister and he said, “I never passed this order.” They’ll even exploit an earthquake to make a monopoly!

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

This is why I address Parangis fondly as "Sons & Daughters of Parangi Bitches"!!

😂😂😂

posted from Bloggeroid

Friday, July 8, 2016

A LETTER WHICH CREATED HISTORY 👍👌👏

The following letter tells us that whoever effected the change concentrated on the contents. To bring about such a change in the present times is impossible with just a letter and in such a language. Present Gods (the deciding authorities) concentrate on who presents it. And, the "who" refers to the paraphernalia of the presenter like Post, Appearance, Education, RACE & CASTE (oh, yeah, the demons live). 😔

Enjoy the letter....

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

Date: 02 - 07 - 1909
Divisional Railway Officer,
Sahibgunj,

Respected Sirs,
I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow or train to go off and I am running with lotaah in one hand and dhoti in the next when I am fall over and expose all my shocking to man and female women on platform. I am got leaved at Ahmedpur station. This too much bad, if passenger go to make dung that dam guard not wait train five minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers.

Your faithful Servant,
Okhil Chandra Sen

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

Okhil Babu wrote this letter to the Sahibganj divisional railway officer in 1909. It is on display at the Railway Museum in New Delhi. It was also reproduced under the caption Travellers Tales in the Far Eastern Economic Review.

Any guesses why this letter is of Historic Value?

It led to the introduction of TOILETS in trains in India...!!!! 😂

So no idea is stupid! 👍
Always speak up!!✌ (Howsoever bad or good you may be at any language)

(Source: WhatsApp)

posted from Bloggeroid

Thursday, July 7, 2016

🙏 ஆதார் இன்றி அணுவும் அசையாது 🙏


(தினமலர் - சென்னை - 08/07/2016)

(தமிழ் ஹிந்து)

😠 தற்போதைய நிலை:

💥 சமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதார்
💥 தொடர்வண்டி முன் பதிவிற்கு ஆதார்
💥 காவல் நிலையத்தில் புகாரளிக்க ஆதார்
💥 10-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத ஆதார்

😡 அடுத்த நிலை:

💥 வாகனங்களில் எரிபொருள் நிரப்ப ஆதார்
💥 ஆவின் விற்பனை நிலையங்களில் பால் வாங்க ஆதார்
💥 கட்டண கழிப்பறையை உபயோகப்படுத்த ஆதார்
💥 வீட்டை விட்டு வெளியே வந்தால் ஆதார்

😂 இறுதியாக:

💥 தலையைச் சொறிய ஆதார்
💥 காது குடைய ஆதார்
💥 மூக்கைச் சீந்த ஆதார்

தற்போது ஆதார் அட்டை வழங்க ரூ.400/- பிடுங்குகிறார்கள். இதை ஆரம்பித்திலிருந்தே செய்திருந்தால் இந்நேரம் சுமார் 40,000 கோடிகள் பார்த்திருப்பார்கள் (மத்திய & மாநில அரசுகள்; ஆளுபவர்கள் & ஆண்டவர்கள்). பரவாயில்லை! *இழந்ததை "விலங்கினங்களுக்கு ஆதார் திட்டம்" கொண்டு வந்து ஈடு செய்வார்கள்!!* 😉

posted from Bloggeroid

Monday, July 4, 2016

🔯 சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் - 04/07 🔯

🌿 சுவாமிஜியின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி


🌿 சுவாமிஜியின் அழகான படம். அதில் அவருடைய அருமையான வாசகம்.


(இணைப்புகள்: தினமலர் - பட்டம் - சென்னை - 04/07/2016)

posted from Bloggeroid

👑 வீர வல்லாள மகாராஜா 🔯


(தினமலர் - சென்னை - 03/07/2016)

இவர் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். நாட்டுக்கும், அண்ணாமலையாருக்கும் அவர் செய்த சேவைகள் ஏராளம். முகம்மதியக் காட்டுமிராண்டிகள் தென்னாட்டிற்குள் நுழையக் கூடாது என்பதே அவரது வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. 👍

மகன் இருந்தும் தறுதலையாக இருந்ததால், முதிர்ந்த வயதிலும் போருக்குச் செல்லவேண்டியதாயிற்று. மதுரை சுல்தானால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு, உள்ளுறுப்புகள் நீக்கப்பட்ட அவரது உடல் மதுரையில் பல நாட்கள் தொங்கியது! 😡

ஈமக் கிரியைகள் அண்ணாமலையார் சார்பில் நடத்தப்பட்டன. இன்றும் வருடத்தில் ஒரு நாள் அண்ணாமலையார் சார்பில் வல்லாள மகாராஜாவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. 💐

கிளி கோபுரத்திற்கு முன்னிருக்கும் கோபுரம் அவர் கட்டியதே.

ஒரு ஆறுதலான செய்தி, இவரிடமிருந்த 2 படைத் தளபதிகளே விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டவர்கள்! மகாராஜாவின் கனவான மனிதமிருகங்களை 👹 தென்னாட்டிற்குள் வர விடாமல் தடுப்பது என்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு நடந்தது.

posted from Bloggeroid

🔯 திருவாமாத்தூர் இரட்டைப் புலவர்கள் 🔯

திருவாமாத்தூரில் வாழ்ந்து, இரட்டை கலம்பகம் எனும் நூலினை இயற்றி, சைவ புகழ் பரப்பி, அங்கேயே சமாதியும் அடைந்த இரட்டைப் புலவர்கள் பற்றி....


(தினமலர் - வாரமலர் - சென்னை - 03/07/2016)

posted from Bloggeroid

Saturday, July 2, 2016

இவர்களெல்லாம் திருந்தப் போவதேயில்லை!! 😡


(தினமலர் - சென்னை - 02/06/2016)

ஜாதி என்ற வார்த்தையின் நேர்பெருள் "தன்மை". தொழிலை அடிப்படையாகக் கொண்டதை பிறப்பின் அடிப்படையாக மாற்றியவர்கள் இவர்களே! 😠

🌋 தான் ஞானமடைந்தது மட்டுமல்லாமல், தான் அடைந்த நிலையை அனைவரும் அடையலாம் என்று முழங்கியதோடு நிற்காமல், தான் அடைந்த வழியை அனைவருக்கும் திறந்துவிட்டு, ஒரு ஞானப் புரட்சி செய்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்ன ஜாதி?

🌋 ஒரு வேதத்தை சரியாகக் கற்பதே பிரம்ம பிரயத்தனம் எனும் போது, அனைத்து வேதங்களையும் கற்றுத் தெளிந்து அவற்றைப் பிரித்து, பின்னர் அது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால் பிரம்மசூத்திரம் முதல் மகாபாரதம் வரை இயற்றிய ஸ்ரீவேதவியாசர் என்ன ஜாதி?

🌋 எல்லாவற்றிற்க்கும் மேலாக இவர்கள் என்ன ஜாதி? கைபர், போலன் கனவாய்கள் வழியாக உள்நுழைந்த காட்டுமிராண்டி ஆரியர்களின் வாரிசுகள் தானே இவர்கள்? காட்டுமிராண்டி ஜாதி தானே? நம்மால், நம்மிடமிருந்தவையால் செம்மையானவர்கள் தானே இவர்கள்!

நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதையாவது நல்லபடியாக வைத்துக் கொள்ளத் தெரிந்ததா? இல்லை. குப்பையாக்கினார்கள். 😛 சீர்திருத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தேவைப்பட்டார். மீண்டும் குப்பையாக்கினார்கள். 😜 இம்முறை பகவான் புத்தர் வந்துதித்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவருடையதும் குப்பையானது. இவர்களும் குப்பையானர்கள். 😝 மீண்டும் சீர்திருத்தம் ஆதிசங்கரர் வடிவில் நடந்தது. அவர் மறைந்த உடனேயே குப்பையாக்கும் வேலையை மீண்டும் ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் வலுவான பேரரசுகள் அமையாததினாலும், தொடர்ந்த படையெடுப்புகளாலும் இன்று வரை பெரிய சீர்திருத்தம் நடைபெறவில்லை.

ஆக, குப்பைக்காரர்களுக்கு இடையே நம் வள்ளுவப் பெருந்தகை நின்று மண்டை காயவேண்டுமா என்று நாம் தான் முடிவு செய்யவேண்டும்!! 😎

என்னை பொறுத்தவரை கங்கையம்மனை விட நம் காவரித்தாய் மேலானவர்! என்னுடைய அளவுகோல்: கங்கை நதி நெடுக எத்தனை மகான்களின் சமாதிக் கோயில்கள் உள்ளன? காவிரி நதி நெடுக எத்தனை உள்ளன? 💥💥😘

கணக்கிட்டால், நம் காவிரித்தாய் வேறெந்த நதியும் நெருங்க முடியாத தூரத்தில் இருப்பார். அத்தனை மகான்கள் உருவாகக் காரணமான புனிதமான காவிரித்தாயின் மடியில் வைத்து அழகு பார்ப்போம்!! 👍👍👍

(பி.கு.: புனித கங்கை நதியை எவ்விதத்திலும் சிறுமைபடுத்த நான் முயலவில்லை. அவரின் புனிதத்தன்மையை அனுபவித்து உணர்ந்தவன் நான். 🙏)

posted from Bloggeroid

👳 ஜனநாயகம் = 💸 பணநாயகம் = 💩 சாக்கடைநாயகம் = 🐛 ஒட்டுண்ணிநாயகம்!!


(தினமலர் - சென்னை - 02/07/2016)

*ஜனநாயகம் எங்கே மலர்ந்தது? பணநாயகம், சாக்கடைநாயகம் & ஒட்டுண்ணிநாயகம் தான் மலர்ந்துள்ளன!!* 😂

வானலியிலிருந்து அடுப்புக்குள் விழுந்தக் கதை தான் நடந்திருக்கிறது. "Animal Farm" கதையில் வரும் (மனிதர்களிடமிருந்து பன்றிகளிடம் மாட்டிக்கொள்ளும்) முட்டாள் மிருகங்களைப் போல் ஆகியிருக்கிறோம். 😣 தாய்மொழியை, தந்தையின் சமயத்தை, சொந்த கலாச்சாரத்தை எள்ளிநகையாடி அழிக்கத் துணிந்து அயல் நாட்டினருக்கு, அயல் மதத்துக்கு, அயல் கலாச்சாரத்துக்கு, அயல்மொழிக்கு கூஜா தூக்கும் கருங்காலிகள் ஆகியிருக்கிறோம். 😔

நம் இனமே நம்மை சுரண்டுகிறது. நம் நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறது. இலவசங்கள், நூறு நாள் திட்டம், இடஒதுக்கீடு என பல தேசக்கொல்லிகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நம்மை மரபணு மாற்றிய பயிர்களை பரிசோதிக்க உதவும் ஆய்வுக்கூட எலிகளாக்கியிருக்கிறது. 😡

"Animal Farm" கதையிலும் சரி, நம் வரலாற்றிலும் சரி மாற்றம் ஏற்பட்டது எண்ணிக்கையால் தான். இன்று அந்த எண்ணிக்கை நம்மிடமில்லை. ஆனால், நம்பிக்கை இருக்கிறது *மாற்றம் ஒன்றே மாறாதது* என்ற புத்த பிரானின் வார்த்தைகளின் மேல்!! அசைக்கமுடியாது, அழிக்கவியலாது என கருதப்பட்ட சாம்ராஜ்யங்களும், மன்னர்களும், இனங்களும், மதங்களும், கொள்கைகளும், கட்சிகளும், நிறுவனங்களும் ஒரு நாள் முடிவுற்றன. அது போல் இந்த ஒட்டுண்ணி-நாயகத்திற்கும் ஒரு நாள் முடிவு வரும். *அந்த நாள் உடன் வருமாறு எந்நாட்டவர்க்கும், எக்காலத்திற்கும் இறைவனான எம்பெருமானை வேண்டுவோம்!!!* 🙏

posted from Bloggeroid

Friday, July 1, 2016

"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ..." 🐦🐦🐦

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.
குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு, “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

*“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."*

(மூலம்: வாட்ஸ்அப்பில் கிடைக்கப்பெற்றது)

posted from Bloggeroid