Saturday, April 9, 2016

😀 பரங்கியரின் திருட்டு திருவிளையாடல்: படலம் - "சித்த மருத்துவம்" 😁


(தி இந்து - நலம் வாழ - சென்னை - 09/04/2016)

சித்த மருத்துவத்தின் பழமையையும், அதன் பெருமையையும், அதிலிருந்து பரங்கியன் திருடுவதையும் வெளியிட்டிருந்தாலும், "தமிழ் இந்து" -வின் 'டச்' இல்லாமலாப் போய் விடும்! 😉

சித்த மருத்துவம் ஒரு மதம் சார்ந்த மருத்துவ முறையாகக் கற்பிதம் செய்யப்படுகிறதாம். இது முற்றிலும் தவறாம். சமணனின் பங்கு இருக்கிறதாம். முகம்மதியனின் பங்கு இருக்கிறதாம். கிறித்துவனின் பங்கு இருக்கிறதாம்.

இத்தனை "மதங்களைப்" பட்டியலிடுவார்களாம். தமிழனின் "சமயமாகிய", உலகின் அனைத்து மதங்களின் தாயாகிய, ஆதிசைவத்தின் பெயர் கூட சொல்லமாட்டார்களாம்.

கூகுள் உருவாக்கியது தான் லைனக்ஸை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம். இந்த ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை சாம்சங், ஹெச்.டி.சி., ஸியோமி, லெனோவோ போன்ற கைபேசிகளின் இயங்குதளங்கள். பின்னவர்களால் ஆண்ட்ராயுடுக்கு சில பங்களிப்புகள் நிகழ்ந்திருக்கும். இருந்தாலும், ஆண்ட்ராய்டை கூகுளின் உருவாக்கம் என்றே குறிக்கிறோம். இது சரியும் கூட.

அவ்வாறே அகத்தியர் (*) முதற்கொண்டு கருவூரார் வரை தமிழ் ஆதிசைவ இந்துக்களின் உழைப்பால் உருவான சித்த வைத்தியத்தை தமிழனுடையது ஆதி சைவத்தினுடையது இந்துவினுடையது என்று குறிப்பதே சரி.

(* - அகத்தியர் என்ற சொல் பொதுவாகக் குறிப்பது குள்ள முனிவரை. இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமியாவார். அதாவது, திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோயில் இவரது சமாதி கோயில். ஆனால், அகத்தியர் என்ற பெயர் எல்லா சமயத்திலும், எல்லா இடத்திலும் இவரை மட்டும் குறிப்பதில்லை. °ஜீவன் அகத்திலே அடங்கியவரை", அதாவது ஞானியரை/ ரிஷிகளை குறிக்கும். சகஜ சமாதி நிலையிலேயே வாழ்ந்த பகவான் ஸ்ரீரமணரும் ஒரு அகத்தியரே.)

இறுதியாக, "இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த யாக்கோப்பு" பற்றி சில வரிகள்.

இவரே நம் பதினெண் சித்தர்களில் ஒருவராகிய ஸ்ரீராமதேவர். இவரேதான் தேரையர் என்று கூறும் அறிஞரும் உண்டு. மருத்துவ ஞானமும், விஷயஞானமும் கைவரப் பெற்றவர். இவரது சமாதி கோயிலே மதுரை அழகர்கோயில். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே அழகர்கோயிலின் மூலவரான ஸ்ரீபரமஸ்வாமி பெருமாள். இவர் முஸ்லிம்களின் நபியான முகம்மதுவின் சமகாலத்தவர். அவருடன் சில காலம் யாக்கோப்பு என்ற பெயருடன் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் "ஸ்ரீராமதேவராக" தாயகம் திரும்பி அழகர்கோவிலில் சமாதியானார்.

என்னைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் பாரத பூமிக்கும், உலகிற்கும் நேரப்போகும் கொடுமைகளை உள்ளுணர்வால் உணர்ந்திருப்பார். தம்மால் முடிந்ததைத் தடுக்கலாம் என்று அங்கே சென்றிருப்பார். அங்கே நடந்தவற்றைப் பார்த்திருப்பார். "இது ஆகறதில்ல" என்று வெறுத்துப்போய் தாயகம் திரும்பி அழகர்கோயிலில் உடலை உகுத்திருப்பார். 😂😂

🌸🌹🍀🍁🌺🌻🌼

பி.கு.: இணைப்பு செய்தியின் தலைப்பே தவறு. "சித்த மருத்துவத்துக்கு நோபல் தகுதி உண்டா?" வெட்ககேடு!! கழுதைக்குத் தெரியுமா கற்பூரத்தின் வாசனை? உலக கொள்ளையனின் அங்கீகாரம் வேண்டுமா? உலக திருடனின் சான்றிதழ் வேண்டுமா? இப்படியே போனால், "எம்பிfரானை வணங்கலாமா?" என்று பரங்கியனிடம் கேட்டுச் சொன்னாலும் சொல்லுவார்கள். 😠

posted from Bloggeroid

1 comment: