Monday, April 11, 2016

🔯 மூன்று விளக்கங்கள் 🔯





பிரம்மம் / கடவுள் / இறைவன்/ பரமாத்மா / இயற்கை (நாத்திகம்) / Father (கிறித்துவம்) / அல்லா (முகம்மதியம்) பற்றிய அற்புதமானக் கட்டுரை இது. மார்கழி (டிசம்பர்) 2015 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளிவந்தது. இதை எழுதிய திரு. பிர. கிரிதர ஜெகதீஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். 👏

இன்னும் பல பக்கங்கள் நீளவேண்டியது. இடப்பற்றாக்குறையால் சுருக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சமற்கிருத வார்த்தைகளுக்கு உரிய தமிழ் பொருள், கேள்வி கேட்டு, விளக்கி, பதிலளித்து பின்னர் விலக்கி அடுத்த நிலைக்குச் செல்லும் விதம்..... அருமை!! 👌

என்னைப் பொறுத்தவரை இப்படி ஆராய்ந்து அறியும் திறன் சமண - பௌத்த தாக்குதல் ஏற்படும் வரை சாமான்யர்களிடமும் இருந்தது என்றே நம்புகிறேன். கொங்கணவர் கதையைப் படித்தாலே இது விளங்கும்.

கொங்கணவ சித்தர் கதையில் வரும் வாசுகி அம்மையாராவது வள்ளுவப் பெருந்தகையின் மனைவி என்பதால் கற்றவர் என்ற கணக்கில் ஒதுக்கலாம். ஆனால், அதில் வரும் இறைச்சி வியாபாரி சாமான்ய மனிதரே. ஆனால், பிரம்மத்தைப் பற்றிய தெளிவு பெற்றவர். அவரிடமிருந்து தான் கொங்கணவர் தெளிவு (ஞானம்) பெறுகிறார். பின்னர், திருமலையில் சமாதி அடைகிறார். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே ஸ்ரீபாலாஜி பெருமாள் (மூலவர்)! இவரது சமாதிக் கோயிலே இன்று உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோயிலாகும்!!

இப்படி சாமான்யரிடமும் இருந்த ஆராய்ந்து அறியும் திறன் இருள் மதங்களின் (சமணம் & பெளத்தம்) வருகையாலும், தொடர்ந்த மத & அரசியல் படையெடுப்புகளாலும் ஒரு சாரரிடம் மட்டும் தங்கிவிட்டது. இப்படி நடக்காமல், அத்திறன் எல்லோரிடமும் பரவலாகவே இருந்திருந்தால், இன்று நம் நாட்டில் காணப்படும் பல அவலங்கள் தோன்றியே இருக்காது என்பது என் கருத்து.

posted from Bloggeroid

No comments:

Post a Comment