(படம்: தினமலர் - சென்னை - 22/04/2016)
💮 பதினெண் சித்தர்களில் ஒருவரான ராமதேவரின் சமாதிக் கோயிலே அழகர் கோயில்.
💮 இவரின் சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சின்னமே மூலவர் ஸ்ரீ பரமஸ்வாமி பெருமாள்.
💮 ஆன்ம ஞானமும் விஷய ஞானமும் (அண்டம் முதல் நம் உடலாகிய பிண்டம் வரை அனைத்தைப் பற்றிய அறிவும்) கைவரப்பெற்றவர். இவரே தேரையர் எனவும் சில அறிஞர்கள் கூறுவர்.
💮 உலக வாழ்க்கை & ஆன்மஞானம் என மாறிமாறி பயணம் செய்து திண்டாடிக் கொண்டிருந்த மண்டூகருக்கு அறிவுத் தெளிவைக் கொடுத்து (ஞானம் அளித்து) அவரை நிரந்தர ஞானியாக்கினார் (மகரிஷியாக்கினார்).
💮 இவர் முஸ்லிம்களின் நபியான முகம்மதுவின் சமகாலத்தவர். அங்கே சென்று யாக்கோப்பு (Yacob) என்ற பெயருடன் சில காலம் அவருடன் தங்கியிருந்தார். பின்னர், அந்தக் கோலத்தை கலைந்துவிட்டு, ராமதேவராக மீண்டும் தாய்நாடு திரும்பி அழகர்கோவிலில் சமாதியானார். (என்ன நடந்திருக்கும்? பின்னாளில், இந்தியாவும் உலகமும் படப்போகும் கொடுமைகளை உள்ளுணர்வால் உணர்ந்திருப்பார். தன்னால் முடிந்தமட்டும் தடுக்க நினைத்திருப்பார். அங்கே நடப்பதைக் கண்டபின் "இது ஆகறதில்ல" என்று தம் பாட்டை கவனிக்க ஊர் திரும்பியிருப்பார்!
posted from Bloggeroid
No comments:
Post a Comment