"உள்ளத்தை அள்ளித்தா" என்ற திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி:
சிறையில் இருந்து தம்பி-மணிவண்ணன் வெளியே வந்திருப்பார். அவரைப் பார்த்து செந்திலும் பாண்டுவும், "பாஸ், நீங்க ரொம்ப மாறிட்டீங்க. இங்கிலீஷ் பேசுறீங்க." என்று சொல்வர். அதற்கு மணிவண்ணன், "ஜெயிலுக்குள்ள 2 ஃபாரினர்ஸ வச்சிருந்தாங்கோ. ஸ்மக்ளர்ஸ். அவங்களோட பேசிப்பேசி, தமிழ் கொஞ்சம் கட்டாயிடுச்சு; இங்கிலீஷ் கொஞ்சம் ஏட் ஆயிடுச்சு" என்று பதில் சொல்வார்.
இக்காட்சியை போன்று, அறநிலையத் துறை அலுவலர்களும் அசுரர்களோடு பழகிப் பழகி, அவர்களை போன்று புருடா விடக் கற்றுக் கொண்டுள்ளனர் போலிருக்கிறது! 😁
oOo
அடுத்து, சில "பகுத்தறிவு" கேள்விகள் 😜:
😀 அகத்தியர் குறுகச் செய்தது பெருமாளை. எனில், பெருமாளுக்குத்தானே தலைவலி வரவேண்டும்? எப்படி சிவ பெருமானுக்கு தலைவலி வரும்?
😃 பெருமாளை குறுகச் செய்து சிவ பெருமானாக மாற்றிவிட்டால், ஏற்கனவேயிருக்கும் சிவபெருமானின் நிலை என்னவாகும்?
😄 மேலும், பெருமாளின் வேலையை யார் பார்த்துக் கொள்வார்?
😁 பெருமாள் சிவனாக மாறிவிட்டால், உமையன்னைக்கு குழப்பமேற்படாதா? பெருமாளை காணாது மலர்மகள் அச்சமடையமாட்டாரா?
😆 யார் யாருக்கு பிறந்தார்கள் என்ற குழப்பம் வராதா? இதென்ன மாமாப்பயலின் பரம்பரையா? அல்லது, கொல்டியாள்களின் திராவிசம் கோளோச்சும் இடமா?
(ஜனகராஜின் ஒலிப்பில்) கன்ஃபியூஷன்!! 😂😂🤣
oOo
அகத்தியர், பெருமாள், சிவ பெருமான், சந்தனாதி தைலம் எல்லாம் மெய்யியல் குறியீடுகளாகும்.
🌷 அகத்தியர் - திருக்குற்றாலீசுவரர் என்ற இறைவடிவத்தின் கீழ் திருநீற்று நிலையில் (அசுரத்தில், சமாதியில்) இருக்கும் பெருமான்.
🌷 பெருமாள் - நமது மனம்.
🌷 பெருமாளை குறுகச் செய்வது - நமது மனதை அடக்குவது.
🌷 சிவ பெருமான் - உள்ளபொருள் / நமது தன்மையுணர்வு.
🌷 மனதை விரிய விட்டால் பெருமாளாவோம். மனதை அடக்கி / சுருக்கி / அழித்து விட்டால் சிவமாவோம்.
🌷 மெய்யறிவு பெற்ற பின்னரும், ஜிஎஸ்டி-சூழ் வையகத்தை சமாளிப்பதற்கு தெளிவு, பயிற்சி வேண்டும். இதையே "6 திங்கள்களுக்கு எண்ணெயை காய்ச்சி, இறைவடிவத்தின் மீது ஊற்றி, வழித்தெடுத்தல்" என்ற பகுதி குறிப்பிடுகிறது. (இதை விரிவாக விளக்கினால், இவ்விடுகையின் நோக்கம் சிதறிவிடும். திருவருள் விரும்பின் வேறொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம். 🙏🏽)
திருக்குற்றாலப் பெருமான் என்பது எந்த மாமுனிவரை குறிக்குமோ அப்பெருமான், தன்னை நாடி வந்தவர்களிடம், "மனதை அடக்கு / அழி. அது போதும். தக்க சமயத்தில் தெளிவு பிறக்கும். பின்னர், அன்றாட வாழ்வில் சந்திக்கும் தொல்லைகளை என்னிடம் கொண்டு வா. சமாளிக்க கற்றுக் கொடுக்கிறேன்." என்று அருளியிருப்பார். இதையே மேற்கண்ட தலைவலிக் கதையாக பதிவு செய்திருக்கிறார்கள். மறையாக்கம் (Encrypt) செய்யப்பட்டு வரும் தரவை மறைநீக்கம் (Decrypt) செய்து பயன்படுத்த வேண்டுமே தவிர, அப்படியே பயன்படுத்தக் கூடாது.
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment