திருமாவளவன் பேசிய காணொளி: https://youtube.com/shorts/VaVoMfCHNP8?feature=share
ஒரு திரைப்படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி சொல்வார், "ஃப்ரீயா கெடச்சா பினாயில கூட குடிப்படா நீ"!! 😄 இது போன்று, "பொர கிடைக்குதுன்னா என்ன வேணும்ன்னாலும் பேசுவடா நீ" என்று யாராவது இவரை பார்த்துச் சொன்னால்தான் அடங்குவார் போலிருக்கிறது. 👊🏽👊🏽
நேற்று அயோத்தியை மீட்டுவிட்டோம். நாளை கபாலீச்சரத்தை நாம் மீட்க முயற்சி செய்தால் என்ன செய்வதென்று யோசித்து இந்த ஊழியத்தில் இறங்கியுள்ளனர்.
இன்று நாம் கபாலீச்சரம் என்று வணங்கும் திருத்தலம் உண்மையான கபாலீச்சரமன்று! தற்போது சாந்தோம் என்றழைக்கப்படும் தசமபாக மதத்தின் தொழிற்கூடம் இருக்குமிடத்தில்தான் அன்று உண்மையான கபாலீச்சரம் ஓங்கி உயர்ந்திருந்தது. அத்திருத்தலத்தை அழித்து, அங்கிருந்த மூலவரை உடைத்தெறிந்தான் பரங்கி கொடூரனான வாஸ்கோட காமா! உடைத்தெறியப்பட்ட அம்மூலவரைக் கொண்டுவந்து இப்போதிருக்குமிடத்தில் வைத்துவிட்டனர் நம் முன்னோர்கள்.
புதையல் வைக்கப்பட்ட இடத்தின் அடையாளத்தை அழித்துவிட்டால் புதையல் அழிந்துபோகுமா? அடையாளத்தை இடமாற்றி வைத்துவிட்டால் புதையல்தான் தானாக இடம் பெயர்ந்துவிடுமா? மூலவரை இடமாற்றிவிட்டால் அதற்கடியில் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️ இடம்பெயரமாட்டார். அவ்விடத்து மண்ணை முற்றிலுமாக அகற்றினாலும் அவர் வேறெங்கும் போகமாட்டார். அவரது சமாதியின் மீது இன்று நிற்கும் தொழிற்கூடம் ஒரு நாள் அகற்றப்படும். காழியூர் பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️ "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தாெடங்கும் பதிகம் பாடி பூம்பாவை அம்மையாரை உயிர்பித்த அந்த திருத்தலம் மீண்டும் நம் வசமாகும். கபாலீசரை மீண்டும் தொழும் பேறு நமக்கு கிட்டும்.
oOOo
இந்த காணொளியில் சொல்வதுபோல் இஸ்ரவேலர் ஈசன் என்றழைக்கப்படும் தகுதி பெற்றவரா?
தன்னை விட்டு உலகை வேறொன்றாக காணாத நிலையே சிவநிலை. எனில், பரங்கியரின் திரைக்கதையின் படி, இஸ்ரவேலர் குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, உள்ளபொருளை தந்தை எனவும், அவரிடம் மக்களை மன்னிக்கும்படியும் கோரிக்கை வைக்கிறார். இந்த திரைக்கதை உண்மையெனில் தான், மக்கள், இறைவன் என நம்மைப் போன்று உலகைக் காண்பவரை எவ்வாறு ஈசனென்று ஏற்றக் கொள்ளமுடியும்?
அவருடைய இனம் மேம்பட வேண்டுமென அவர் உழைத்திருக்கலாம். போராடியிருக்கலாம். செயற்கரிய சில செயல்களை புரிந்திருக்கலாம். ஆனால், சிவநிலையை அடையவில்லை.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment