Sunday, August 23, 2026

நடு தில்லை எனும் சேவூர்! 🙏🏽


🌷 சுக்கிரீவன் - அறிவு
🌷 வாலி - மனம்

மனம் தோன்றிய பிறகு அறிவு தோன்றியது, அதாவது, வாலிக்கு தம்பி சுக்கிரீவன், என்பது நாமமதத்தின் கண்ணோட்டமாகும்.

🌷 நடு தில்லை (அசுரத்தில், சிதம்பரம்) - இங்கிருக்கும் பெருமானின் கண்ணோட்டமும், தில்லையிலிருக்கும் பெருமான்களின் கண்ணோட்டமும் ஒன்றாக இருக்கும்.

🌷 ஆடை (அசுரத்தில், வஸ்திரம்) அணிவித்தல் - "நான் இன்னார்" என்ற பற்றை விட்டுவிடுதல்.
🌷 திருமணம் - மனமழிவதால் கிடைக்கும் வீடுபேறு.
🌷 பிள்ளை (அசுரத்தில், புத்திரன்) - மெய்யறிவு

நம்மிடம் இருக்குமொன்றை கொடுத்தால், இல்லாதவொன்றை இறைவன் நமக்கு கொடுப்பார் என்ற கணக்கில், நம்மிடம் இருக்கும் "நான் இன்னார்" என்ற பற்றை விட்டுவிட்டால், மனமழிந்து (திருமணம் நடந்து), மெய்யறிவு (பிள்ளைபேறு) கிட்டும்.

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 18, 2026

உள்ளபொருளின் குறையை மனம் போக்கியதாம்! 😆


நாமமதத்தில், உயர்ந்த நிலையிலிருக்கும் ஒருவருக்கு ஆசைகளை தூண்டிவிட்டு, அவரை தாழ்ந்த நிலைக்கு தள்ளுவதற்கு பெயர்தான் குறையை (அசுரத்தில், தோஷம்) போக்குதல்! திருமறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) பெண்ணாசையால் (மேனகையால்) தூண்டப்பட்டு குடும்பியானார். இதுதான் குறைநீக்கமாகும்!

கண்டியூர் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திராவிசத்தின் முன்னோடியாக இருந்திருப்பார் போலிருக்கிறது. வந்து சிக்கியவரிடம் "திராவிசமாக" பேசி (🤭), ஒழுக்கங்கெட்டவனாக (திராவிடனாக 🤣) மாற்றியிருப்பார் போலிருக்கிறது! 😜

🌷 சிவன் = மனமழிந்தவர்
🌷 தோஷம் = மெய்யறிவு
🌷 பெருமாள் = மனமியங்குபவர்

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, August 16, 2026

குடவாசல் புனைவுக் கதையின் உட்பொருள்


🌷 கருடன் கட்டிய திருக்கோவில் & சுயம்பு இலிங்கம் - அந்த இறைசின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், யாருடைய வழிகாட்டுதலும் இன்றி நிலைபேறு அடைந்தவர். மேலும், கூர்ந்த அறிவுடையவர்.

🌷 கருடனின் அலகு பட்ட தழும்பு - ஏதோவொரு கூர்மையான பொருள் பட்ட தழும்பு.

🌷 தாயின் ஆசை - மனதின் ஆசை. மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றத் தொடங்கினால்... 😏 இதற்கு பதிலாக, "அந்த ஆசை யாருக்கு தோன்றியது / எங்கிருந்து தோன்றியது?" என்று கூர்ந்துப் பார்த்தால், எழுந்த ஆசை காணாமல் போய்விடும்; மனமும் அடங்கிவிடும்.

இன்று கருடப்பஞ்சமி என்பதால் இணைப்புப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

🌷 நாகச்சதுர்த்தி - மனதை போற்றும் திருநாள்
🌷 கருடப்பஞ்சமி - அறிவை போற்றும் திருநாள்

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Friday, August 14, 2026

எல்லா நோய்களின் பிறப்பிடமான மனமானது மருத்துவராம்!! 😃


😄 அசுரர் = மெய்யியல்!
😆 திராவிசம் = சாதி & தீண்டாமை ஒழிப்பு!
😜 கட்டுமரம் = தமிழனத் தலைவன்!
😝 பொம்முலு & திப்பு = விடுதலைப் போராட்ட வீரர்!
😂 மோகன்தாஸ் = விடுதலை பெற்றுத் தந்தவர்!
😏 பீட்டர் = அறிவு!
🥹 அசுரம் = இறைமொழி!

இவ்வரிசையில்,

🤣 திரங்கன்முகவன் = மருத்துவர்!

திரங்கன்முகவன் (அசுரத்தில், ஆஞ்சநேயன்) எனில் மனமாகும். மனமே எல்லா நோய்களின் பிறப்பிடமாகும். பலரின் மனநோயாலேயே மேற்கண்ட பட்டியலில் காணப்படும் டுபாக்கூர்களை மேன்மையானவையாக நாம் அறிந்திருக்கிறோம்.

மனமென்பது கானல்நீர் காட்சி போன்றதாகும். கானல்நீர் காட்சி தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஆனால், அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டுவிட்டால் போதும்; பாதிப்படையமாட்டோம். இவ்வாறே மனமென்றால் என்னவென்று புரிந்துகொண்டால் போதும். பிறவிப் பெருங்கடலை கடந்துவிடலாம்.

மனத்தின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற

-- திரு அருட்கடல் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, August 3, 2026

"4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" - கும்மாங்குத்துப் பொருள்! 😀


வீடுபேறடைவதற்கு 4 வழிகள் உள்ளன - அன்பு, பணிவு, ஆளுமை & அறிவு. இதை நால்வர் பெருமக்களை கொண்டு குறிப்பால் உணர்த்திருயிருப்பர் தொல்தமிழர். இதையே பேச்சுவழக்கில், "நாலு பேர் சொல்றத கேக்கணும்" என்று சொல்லி வைத்தனர்.

திருநணா திருக்கோவிலானது திருநெறியத் தமிழரிடமே தொடர்ந்து இருந்திருந்தால், "4 வகை அடியவரும் வீடுபேறடைந்த திருக்கோவில்", அல்லது, "4 பெருவழிகளில் பயணித்தவரும் வீடுபேறடைந்த திருக்கோவில்" என்று எழுதியிருப்பர். ஆனால், தமிழரின் போதாத நேரம், இன்று, அத்திருக்கோவில் அசுரரிடம் இருப்பதால், "4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" என்று ஒருவரும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதியுள்ளனர்!

அவர்களும் கரையேறப் போவதில்லை. மற்றவரையும் கரையேற விடப்போவதில்லை. அவர்கள் கரையேறி விட்டால், பருப்பு ஸாதத்தை சுவைக்க முடியாதே! மற்றவர் கரையேறி விட்டால், பருப்பு ஸாதம் கிடைக்காதே!

👊🏽👊🏽