Wednesday, November 3, 2021

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽✨🎁🍥🍡🎊🎉


☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ நரகாசுரனை கொன்ற நாள். அதாவது, கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்.

☀️ நரகாசுரன் - "நான் இந்த உடல்" என்ற தவறான எண்ணம். இந்த தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டுமெனில் நம்மைப் பற்றிய சரியான அறிவு துய்ப்பாக மலரவேண்டும். இது கண்ணபிரானுக்கு நடந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

☀️ கங்கை குளியல் - தீபாவளியன்று சந்திக்கும் நபர்களிடம் கேட்கப்படும் கேள்வி: கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) இதன் பொருள்: மெய்யறிவு கிடைத்ததா?

மெய்யறிவில் திளைக்கும்போது நம் தலையிலுள்ள பிட்டியூட்டரி சுரப்பி சிறப்பாக வேலை செய்யும். இதனால் உடலிலுள்ள மற்ற சுரப்பிகள் தூண்டப்பட்டு, அவையும் சிறப்பாக வேலை செய்யும். இதையே குளியல் என்று குறிப்பிட்டுள்ளனர். பிட்டியூட்டரி சுரப்பியிலிருந்து வெளிப்படும் நீர் வெள்ளை (கங்கை) நிறத்தில் இருப்பதால் "கங்கை குளியல்" என்று பெயரிட்டுள்ளனர். இதையே "சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவதாக" உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ தமிழகத்தில் தீபாவளியை அறிமுகப்படுத்தியது தெலுங்கு வைணவ மன்னரான திருமலை நாயக்கராவார். வைணவம் பரவுவதற்காகவும், அடைமழை காலத்தில் அடங்கிப் போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும் அறிமுகப்படுத்தினார். இன்றும் கூட, பெரும்பாலான கிராமப்புற தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. பொங்கலே தமிழர் திருநாளாகும்.

☀️ கண்ணபிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை மெய்யறிவைப் பற்றியது. ஆனால், தீபாவளி என்ற சொல் உணர்த்தும் பேருண்மை வேறு: விளக்குகள் பலவானாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இது போன்று, உயிரிகள் பலவானாலும் எல்லோருள்ளும் உள்ள தன்மையுணர்வு ஒன்றுதான்.

இந்த உண்மை உணரப்பட்ட திருத்தலம் நமது திருவண்ணாமலை (உணரப்பட்ட திருநாள் - திருக்கார்த்திகை). சில சமயம், ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வடக்கிற்கு சென்று, மீண்டும் வடக்கிலிருந்து தமிழுக்கு வரும். இது போன்று, திருக்கார்த்திகை வடக்கிற்கு சென்று கண்ணபிரானின் திருநாளோடு இணைந்து தீபாவளியாகி, பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும், நம்மவர்கள் விளக்கிடுதலை மட்டும் திருக்கார்த்திகையன்றே தொடர்ந்துள்ளனர்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நாம் "தொல் கார்த்திகை நாளன்று" (காழியூர் பிள்ளையாரின் சொற்கள் 🌺🙏🏽🙇🏽‍♂️) விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment