
(தினமலர் - சென்னை - 10/06/2016)
முன்பெல்லாம் பரங்கிமுறை மருத்துவர்கள் தான் கடவுளர்கள் போல் நடந்துகொள்வர். கேள்வி கேட்காமல் கும்பிடு போட்டுவிட்டு இடத்தை விட்டு நகரவேண்டும். இப்போது நம் பாரம்பரிய மருத்துவர்களும் அதே வழியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.
💥 கூட்டமாக வாழ்வது (இன்றும் கூட Doctors' Enclave என்று விளம்பரங்களைக் காணலாம்.)
💥 அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் (ஏதாவது பரங்கி நம் சமய/தத்துவ புத்தகங்களைப் படித்துவிட்டு "எல்லாவற்றிற்கும் மனதே அடிப்படைக் காரணம். மனதை Coo|-ஆக வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்." என்று ஏதாவது 5 நட்சத்திர விடுதியில் வகுப்பு எடுப்பான். அதன் பின்னர் சில மாதங்களுக்கு இவர்கள் வரும் நோயாளிகளிடம் அதையே ஒப்பித்துக் கொண்டிருப்பர். 😂)
💥 வரும் நோயாளிகளிடமிருந்து தகவலோ/உதவியோ தேவைப்பட்டாலும் "என்னிடம் கேட்டிருக்கிறாரே. என்னே என் பாக்கியம்." என்று பரவசமடையும் விதத்தில் கேட்பது 😀
அரசாங்கங்களின் தவறான கொள்கைகளால் எல்லா துறைகளும் இன்று தரமற்றவர்களால் நிறைந்திருப்பது போல், இந்தத் துறையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால், சிரிப்பு துணுக்குகளில் வருவது போல மருத்துவரிடம் செல்வது என்பது சொத்தை இழக்க அல்லது எமனை சந்திக்க என்ற நிலை தான் அடுத்தது!! 😔
இதற்கெல்லாம் தீர்வு நம் மூதாதையரின் இயற்கை சார்ந்த தற்சார்பான வாழ்க்கை முறை ஒன்றே!! 3 தலைமுறைகளில் வியாதிகளும், 5 தலைமுறைகளில் மரபணு கேடுகளும் பெருமளவு நீங்கிவிடும்.
பி.கு.: மக்கள் நலன், சேவை மனப்பான்மை, ஒளிவுமறைவின்மை போன்ற குணங்கள் பெற்ற மருத்துவர்கள் இல்லாமலில்லை. எண்ணிக்கையில் மிக குறைவு.
posted from Bloggeroid
No comments:
Post a Comment