Thursday, June 16, 2016

😈 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தொழிற்சங்கம் துவங்க வாய்ப்பு 😈


(தினமலர் - சென்னை - 13/06/2016)

சாதாரணமாக, தமிழக வரலாற்றில் ஆட்சிக்கு வந்தவுடன் தி.நகரில் கட்டிடங்கள் சீரமைப்பு, பள்ளிக் கட்டண சீரமைப்பு என ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி தேர்தல் செலவை மீட்டுக்கொள்வர். இம்முறை ஒரு மாற்றத்திற்காக தகவல் தொழில்நுட்பத்துறையிலும், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் கை வைத்துள்ளனர் என நினைக்கிறேன். இந்த கணக்கு சரியெனில், கோடிகள் இடம் மாறியவுடன் "இயல்பு" நிலை திரும்பி விடும். இந்த கணக்கு பொய்யெனும் பட்சத்தில் (அதாவது, தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டால் 😍😍😍) ....

😊 அரசியல் கட்சிகளின் மாத வருமானம் அதிகரிக்க வாய்ப்பு
☺ சங்க நிர்வாகிகள் எனும் ஜீவராசிகள் நேர்முகமாக இக்காலத்திற்கும், மறைமுகமாக வருங்கால சந்ததியினருக்கும் சொத்து சேர்க்க வாய்ப்பு
😀 "உழைப்பாளர்களின்" வேலைப்பளு வெகுவாக குறைய வாய்ப்பு
😁 தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு நிறுவனங்கள் தலை தெறிக்க ஓட வாய்ப்பு
😂 மொத்தத்தில், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சங்கு ஊத வாய்ப்பு (ஆனானப்பட்ட நோக்கியாவிற்கே சங்கு ஊதிய "வாளோடு தோன்றிய மூத்த குடி" ஆயிற்றே 😉).

😛😜😝

posted from Bloggeroid

No comments:

Post a Comment