Thursday, May 5, 2016

🎶 கனிந்த உன் வேணுகானம் ....


(www.independent.co.uk/news/science/free-will-could-all-be-an-illusion-scientists-suggest-after-study-that-shows-choice-could-just-be-a7008181.html)

இந்த ஆராய்ச்சி எல்லாம் என்றோ நம் மூதாதையர் முடித்து விட்டனர். அருமையான விடையும் கண்டறிந்தனர். தாங்கள் கண்டதை நமக்கு ஒரே வார்த்தையில் ஒரு ரத்தினம் போல் விட்டுச் சென்றனர். அவ்வார்த்தை - பிரகிருதி / இயற்கை!

இந்த அண்டம் (அணு முதல் கருந்துளை வரை) தானாக இயங்குகிறது. அதன் பிரதிபலிப்பாகிய பிண்டம் எனும் நம் உடலின் இயக்கமும் அவ்வாறே. தானாக இயங்கினாலும் தாறுமாறாக இயங்காமல், ஒரு வரைமுறையின் படிதான் இயங்குகிறது. அதாவது, விதிப்படிதான் இயங்குகிறது. (உடனே நம் சிந்தனை "தலைவிதி"-யை நோக்கிப் பாயும்! 😀 விதி என்பதற்கு Rule என்றும் பொருள் கொள்ளலாம்.)

உயிருள்ளவைகள் புரியும் வினைகளும், அதனால் விளையும் எதிர்வினைகளும் அவ்வாறே. எல்லாம் ஒரு ஒழுங்குடன் நடந்தாலும், எல்லாம் தோற்றமாத்திரமே!

நான் இந்த இடுகையை எழுதவில்லை. எழுதியது பிரகிருதியே. நீங்கள் இதைப் படிக்கவில்லை. படிப்பது பிரகிருதியே. 😂😂

நம் சமய அடிப்படைகள் தெரியாத ஒருவர் இதைப் படிக்க நேர்ந்தால், கேனப்பயல் என்று கிண்டலடிக்க வாய்ப்புண்டு. 😉

அப்படிப்பட்டவர்களுக்கும், "மேற்கே சரி" என்னும் அறிவுஜீவிகளுக்கும் பகவான் ஸ்ரீரமணரின் இந்த வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்கும்: "அவரவர் பிராரப்தம் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மெளனமாய் இருக்கை நன்று."



பிரகிருதி என்னும் இயற்கையின் செயல்பாட்டையும், நாம் எப்படி வாழ வேண்டும் என்னும் சூட்சுமத்தையும் ஒருங்கே வெளியிட்டிருக்கிறார் பகவான். அவர் குறிப்பிடும் மெளனம் வாய் மூடிய மெளனமன்று. எண்ணங்களற்ற மெளனம். கண்ணபிரானின் கையிலிருக்கும் புல்லாங்குழல் போன்று நாமிருக்க வேண்டும். கானம் எழுவது நம்மால் அல்ல என்பதை உணரவேண்டும். முழுவது உணருவது என்பது ஞானமடைந்த பின்னர் தான். ஆனால், இதையெல்லாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே, வாழ்க்கை கண்ணன் எழுப்பும் வேணுகானம் தான்!! 😍



எல்லாம் சரி. இதற்கும் இணைக்கப்பட்டிருக்கும் பரங்கி இணையப் பக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இங்கே சொல்லப்பட்டவைகளை பரங்கி ஒப்புக் கொள்வானா? என பல கேள்விகள் எழும்.

அதெப்படி பரங்கி ஒப்புக்கொள்வான்? யேசுநாதரை மேற்கோள் காட்டியிருந்தால் பரவாயில்லை. மேற்கோள் காட்டியிருப்பது ஸ்ரீரமணரையும் & கண்ணபிரானையும் அல்லவா. 😜

கிழக்கிலிருந்து சுட வேண்டியது. சுட்ட இடம் அழிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது. சுட்டதை பிட்டு பிட்டாக பிரித்துக் கொள்ளவேண்டியது. விதவிதமான பெயர்களை வைத்துக் கொள்ளவேண்டியது. ஒவ்வொன்றாக வெளிவிடவேண்டியது. அவர்களுக்கு அவர்களே புகழாரம் சூட்டிக் கொள்ள வேண்டியது. அதற்கு Copyright/left/top/bottom பெற்றுக் கொள்ளவேண்டியது. உலகத்தின் தலையில் கட்டவேண்டியது. கிடைக்கும் வருமானத்தில் "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என தானும் அழிந்து உலகையும் அழிக்கவேண்டியது! 😡😡😡

posted from Bloggeroid

No comments:

Post a Comment