Showing posts with label வேள்வி. Show all posts
Showing posts with label வேள்வி. Show all posts

Saturday, August 12, 2023

பாபத்த அக்னிலேயோ / ஜலத்துலேயோ போக்குவது & பிறந்த ஊரில் / காசியில் மடிவது


அண்மையில், ஒரு தொடரி பயணத்தின்போது, இரு வயதான ஆரியப் பூசாரிகள் பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர்களது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

> பாபத்த அக்னிலேயோ, இல்ல ஜலத்துலேயோதான் போக்கமுடியும். அதனாலதான் நம்ம பெரியவா யாகம் பண்ணிண்டிருந்தா. சமுத்துரத்துல ஸ்நானம் பண்ணச் சொன்னா.

> கடைசி காலத்த காசியில கழிக்கலாம்னு இருக்கேன்.

சொந்த ஊர்ல இல்லயா பிராணன் போவணும்னு சொல்லுவா?

அப்படியும் சொல்லுவா. காசிலேயும் போகலாம்னு சொல்லுவா. என்னோட பெரியவாவும் அங்க போயிதான் முடிச்சிண்டா.

oOo

இனி அவர்களது நம்பிக்கைகளின் உட்பொருளை பார்ப்போம்.

🌷 வினைப்பயன்

ஆரியத்தில் பாவமென்பது பாவம், புண்ணியம் என இரண்டையும் குறிக்கும். நம் தமிழில் வினைப்பயன் என்றழைக்கலாம். நல்வினை & தீவினை என இரண்டு பயன்களையும் குறிக்கும்.

வினைப்பயன்கள் எண்ணங்களை தோற்றுவிக்கும். எண்ணங்களை நாம் அனுமதித்தால் செயல்களாக மாறும். செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகள் மீண்டும் எண்ணங்களுக்கு வித்திடும் ...

🌷 வேள்வி செய்தல்


> வேள்விக்குழி (யாகக்குண்டம்) - நமதுடல்
> அதில் எரியும் நெருப்பு - நாம் (நமது தன்மையுணர்வு)
> நெருப்பிலிடப்படும் பொருட்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

ஒரு எண்ணம் தோன்றியவுடன் அதன் பின்னே செல்லாமல், அது யாருக்கு தோன்றியது என்று பார்த்தால், எழுந்த எண்ணம் அடங்கிவிடும். இதுவே "பாபத்த (எண்ணத்தை) அக்னில (நமது தன்மையுணர்வில்) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 கடலில் குளித்தல் (சமுத்திர ஸ்நானம்)


கடல் என்பது ஒரு வகையில் நமதுடலை குறிக்கும்; இன்னொரு வகையில் வையகத்தை குறிக்கும். கடலில் குளித்து "பாபத்தை" போக்குவதென்பது இவ்வையகத்தில் நாம் வாழும் வாழ்க்கையை குறிக்கும்.

எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்யும்போது, விளைவுகளும் நம்மையே சாரும். இல்லையெனில், சாராது. இக்கண்ணோட்டத்துடன் வாழ்தலே "பாபத்த (எண்ணத்தை) ஜலத்துல (வாழ்க்கையை வாழ்ந்து) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 காசி

> காசி - ஒளிபொருந்திய / இருளற்ற இடம்.
> இருள் - உடல், வையம் ஆகியவற்றை உண்மையென்று நம்பும் அறியாமை.
> ஒளி - நமது தன்மையுணர்வு. நாமே உள்ளபொருளென்ற மெய்யறிவு.
> காசியில் இறப்பது - உடல் இறக்கும்போது, நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக (சிவமாக) - இருப்பது.

உடலிறக்கும் போது, நாம் நாமாக இருக்கவேண்டுமெனில், அதற்கு முன்னரே நாம் யாரென்று அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த காசியில கழித்தல்" ஆகும்!!

🌷 பிறந்த ஊர்

நமதுடல்தான் பிறந்திருக்கிறது. அதற்குதான் பிறந்த நாளும் பிறந்த ஊரும். நமக்கில்லை. உடல் விலகியபின், நாம் நாமாகிவிடுவோம். உண்மையில் எப்போதுமே நாம் நாமாகத்தான் இருக்கிறோம். ஆனால், இவ்வுண்மையை நாம் உணருவதில்லை. உணராததால், அன்னை மாயை / மாயோனின் தில்லுமுல்லுக்கு (உடல்-வையகக் காட்சிக்கு) இடங்கொடுத்துவிடுகிறோம். இதிலிருந்து தப்பவேண்டுமெனில், நம்மை பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த சொந்த ஊரில் (நமது தன்மையுணர்வில்) கழித்தல்" ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, May 30, 2022

வேள்வியின் உட்பொருள் என்ன?

https://youtu.be/7fPR-eGr738

"காணக்கிடைக்காத காட்சி" என்ற உரையுடன், அண்மையில், திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற ஒரு வேள்வியின் இறுதிப் பகுதியை காணொளி பிடித்துப் பகிர்ந்திருந்தார்கள். அது பற்றி ...

oOo

எவ்வாறு பொருளுணராது சொல்லப்படும் பாடலால் பயனில்லையோ, அவ்வாறே பொருளுணராது காணும் காட்சியாலும் பயனில்லை!

🌷 இங்கு ஓதப்படுவது திரு ருத்திரத்தின் நமகப் பகுதியிலுள்ள 8வது செய்யுளாகும். சிவபெருமானின் தோற்றத்தை, தன்மையை, அருமை பெருமைகளை ஓதுகின்றனர். ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த பொருளுள்ளது. "நம" என்ற ஒரு சொல்லைப் பற்றி சிந்தித்தாலே போதும்:

ந - இல்லை
ம - எனது
ந+ம - என்னுடையது இல்லை. எதுவும் என்னுடையது இல்லை. எனில், யாவும் இறைவனுடையதே.

🌷 அடுத்தது, வேள்விக் காட்சி.

🔸 மூன்றடுக்குகள் கொண்ட வேள்விக்குழி (குண்டம்) - தூல, சூக்கும & காரண உடல்கள். மொத்தத்தில், நமதுடல்

🔸 எரியும் நெருப்பு - மூலக்கனல் எனப்படும் நமது தன்மையுணர்வு. இதுவே, உள்ளபொருளுமாகும்.

🔸 குழிக்குள் இடப்படும் பொருள்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

🌷 எண்ணங்களை எவ்வாறு தன்மையுணர்வுக்கு இரையாக்குவது?

ஓயாத அலைகள் போன்று ஓயாமல் தோன்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களைப் பின்பற்றிச் செல்லாமல், நமது தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றிக்கொண்டிருந்தால், தோன்றிய எண்ணங்கள் தாமாகவே மறைந்துபோகும். இதுவே இரையாக்குவதாகும்.

🌷 நிறைபொருள் (பூர்ணாஹுதி) - "நான் யார்?" என்ற நினைவு. எல்லா எண்ணங்களையும் இரையாக்கிய பின்னர், இறுதியில், இதையும் விட்டுவிடுவோம். இந்த நிறைபொருளான நான் யாரெனும் நினைவிற்கு பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ இட்டுள்ள பெயர்: பிணஞ்சுடு தடி!! 😊 ("பிணஞ்சுடு தடி போல் தானுமழியும்")

🌷 அடுத்து, இறைவனுக்கு காட்டப்படும் ஐஞ்சுடர் விளக்கு.

ஐஞ்சுடர் - ஐம்பொருள்கள் - உலகம்.

"ஐம்பொருள்களின் கலவையாகிய உலகம் நீயே" என்பது பொருள்.

இவ்வாறு, வேள்வியென்ற பெயரில் அரங்கேற்றப்படும் திருக்காட்சியை பிரித்துப் பொருள் காண முற்படாவிட்டால், காணும் காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் பயனற்றதாகிவிடும்; ஒரு திரைப்படம் பார்த்த கணக்காகிவிடும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, January 27, 2022

பூசை, வேள்வி & தன்னாட்டம்


பூசை: இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டும், அவரைப் பற்றிய பொருண்மொழிகளை ஓதிக்கொண்டும் பூ & இலைகளை உடையவர் மீது தூவுவார் பூசாரி.


வேள்வி: பொருண்மொழிகளை ஓதிக்கொண்டு, வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்குள் அரசமர சுள்ளி முதலான பொருள்களை இடுவார் புங்கவர்.

மேற்கண்ட இரண்டு செயல்களும் ஒரு வகையில் ஒன்றுதாம். அதென்ன வகை? தன்னாட்டம்!

நமக்கு தோன்றும் எண்ணங்களை (பூக்கள் / அரசமர சுள்ளிகள்) நமது தன்மையுணர்விற்கு (மூலவர் / நெருப்பு / உள்ளபொருள்) காணிக்கையாக்கிக் கொண்டு, அவ்வுணர்வை விட்டு விலகாமல் இருப்பதே தன்னாட்டமாகும்.

நமது தன்மையுணர்வு என்றும் மாறாது & அசையாது. இவ்வகையில் கருவறையிலுள்ள உடையவருக்கு சமமாகிறது. அதுவே அனைத்திற்கும் ஒளி கொடுப்பது. அதிலிருந்தே அனைத்தும் தோன்றுகிறது. அதுவே அனைத்தையும் செரிக்கிறது. இவ்வகையில் வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்கு சமமாகிறது.

🌷 பூக்கள் = சுள்ளிகள் = எண்ணங்கள்
🌷 உடையவர் = நெருப்பு = தன்மையுணர்வு
🌷 பூசாரி = புங்கவர் = நாம் (நமது தனித்துவம் / அகந்தை)

எவ்வாறு நமக்கு தோன்றும் எண்ணங்களை நமது தன்மையுணர்விற்கு காணிக்கையாக்குவது?

எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பின் தொடர்ந்து சென்று, நிறைவேற்ற எண்ணாமல், நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டிருந்தோமென்றால் எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும். இப்படி எண்ணங்கள் எழுந்து அடங்குவதை, உடையவர் மீது தூவப்படும் மலர்களுக்கு சமமாக அல்லது வேள்வித்தீயில் போடப்படும் சுள்ளிகளுக்கு சமமாக கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, September 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #71 - ஐயர், அந்தணன், பிராமணன், சதுர்வேதியன் & வேள்வி - சிறு விளக்கம்

மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

திருவெண்ணெய்நல்லூரில் நடக்கவிருந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 முதல் திருமணத்தை தடுத்தி நிறுத்தி அவரை எம்பெருமான் ஆட்கொண்ட வரலாற்றைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

🔸 திருவெண்ணெய்நல்லூர் (திருஅருட்துறை) - மூலவர் ஆட்கொண்டநாதர் 🌺🙏🏽. இதன் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் தான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டதாக தொன்நம்பிக்கை.

இவ்வூரில் தான் சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்த மெய்கண்ட சிவம் 🌺🙏🏽 சமாதி அடைந்துள்ளார்.

🔸 சதுர்வேதியன் - நான்கு மறைநூல்களையும் கற்றவர். எனில், நான்கு உயர்ந்த சொற்றொடர்களின் உட்பொருளை அறிந்தவர் (1. உணர்வே உள்ளபொருள், 2. அது நீயே, 3, நானே உள்ளபொருள், 4. இந்த உயிரே உள்ளபொருள்)

இதை வாய்ப்பாகக் கருதி பெரும்பாலும் தவறாகவே பொருள் கொள்ளப்படும் மேலும் சில சொற்களையும் பார்ப்போம்:

🔹 ஐயர் - கற்றறிந்தவர், பெரியவர்.

🔹 அந்தணன் - எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவர் / இழைக்காதவர்

🔹 பிராமணன் - பிரம்மம் எனில் பரம்பொருள் / உள்ளபொருள். பிராமணன் எனில் உள்ளபொருளாய் உள்ளவர். உள்ளபொருளை அறிந்தவர்.

🔹 வேள்வி - உடல் என்னும் குண்டத்தில் எரியும் நெருப்பான தன்மையுணர்வில், மனதில் தோன்றும் எண்ணங்கள் என்னும் குச்சிகளை (சுல்லிகளை) போட்டுக்கொண்டிருப்பதே வேள்வி. வேள்வியின் விளைவால் தோன்றும் புகையென்பது மெய்யறிவாளரிடமிருந்து வெளிப்படும் நல்லுரைகள் (பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 வெளிப்பட்ட "நான் யார்?" போன்று). வேள்விப்புகை காற்றை சுத்தப்படுத்துவது போல் மெய்யறிவாளரின் நல்லுரைகள் கேட்போரின் மனதை சுத்தப்படுத்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, July 18, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #57: வேட்ட அடியார்...

வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #57

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 #வேட்ட #அடியார் - குளிக்குமலை

பாரம்பரிய பொருள்: வேள்வி செய்யும் அடியார் விளக்கிக் காட்டும் உள்ளபொருளை மெய்யன்பர்கள் உணர்ந்தவுடன், அவர்களிடமிருந்து பெருகிப் பொழியும் பெருமகிழ்ச்சி கண்ணீரால் அவர்கள் இறைவனைக் குளிப்பாட்ட, இறைவனும் மகிழ்ச்சியுடன் குளிப்பார்.

"வேள்வி செய்யும் அடியார்" என்றவுடன் ஆரியப் பூசாரிகளைக் கற்பனை செய்துகொள்வோம். இது தவறு. குண்ட நெருப்பில் சுள்ளிகளைப் போடுவது மட்டும் வேள்வியல்ல. நாம் செய்யும் எல்லா செயல்களுமே வேள்விதான். இவ்வுலகில் வாழ்வதே ஒரு வேள்விதான்.

🔹அடிப்படை செயலளவில், #வேள்வி என்பது குண்டத்திலுள்ள நெருப்பில் உயிரற்றப் பொருட்களைப் போடுவது. அதாவது, உடலென்னும் குண்டத்திலுள்ள தன்மையுணர்வு என்னும் நெருப்பில் நம்முள் தோன்றும் எண்ணங்களைப் போடுவது!

(எண்ணங்கள் உயிரற்றவை. இவற்றைப் போடுவது என்பது இவற்றைக் கவனியாதிருப்பது.
இச்செயலை "காமனை எரிப்பது" என்றாலும் தகும்.)

🔹அடுத்தது, #அடியார். தன்மையுணர்வே இறைவனடி. இவ்வுணர்வை விடாதிருப்பவரே இறைவனடியை இறுகப் பிடித்திருப்பவர். அடியார் - தன்மையுணர்வில் இருப்பவர்.

ஆக, வேட்ட அடியார் = உள்ளபொருளை உணர்ந்தவர். மிக உயர்ந்த பக்குவ நிலையில் இருப்பவர். இவர் அடுத்து அடைய வேண்டிய நிலை - நிலைபேறு.

இப்படிப்பட்டவர்கள் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு காட்டும் பாதையே "#சிவஞான #நாட்டம்". மெய்யறிவு கண்ணோக்கம். புறமுகமாகவே செல்ல பழக்கப்பட்டிருக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - தன்மையுணர்வின் மீது - திருப்புவதே மெய்யறிவுக் கண்ணோக்கம். தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது தானாய் இருப்பது.

நல்ல பக்குவ நிலையை அடைந்த ஒரு அன்பர், இத்தகைய கண்ணோக்கத்தை மேற்கண்ட வேட்ட அடியாரிடமிருந்து பெறும்போது, தன்னிலை - சிவநிலை - அடைந்து, பிறவியின் நோக்கம் முடிவடைந்துவிட்ட பெருமகிழ்ச்சியில் அவரது கண்களிலிருந்து நீர் பெருகிப் பொழிய வாய்ப்புள்ளது. சிவமாய் அவர் சமைந்து நிற்கும் வரை அவரது உடல் லிங்கத்திருமேனி எனப்படும். இப்போது அவரது கண்களிலிருந்து பொழியும் நீர் அவரது லிங்கத்திருமேனியை நனைக்கும். இவ்வாறு நனைப்பதே "பேரானந்த நீராட்டு" ஆகும்.

(சிவநிலையை அடைந்து, விதிவசத்தால் அதை இழந்து, பல காலம் போராடி, மீண்டும் அந்நிலையை அடையும் அடியார்களிடமும் மேற்கண்ட விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.)

🔸நாளும் #குறைவு #இலாச் #செல்வம் அளிக்குமலை

உலகிலுள்ள எல்லா செல்வங்களும் மாறக்கூடியவை & அழியக்கூடியவை. மாறாத, அழியாத, என்றும் குறையாத ஒரே செல்வம் மெய்யறிவு - நம்மைப் பற்றிய அறிவு - நான் எனும் தன்மையுணர்வு. இவ்வுணர்வு என்றுமே கூடாது, குறையாது, மறையாது & அழியாது. கனவு, நனவு, தூக்கம் என்று மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருப்பது இவ்வுணர்வு மட்டுமே. இறப்பின் போதும் உடல் தான் இறக்கிறது. இவ்வுணர்வு இறப்பதில்லை.

"இறக்கும் தருவாயில் நமது கடைசி எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி அமைகிறது என்று பகவத்கீதையின் 8ஆம் படலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அக்கணம் நமது தன்மையுணர்வை இறுகப் பற்றிக்கொள்வதற்கு, இப்போதே அது என்ன என்று தேடிப் பிடித்துக்கொள்ளுங்கள்." என்று அறிவுருத்தியுள்ளார் பகவான் 🌺🙏🏽 (வசனாம்ருதம் #621).

தன்மையுணர்வே நாளும் குறைவு இலாச் செல்வம்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, July 19, 2019

அத்திவரதர் வரலாறு - ஓர் ஆய்வு & இந்த ஆதி அடையாளத்தை வணங்கலாமா?

"நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்திமர்கள் காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் ஆதி அடையாளத்தை (ஆதி மூலவரை) வந்து வணங்கிச் செல்கின்றனர்"

(இந்த இடுகை முழுக்க அத்திவரதரை சிலை அல்லது அடையாளம் என்றே குறிப்பிட்டுள்ளேன். சமாதியல்லாத தலங்களில் சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, சமாதி திருத்தலங்களில் சிலைகள் அடையாளப்படுத்தும் மகான்களை உணராது, வெறும் சிலை வணங்கிகளாகவே நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும், வடிவம், ஒப்பனை, ஆரியம், மணம், சுவை என புலன்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு எழுதியுள்ளேன்.)

-- இச்செய்தியால் ஒரு புறம், தமிழ்நாடு சமூக, இந்து சமய, தேச விரோத சக்திகளின் ஆரம்பமாகிய வளர்ப்பு மகளை மணந்தவனின் மண் இல்லை 💪🏽 என்று பெருமை கொள்கின்றனர். மறு புறம், தங்களது முட்டாள்தனம் வளர்க்கப்படுவதை அறியாமல் எல்லையில்லா பெருமகிழ்ச்சி கிடைத்துவிட்டதைப் போல்  உருகுகின்றனர். 😒

அத்தி மரத்தினாலான ஆதி அடையாளத்தை வைத்து, பலவிதமான பலகாரங்கள் தினம் தினம் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 😁 அதில் ஒன்றுதான் இந்தக் காணொளி: https://youtu.be/KwaYdmZy_c0. பலகாரத்தை சுவைத்து 😋 விட்டு வாருங்கள். பிறகு, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைப் பற்றி ஆராய்வோம்.

🍝 பிரம்மதேவர் - இவரின் 4 முகங்கள் 4 திசைகளைக் குறிக்கும். படைப்பாற்றலின் அடிப்படை 4 திசைகளிலிருந்தும் வரும் செய்திகள், காணும் காட்சிகள் மற்றும் இவற்றால் கிடைக்கும் பட்டறிவு. ஒரு காலத்தில் பிரம்மாவிற்கு 5 முகங்கள் இருந்தன என்றும் வானோக்கிய முகத்தை சிவன் கொய்தார் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பொருள், முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் வானையும் ஒரு திசையாக தவறாக கணக்கிட்டுள்ளனர். பின்னர், காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, நந்தனார் 🌺🙏🏼, ஒளவையார் 🌺🙏🏼 போன்ற ஒரு மெய்யறிவாளர் (சிவன்), இந்த தவற்றை சரி செய்துள்ளார். (இதன் பிறகு சிவபெருமானை பிரம்மஹத்தி பிடித்தது, அன்னபூரணித் தாயாரால் தீர்ந்தது என்பது வேறொரு பேருண்மையைப் பற்றியது)

🍝 வேள்வி - வேள்வி எனில் குண்டம் வைத்து, தீ வளர்த்து, ஆரிய செய்யுள்கள் ஓதி, உணவு தானியங்களை தீக்குள் இடுவது மட்டுமல்ல. வயிறு எனும் குண்டத்தினுள் உணவிடுவது, மனம் எனும் குண்டத்தினுள் எண்ணங்களை வளரவிடுவது, உலகம் எனும் குண்டத்தினுள் செயல்களை புரிவது, மனைவி எனும் குண்டத்தினுள் விந்துநீரை இடுவது என எல்லாமே வேள்வி தான்.

இங்கு, காஞ்சி எனும் நகரை (குண்டத்தை) உருவாக்கி, அரசு எனும் வேள்வியை நடத்துகிறார் அதன் மன்னர் / தலைவர் (பிரம்மா)

🍝 சரசுவதி / வேகவதி - சரஸ்+வதி - நீரில் இருப்பவள். வெண்மை நிறமுடையவர். பொதுவாக, நமது மூளையைக் குறிக்கும். இங்கு வேகவதி நதியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இந்நதி காஞ்சிக்கு அருகிலுள்ள பிரம்மதேசம் எனும் பகுதியில் சற்று திரும்பி, காஞ்சியை விட்டு விலகிச்செல்கிறது. அப்படி விலகிச் செல்லாமல், தொடர்ந்து பாய்ந்திருந்தால் காஞ்சியைத் தாக்கியிருக்கும். நதியின் போக்கை மாற்றிய நிலப்பரப்பை விஷ்ணுவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். வைணவம் தோன்றிய போது (சுமார் 7ஆம் நூற்றாண்டின் இறுதி; திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 மற்றும் ஆதிசங்கரரின் 🌺🙏🏼 மறைவுக்குப் பின்னர்) பெருமாளின் பொருள்: தோன்றி மறைவது / அழிவது / சுய ஒளியற்றது. இதன் படி, அந்நிலபரப்பு விஷ்ணுவாகிறது.

வேள்வி நடத்த மனைவி வேண்டும் என்பது என்னவெனில் எந்த ஒரு செயலையும் செய்ய ஒர் ஆண் தத்துவமும் ஒரு பெண் தத்துவமும் தேவை என்பது தான். அண்டத்தின் இயக்கமே இவ்வடிப்படையில் தான். வேள்வி நடத்த மனைவி ஒத்து வரவில்லையெனில் வேறு துணைவியரை சேர்த்துக் கொண்டு வேள்வி நடத்தலாம் என்பது பாலைவன மதங்களின் அடித்தளங்களில் ஒன்றான ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு!!

🍝 "அத்திவரதர் ஒரு சித்திரை மாதம் அஸ்தம் நாள்மீனுடன் கூடிய பதினான்மையன்று (சதுர்த்தசி) தோன்றினார்" என்பதின் பொருள்:

🔶 அத்தி மரத்திலான இந்த சிலையை மேற்சொன்ன நாளன்று நிறுவியிருப்பார்கள்
🔶 இப்படி ஒரு சிலையை செதுக்கலாம் என்ற எண்ணம் மேற்சொன்ன நாளன்று தோன்றியிருக்கும்
🔶 வைணவம், பௌத்தத்திலிருந்து பெண் தெய்வ வழிபாடு வழியாக வந்தது. இன்று வேண்டுமானால் திரு வரதராஜப்பெருமாள் கோயில் வைணவத் தலமாக இருக்கலாம். இதற்கு முன்னர் அது பெண் தெய்வ வழிபாட்டுத் தலமாகவோ, பெளத்த தலமாகவோ இருந்திருக்கும். மேற்சொன்ன நாள் அது வைணவத் தலமாக மாறிய நாளாக இருக்கலாம்.
🔶 இன்று தான் வியக்க வைக்கும் கட்டிடங்களும், அழகுச் சிலைகளும், அவற்றிற்கு மனதைக் கொள்ளை கொள்ளும் ஒப்பனைகளும், விரிவான வேள்விகளும், தெளிவான உச்சரிப்புடன் கூடிய ஆரிய செய்யுள்களும் இருந்தால் போதும் அவை புனிதத் தலங்களாகிவிடும். 😏 அன்று இப்படியல்ல. மேற்சொன்ன எதையுமே ஒரு பொருட்டாக மக்கள் கருதவில்லை. அவர்கள் தேடிச் சென்றது உயிர்ப்புள்ள திருத்தலங்களை - அதாவது, திரு தாயுமானவ சுவாமிகள் 🌺🙏🏼 போன்ற மெய்யறிவு பெற்ற மகான்களை அல்லது அவர்களது சமாதிகளை. பழமையான சிவத்தலங்களின் மூலவர்களை (சமாதி அடையாளங்களை) கவனித்தாலே இதை உணரமுடியும். அன்று இருந்தவை சமாதி அடையாளங்கள் மட்டுமே. திரு வரதராஜப்பெருமாள் கோயிலும் இது போன்றொரு சமாதித் தலமாகத்தான் இருக்கும். எனில், மேற்சொன்ன நாளன்று அங்கிருந்த மகான் 🌺🙏🏼 சமாதியாகி இருக்கலாம்.

(இந்த அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள் குறிப்பு #1ல் கொடுத்துள்ளேன்)

🍝 "குளத்தில் இருக்கும் அத்திவரதரை சுற்றி 16 நாகர்கள் காவலிருக்கின்றன" - இச்செய்தி இணைப்புக் காணொளியில் இல்லாவிட்டாலும் இணையத்தில் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது.

பழமையான திருத்தலங்கள் பெரும்பாலும் மகான்களின் சமாதிகள் என்று பார்த்தோம். ஒரு மகான் உடலுடன் இருக்கும் போதும், உடலை விட்ட பிறகும் அவரைத் தேடி பல மெய்யன்பர்கள் வருவர். அவர் காட்டிய வழியில் வடக்கிருப்பர் (தவமியற்றுவர்). அங்கேயே சமாதியும் அடைவர் (மெய்யறிவு பெறுவர் & உடலையும் உகுப்பர்). அவர்களது சமாதிகளை அடையாளங்கள் வைத்து பாதுகாப்பர். இவ்வடையாளங்கள் ஒரு காலத்தில் நீள் உருளைக் கற்களாகவும், பின்னர் 3 அல்லது 5 பின்னல்கள் கொண்ட பாம்புகள் இருக்கும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட பட்டைக் கற்களாகவும் (மேல் பின்னலில் சிவலிங்கம் (2) இருக்கும்), அல்லது 3/5 தலைகள் கொண்ட பாம்புகள் உடலைச் சுருட்டி, ஆசனமிட்டு, சிவலிங்கங்களை படமெடுத்துக் காப்பது போன்றும் வடித்திருப்பார்கள். இந்த அடையாளங்களை விட, அவை நடப்பட்ட இடங்கள் தாம் முக்கியமானவை. ஏனெனில், அவை சமாதிகள் - உயிர்ப்புள்ள இடங்கள். ஆனால், தொடர்ந்த படையெடுப்புகளாலோ அல்லது குறுகிய சிந்தனை கொண்ட சிலராலோ இவ்வறிவை நம் முன்னோர் இழந்துவிட்டனர். திருத்தல வளாகத்தில் ஆங்காங்கே இருந்த சமாதி அடையாளங்களை எல்லாம் திருச்சுற்றில் வைத்துவிட்டனர். பழத்தை தூக்கி எறிந்து விட்டு தோலை உண்ணும் அறிவுஜீவிகளாயினர்!! 😔 இன்றோ நாம் அவர்களையும் மிஞ்சிவிட்டோம். தலமரங்களைச் சுற்றி, ரெடிமேட் நாகர்களை வைத்து, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் பாடல்களை ஒலிக்க விட்டு, நாகர்களுக்கு பாலூற்றி... உவ்வே!! 🤢🤮

திரு வரதராஜப்பெருமாள் கோயில் வளாகத்திலும் பலர் வடக்கிருந்து சமாதியாகி இருப்பார்கள். மேற்சொன்ன அடையாளங்களால் அவர்களது சமாதிகளும் பாதுகாக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில், பிற தலங்களில் நடந்தது போலவே இங்கும் சமாதியிடங்களை ஒதுக்கிவிட்டு அடையாளங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இப்படி பாதுகாக்கப்பட்ட 16 அடையாளங்களைத் தான் அத்திவரதர் சிலை மீது சாத்தி வைத்து, வரதர் சிலை நீரின் மேலெழும்பாமல் பாதுகாக்கிறார்கள். அதாவது, வெறும் எடைகற்களாக பயன்படுத்துகின்றனர்!! 😮

🍝 "அத்திவரதரை ஐராவத யானை தாங்கி நின்றது. பின்னர் மலையாக மாறியது."

ஐராவதம் என்பதே சிறுபிள்ளைத்தனம் தான்!! 😀 பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு பிள்ளைகள் விடுமுறைக்கு பின் மீண்டும் சந்திக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிள்ளை, "டே, நேத்து நான் வி.ஆர். மால் போயிருந்தேன்டா. அங்க பெரிய கோயில் மணி தொங்க விட்டிருந்தாங்கடா", என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது இன்னொரு பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும். அப்பிள்ளை எங்குமே சென்றுவரவில்லை என்றாலும், "நானும் ஃபீனிக்ஸ் மால் போயிட்டு வந்தேன்டா. அங்க காப்பான் சூட்டிங் நடந்திட்டிருந்ததுடா. நம்ப சூர்யாவ பார்த்தேன்டா." என்று ஒரே போடாக போடும். உண்மையில் மால் சென்று வந்த பிள்ளை அமைதியாகிவிடும். எங்கும் போகாத பிள்ளை காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும். இது போன்றது தான் ஐராவதம் கதை. 😁

இன்று ரஷ்யா எனப்படும் ரிஷிவர்ஷாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தாம் ஆரியர்கள். ஒரு பிரிவு பாரதத்திற்குள்ளும், இன்னொரு பிரிவு ஈரானுக்கும் சென்றது. அன்றைய பட்டுப்பாதை நெடுகிலும் உள்ள நாடுகளையும் ஆக்ரமித்தது. பாரதத்தில் தான் இக்கூட்டம் முதன் முதலில் யானைகளைப் பார்க்கிறது. யானைகளின் உருவம், உயரம், பலம், நினைவுத்திறன், அவற்றின் பல்வேறு பயன்பாடுகள் போன்றவை இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்துவிட்டது. இதன் விளைவு: உங்க லோகத்துல கருப்பு யான தான். எங்க லோகத்துல வெள்ள யான இருக்குதாக்கும்!!! 😝😂😂🤣

அத்திவரதர் கதையில் வரும் ஐராவதம் என்பது நமது மூளையைக் குறிக்கும்.

நமது திருத்தலங்கள் யாவும் பெரும்பாலும் ஒரு மனிதர் படுத்திருப்பதை போலவும்,  சிறு கோயில்கள் ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை போன்றும், சில கோயில்கள் தேர் போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வெகு சில கோயில்கள் சற்று மாறுபடும். தில்லைக் கருவறை மனிதனின் இதயத்திற்கு சமமாகும். கேரள சபரிமலைக் கோயில், ஒரு மனிதர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றும் (கட்டுமலை), அவரது சகஸ்ரார சக்கிரத்தில் பரம்பொருள் வீற்றிருப்பது போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வரதராஜப் பெருமாள் கோயிலும் ஒருவர் அமர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கீழுள்ள குடைவரைக் கருவறை இதயத்தைக் குறிக்கும். நம்முள்ளிருந்து சடாரென வெளிப்பட்டு "நாம் இவ்வுடல் எனும் பொய்யறிவை" அழிக்கும் தெளிவை சிங்கப்பெருமாளாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தெளிவான அறிவு நிலைபெற்று நிற்காது. தொடர் முயற்சியால், சிறிது காலம் கழித்து இது நிலைபெறும். அவ்வாறு நிலைபெற்று நிற்கும் அறிவை வரதராஜப் பெருமாளாகவும், அவர் நிற்கும் சகஸ்ரார சக்கிரத்தை (மூளையை) ஐராவத யானையாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இங்கே, வைணவத்தின் டிரேட்மார்க்கைக் மீண்டும் காணலாம்: தோன்றி மறையும் தெளிவும் பெருமாளாம்! என்றுமே இருக்கும் தூய அறிவும் பெருமாளாம்!! 😁)

🍝 "பிரம்மா மறுமுறை செய்த வேள்வியால் அத்திவரதர் பாதிக்கப்பட்டார்"

கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.

40+/- ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

🍝 "அத்தி வரதரை ஒரு முறை வணங்கினால் மோட்சம் கிடைக்கும். இரண்டாம் முறை வணங்கினால் வைகுண்டம் கிடைக்கும்."

அத்திமர அடையாளத்தின் வரலாறு என சுற்றி வரும் தகவல்களில் இது தான் நெற்றிசுட்டி போன்றது!! 😃 முதல் முறை வணங்கிய சீவர்கள், சீவத்துவத்திலிருந்து விடுதலை பெற்று, பல லோக முனையத்தில் காத்திருப்பார்கள் போலிருக்கிறது. 😄 அடுத்த முறை வணங்கியவுடன், புஷ்பக விமானம் வந்து வைகுண்டம் அழைத்துச் செல்லும் போலிருக்கிறது. 😆 ஒரு வேளை, விமானத்தை தவிர்த்து விட்டு, மூன்றாம் முறையும் வணங்கி விட்டால்... "பெருமாள், உங்க டைம் ஓவர். இப்பத்திலேர்ந்து நான் தான் பெருமாள்."!!! 😂😂🤣

நாம் இவ்வுடல் என்ற பொய்யறிவிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சம். நாம் நாமே என்ற மெய்யறிவில் நிலைபெறுவதே வைகுண்டம். இந்த அண்டமே பெருமாள்.

அத்திவரதர் மட்டுமல்ல. இமயத்தில் வீற்றிருக்கும் பத்ரிநாத் பெருமாள் 🌺🙏🏼 முதல் பாரதத்தின் தென்னகத்தில் இருக்கும் திரு அனந்தபத்மநாப பெருமாள் (அகத்திய மாமுனிவர்) 🌺🙏🏼 வரை யாரை வணங்கினாலும், எத்தனை முறை வணங்கினாலும், எவ்வளவு மனமுருகி வணங்கினாலும் வைகுண்டவாசம் கிட்டாது. பார்ப்பவனை பார்த்தால் ஒழிய, பார்ப்பவனே வைகுண்டவாசன் என்று தெளிந்தால் ஒழிய வைகுண்டவாசம் (நிலைபேறு) கிட்டாது. அத்தனை பெருமாள்களையும் சென்று வணங்குவதின் பயன் இதுவே!!

அத்திவரதரை ஒரு காட்சி பொருளாக பார்த்து விட்டு, கருவறைக்குச் செல்லுங்கள். அங்கு, அடையாளத்திற்கு பூசை செய்பவர்கள், அவர்களது உழைப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக, "உடையார நல்லா பாத்துக்கோங்கோ" என்பர். 😁 எவ்வளவு நன்றாக பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஒரு பயனுமில்லை என்பதை உணருங்கள். கருவறையிலுள்ள அடையாளத்தைக் கண்டதும் கண்கள் தானாக மூடும். மூட விடுங்கள். ஒரு கணமாவது, நீங்கள் நீங்களாக இருங்கள். பின்னர், சடாரியை தலையில் வைத்து எடுப்பார்கள். நன்றாக வைத்துவிட்டு எடுக்கும் போது, ஒரு கணம், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மை விட்டு அகலும். (3) இவ்வுணர்வை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். திருச்சுற்றில் அமர்ந்து இதைப் பற்றி சிந்தியுங்கள், வடக்கிருங்கள்.

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

🏵️🌼🌻💮🏵️

குறிப்புகள்:

1. அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள்:

✳️ 1487 வரை அத்திமர அடையாளம் தான் கருவறையில் இருந்துள்ளது. பின்னர், பழைய சீவரத்திலிருந்து கல் அடையாளம் கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதன் பின்னர், அத்திமர அடையாளத்தை எங்கு வைத்து பாதுகாத்தனர் என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1688ல் உலக கொல்லிகளுக்கும் (பரங்கியர்களுக்கும்) காட்டுமிராண்டிகளுக்கும் போர் மூண்டுள்ளது. அச்சமயம் இக்கோயிலின் விழாநாதர் (உற்சவ சிலை) திருச்சிக்கு அருகிலுள்ள உடையார்பாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது இந்த அத்திமர அடையாளம் கோயில் குளத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 1710ல் விழாநாதர் சிலை மீண்டும் காஞ்சிக்கு கொண்டு வரப்பட்டது. அது சமயம் அத்திமர அடையாளத்தை குளத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தனரா என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1781ல் அத்திமர அடையாளம் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது என்பதற்கான தெலுங்கு கல்வெட்டு ஒன்று கோயில் வளாகத்திலேயே உள்ளது. இதன் பின்னர் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கான சான்றும் ஏதுமில்லை. மேலும், 40 ஆண்டுகள் என்பது ஒரு தோராய கணக்கு தான். 42 ஆண்டுகளும் அகியிருக்கின்றன. 35 ஆண்டுகளிலும் இவ்விழாவை நடத்தியிருக்கிறார்கள். (40 ஆண்டுகள் என்பது 500 பிறைகளுக்கு சமம். "ஆயிரம் பிறை கண்ட அரசு" எனும் சொற்றொடர் வாயிலாக அப்பர் பெருமான் 80 ஆண்டுகள் பருஉடல் தாங்கியிருந்தார் என்று அறிகிறோம்.)

-- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 வைணவ பேராசிரியர்கள் யு-டியூப் காணொளிகளில் பேசியதிலிருந்து தொகுத்துள்ளேன்

2. சைவத்தில் முதல் பாம்பு பின்னலில் சிவலிங்கம் இருக்கும். வைணவத்தில் நடனமாடும் கண்ணன் இருப்பார். வேகவதி நதியின் போக்கை மாற்றிய "உயிரற்ற" நிலப்பரப்பை விஷ்ணு என்றவர்கள், இங்கு, எல்லாம் அடங்கி மீதமிருக்கும் "நான் எனும் உணர்வை" விஷ்ணு என்கிறார்கள்!! 😏

நம் இந்து சமயத்தின் அடையாளங்கள் அனைத்தையும் வெட்கமேயில்லாமல் ஒவ்வொன்றாக திருடிக் கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், இந்த நாகர்களை எப்படி மாற்றிக்கொள்ளும்? சிவலிங்கத்திற்கு பதில் குறுக்கை? 😁 அல்லது, கண்ணபிரானுக்கு பதில் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடும் இஸ்ரவேல் அத்வைதி யேசு? 😆 குறுக்கை உயிரற்ற பிணம் போன்ற உடலைக் குறிக்கும். பிணக்குறியீடு என்றே அழைக்கலாம்!! யேசு அழியும் மனதைக் குறிக்கும். இவ்விரண்டில் எதை அவர்கள் பயன்படுத்தினாலும் காமெடியில் தான் முடியும். ஏனெனில், பாம்பு பின்னல்கள் ஏற்கனவே அவற்றைத் தான் குறிக்கின்றன:

✳️ 3 பின்னல்கள் - தூல, சூக்கும & காரண உடல்கள்.

✳️ 5 பின்னல்கள் - ஆன்மாவை போர்த்தியுள்ள உணவு, உயிர்வளி, மனம், அறிவு & எல்லையில்லா மகிழ்ச்சி எனும் 5 உறைகள்.

குறுக்கை, யேசு என எம்.எல்.எம். மதம் ஒரு விதமாக சப்பைக்கட்டு கட்டினாலும், இவர்கள் வழியை தற்போது பின்பற்ற ஆரம்பித்திருக்கும் வெடிகுண்டு மதத்தினர் என்ன உருவத்தை வைப்பர்? சுவரை குறிக்க சதுரம் / செவ்வகம்? 😂🤣🤣

(அடையாளங்களைத் தான் இம்மதங்களால் திருட முடியுமே அன்றி ஒரு மெய்யறிவாளரையும் உருவாக்க இயலாது 💪🏽)

3. இந்த சடாரி உத்தியை கண்டுபிடித்தது திரு நம்மாழ்வார் 🌺🙏🏼. இதனால் தான் சடாரிக்கு சடகோபன் என அவரது பெயரையே வைத்திருக்கிறார்கள். இந்த உத்தியால் நமக்கு கிடைப்பதென்னவோ இரண்டற்ற அத்வைத நிலை. ஆனால், அதை மறைத்து, அதற்கு "பெருமாளின் பாதம்" என பெயர் வைத்து, நம்மை த்வைத நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஓட்டையில்லா சட்டதிட்டங்கள், செவ்வனே இயங்கும் சட்டம்-ஒழுங்கு, குப்பையில்லா வாழுமிடங்கள், போதுமென்ற மனம் கொண்ட மக்கள்... பொருளாதாரம் என்னாவது? 🤔 தலீவர்கள் சமூக அநீதி காப்பது எவ்வாறு? 😏 சமூகப் போராளிகள் பிழைப்பது எவ்வாறு? 😉 எல்லோரும் பெருமாள் ஆகிவிட்டால் யார் வந்து அத்திவரதரை வணங்குவது? 🤭