இப்படி திருவாய் மலர்ந்தருளியிருப்பது, மெய்யியல் பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்திருக்கும், சிருங்கேரியின் இளையவர்! (எத்தனை திருவிடங்களுக்கு கொண்டு சென்றாலும், எத்தனை மடிநீரில் (அசுரத்தில், தீர்த்தங்கள்) முக்கியெடுத்தாலும், பாகற்காயின் தன்மை மாறிவிடுமா? 😏)
சங்கரராமன் கொலை வழக்கிற்கு பிறகு, காஞ்சியிலிருப்பவர்களுக்கு இங்கு மரியாதை கிடையாது. எனவே, சிருங்கேரியிலிருப்பவர் வழியாக அவர்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆதிசங்கரரை பற்றி இதுவரை ஒரு கல்வெட்டு கூட கிடைக்கவில்லை. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் அவரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம், 15ம் நூற்றாண்டில் நடந்த தெலுங்கர்கள் ஆட்சியின் போது, வலுவாக இருந்த அசுரர்கள் புனைந்த நூல்களிலிருந்து கிடைத்தவை.
இங்கு, அசுரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்: அவர்களது தாயகமான ஸ்டெப்பே (Steppe) புல்வெளி பகுதிகளில் யானைகள் கிடையாது. அவர்கள் வந்த வழியிலும் யானைகள் கிடையாது. இங்கோ நிலைமையே வேறு. யானைகளை, வீட்டு விலங்குகளைப் போன்று பழக்கி வைத்திருந்தோம். அதைக் கண்டு அரண்டு போன அசுரர்கள், நம்மை மட்டம் தட்டுவதற்காக போட்ட பிட்: தேவலோகத்தில் வெள்ளை யானை உள்ளது! 😏 (தேவலோகம் - அவர்களது தாயகம்)
இப்போது, சங்கரருக்கு திரும்புவோம்.
நமது சமயப் பெரியோர்களையும், இல்லப் பெரியோர்களையும் நாம் எவ்வளவு மதிக்கிறோம், போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்பதை பார்த்த அசுரர்கள், அவர்களை உயர்த்திக் காட்டுவதற்காக கொண்டு வந்த பிட்டாக ஆதிசங்கரர் இருக்கலாம். "தேவலோகத்து வெள்ளை யானை" போன்று, முழுவதும் கற்பனையாக இருக்கலாம். அல்லது, கற்பனை-உண்மை கலந்திருக்கலாம். ஆனால், முழுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
oOo
தமிழர்களின் இல்லங்களில் தவறாது வணங்கப்படவேண்டிய பெருமான்... திரு சீர்காழிப் பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) ஆவார் 🌺🙏🏽🙇🏽♂️! அப்பெருமான் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், அவரது 3வது அகவையில் மெய்யறிவு பெற்றிருக்காவிட்டால்... திருநெறியத் தமிழரது மொழியும், சமயமும், வாழ்வியலும், வரலாறும் & அருமைப் பெருமைகளும் என்றோ வடவர்களால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கும்!
இதையுணர்ந்ததால்தான், திரு வள்ளற்பெருமான், தனது வழிகாட்டி நூலாக திருவாசகத்தை கொண்டிருந்தாலும், தனது மெய்யாயராக திரு திருவாதவூர் அடிகளாரை கொள்ளாமல், சீர்காழிப் பிள்ளையாரை கொண்டார்.
பிள்ளையாரை பற்றிய சான்றுகள் அவரது காலத்திலிருந்தே கிடைக்கின்றன. நாமும் பதிவு செய்திருக்கிறோம். அவரிடம் உதை வாங்கி ஓடிய வடக்கத்திய சமணக் கூட்டமும் பதிவு செய்திருக்கிறது. பிள்ளையாரின் வரலாறு சான்றுகளை வைத்து எழுதப்பட்டதெனில், சங்கரரின் வரலாறு புனைவுகளை வைத்து புனையப்பட்டதாகும்.
oOo
நமது இல்லந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர் சீர்காழிப் பிள்ளையாரெனில், நமது திருக்கோயில்களில் தவறாது இருக்கவேண்டியவர்கள் நால்வர் பெருமக்களாவர்!
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
🌺🌺🙏🏽🙏🏽🙇🏽♂️🙇🏽♂️
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment