காணொளி: https://youtu.be/2c61VAXLWcw
🌷 பொதுவாக, நம் சமயத்தில் பாம்பு எனில் மனம் / மாயை.
🌷 சர்ப்ப சாந்தி பூசை என்பது மனதை குளிரவைக்கும் முயற்சி.
🌷 மனம் என்பது ஓட்டைப் பானைக்குச் சமம். எவ்வளவு நிரப்பினாலும் நிறையாது. ஆகையால், சர்ப்ப சாந்தி பூசை என்பது வீண்.
🌷 "விரும்பிய பொருள் கிடைத்தபோதும், வெறுத்த பொருளுக்கு கேடுண்டானபோதும் மனம் அகமுகமாத் திரும்பி, தன்னையே துய்க்கிறது!" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽♂️ வாக்கு. சர்ப்ப சாந்தி பூசையைவிட இந்த பொன் மொழியை சிந்தித்தால் மேலான பலன் கிட்டும்!
🌷 மனதை ஓட்டம் பிடிக்க வைக்கும் ஒரே நுட்பம்: பகவானருளிய "நான் யார்?" (இதே தன்னாட்ட நுட்பத்தை, நமது திருத்தலங்களில், உடையவருக்கு முன் அமர்ந்து கொண்டிருக்கும் சிவன்காளையும், தில்லை கூத்தபிரானின் தூக்கிய இடது திருவடியும், திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடது காலும் உணர்த்துகின்றன!)
மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேரார்க்குமிது உந்தீபற
(மறவாது உசாவ - இடைவிடாது ஆராய / நோக்க)
🙏🏽
oOOo
வேடிக்கையாகச் சொன்னால் ...
- காணொளியிலுள்ள பூசையை செய்ய வைத்தது சிலரது பாம்புகள்
- அதை காணொளியாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பரவ வைத்தது சிலரது பாம்புகள்
- அந்த காணொளிக்கு மேற்கண்ட கருத்துக்களை எழுத வைத்தது என்னுடைய பாம்பு!
😛
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment