Thursday, March 17, 2022

திருக்குறள் #160: உண்ணாது நோற்பார் யார்? இன்னாச்சொல் நோற்பார் யார்?


உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

-- திருக்குறள் #160, பொறையுடைமை

பொழிப்புரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். (மு.வ.)

(பொறையுடைமை என்ற அதிகார தலைப்பையும், அதிலுள்ள பிற குறட்பாக்களையும் ஒதுக்கி, இந்த குறளை மட்டும் சற்று காண்போம்.)

பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களை யார் பொறுத்துக் கொள்ளவேண்டும்? ஏன் பொறுத்துக் கொள்ளவேண்டும்? வேறு வழியில்லாமல், சில சமயம், தவறு செய்யாதவர்களும் பொறுத்துக் கொள்ளவேண்டிவரும். மற்றபடி, மற்றவர்களின் கொடுஞ் சொற்களை தவறானவர்கள் / தவறு செய்தவர்களே பொறுத்துக் கொள்ளவேண்டும்.

எனில், தவறு செய்தவர்கள் எப்படி பெரியவராக முடியும்? எந்த நோக்கில முப்பால் முனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவ்வாறு வரிசைபடுத்தியுள்ளார் என்று பார்ப்போம்.

நோன்பு எனில் கட்டுப்பாடு அல்லது ஒதுங்கியிருத்தல். உண்ணா நோன்பு எனில் உணவு உண்ணுவதில் கட்டுப்பாடு அல்லது உணவு உண்ணாதிருத்தல். இதனால் உடல் வாடும். செருக்கு குறையும். தன்மையுணர்வில் நிலைத்து நிற்க (வடக்கிருக்க) உதவும்.

இன்னொரு வகையிலும் பொருள் காணலாம்.

உணவு என்பது வயிற்றிற்கு இடும் சாப்பாட்டை மட்டும் குறிக்காது. நாம் காணும் காட்சிகளையும், நமக்கு தோன்றும் எண்ணைங்களையும் குறிக்கும். இவற்றை ஒதுக்கியிருத்தலும் உண்ணாநோன்புதான்!

🌷 யார் இப்படிப்பட்ட உண்ணாநோன்பு நோற்பர்? தனது தன்மையுணர்வில் இன்னமும் நிலைபெறாதவர்கள்.

🌷 தன்மையுணர்வில் நிலைபெற்றவர்கள் எப்படியிருப்பர்? நம்மை போல் "உண்டு களிக்கவும்" மாட்டார்கள். மேற்சொன்னவர்களை போல் உண்ணாநோன்பு நோற்கவும் மாட்டார்கள். இருப்பற்ற, வெறும் தோற்றமாத்திரமேயான உலகக்காட்சியால் எந்தவித பாதிப்பும் அடையாதிருப்பார்கள். புகழாரமும் சரி; கொடுஞ்சொற்களும் சரி. அவர்களுக்கு ஒன்றுதாம்.

🌷 இப்போது வரிசை படுத்துவோம்:

- நிலைபேறு பெற்றவர் - கொடுஞ்சொற்களை பொறுப்பவர்
- நிலைபேறு பெற முயற்சிப்பவர் - உண்ணாநோன்பிருப்பவர்

🌷 வேடிக்கையாக வரிசை படுத்தினால்:

- உணவைக் கண்டுகொள்ளாதவர்
- உணவை ஒதுக்குபவர்
- உணவே வாழ்வென்று கருதுபவர் (நாம்)

😊

(திருவள்ளுவர் ஒரு கிறித்தவரென்று ஊழியம் செய்ய முயற்சிக்கும் நரித்துவர்களுக்கு 👊🏽👊🏽👊🏽!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment