Saturday, January 15, 2022

அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், மாட்டுப் பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨



(திருவருணை திரு அண்ணாமலையார் திருக்கோயில் பிரதோஷ விடை)

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

-- குறள் #624, இடுக்கணழியாமை

இக்குறளில் விடாமுயற்சிக்கு அடையாளமாக காளையை காண்பிக்கிறார் முப்பால் முனிவர்.

எனில், நமது திருத்தலங்களில் மூலவரை நோக்கி அமர வைக்கப்பட்டிருக்கும் சிவன்காளை உணர்த்துவதென்ன?

வெளிப்புறமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் தன்மையுணர்வின் மீது திருப்பி (விடை இறைவனை நோக்கியிருத்தல்), விடாமுயற்சியுடன் அவ்வுணர்வை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும் (விடை இறைவனையே பார்த்துக்கொண்டிருத்தல்).

இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது! இவ்வளவுதான் நம்மால் இயன்றதும்கூட!! இதன் பிறகு இறைவனின் பாடு. 🙏🏽

oOo


இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்

-- குறள் #1035, உழவு

இக்குறளில், ஓர் உழவன் எப்படியிருக்கவேண்டும் அல்லது எப்படியிருப்பார் என்று சுட்டிக்காட்டுகிறார் தெய்வப்புலவர்.

யாரிடமும் ஒரு பொருளை இரந்து கேட்கமாட்டார். வந்து இரந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லமாட்டார்.

அன்று எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் உழவர்கள்!! 😌

oOo


திருவள்ளுவர் திருநாள் 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர், வள்ளுவமாலை

(நல்லவேளை, கல்லாடர் காலத்தில் சமய வேறுபாடுகள் உள்ளபொருளை அடிப்படையாக கொண்டிருந்தன. நாசகார, நயவஞ்சக தொற்றுகள் நுழைந்த பின்னர் பாடியிருந்தால்... 🤢)

(இணைப்பு படம்: 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி செருப்படி பெற்றவனின் படைப்பான பகுத்தறிவு உச்சம் பெறுமுன் பயன்பாட்டிலிருந்த திருவள்ளுவ நாயனாரின் ஓவியங்களுள் ஒன்று)

oOo


பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment