Tuesday, April 28, 2020

கொரோனா சம்ஹாரமூர்த்தி!! ☺️




மாமல்லபுரத்திலுள்ள தமிழ்நாடு கட்டிட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு சுதை சிற்பவியல் படிக்கும் #கருப்பசாமி என்ற மாணவர் வரைந்திருக்கும் ஓவியம்! 👏🏽 ஓவியத்தைப் பற்றி அவர் கூறியதாவது: சிவபெருமானுக்கு, எமனை வதைத்த காலசம்ஹார மூர்த்தி, யானையை வதைத்த கஜசம்ஹார மூர்த்தி என வடிவங்கள் உண்டு. கொரோனா வைரசையும் அழித்து, மனிதகுலத்தை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், அவரை கொரோனா சம்ஹாரமூர்த்தியாக வரைந்தேன்.

பெருமானின் வடிவங்கள் உணர்த்தும் அடிப்படைகள் தெரியாமல் வரைந்திருந்தாலும், இன்று நம் நாடு இருக்கும் நிலைமையில், இப்படி ஒரு ஓவியத்தை வரைந்து நம் சமயத்திற்கு பெருமை சேர்த்த அந்த மாணவருக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்!! 👏🏽👏🏽👍🏽💪🏽🙏🏽

ஊடகம், திரை, தமிழ் கல்வி, கட்டற்ற இணைய தளங்கள் (விக்கிப்பீடியா போன்று) மற்றும் அரசு இயந்திரம் போன்ற துறைகளை ஆக்கிரமித்திருக்கும் இந்து சமய, சமூக & தேச எதிரி கூட்டங்கள் இத்துறையையும் ஆக்கிரமித்திருந்தால், இந்த ஓவியம் எப்படி இருந்திருக்கும்? 🤔

💥 ஒரு வெள்ளை குட்டிச்சுவர் உடைந்து, கொரோனாவின் மேல் விழுந்து, அது நசுங்கி இறந்திருப்பது போன்று சித்தரித்திருக்கப்பட்டிருக்கும்! 😝

💥 அல்லது, ஒரு பாவாடை பூசாரி, அவனது நெஞ்சோடு அணைக்கப்பட்ட இடது கையில் பொய்பிளும், கொரோனாவை நோக்கி நீண்டுள்ள வலது கையில் பிணக்குறியிடும் உள்ளவாறும், அவனது வாய் சற்று திறந்தவாறு இருப்பது போன்றும், காதுகளிலிருந்து இரத்தம் வழிந்தவாறு கொரோனா குற்றுயிராக கிடப்பது போன்றும் சித்தரித்திருக்கப்பட்டிருக்கும்! 😂

(அதாவது, பொய்பிள் வாசகங்களை பூசாரி உளறுகின்றனாம்! இந்தக் கொடுமை தாங்காது கொரோனாவின் காதுகளிலிருந்து இரத்தம் வழிகிறதாம்!! 😆)

💥 அல்லது, புருடா செய்தியாளர் சாத்தானரஸ் ஒரு குறுந்தட்டை நீட்டுவது போன்றும், அதை வாங்கும் கொரோனா நடுங்குவது போன்றும் சித்தரித்திருக்கப்பட்டிருக்கும்!!! 🤣

😁😆😝😂😂🤣🤣🤣

பெருமானின் வடிவங்களைப் பற்றி...

🌺 #காலசம்ஹாரமூர்த்தி - எமனை வதைத்தவர். அதாவது, எமபயம் போக்கியவர். "நான் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நீங்கி, மெய்யறிவு வெளிப்பட்டவுடன் ஏற்படும் முதல் விளைவு: உயிர் பயம் நீங்குதல்!! (பகவான் ரமணரது 🌺🙏🏽 முதல் இறப்பு துய்ப்பு (அனுபவம்))

🌺 #கஜசம்ஹாரமூர்த்தி - நினைவுகளை வதைத்தவர். பிள்ளையாராக சித்தரிக்கும் போது, யானை முகம் அறிவைக் குறிக்கும். இங்கு எண்ணப்பதிவுகளைக் குறிக்கும். தொன்று தொட்டு, பல பிறவிகளாக, நம்முள் பதிந்திருக்கும் எண்ணங்கள் தாம் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம். #மெய்யறிவு (#சிவம்) வெளிப்பட்டவுடன், இவை எரிந்து கலையாத சாம்பல் போன்றாகிவிடும். "எண்ணங்கள் தாம் வாழ்க்கை. எண்ணங்களற்ற நிலையே நம் இயற்கை. அதுவே, எல்லையில்லா இன்பம்." (#பகவான் #ரமணர், வசனாம்ருதம் #248)

🌺 #கூத்தப்பெருமான் - எந்த வகை பெருமானாக இருந்தாலும், அவரைச் சுற்றி திருவாசியிருக்கும். திருவாசி உயிரற்றதைக் குறிக்கும். பெருமான் உயிரைக் குறிக்கிறார். உயிரும் - உயிரற்றவையும் இணைந்ததே இந்த அண்டம். இன்னொரு வகையில், இந்த அண்டம் ஒலிஒளியால் ஆனது என்பதை பெருமானின் மேல்கைகளில் உள்ள நெருப்பும், உடுக்கையும் குறிக்கும். பெருமானின் இடுப்பில் சுழலும் பாம்பு, ஆசை முதலான உலகப்பற்றுக்கான காரணிகளைக் குறிக்கும். பெருமானின் பாதங்களில் மிதி பட்டுக்கிடக்கும் உருவம் #முயலகன் எனப்படும். தன்மறதியைக் குறிக்கும். நாமே உள்ளபொருள் (மெய்பொருள்) என்ற பேருண்மையை மறத்தலைக் குறிக்கும். நமதியற்கை தெரியாமல் இருக்கும் போது இந்த வாழ்க்கை காளியன்னையின் கோரத்தாண்டவம். தெரிந்த பின்... கூத்தப்பெருமானின் எல்லையில்லா மகிழ்ச்சி தாண்டவம்!! 😍😌

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment