(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - ஐப்பசி 2019)
இது போன்றக் கதைகளில் ஒன்று, மெய்யறிவு கிடைக்கும் போது நடக்கும் நிகழ்வுகள் அல்லது மெய்யறிவுப் பெற செய்ய வேண்டிய பயிற்சி பற்றி பதிவு செய்திருப்பார்கள். இக்கதையில் இரண்டையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
🌸 கடல் - நம் உடல்
🏵️ கடைதல் - வடக்கிருத்தல் (தவமியற்றுதல்)
🌻 ஆமை - புலனடக்கம். இக்கதையில், முதலில் ஆமை இல்லாமல் கடைவார்கள். அப்போது மந்தார மலை புதைய ஆரம்பிக்கும். பின்னர் ஆமை வந்து மலையைத் தாங்கும். அதாவது, புலனடக்கம் இல்லாத வடக்கிருப்பு (தவம்) வீணாகிவிடும். எனவே, முதலில் புலனடக்கத்தைக் கற்றுக் கொண்டு, பின்னர் நிலைபேறு பெற வடக்கிருக்க வேண்டும்.
🌼 வாசுகி பாம்பு - நம் மூச்சு. உள்ளே போவது உயிர்வளி (தேவர்கள்). வெளியேறுவது கரியமில வளி (அசுரர்கள்).
💮 மந்தார மலை - மெய்யாசிரியரிடமிருந்து பெற்ற அறிவுரை. பகவான் திரு ரமணர் 🌺🙏🏼 அருளிய "நான் யார்?" (தன்னாட்டம்) என்ற அறிவுரை ஒரு தலை சிறந்த கடையுங்கருவியாகும்!! 👏🏽👌🏽😍
🌹 இலக்குமி தாயார் - புலனடக்கத்துடன், அந்நியங்களை நாடாமல், உறுதியுடன், விடாப்பிடியாக தன்னாட்டப் பயிற்சியை மேற்கொண்டால் (கடைந்தால்), இறுதியில், "இது வரை தேடியவனே தேடப்பட்டவனுமாகும்" என்ற தெளிவு பிறக்கும். இதுவே, மெய்யறிவு - அமிர்தம் - இளையவள் (இலக்குமி / #சின்னாயி / #நப்பின்னை) எனப்படும். இதற்கு முன்னர், அவரவர் முன்வினைகளுக்கேற்ப பல வித அறிவு வந்து சேரும். அவையெல்லாம் மீண்டும் நம்மை பிறவி சுழற்சியில் தள்ளிவிடும் என்பதால் அழுக்கு / நஞ்சு என்றும், முதலில் வெளிப்பட்டதால் மூத்தவள் (#மூதேவி / #மூத்தாயி) என்றும் அழைக்கப்படும்.
தேடியதே தேடப்பட்டதுமாகும் என்ற தெளிவு பிறந்தவுடன், தான் என்றுமே #உள்ளபொருள் (பரம்பொருள்) என்பதும் உணரப்படும். இந்த உள்ளபொருளே எங்கும் நிறைந்திருக்கும் (#பெருமாள்), யாவுமாகியிருக்கும் (#சக்தி), அனைத்தும் தோன்றி நிலைபெற்று ஒடுங்க இடம் கொடுக்கும் (#சிவம்).
கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏼
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼
☀️☀️☀️☀️☀️
பார்ப்பானைப் பார்க்காமற் பார்க்கப் படுபொருளைப்
பார்ப்பதனா லென்றும் பரிதவிக்கும் - பார்ப்பரே
நுந்தம் புறமேநீர் நோக்காதே யுண்ணோக்கி
தொந்தம் மறுத்தல் சுகம்
(நுந்தம் - நும் தம் - உங்களுடைய; யுண்ணோக்கி - உள் நோக்கி - பார்ப்பவனைப் பார்த்து; தொந்தம் - துவந்தம் - இருமையுணர்வு)
-- திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏼, குருவாசகக் கோவை #186
பொருள்: பார்க்கின்ற அறிவைப் பார்க்க உள்ளே திரும்பாமல் பார்க்கப்படு பொருளையே பார்ப்பதனால் துன்பப்படும் பார்ப்பாரே (புற நோக்குடையோரே), நீங்கள் உங்களுக்கு அன்னியமானவற்றின் மேல் பார்வையைச் செலுத்தாமல், உள் நோக்கி (அகமுகமாகி) இரண்டற்று நிற்பதே சுகம்.
☀️☀️☀️☀️☀️
இந்த ஆமை திருவிறக்கக் கதையை பகவானது அறிவுரைகளைக் கொண்டு தான் விளக்கிக் கொள்ளமுடியும். வைணவத்தைக் கொண்டு விளக்க முற்பட்டால் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படம் பார்த்தது போலாகிவிடும்!! 🥴
No comments:
Post a Comment