👊🏽 சோழர் காலத்திலேயே #நவராத்திரி விழா அரசு விழாவாக இருந்ததாம்!
பிட்டு தயாரித்தல் என்ற முடிவுக்கு வந்த பின் ஏன் சோழர்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்? கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே நவராத்திரி விழா எல்லா அரசுகளின் விழாவாகவும் இருந்தது என்று ஒரேடியாக போட வேண்டியது தானே!! 😜
👊🏽 இராமர் தான் இந்த விழாவை முதன்முதலாக கொண்டாடினாராம்! நவராத்திரி நோன்பு இருந்து தான் சீதா தேவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டாராம்!!
ஜடாயு இன்று உயிரோடு இருந்திருந்தால், இப்படி நினைத்திருக்கும்: இது நமக்கு தேவையா? 🤭
ஒருவர் தனது தயாரிப்பை, அது எவ்வளவு டுபாக்கூராக இருந்தாலும், உயர்த்திப் பேச உரிமையுண்டு. ஆனால், மற்றவர்களது தயாரிப்பை எந்த விதத்திலும் குறைத்துப் பேச உரிமையில்லை. இங்கே, பெண் தெய்வ வழிபாட்டை உயர்த்திக் காட்ட, இராமர் நவராத்திரி நோன்பு இருந்ததாக பிட்டு போட்டிருக்கிறார்கள். பெருமாளை உயர்த்திக் காட்ட சிவதத்துவத்தை இறக்கி சித்தரிப்பார்கள் நாமப்பேர்வழிகள் (பெண் தெய்வ வழிபாட்டுக் கூடாரத்தின் வழியாக தப்பித்த பெளத்த மொட்டைகள்). 😠
பாலைவன மதங்களைப் போலவே இவற்றிற்கும் தோற்றம் உண்டு. தோன்றுபவை ஒரு சமயத்தில் மறைந்து தான் தீரும் என்பது விதி. என்றென்றும் நிலைத்திருக்கப் போவது உலகின் தாய் சமயமாகிய தமிழரின் ஆதி சைவமே! 💪🏽
👊🏽 நவராத்திரி காலத்தில் சிவதத்துவத்தின் 1008 பெயர்களை சொல்லவேண்டுமாம்! பின்னர், புருஷ சுக்தம், நாராயண சுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சன மந்திரம் மற்றும் கருட மந்திரம் சொல்லவேண்டுமாம்!!
இவ்வளவும் செய்தவன், நவராத்திரி முடிவில் கீழ்பாக்கத்தில் இருப்பான்!! 😝
நவராத்திரி பெண் தெய்வ வழிபாட்டுக்கானது. எல்லாவற்றையும் பெண் தத்துவமாக பார்ப்பது. இங்கு எதற்கு சைவம், வைணவம், வைதீகம்?
👊🏽 சயவன முனிவரையும், அவர்தம் மனைவி சுகன்யா தேவியையும் வணங்கி விட்டு தான் ஒவ்வொரு நாளும் வழிபாட்டை தொடங்க வேண்டுமாம்!
இந்த முனிவர் சயவன்பிராஷ் என்ற உடலுக்கு உரம் சேர்க்கும் மருந்தை உருவாக்கினார் (அல்லது, இவருக்காக உருவாக்கப்பட்டது). "இவரை வணங்கு" என்பதின் மூலம் "இந்த மாரிக் காலத்தில், இந்த மருந்தை உண்டு, நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்" என்று அறிவுருத்துகின்றனர். "இது நல்லது தானே? இதை ஏன் கிண்டலடிக்க வேண்டும்?" என்று தோன்றலாம். இதுவே, நாம் வடநாடு போய், நம் அகத்தியரை வணங்கச் சொல்லி, அவர் அருளிய மருந்தினை உட்கொள்ளச் சொன்னால் ஏற்றுக்கொள்வரா? 😏 இதற்கும், நமது சித்த வைத்தியம் தான் அனைத்து மருத்துவத்திற்கும் தாய். அகத்திய மாமுனிவர் தான் சித்தர்களின் தலைவர்.
மேலும், சயவனரின் வரலாற்றைப் படித்தால், "இவர் முனிவரா?" என்று கேட்போம். உடலெல்லாம் செவ்வெறும்புகள் (அல்லது, புற்று மண்) மூடியிருக்க, கண்களை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு வடக்கிருக்கிறார். அப்போது அங்கு வந்த இளவரசி சுகன்யா, ஒருவர் வடக்கிருக்கிறார் என்பது தெரியாமல், பளிச்சென்று தெரியும் கண்களை, என்னவோ என்று நினைத்து, குச்சியால் குத்தி விடுகிறார். வலி தாங்காமல், புற்றிலிருந்து வெளிப்பட்ட முனிவர், எல்லோரையும் வைதுவிடுகிறார். இதனால் ஒருவராலும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தது என்பதை விசாரித்தறிந்த அரசர், முனிவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, தவறுக்காக தனது மகள் சுகன்யாவை மணம் செய்து வைக்க முன் வருகிறார். முனிவரும், விக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்தில் வருவது போல், வாயெல்லாம் பல் தெரிய, சுகன்யாவை ஏற்றுக் கொண்டு, வசவை மாற்றுகிறார். 🤢
(இதைப் படித்ததும். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில், பெட்ரோமேக்ஸ் விளக்கின் பல்பு பகுதியை தூளாக்கிய செந்திலை பார்க்கும் கவுண்டமணியைப் போல் உங்களது முகம் மாறினால், இன்னமும் மூளை மழுங்கவில்லை என்று பொருள்! 😁)
இனி, பகவான் திரு ரமணரின் 🌺🙏🏼 வாழ்விலிருந்து சில நிகழ்வுகள். திருவண்ணாமலை வந்த புதிதில், பெரிய கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் பகவான் அமர்ந்திருந்த போது, ஒரு காட்டுமிராண்டி சிறுவன் அவர் மீது சிறுநீர் கழித்தான் - அவரை அவமானப்படுத்த & வம்பிழுக்க. பகவான் எதுவும் பேசாமல் இருந்தார். பின்னொரு நாள் ஒரு மாந்தோப்பில் இருக்கும் போது, தாங்கள் மாங்காய் திருடுவதை பகவான் பார்த்து விட்டதால், ஒரு திருடன் மற்றொருவனிடம் கள்ளிப்பாலை ஊற்றிவிடலாம் என்று சொன்னதைக் கேட்டும், பகவான் அசையாமல் அப்படியே இருந்தார். காண்பான், காணப்படும் பொருள், காட்சி என்ற முப்புடிகள் அகன்று, எல்லாம் ஒன்றாக, எல்லாம் தானாக விளங்கும் பகவான் எங்கு நகர்வது? யாரைத் தள்ளுவது? எதைக் கொள்வது?
நான் எனும் ஆணவத்தை துறத்தலே துறவு. இவ்வாறு துறவுற்றவரே முனிவர். எப்போதும் தன்னிலையில் நிற்றலே தவம். கோபப்பட்டு, தன்னிலை இழந்து, வைது, குடும்பியாகி... இவர் முனிவராம்! இவரை வணங்கிவிட்டு வழிபாட்டைத் தொடங்க வேண்டுமாம்!! 😒
💥💥💥
காட்டுமிராண்டிகளிடமிருந்து தென்னகத்தைக் காப்பாற்றிய விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக தமிழகம் வந்த நாயக்க மன்னர்களுடன் வந்த வடபாரத விடயங்களுள் ஒன்று நவராத்திரி. எல்லாவற்றையும் பெண் தத்துவமாகக் காணும் சாக்த நெறியைச் சேர்ந்தது. சுமார் 2300 ஆண்டுகளாக நடந்த சமய, அரசியல் படையெடுப்புகள், சுமார் 950 ஆண்டுகளாக நடந்த தமிழரல்லாத ஆட்சி, கடந்த 70 ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் நடக்கும் பயிரை மேயும் வேலிகளின் ஆட்சி போன்ற காரணிகளால் எல்லா கட்டமைப்புகளும் உடைந்து, எல்லா நெறிகளும் ஒன்றுடன் மற்றொன்று பின்னிப் பிணைந்து, உள்ளதும் அல்லாததும் இணைந்து ஒன்றும் இல்லாததாகிவிட்டது!! 😔
எல்லோருக்கும் மூத்தோரும், எல்லாவற்றிற்கும் பெற்றோருமான நமக்கு உள்ளபொருளை சிந்திக்க சிவராத்திரியும், அல்லாததை ஏற்றுக் கொள்ள மயானக் கொள்ளையும் போதுமானது. 💪🏽
💥💥💥
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.
-- காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, அற்புதத் திருவந்தாதி, பன்னிரு திருமுறை 11.1. 4
🔥🔥🔥🔥🔥
No comments:
Post a Comment