பொதுவான பொருள்: வலுவான விலங்கான யானையும், அடியெடுத்து வைக்கும்போது, எச்சரிக்கையாக இல்லாவிடில், சறுக்கிக் கொள்ளும். இது போன்று, எவ்வளவு வலுவான / திறமையான / உறுதியான / உயர்ந்த நிலையிலிருப்போரும், எச்சரிக்கையாக இல்லாவிடில், தங்களது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக்கூடும்.
இனி, உட்பொருளை பார்ப்போம்.
🔸 யானை - பிள்ளையார் - மெய்யறிவாளர். "விநாயகர் அகவல்" எனும் அருமையான நூலில் 👌🏽, பிள்ளையாரை புகழ்வது போன்று, தனது மெய்யாசிரியரை புகழ்ந்து பாடியிருப்பார் திரு ஒளவைப் பாட்டி 🌺🙏🏽🙇🏽♂️.
🔸 அடி - இறைவனடி - நமது தன்மையுணர்வு. எப்போதும் இறை சிந்தனையில் இருப்போரை "அடியார்கள்" என்றழைப்பது வழக்கம்.
🔸 சறுக்குதல் - வழுவுதல் / விலகுதல் / தவறுதல்.
தன்மையுணர்வில் நிலைபெற்று வீடுபேறு அடைந்திருந்தாலும், எச்சரிக்கையாக இல்லாவிடில், மெய்யறிவாளரும் தனது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக்கூடும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு: திருமறைக்காட்டில் (அசுரத்தில், வேதாரண்யம்) குடிகொண்டருளும் திரு மறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) 🌺🙏🏽🙇🏽♂️.
மெய்யறிவு பெற்றிருந்தும், பெண்ணாசையால் வீழ்ந்தவர்! (பிறகு, மீண்டெழுந்து, "மெய்யறிவாளர்களின் மன்னர்" என்ற பட்டம் பெறுமளவிற்கு உயர்ந்தவர்.)
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment