உங்க மதம் மட்டுமில்ல, பாய். உலகத்துல இருக்கிற, இருந்த எல்லா மதங்களுக்கும் தாய்மண் பாரதம்தான். எல்லாத்துக்குமான விதைங்க இங்கிருந்துதான் போச்சு. என்ன, சில விதைங்க, போற வழியில கெட்டுப் போச்சு; சில விதைங்க போய் சேர்ந்த எடத்தினால கெட்டுப் போச்சு. உங்க எடத்தில அசல் காட்டுமிராண்டிங்க வாழ்ந்தாங்க. அவுகளுக்கேத்த மாதிரி பலான ஐயிட்டங்கள சேத்துக் கொடுத்திட்டாரு உங்க ஆளு. ஒரு கத சொல்றேன்; கேளுங்க, பாய்.
oOo
அவன் ஒரு சரியான மூடன். புதிதாக திருமணமானவன். ஏதோ ஒரு வேலைக்காக ஓர் ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த ஊருக்கு அருகில்தான் அவனது மாமியார் வீடு இருந்தது. வேலையை முடித்துவிட்டு, தனது பெற்றோரையும் பார்த்துவிட்டு வரும்படி அவனது மனைவி கேட்டுக்கொண்டதால், அவனும் மாமியார் வீட்டிற்கு சென்றான்.
புது மாப்பிள்ளை என்பதால் தடபுடலாக வரவேற்று, பல வகையான சிற்றுண்டிகளை பரிமாறினர். அவற்றில் கொழுக்கட்டை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி மாமியாரிடம் கேட்டான். அவரும் அது பற்றி விளக்கிவிட்டு, உடன், தனது மகள் மிக நன்றாக கொழுக்கட்டை செய்வாள் என்பதையும் கூறினார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பும்போது, "கொழுக்கட்டை" என்ற பெயர் மறவாதிருக்க, அதை சொல்லிக்கொண்டே வந்தான்.
இடையில் ஒரு சிறு கால்வாய் வந்தது. அதிலொரு பாம்பும் இருந்தது. இவனை தாண்டவிடாமல் சீறியது. இவன் சற்று சிந்தித்துவிட்டு, பின்னே வந்து, வேகமாக ஓடி, "ஹைத்தலக்கடி" என்று சொல்லிக்கொண்டே குதித்து, கால்வாயை தாண்டினான். பாம்பிடமிருந்து தப்பினான். தப்பித்த மகிழ்ச்சியில் "ஹைத்தலக்கடி" என்று திரும்ப திரும்ப கூவிக்கூத்தாடினான். கூத்தாடியதில் "கொழுக்கட்டை" என்ற பெயரை மறந்துபோனான். "ஹைத்தலக்கடி" என்று சொல்லிக்கொண்டே ஊர் போய் சேர்ந்தான்.
வீடு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக, தனது மனைவியிடம் "ஹைத்தலக்கடி" சமைத்து தரச்சொன்னான். அவள், அது பற்றி தனக்கு தெரியாது என்றும், அப்படியொரு உணவை சமைத்ததேயில்லை என்றும் சொன்னாள். இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மனைவி தன்னிடம் பொய் சொல்கிறாள் என்று கருதி, அவளை நையப் புடைத்தான்.
மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து, அவனிடமிருந்து மனைவியை காப்பாற்றிவிட்டு, நடந்ததை கேட்டனர். அவனும் சொன்னான். ஒருவருக்கும் ஹைத்தலக்கடி பற்றி தெரியவில்லை. இதற்குள் மனைவியின் தலை, முகமெல்லாம் வீங்கிப்போனது. அதை பார்த்த ஒருவர், "வேற ஏதாச்சும் சமைச்சு தரச் சொல்லவேண்டியதுதானே. இப்பிடி அடிச்சு, கொழுக்கட்ட மாதிரி வீங்க வெச்சுட்டியே!" என்றார். அதைக்கேட்ட அந்த மூடன், "ஆங்! கொழுக்கட்ட! கொழுக்கட்ட!!" என்று மகிழ்ச்சி பொங்க சொல்லிவிட்டு, நடந்ததைக் கூறினான்.
இப்போது, அவனது மனைவிக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் எப்படியிருந்திருக்கும்? 😛
கதையின் நீதி: மூடனிடம் செய்தி சொல்லாதே!
oOo
இது மாதிரிதான், பாய், பாலைவன மதங்களோட கதை. இங்கிருந்து போன கொழுக்கட்டைங்க, ஹைத்தலக்கடிகளா மாறிப்போச்சு. ஒன்னு என்னடான்னா, "ஹைத்தலக்கடி நல்லது. சுவைத்துப் பாருங்கள்."-ன்னு சொல்லுது. நீங்க என்னடான்னா, "ஹைத்தலக்கடி மிகப் பெரிது"-ன்னு சொல்றீங்க. ஆனா, ரெண்டுபேருமே ஹைத்தலக்கடி பாரதத்துலதான் தோன்றிச்சுன்னு அடம்புடிக்கிறீங்க. கொழுக்கட்டய கண்டுபுடிச்சு, எல்லாரும் சாப்டுட்டு நல்லா இருக்கட்டுமேன்னு நெனச்ச எங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்.
வரலாறு தரும் பாடம்: காட்டுமிராண்டிகளையும், மறை கழன்றவர்களையும் பண்படுத்த முயற்சிக்காதே!
தொடக்கமுடையது முடிவடைந்தே தீரும்.
தோன்றியது மறைந்தே தீரும்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment