சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவிடம் அவர் தரித்திருக்கும் திருநீறு பற்றி ஒரு பரங்கியர் கேட்கிறார். அதற்கு அவர், அது அவரது இளம்வயது முதல் பெற்றோர் ஏற்படுத்திய பழக்கவழக்கம் என்றும், சில சமயம் நற்பேறு (Good Luck) பெற்றுத்தருகிறது என்றும் பதில் கூறுகிறார்.
சமயச் சின்னங்களுள் மிக மேன்மையானது திருநீறாகும். அதை தரிப்பது நற்பேறுக்காகத்தான். ஆனால், மேற்கண்ட நற்பேறுக்காக அல்ல (not for Good Luck). வீடுபேறு எனும் மேலான நற்பேறுக்காக!
நமதுடல், நாம் வாழும் உலகம் என யாவும் பொய்யாகும். வெறும் தோற்றம் மட்டுமே. காணும் நாம் மட்டுமே உண்மை. இந்த அறிவே திருநீறு. இந்த அறிவை விடாது பிடித்திருப்பதே திருநீறு தரிப்பது. திருநீற்றை தொடர்ந்து தரித்து, அந்த திருநீறாக ஆவதே வீடுபேறு!
oOo
ஒரு வேளை, நம் பிரக்ஞானந்தா அந்த பரங்கியரிடம், "உங்களில் பலர் கூட்டல் குறியீட்டை கழுத்திலும், மணிக்கட்டிலும் மற்றும் பல இடங்களிலும் தொங்கவிட்டுள்ளீர்கள். அதன் பொருளென்ன? அது நற்பேறு ஏதும் பெற்றுத்தருகிறதா?" என்று கேட்டிருந்தால், அந்த பரங்கியர் என்ன பதிலளித்திருப்பார்? 😏
(இக்கேள்விகளால் அவர் நிலைகுலைந்தாரா, அதிர்ச்சியுற்றாரா, தடுமாறினாரா, உறைந்துபோனாரா என்ற ஆராய்ச்சியை ஒதுக்கிவிட்டு, அவர் என்ன பதில் கொடுத்திருப்பார் என்பதை மட்டும் பார்ப்போம். 😊)
அவர் மட்டுமல்ல, பெரும்பாலான கிறித்தவர்களின் பதில் பின்வருமாறு இருக்கும்:
நமது பாவங்களுக்காக, இஸ்ரவேல் இறையிலாளர் சுமந்த பொருளே குறுக்கை. அவர் அறையப்பட்டு, நமக்காக மரித்ததும் இதில்தான். இது மீட்பின் அடையாளமும் கூட.
(பிரக்ஞானந்தாவின் கேள்விகளால் அந்த பரங்கியர் நிலைகுலைந்தாரோ இல்லையோ, இந்த பதிலால் பிரக்ஞானந்தா நிலைகுலைந்துபோயிருப்பார்!! 😆)
oOo
குறுக்கை என்பது ஐம்பொருள்களால் ஆன அழியக்கூடிய நமதுடலைக் குறிக்கும். அழியக்கூடிய ஒன்றையா வணங்குவது? போற்றுவது?
இவர்கள் வணங்க, சிந்திக்க, கொண்டாட, போற்றவேண்டியது குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் உருவத்தை:
🔸 இதில், குறுக்கை என்பது உடல்
🔸 அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் என்பது கடும் பயிற்சியினால், கிட்டத்தட்ட இறக்கும் நிலையிலுள்ள மனம்
இவ்வுருவைக் கண்டதும் அவர்களுக்கு தோன்றவேண்டியது: எப்பாடுபட்டாவது உன்னுள் இருக்கும் மனதை அழி!
ஆனால், இவ்வுருவைக் கண்டதும் அவர்களிடமிருந்து கண்ணீர் பெருகும்! சிலர், "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா!" என்று ஒப்பாரியும் வைப்பர்!!
போற்றவேண்டியதைக் கண்டு அழுது புலம்புவார்கள். ஒதுக்கவேண்டியதைக் [குறுக்கை] கண்டு உச்சி குளிர்வார்கள். கனியை விட்டு காயைக் கவர்வார்கள். பழத்தை ஒதுக்கி தோலை உண்பார்கள். கொம்பைவிட்டு வாலைப் பிடிப்பார்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவார்கள். ஆனாலும், இந்த கொலம்பஸ் வகையறாக்கள் இன்றைய உலகின் மேதாவிகளாக அறியப்படுகிறார்கள்!
ஆமென்!! 😂
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment