Wednesday, October 9, 2019

மொத்தத்தில் வகாண்டா, கோவிந்தா!! 😁



Black Panther (கருஞ்சிறுத்தை) என்ற பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படத்தின் ஆரம்பத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பின்வரும் வசனங்கள் இடைபெறுகிறது (ஆங்கில காணொளி: https://youtu.be/pfBWPhsiN_w):

அருங்காட்சியக இயக்குனர்:  வணக்கம். நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?

கில்மோங்கர்: நான் இந்த காட்சி பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தேன். தாங்கள் இதில் வல்லுனர் என்று கேள்விப்பட்டேன்.

இயக்குனர்: ஆம்

கில்மோங்கர்:  இவை மிக அழகாக இருக்கின்றன. (ஒன்றை குறிப்பிட்டு) இது எங்கிருந்து கிடைத்தது?

இயக்குனர்: இன்று காணா என்று அறியப்படும் நாட்டிலுள்ள போபோ அஷாந்தி பழங்குடியினரிடமிருந்து. 19ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தது.

கில்மோங்கர்: உண்மையாகவா? (இன்னொன்றை குறிப்பிட்டு) இது எங்கிருந்து கிடைத்தது?

இயக்குனர்: பெனின் நாட்டின் எடோ மக்களிடமிருந்து. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கில்மோங்கர்: (மரம் வெட்டி போன்ற ஒரு கருவியை காண்பித்து) இப்பொழுது இதைப் பற்றி கூறுங்கள்.

இயக்குனர்: இதுவும் பெனின் நாட்டைச் சேர்ந்தது. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஃப்யுலா பழங்குடியினர் என்று நினைக்கிறேன்.

கில்மோங்கர்: இல்லை

இயக்குனர்: (தன்னைவிட இவனுக்கு என்ன தெரிந்து விடப்போகிறது என்ற அகந்தையால் - சற்று ஏளனமாக) என்ன சொன்னீர்கள்?

கில்மோங்கர்: ஆங்கிலேயப் படை வீரர்களால் பெனின் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால், இது வகாண்டா நாட்டைச் சேர்ந்தது. வைப்ரேனியம் என்ற பொருளால் ஆனது. (சற்று திமிருடன்) பதற வேண்டாம். இதை எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

இயக்குனர்: ("இவன் என்ன கிறுக்கனா?" என்ற ரீதியில் பார்த்துவிட்டு) இந்தப் பொருள்கள் விற்பனைக்கு அல்ல.

கில்மோங்கர்: உங்களது மூதாதையர் இவற்றை எப்படி எடுத்தனர் என்று நினைக்கிறீர்கள்? சரியான விலை கொடுத்து எடுத்தனர் என்றா? இல்லை, எல்லாவற்றையும் கொள்ளையடித்தது போல் இவற்றையும் கொள்ளையடித்தனர் என்றா?

இதன் பிறகு கொலை & கொள்ளைக் காட்சியக மாறுகிறது. இந்த காட்சியை வேறு எத்தனையோ விதமாக படமாக்கியிருக்கலாம். ஆனால், ஒரு பரங்கிப் பெண்ணை வைத்து, இப்படி படமாக்கி, தனது உள்ளக் கனலை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இக்காட்சி, பரங்கியர்களால் சீரழிக்கப்பட்ட எந்த நாட்டைச் சேர்ந்தவருக்கும் (அவர் தேசத் துரோகியாக இல்லாதபட்சத்தில்) மகிழ்ச்சியைக் கொடுக்கும்! 😍

இப்படத்தின் இறுதியில் வகாண்டாவின் மன்னர், அந்நாட்டின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாக முடிக்கிறார்கள். (தொழில்நுட்பத்தில் மற்றனைத்து நாடுகளைக் காட்டிலும் வெகுதூரம் முன்னேறி இருந்தாலும், அவை மறைக்கப்பட்டு, சாதாரண பழங்குடி மக்களால் நிறைந்த உழவு நாடு போன்ற மாயை இது நாள் வரை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.) இதன் பின்னர் என்னவாகியிருக்கும்...

👊🏽 முதலில், ஒரு கூட்டம் போயிறங்கி, "பாவிகளே... பாவிகளே..." என்று கூவிக் கொண்டே கடையை விரிக்கும்.

👊🏽 "இன்னுமா கரிய வெச்சு பல் வெளக்குறீங்க?" என்று அடுத்தக் கூட்டம் போயிறங்கும்.

👊🏽 அடுத்து, "ராஸ்கோலு மாமா தான் வகாண்டாவை கண்டுபிடித்தான்" என்று ஒரு கூட்டம் பூக்கூடையுடன் போய் சேரும்.

👊🏽 பின்னர், "ஓபியடிப்பவரே உயர்ந்தவர்" என்று ஒரு கரையான் கூட்டம் உருவாகும்.

👊🏽 பின்னர், அந்த சமூகத்தில் காலகாலமாக களையெடுக்கப்பட்டு, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நச்சு உயிரிகளை, "சமூக அநீதி காப்போம்" என்று ரீல் விட்டு, ஊருக்குள் விட்டு, நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு உலை வைத்து, எதிரிகளிடம் பொரை பொறுக்கும் தேசத்துரோக கூட்டங்கள் உருவாகும்.

👊🏽 இறுதியாக, பயிரை மேயும் வேலியாக இருந்தால் மட்டுமே ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

மொத்தத்தில் வகாண்டா, கோவிந்தா!! 😁

No comments:

Post a Comment