Sunday, March 5, 2017

ஶ்ரீஆண்டாளுக்கு கல்யாணமாம்! பெருமாள் வரவில்லையாம்!! 

ஶ்ரீஆண்டாளுக்கு கல்யாணமாம். பெருமாள் வரவில்லையாம்! கருடாழ்வாரை அனுப்பி பெருமாளை தள்ளிக்கொண்டு வரச்சொன்னாராம் ஶ்ரீஆண்டாள்!! அவரும் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாராம்!!! 😛

இப்படி தள்ளிக்கொண்டு வந்து தான் திருமணம் செய்ய வேண்டுமென்றால், அது எப்படிப்பட்ட திருமணமாகவிருக்கும்? 🤔 அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது மாப்பிள்ளை ஓடிப் போகமாட்டாரா? 🤕 இப்படிப்பட்ட மாப்பிள்ளையை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது? 😕

முதல் மனைவி லட்சுமி பிராட்டியார் கால் பக்கம் அமர்ந்திருக்க, ஆதிசேஷன் தலைப்பக்கம் படமெடுத்து போட்டு தள்ளுவதற்கு காத்திருக்க மனிதர் எப்படி நகருவார்? 😜 இதில் இன்னொரு கல்யாணமாம்!! அப்புறம் பூதேவி மற்றும் நீளாதேவி வேறு இருக்கிறார்கள். 😝 கருடாழ்வார் பாடு பெரும் பாடாயிருந்திருக்கும். 😲

😂😂😂

🌸🏵🌹💮🌺🌷🌼

இப்படிக் கதை விட்டே நம் சமயத்தை அழித்துவிட்டார்கள். 😠 பெரும் உண்மைகளை குழித் தோண்டி புதைத்துவிட்டார்கள். 😤 மிலேச்சர்களும், காட்டுமிராண்டிகளும் எள்ளி நகையாடும் படி செய்துவிட்டார்கள். 😡

▶ நாமிருக்கும் இந்த அண்டம் தான் அரங்கம்.
▶ அரங்கமும் அதன் நாதனும் வேறுவேறு அல்ல.
▶ கருடன் என்பது முதிர்ந்த நுண்ணிய அறிவு.
▶ முதிர்ந்த, பக்குவப்பட்ட, நுண்ணிய அறிவினால் உள் ஆழ்ந்தால், நமது தனியிருப்பை இழந்து, பரமனோடு கலக்கலாம். இதுவே ஆண்டாள் (ஜீவன்) - ரங்கமன்னார் (சிவன், பரமன், அண்டம்) திருமணம்.

வைணவத்தின் காப்புரிமையான சரணாகதி தத்துவம் இங்கு பேசப்படவில்லை. *தனி மனித முயற்சியே பேசப்படுகிறது.*

(பிரகலாதனும், ஸ்ரீநரசிம்மரும் வந்து சாத்தப் போகிறார்கள், "தேவையில்லாமல் எங்களை வைத்து #சரணாகதி அல்வாவைக் கிண்டிவிட்டு இப்போது வேறொன்றை பரிமாறினால் என்ன பொருள்?". 😁

*சரணாகதி ஒன்றும் வைணவத்தின் சொத்து அல்ல.* ஞானம் அடைவதற்கு முன் நடக்கும் ஒரு நிகழ்வாகும். ஜீவனால் ஒரளவு ஆழ்ந்து செல்லமுடியும். அதன் பின்னர், தன் இயலாமையை உணர்ந்து முயற்சியைக் கைவிடும். அச்சமயம் உள்ளிருந்து ஒரு சக்தி (#) வெளிப்பட்டு ஜீவனை கபளீகரம் செய்துவிடும்.

# - வைணவத்தில் - ஸ்ரீநரசிம்மர், சைவத்தில் - ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி, கிறித்தவத்தில் - பரிசுத்த ஆவி. #வைணவம், #கிறித்தவம் எல்லாம் #ஆதிசைவம் / அத்வைதத்தை வைத்து கிண்டப்பட்ட அல்வாக்கள் 😵 (முடியல))

*மொத்தத்தில், ஸ்ரீஆண்டாள் ஞானமடைந்ததைக் காட்டுகிறது இந்தக் கதை!* 🙏

இறுதியாக, கருவறையில் ஸ்ரீரங்கமன்னார், ஸ்ரீஆண்டாள் மற்றும் கருடாழ்வார்.

அதாவது, ஞானமடைந்த பின்னரும் ஜீவத்துவம் அப்படியே இருக்குமாம். இதைக் குறிக்கவே #ஸ்ரீஆண்டாள் (ஜீவன்), #கருடாழ்வார் (அறிவு) மற்றும் #ஸ்ரீரங்கமன்னார் (பரமன் / சிவன்) ஆகிய சிலைகளை வைத்துள்ளனர். (இதற்கு தான் #ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா என்று பெயர் போலிருக்கிறது! 🙄)

நல்ல வேளை, ஞானி யேசு "நானும் (ஜீவனும்) என் தந்தையும் (சிவனும்) ஒன்றே" என்று தனது அத்வைத நிலையை வெளிப்படுத்தியதை தவறாக புரிந்து கொண்டு, பரங்கியர் ஜீவனை (யேசுவை) கொண்டாடிக் கொண்டிருப்பது போலல்லாமல், இங்கு சிவனையும் (ஸ்ரீரங்கமன்னாரையும்) சேர்த்தே கருவறையில் வைத்திருக்கிறார்கள். அது வரை நாம் திருப்தியடைய வேண்டும். 😌

🌸🏵🌹💮🌺🌷🌼

"இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற
உபாதியுணர்வே வேறு உந்தீபற"
-- பகவான் ஸ்ரீரமணர்

🌸🙏

"கண்ணனே கூறினான், கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே."
-- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

🌸🙏

🌼 திருச்சிற்றம்பலம் 🌼

(இணைப்பு: தினமலர் - ஆன்மிகமலர் - 05/03/2017)

No comments:

Post a Comment