Thursday, July 16, 2020

தாவர உலகம், உழவுத்தொழில்... கோவிந்தா!!

பூமித்தாயின் பசுமைப் போர்வையின் பரப்பளவைக் விரிவாக்குங்கள் என்று கோரிக்கை வைத்தால், இவர்கள் அந்தப் போர்வையின் பணியை காசாக்குகிறார்கள்! போர்வையை அழிக்கப்போகிறார்கள்!!


காற்றிலுள்ள கரியமிலத்துடன் (சிஓ2), தாவர இனம் செய்வது போல் ஒளிச்சேர்க்கை நடத்தி உணவுப் பொருட்கள், மருந்துகள், நுண்ணுட்டப் பொருட்களைத் தயாரிக்கப் போகிறார்களாம். இதனால் காற்றிலுள்ள அளவுக்கு அதிகமான கரியமிலம் குறையுமாம். முதலில் "கரியமிலத்தின் அளவைக் குறைக்க" என்பார்கள். பின்னர், "ஆயிரக்கணக்கான மக்களின் வயிற்றுப் பிழைப்பு" என்பார்கள். ஆனால், தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்பார்கள்.

இதனால் தாவர உலகம் வெகுவாக பாதிப்படையும். அழிந்து கூட போகும். உழவுத்தொழில் அழிந்துவிடும். முதலில் "பக்கவிளைவு இல்லாத" பொருட்களைத் தயாரிப்பார்கள். பின்னர் "பக்கவிளைவுகளைத்" தயாரிப்பார்கள்.

எந்த ஊடகமும் இந்த செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றதாக தெரியவில்லை. மக்களிடம் சென்று சேர்ந்திருப்பது எல்லாம்...

- மலிவுவிலை 5ஜி திறன்பேசி
- 12 ஓடிடி தளங்களுக்கும் ஒரே உள்நுழைவு
- கூகுளிடம் இருந்து பெறப்பட்ட 33,737 கோடி முதலீடு
- ஜியோ கண்ணாடி
- ஜியோவும் கூகுளும் இணைந்து தயாரிக்கவுள்ள புது ஆண்ட்ராய்ட் இயங்குதளம்

நமது கொள்ளையர்களாவது (ஆட்சியாளர்கள்) கவனித்திருப்பார்களா?

இதென்ன கேள்வி? பணம், காசு, துட்டு, ரூபா, ஓவா, ஓட்டுத் தவிர வேறெதுவும் அறிந்திராத நல்லுயிரிகள்! இந்நேரம் அம்பானியின் இந்த புதிய தொழிலில் பங்கு கிடைக்குமா என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். 👊🏽

வேலைசூழ் (கடல் சூழ்) உலகில் பிறக்கும் வேலையில்லாமல் போகப்போகிறது. முதலில் தாவர உலகம் அழியும். அடுத்தது விலங்குகள் அழியும். இறுதியில் மனிதன் அழிவான். இல்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு "இயற்கை" உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டு, மலிவுவிலை 500ஜி திறன்பேசி பற்றி, தனது மூளையினுள் நேரடியாக இறங்கிய செய்திச் சுருக்கத்தை, கண்களை மூடி, தனக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருப்பான்! 😁

No comments:

Post a Comment