Monday, July 20, 2020

நேற்று (19/07/2020) #ஆடித் #திருவாதிரை - பேரரசர் #முதலாம் #இராஜேந்திர #சோழரின் பிறந்தநாள்!! 🌷🙏🏽

பேரரசர் இன்றைய #ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை சென்றுவந்தவர் என்று எங்கோ படித்த நினைவு. இதை உறுதிப்படுத்த முனைந்தபோது கிடைத்த தகவல்: பேரரசரின் மாபெரும் வெற்றிகளைக் கண்டு #ஜப்பான் மற்றும் #நார்வே மன்னர்கள் தாமாகவே முன் வந்து தங்களது அரச சின்னங்களை பேரரசரிடம் வழங்கினர்!!

(மூலம்: https://cholahistory.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/)

இத்தகவல் மேலும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் எனக்கு கொடுத்தது!! 😍 தகவலை தெரிவித்திருப்பதோ இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு #நாகசாமி அவர்கள். தெரிவித்ததோ ஒரு தேசிய கருத்தரங்கில் (20-21/10/2016, சென்னை, தினமலர் ஏற்படுத்தியது). எனவே, ஆர்வக்கோளாறு, தமிழ்/சோழர்/சைவம் மீது அதீத காதல், அளவுக்கு மீறிய பற்று/வெறி கொண்ட யாரோ இணையத்தில் கொளுத்திப் போட்ட தகவல் இது என்று ஒதுக்கிவிட முடியாது. இத்தகவலை அவரிடமே உறுதிபடுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திரு நாகசாமி அவர்களின் தொடர்பு விபரம் மற்றும் பேரரசரின் ஜப்பான், நார்வே, ரஷ்யத் தொடர்புகள் பற்றி ஏதேனும் தகவல்கள் தங்களிடம் இருப்பின் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி. 🙏🏽

oOOo

தேடலின் போது எனக்கு கிடைத்த சில தகவல்கள்:

🔹 பேரரசர் தான் வெற்றி பெற்ற நாடுகளில் நிறுவிய வெற்றித் தூண்களில் பல அழிக்கப்பட்டுவிட்டன!

🔹 கங்கைகொண்டசோழபுரத்தில் கல்வெட்டுக்களுடன் இருந்த பல கற்களை ஒரு முட்டாள் பரங்கி, அருகிலுள்ள கொள்ளிட அணை/பாலத்தை சீர் செய்ய பயன்படுத்திக் கொண்டான்!

🔹 தொடக்கத்தில், பரங்கியரும், வடக்கத்தவரும் பேரரசரின் வெற்றிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. (பேரரசர், இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் போன்று தற்புகழ்ச்சி செய்து கொண்ட சில்லறைப்பயல் என்று நினைத்துவிட்டனர் போலிருக்கிறது! 😏) பின்னர், நம்மவர்கள் பெரும்பாடுபட்டு கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், மீதமிருந்த வெற்றித்தூண்கள் என அனைத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பேரரசரது புகழை நிலைநாட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது பணிவான 🙏🏽.

🔹"கால ஓட்டத்தில் நம் சமயமும், நம் ஆலயமும் பழுதுபடுமாயின், அவற்றை மீட்டெடுப்போர் கால்களில் விழுந்து வணங்குவேன்" என்று ஒரு கல்வெட்டு வெட்டி வைத்து விட்டு, காஞ்சிபுரம் செய்யாறுக்கு அருகில் இறைவனது திருவடியை மட்டும் வணங்கும் பணியில் அமர்ந்துகொண்டாராம்! 🌷🙏🏽

மனித இனம் உள்ள மட்டும் நின் புகழும், நின் குலப் புகழும், நம் சமயமும், நம் அன்னைத் தமிழும் செழித்து நிற்கும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

தேடலில் ஈடுபட்டிருக்கும்போது பின்வரும் நூல்கள் கிடைத்தன:

- கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு - முனை. ஆர் நாகசாமி
- கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வு அறிக்கை - முனை. சீ வசந்தி மற்றும் சிலர்
- Gangaikondacholapuram - Dr R Naagaswaami

இந்நூல்கள் அனைத்தையும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கினேன் (https://www.tnarch.gov.in/e-publication-books). துறையின் அனைத்து நூல்களும் மின்னூல் வடிவில் இங்கு இலவசமாகக் கிடைக்கின்றது! 👍🏽

No comments:

Post a Comment