Friday, September 4, 2020

மேல்மலையனூர் திரு அங்காளம்மன் வரலாறு

சிறு வயதில், எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனில், அருகிலுள்ள ஐயர் உணவகத்தில் இட்லி வாங்கி வரச் சொல்வார் எனது தந்தையார். அனுப்பும் போது, "சட்னியை தனியாகக் கட்டச் சொல். இல்லையெனில், தனி இலை வைத்து கட்டச் சொல்." என்று இரு முறையாவது சொல்லியனுப்புவார். உணவகத்தில், பொட்டலம் கட்டுபவர் எதையும் காது கொடுத்துக் கேட்கமாட்டார். 3 வகை சட்னியையும் ஒரே இலையில் வைத்துக் கட்டி விடுவார். வீடு திரும்புவதற்குள் சட்னிகள் சங்கமமாகியிருக்கும். பொட்டலத்தைப் பிரித்து கூடுதுறை வெளிப்பட்டதும் எனக்கு திட்டு விழும்! 😁

கீழே இணைக்கப்பட்டுள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் "தலவரலாற்றைப்" படித்ததும் மேற்சொன்ன "சட்னி கூடுதுறை" நினைவுக்கு வந்துவிட்டது. காரணம், இங்கும் குறைந்தபட்சம் 3 சட்னிகள் சங்கமமாகி இருக்கின்றன!! 😛

oOOo

"இது ஒரு மெய்யறிவாளரின் சமாதி" என்ற ஒரு தகவல் போதும் இத்திருத்தலத்தின் பெருமையைக் கூற. இந்த தகவலை மட்டுமே மதிக்கக்கூடிய சமூதாயத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மக்களை மாக்கள் ஆக்கியதால் உண்மைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. புருடா விட வேண்டியுள்ளது. புருடாவின் மேல் புருடா விட்டு தலவரலாறு என்பதே தலபுருடா என்றாகிவிட்டது!!

oOOo

🔸மேல்மலையனூரைச் சேர்ந்த ஆன்மதாகம் கொண்ட ஒருவர், திருவருணையில் வடக்கிருந்து மெய்யறிவு பெற்ற பின், வயதான காலத்தில் மீண்டும் மேல்மலையனூர் திரும்பி, சமாதியடைந்துள்ளார். அவரது சமாதியை அங்கிருந்த மீனவ சமூகத்தினர் பராமரித்து வணங்கி வந்துள்ளனர். பின்னாளில், அந்த சமாதித்தலம் பெரும் திருத்தலமாக உருவெடுத்துள்ளது.

🔸அம்முனிவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். ஒரு பெண்தெய்வச்சிலையை அடையாளமாக வைத்துள்ளனர் என்பதற்காக சமாதியில் இருப்பவர் பெண் என்று முடிவு செய்துவிடமுடியாது.

🔸கருவறையில் இருக்கும் புற்று, முனிவர் வடக்கிருக்கும் போதே அவரைச் சுற்றி வளர்ந்ததா அல்லது அவரை சமாதி வைத்த பின் வளர்ந்ததா என்று தெரியவில்லை.

🔸சமாதியைப் பராமரித்தவர்கள் மீனவர்கள். இவர்கள் "காண்பவனை விட காணப்படுவதே மேலானது" என்ற கொள்கை உடையவர்கள். எனவே தான், சமாதி அடையாளமாக திரு அங்காளம்மனை வைத்து பெண்தெய்வ வழிபாட்டுத் தலமாக்கியுள்ளனர். (அங்காளம்மன், பத்ரகாளியம்மன் மற்றும் ஆலிலைக் கண்ணன் எல்லோரும் ஒன்றுதான் - உயிரற்றதைக் குறிப்பவர்கள்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment