"தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்" என்ற நூலில் பேரா. இ பாலசுந்தரம் அவர்கள் எழுதுகிறார்:
ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளின் வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழர் வழிபட்ட பெண் தெய்வ உருவங்களையும் பண்புகளையும் கொண்டிருந்தமையையும் மானிடவியலாளர் விளக்கியுள்ளனர். மத்தியத்தரைக் கடற்பிரதேசங்களிற், குறிப்பாக ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில், வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழரது நாக கன்னியர் வழிபாட்டை ஒத்துள்ளன எனக் கூறப்படுகின்றது. ரூசிய நாட்டில் உக்கிரேயின் பகுதியில் கி.மு. 4000-2000 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த பல்வேறு பெண் தெய்வ உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவில் வீயன்னா நகரில் புதைபொருளாய்விற் கண்டெடுக்கப்பட்ட பெண் தெய்வ உருவங்கள் காளியம்மன், இலட்சுமி ஆகிய தெய்வங்களின் உருவங்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
oOOo
உலகெங்கும் சென்று வந்தவர் நாம். உலகெங்கும் அறியப்பட்டிருந்த மொழி நம் நிறைமொழி. உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட சமயநெறி நமது சமயநெறி. கடந்த 800 ஆண்டுகளாக வலுவான நிலையான தமிழரசுகள் தோன்றாமல் போனதால் எவ்வளவோ இழந்துவிட்டோம். இன்றும் சரியான தலைமை இல்லாததால், தேசிய ஒற்றுமை என்ற போர்வையில் மீதமிருப்பதையும் அழிக்கத்துடிக்கிறது ஒரு கூட்டம்! புளுத்தறிவு, சமூக அநீதி, மதச்சார்பின்மை போன்ற பட்டைநாமம், காதுகுத்துகள் மூலம் சமூக கட்டமைப்பை சீரழித்துவிட்டது இன்னொரு கூட்டம்!!
காலம் இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். என்றும் வாய்மையே வெல்லும்.
No comments:
Post a Comment