Wednesday, May 31, 2023

திருமலை நடைபயணம் & பழனி காவடி - சிறு விளக்கம்


அடியார்கள் திருமலைக்கு மேற்கொள்ளும் நடைப்பயணத்தையும் & பழனி முருகப் பெருமானுக்காக எடுக்கும் காவடியையும் ஒரு பகுத்தறிவுவியாதி கிண்டல் செய்து பேசினார். அவருக்கு நான் அனுப்பிய விளக்கங்களை தொகுத்து இந்த இடுகையாக மாற்றியிருக்கிறேன்.

oOo

முதலில், உங்களது தாயாரின் இறப்பை பற்றி சற்று பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட நாள் வரை அவர் உயிருடனிருந்தார். அடுத்த நாள் அவர் இறந்துவிட்டார். இறந்தநாளுக்கு முதல் நாள்வரை, எதையெல்லாம் வைத்து நீங்கள் அம்மா என்று அழைத்தீர்களோ, அவையெல்லாம் அன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால், இப்போது அதை அம்மா என்று நீங்கள் அழைக்கவில்லை. அதிலிருந்து நீங்கிய ஏதோ ஒன்றுதான் அம்மாவாகிறது. எனில், அம்மா என்பது எது / யார்?

இப்போது, இதே ஏரணத்தை (Logic) நமக்கும் பொருத்திப் பார்த்தால், நாம் இவ்வுடல் அல்ல என்பது உறுதியாகும். எனில், நாம் யார்?

இந்த கேள்விக்கு விடை காண நம் மாமுனிவர்கள், மெய்யறிவாளர்கள், சான்றோர்கள் வகுத்துக் கொடுத்த பாதைகளில் இரண்டுதாம்: திருமலைக்கு நடைபயணம் மற்றும் பழனிக்கு காவடி தூக்குதல்.

🔸 திருமலைக்கு நடைபயணம்


இவ்வகையான பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டுமென்று பகவான் திரு இரமண மாமுனிவர் அருளியிருக்கிறார்: கருவுற்று நிறைமாதமாக உள்ள ஒரு பேரரசி நடைபயில்வதை போன்று பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் என்னவாகும்?

ஒரு சமயத்தில் நமதுடல் மரத்துப்போகும். ஆனால், நாம் (நமது தன்மையுணர்வு) மரத்துப்போகமாட்டோம். இப்போது நம்மை நாம் தெளிவாக உணரமுடியும்.

இவ்வாறு உணருவதால் என்ன பயன்?

பிறவியறுப்போம். இதையே வீடுபேறு, நிலைபேறு, மோட்சம் (ஆரியம்) என்று பலவாறு அழைக்கிறோம்.

இங்கு, அன்னைத்தமிழின் மேன்மையை உணரமுடியும்: பிறவி என்ற சொல்லைப் பற்றி சற்று சிந்திக்கவும். நாம் நாமாக இல்லாமல் "பிறவாக" (மனிதனாக, விலங்காக, பறவையாக...) ஆவதற்கு பெயர்தான் "பிறவி"!!

🔸 பழனிக்கு காவடி தூக்குதல்


காவடி எப்படியிருக்கும், அதை எப்படி தூக்குவர் என்பது தாங்கள் அறிந்ததே. சிலர் மட்டும், அவ்வப்போது, காவடிகளை தங்களது தோள்பட்டைகளில் வைத்து சுழற்றுவர்.

> காவடி - நமதுடல்

> காவடியின் இருபுறமும் சொருகியுள்ள மயிற்பீலிகள் - முன்வினை & வருவினைப் பயன்கள்

> காவடியை தூக்குதல் - உடலை தாங்குவது நாமே

> காவடியை சுழற்றுதல் - உடலை இயக்குவது நாமே

> காவடியை எதுவரை தூக்குகின்றனர்?

முருகப்பெருமானை காணும்வரை. அல்லது, திருக்கோயிலை அடையும்வரை.

> முருகப்பெருமான் என்பது எது?

என்றும் மாறாத, அழியாத, தன்னொளி கொண்ட நாமே உள்ளபொருள் என்ற அறிவு. அதாவது, மெய்யறிவு.

> உடலை எதுவரை தாங்குகிறோம் / இயக்குகிறோம்?

நாம் இவ்வுடல் என்ற தவறான அறிவு இருக்கும்வரை. அதாவது, மெய்யறிவு கிடைக்கும்வரை. இதுவே, "முருகப்பெருமானை காணும்வரை காவடி தூக்குதல்" என்ற சடங்கின் பொருளாகும்.

கடந்த 700+ ஆண்டுகளாக நடந்த அரசியல் படையெடுப்புகள், 2,000+ ஆண்டுகளாக தமிழகத்தின் மீது நடந்த இன & மத படையெடுப்புகள், கடந்த 60 ஆண்டுகளாக நடக்கும் தரமற்றவர்களின் ஆட்சி ... என பலவற்றால் தரமிழந்து போனோம். குறிக்கோள் தவறிப்போனோம்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து..." என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும். இவ்வாறே, செய்யும் சடங்குகளின் உட்பொருள் உணர்ந்து செய்தால் மேன்மை அடையலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Monday, May 29, 2023

செங்கோலில் இடம்பெற்றிருக்கும் 3 சின்னங்கள்


செங்கோலில் இடம்பெற்றிருக்கும் 3 சின்னங்கள்: விடை, அன்னை மலர்மகள் & மேலெழும் கொடி.

🔸 விடை

- அயராத உழைப்பின் அடையாளம்
- தன் தலைவன் இட்ட பணியை, பயன் கருதாமல், செய்து முடிக்கும்
- தனது கழிவுகளால் நிலத்தை வளப்படுத்தும்

இங்ஙனமே, ஒரு மன்னவன், தனது கடமைகளை (இறைவன் இட்ட பணிகளை) பயன் கருதாமல், செய்து முடிக்கவேண்டும்; அயராது உழைக்கவேண்டும். தனது சொல் & செயலால் (கழிவுகளால்) தனது நாட்டை மேம்படுத்தவேண்டும்.

🔸 அன்னை மலர்மகள்

மெய்யறிவைக் குறிக்கிறார்.

நம்மை நாம் அழியும் உடலாக காணும்வரை ஆசைகளுக்கு முடிவிருக்காது. ஆசை -> சுயநலம் -> அநீதி -> குற்றங்கள்... என பெருகிக்கொண்டேப்போகும்.

எப்போது "நாமே அழியாப் பரம்பொருள்" என்ற நமதுண்மையை உணர்கிறோமோ, அப்போது யாவும் கட்டுக்குள் வரும்; அல்லது, அற்றுப்போகும்.

🔸 மேலெழும் கொடி

அளப்பரிய ஆற்றல்.

ஒரு மன்னவன், எக்கணமும் மக்களின் துயர்துடைக்க, நாட்டுநலனை காக்க அணியமாக (தயாராக) இருக்கவேண்டும். இதற்கு வற்றாத ஆற்றல் வேண்டும்.

மேற்சொன்ன தன்மைகளை உடைய மன்னவன் ஆளும் நாட்டில், அப்படிப்பட்ட மன்னவனை பின்பற்றி வாழும் மக்கள் நிறைந்த நாட்டில் எதற்கு குறைவிருக்கும்?

(தெருமாக்களுக்கு, திராவிடியாள்களுக்கு, பகுத்தறிவுவியாதிகளுக்கு, மெக்காலே -மண்டையர்களுக்கு குறைவிருக்கும்! 😁)

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Monday, May 22, 2023

வாரம், திதி, நட்சத்திரம், யோகம் & கரணம் சொல்வதின் உட்பொருள்


🔸 வாரம் சொன்னால் வாழ்நாள் வளரும்
🔸 திதி சொன்னால் செல்வம் பெருகும்
🔸 நட்சத்திரம் சொன்னால் தீவினை போகும்
🔸 யோகம் சொன்னால் நோய் நீங்கும்
🔸 கரணம் சொன்னால் நினைத்தது நடக்கும்

சோதிடர்கள் மட்டுமல்லாது, பஞ்சாங்கம் புரட்டும் பழக்கமுள்ளவர்களும் அறிந்திருக்கும் இந்த வரிகளின் உட்பொருளை சற்று பார்ப்போம்.

🔸 வாரம் - வாழ்நாள்

வாரம் என்பது 7 நாட்களை குறிக்கும். 7 என்பது எலும்பு, தசை முதலான 7 பொருட்களை குறிக்கும். இந்த 7 பொருட்கள் நமதுடலை குறிக்கும்!

உடலை பேணினால் நோய் நொடி
இல்லாமல், நீண்ட நாட்கள் வாழலாம்!!

🔸 திதி - செல்வம்

திதி என்பது பகலவனுக்கும், நிலவுக்கும் இடையேயான இடைவெளியாகும்.

> பகலவன் - உள்ளபொருள் / பரம்பொருள்
> நிலவு - மனம்
> செல்வம் - மெய்யறிவு (ஆரியத்தில், ஞானம்)

மனதை எவ்வளவுதூரம் உள்ளபொருளுக்கு அருகில் கொண்டு செல்கிறோமோ, அவ்வளவு தூரம் நமது மெய்யறிவு பெருகும்.

(விளக்குவதற்காக இப்படி எழுதியிருக்கிறேன். உண்மையில், உள்ளபொருளை விட்டு எக்கணமும் விலகமுடியாது. நீரிலிருக்கும் மின் நீரைவிட்டு விலகமுடியுமா? அல்லது, நீருக்கு அருகில் செல்லமுடியுமா?)

🔸 நட்சத்திரம் - தீவினை

விண்மீன் (ஆரியத்தில், நட்சத்திரம்) தன்னொளி கொண்டதாகும். இதற்கு சமமாக நம்மிடமிருப்பது நமது தன்மையுணர்வாகும். நாம் இருக்கிறோம் என்பதை உணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை. இந்த நான் என்ற தன்மையுணர்வைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், நமது தீவினைகள் குறைந்து கொண்டே வரும். இறுதியில், நிலைபேறு / வீடுபேறு கிட்டும்.

நமது தன்மையுணர்வின் இன்னொரு பெயர் - உள்ளபொருள்!

🔸 யோகம் - நோய்

யோகம் எனில் இணைப்பு / இணைவது ஆகும்.

> தன்மையுணர்வு - உள்ளபொருள்
> மனம் - சீவன்
> "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் - நோய்

மனதை தன்மையுணர்வில் தொடர்ந்து பொருத்திக் கொண்டிருந்தால், உடலல்லாத நம்மை உடலாக கருதும் நோயின் தாக்கம் குறைந்து கொண்டேவந்து, இறுதியில் நீங்கிவிடும்.

🔸 கரணம் - நினைத்தது நடக்கும்

கரணம் என்பது ஐம்பொறிகளையும் குறிக்கும்; அந்தக்கரணம் என்று ஆரியத்தில் அழைக்கப்படும் மனதையும் குறிக்கும். மனமென்றால் என்னவென்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், மனம் அழிந்துபோய் நாம் நாமாக இருப்போம். இதன் பிறகே, "இவ்வளவு காலமும், நம் முன்னே நடந்த யாவும், முற்பிறவிகளில் நாம் நினைத்தவையே (விரும்பியவை / வெறுத்தவை)" என்பதை உணருவோம்!

சோதிடம் என்பதே ஒளியை பற்றிய ஆராய்ச்சிதான்! நம் கண் முன்னே விரியும் உலகம், ஏன் இவ்வாறு விரிகிறது என்று நம் முன்னோர் சிந்தித்ததின் விளைவே சோதிடமாகும்!!

oOo

இப்போது ஒரு கேள்வியெழலாம்: இந்த விளக்கமெல்லாம் சரி. மெய்யியலை கொண்டுபோய் சோதிடத்திற்குள் ஏன் நுழைத்தார்கள்?

சோதிடத்திலுள்ள ஒவ்வொரு சொல்லிற்கு பின்னும் நீண்ட வரலாறு இருக்கிறது. கணக்கிலடங்காத பல பெரியவர்களின் பன்நெடுங்கால உழைப்பே இன்றைய சோதிடத்தின் அடித்தளமாகும். MB, GB, TB, ZB என்று எவ்வளவு பெரிய தரவாக இருந்தாலும், இன்று பாதுகாப்பாக, பல வகைகளில், பல இடங்களில் சேமித்து வைக்கமுடியும். அன்று இத்தகைய சூழ்நிலையில்லை. எனவே, நம் முன்னோர்கள் மனிதர்களை சேமிப்பகமாக பயன்படுத்தியுள்ளனர்!

"அடேய், மனிதா, எதிர்கால தலைமுறையினருக்காக, இதை நினைவில் வைத்திரு" என்றால் யார் நினைவில் வைத்திருப்பார்கள்? 😏 எனவே, இதை சொன்னால் வாழ்நாள் வளரும், அதை சொன்னால் செல்வம் பெருகும் என்று கதைவிட்டுள்ளனர்! 😃

கனிந்த மரம் கல்லடி படும் என்ற பழமொழிக்கேற்ப, அழியாச் செல்வமும், அழியும் செல்வமும் நிறைந்திருந்த நம் பாரதம் கண்ட படையெடுப்புகள் எண்ணிலடங்காது. இவற்றுடன், அவ்வப்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் வேறு! (முதலாம் நரசிம்ம பல்லவரின் காலத்தில், 12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழை பொய்த்துள்ளது!!) இப்படிப்பட்ட சூழ்நிலையில், "பெரியவர்கள் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்துகளை எவ்வாறு பாதுகாப்பது?" என்று நம் முன்னோர்கள் சிந்தத்தின் விளைவே "மக்களை சேமிப்பகமாக பயன்படுத்தலாம்" என்ற நுட்பம்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Thursday, March 30, 2023

நரித்துவத்தின் புதிய ஊழியம்!!


😆😝😂😂🤣

என்னடா, வாழ்க்க சீரியஸாவே போயிட்டிருக்கேன்னு நெனச்சேன். நல்ல வேள, புண்ணியவானுங்க வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டானுங்க. புண்ணியவானுங்களுக்கு நிறைய பொர கெடைக்கனும்.

oOo

வெகுவேகமாக அந்த வீட்டிற்குள் வந்த சூசை, வாயில் & சாளரக் கதவுகளை மூடினான். அதை பார்த்துக்கொண்டிருந்த ஏரியா ஐட்டமான ஃபிலோமினா, "ஏன்யா, இன்னாத்துக்கு மூடுறே? இன்னொரு தபாவுக்கு ஒடம்பு தாங்காதுய்யா!" என்றாள். "அட, அதுக்கில்லடி" என்றவாறு அருகில் வந்தான்.

"நம்ப ஜெபராஜ் ஐயா வூட்டுக்கு போயிருந்தேனா, அங்க அவர மாதிரி சில பெரியவங்களும், 2 வெள்ளக்காரங்களும் இருந்தாங்க. நம்ம மதத்திலிருந்துதான் சிவன் சாமிய கும்பிடறது உருவாச்சுன்னு ஜோடிக்கணும்னு பேசிகிட்டிருந்தாங்க. ஜோடிச்சா பெரிய துட்டு கெடைக்குமாண்டி. நம்ப பெரியவங்க லெட்சுமணசாமி, தம்பிதுரை, கனல்நிதி எல்லாரும் இப்புடி ஜோடிச்சுத்தான் பெரியாளுங்களா ஆனாங்களாம். நாமளும் கொஞ்சம் ஜோடிச்சுத்தான் பாப்போம்ன்டி."

ஃபிலோமினா: நம்ப இயேசப்பாத்தான் சிவனாருன்னு ஆரம்பிப்போம்யா?

சூசை: சரியா வருமா? இயேசப்பா வெள்ளையா இருக்காரு. சிவனாரு சிவப்பாவும் இருக்காரு; நீலமாவும் இருக்காரு.

ஃபிலோ: அட, இயேசப்பா இங்க வரும்போது, நம்ப சித்திர மாச வெயில்ல சிவப்பாயி, பொறவு, நம்பள மாதிரி கருப்பாயிட்டாருன்னு சொல்லுவோம்யா.

சூ: நீ சொல்றது சரியா வரும்னு தோணுது. பச்சையம்மாவ எப்புடி கொண்டாற்ரது?

ஃபிலோ: மேரிதான் பச்சையம்மான்னு சொல்லுவோம்யா.

சூ: (திடுக்கிட்டவனாய்) இன்னாடி சொல்ற? அம்மாகாரிய போயி பொஞ்சாதிங்குற!

ஃபிலோ: அடச்சே, தூ! அது மேரியம்மாயா. இது மேரி மேக்தலின்னு வேற ஒருத்தருய்யா. மெய்யாலுமே இயேசப்பாவோட சம்சாரம்யா.

சூ: மெய்யாலுமாடி? அவுரு கண்ணாலமே கட்டிக்கிலன்னுதானே நெனச்சேன். அப்ப, மேரியம்மாவ இன்னா பண்ணுவடி?

ஃபிலோ: அவுங்க ஆதி பராசக்தியா ஆயிட்டாங்கன்னு சொல்லுவோம்யா.

சூ: (சற்று குழம்பியவாறே) அப்ப, அவுங்க பச்சையம்மாவோட அவதாரமில்லயா?

ஃபிலோ: (எரிச்சலுடன்) எடத்துக்கு ஏத்த மாதிரி போட்டுக்கலாம்யா. விடுய்யா.

சூ: கொழந்தைங்கடி?

ஃபிலோ: இயேசப்பாவோட ஊருல்ல வெயில் அதிகமாம். அவரால முடியல. இங்க வந்து, நம்ம ஊரு சோறுதண்ணி சாப்ட்ட பின்னாடி, ரெண்டு கொழந்தைங்கள பெத்துக்கினார்னு சொல்லுவோம்யா.

சூ: லாஜிக்கா இருக்குடி. ஆனா, அவுரு ஆட்டுக்குட்டியில்ல வெச்சிருந்தாரு. இங்க சிவனாரு முன்னாடி காளமாடில்ல குந்திகினு இருக்கு.

ஃபிலோ: அவுரு ஊர்ல தண்ணி பஞ்சம். புல்லு கெடைக்கில. அதனால சின்ன உசிர வளத்தாரு. இங்க வந்த பின்னாடி, காளைக்கு மாறிகினார்னு சொல்லுவோம்யா. ஆட்ட வெச்சுகிட்டு யாருய்யா லோல் படறது? அது வேற வதவதன்னு குட்டிங்கள போட்டு வெக்கும்.

சூ: சிவனாரு, பச்சையம்மா, புள்ளையாரு, முருகேன், காளைமாடு... எல்லாம் ஆச்சுடி. நா போயி ஜெபராஜ் ஐயாவ பாத்துட்டு வர்றேன். ஐயாவுக்கு இது புடிக்கணும். பெரிய துட்டு கிடைக்கணும். இயேசப்பா கருண காட்டப்பா. வர்ற அம்மாச ராவு ஜெபத்துக்கு 100 பேர கூட்டியாரேன், இயேசப்பா.

😆😝😝😂😂😂🤣🤣

இவர்களுக்கு பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் உள்ளதென்று நினைக்கிறேன்! 😜

#நரித்துவம்
#பாவாடை_மதம்
#ஒப்பாரி_மதம்
#எம்எல்எம்_மதம்

Wednesday, March 29, 2023

வைணவ கைங்கரியத்திற்கு எதிர் கைங்கரியம்!! 👊🏽👊🏽



இணைப்புப்படம், ராமகிருஷ்ண விஜயத்தின் சித்திரை 2023 இதழின் பின்னட்டைப்படமாக வந்துள்ளது.

திரு கண்ணபிரானுக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️, அர்ஜுனனுக்கும் நாமத்தை போட்டிருக்கிறார்கள். துரியோதனனுக்கு பட்டையை போட்டிருக்கிறார்கள். அதாவது, சைவர்களை கொடூரர்களாகவும், நாமப் பேர்வழிகளை நல்லவர்களாகவும் காட்டியிருக்கிறார்கள்!

> நாமச் சின்னத்தை இராமானுஜர் வரைந்தது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர்.

> வைணவம் என்றொரு மதம் தோன்றத் தொடங்கியது திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ மறைவுக்குப் பின்னர். அது முழுவடிவம் பெற்றது இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர். 

> கண்ணபிரான் வாழ்ந்ததும், மகாபாரதம் நிகழ்ந்ததும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்.

> எனில், பிரானுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி நாமத்தை போட்டுவிடலாம்?

நாமம் ஒன்றும் இராமானுஜரின் தனிப்பட்ட படைப்பல்ல! அதற்கு முன்னரே பாலைவன மதங்களில் வெகுவாக பயன்படுத்தப்பட்ட பெண்குறி திறப்பு எனும் குறியீட்டை, தலைகீழாக்கி, நடுவில் சிவப்பு கோட்டைச் சேர்த்து வெளியிட்டார். பாலைவன மதங்களில், பெண்குறி, 'n' என்ற வடிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவர், அதை 'U' என்றாக்கி, நடுவில் கோடு சேர்த்து, அச்சு அசல் பெண்குறியாக்கிவிட்டார். |/

> நாமம் போட்டுட்டாங்களா? = உன்னை ஏமாற்றிவிட்டார்களா?

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

>> நாமம் = வைணவம் = ஏமாற்றுவேலை!!

அடிப்படையில், இவர்கள் வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களாவர். அப்போது இவர்களது தொழில் மொட்டைப் போடுதலாகும். 

> மொட்டப் போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?

> மொட்டப் போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

>> மொட்டை = பௌத்தம் = திருட்டு வேலை!!

ஆக மொத்தம், இவர்களது தொழில் ஊரையேமாற்றிப் பிழைப்பதாகும்!!

இவ்வாறு, இவர்களது திருட்டுத்தனங்களை பக்கம் பக்கமாக தோலுரித்துக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். 👊🏽👊🏽

என்றும் வாய்மையே வெல்லும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, March 22, 2023

திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் - சில குறிப்புகள்


திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் திருக்கோயில் - தொன்ம கதைகளில் வரும் திரு அகத்திய மாமுனிவரின் திருவிடமாகும்!

🌷 அகத்தியர் = குள்ள மாமுனிவர்.

பல திருக்கோயில்களில், "அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று பதிவு செய்திருப்பார்கள். இது குள்ள மாமுனிவரை குறிக்காது!! அந்தந்த திருக்கோயில்களில் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான்களைக் குறிக்கும். உண்மையான அகத்தியர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.

🌷 தொடக்கத்தில் நம்மிடமிருந்த இக்கோயில், 1700-1800 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களிடம் சென்றது. தற்போது, பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவர்களிடமுள்ளது. அப்போது, படுத்திருக்கும் கெளதம் புத்தர் சிலையிருந்திருக்கும். தற்போது, படுத்திருக்கும் பெருமாள் சிலையுள்ளது.

🌷 ஒரு சமயத்தில், இக்கோயில் வைணவத்தின் தலைமையகமாக விளங்கியது.

🌷 இங்கு சென்று திரும்பும்போதுதான், வேதாந்த தேசிகருக்கு "குதிரைத்தலை பெருமாள்" எனும் வடிவத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

🌷 இங்குள்ள பெருமாளின் உருவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த சிலை தீக்கிரையாகிப் போனது.

🌷 தற்போதுள்ள உருவம் ஒரு சிவலிங்கத்தை தொட்டபடியிருக்கும். சைவத்தை / சிவப்பரம்பொருளை மட்டம் தட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வமைப்பையும், உடனிருக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளையும் நீக்கிவிட்டு சிந்தித்தால், பெருமாளின் உருவம் ஒரு சிவலிங்கமே என்பது விளங்கும்!!

> சிவலிங்க ஆவுடை = பாம்பணை = ஐம்பொருட்களால் ஆன உடல் உலகம். அதாவது, காணப்படுவது / அறியப்படுவது.

> சிவலிங்கம் = பெருமாள் = செயலற்ற உள்ளபொருள். அதாவது, காண்பான் / அறிபவன்.

> சிவலிங்கம் = அருவுருவம் = உருவமாகவும் கொள்ளலாம். அருவமாகவும் கொள்ளலாம்.

> பெருமாள் = உருவமாக மட்டுமே கொள்ளமுடியும். 

முழு அருவ வழிபாட்டின் விளைவு பாலைவன மதங்களெனில் (காட்டுமிராண்டித்தனம் & பைத்தியக்காரத்தனம்), முழு உருவ வழிபாட்டின் விளைவு... 

பெருமாளுக்கு வெந்நீர் குளியல் & கம்பளி உடை, மடக் மடக் என்று குடிப்பதற்கு நரசிம்மருக்கு பானகம், அம்மனுக்கு மாதவிடாய்... 

பூஜா, அபிஷேகா, அலங்காரா, அர்ச்சனா, ஆராதனா, ஹோமா, தர்ப்பணா...

நாசமா போச்சு!! 🤬😡

எல்லாம் சில காலம். 
இதுவும் கடந்துபோகும். 
இறுதியில் வாய்மையே வெல்லும்.

oOOo

திரு அகத்திய மாமுனிவர் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, March 6, 2023

திருக்குறள் #28 (நீத்தார் பெருமை): நிறைமொழி மாந்தர் பெருமை...



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

-- திருக்குறள் #28 (நீத்தார் பெருமை)

🔸 நிறைமொழி மாந்தர் - மனமழிந்தவர் / தன்னையுணர்ந்தவர். இவர்களால் மட்டுமே உள்ளபொருளை பற்றி சரியாக எடுத்துக்கூறமுடியும்.

உள்ளபொருள் - முழுபொருள் - நிறைபொருள். இது பற்றிய மொழி நிறைமொழி.

சில நிறைமொழி மாந்தர்:

🙏🏽 பகவான் இரமண மாமுனிவர்
🙏🏽 திருவள்ளுவர்
🙏🏽 ஒளவையார்
🙏🏽 கபிலதேவர்
🙏🏽 நம்பியாண்டார் நம்பி

🔸 மறைமொழி - நீரிலிருந்தும் நீரையுணராத மீனுக்கு நீரைப் பற்றி எப்படி நேரடியாக எடுத்துக்கூறமுடியும்? மறைமுகமாக குறிப்பால்தான் உணர்த்தமுடியும்.

மறைமொழி - உள்ளபொருளை மறைமுகமாக குறிப்பால் உணர்த்தும் மொழி.

மேற்கண்ட நிறைமொழி மாந்தரிடமிருந்து வெளிப்பட்ட சில மறைமொழிகள்:

🌷 தன்மையின் உண்மையை தான் ஆய, தன்மை அறும்
🌷 தூஉய்மை என்பது அவாவின்மை
🌷 [சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாத] ... என்னை யறிவித்து எனக்கருள் செய்து
🌷 [விநாயகனே வெவ்வினையை வேரறுக்க] ... தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
🌷 [என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்து] ... தன்னை நினையத் தருகின்றான்

இம்மறைமொழிகளைக் கொண்டு மேற்கண்ட மெய்யறிவாளர்களின் பெருமையை உணரலாம்.

மக்களிடம் (நிலத்தில்) பயன்பாட்டிலிருக்கும் மறைமொழிகளைக் கொண்டு, அவற்றை வெளியிட்ட நிறைமொழி மாந்தரின் பெருமைகளை உணரலாம். 🙏🏽

oOo

மறைமொழி என்றதும் ஆரியம் நினைவுக்கு வருமாறு கைங்கரியம் செய்துள்ளனர். இந்த சீர்கேடெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்துள்ளது. அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல; உண்மையான மறைமொழியுமாகும். 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸