Saturday, July 13, 2024

திருவண்ணாமலை திரு நிலவறைப் பெருமான் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️


திருவண்ணாமலை திருக்கோயில் வளாகத்திலுள்ள திரு நிலவறைப் பெருமான் திருக்கோயில் (அசுரத்தில், பாதாள இலிங்கம்). இங்கிருந்தே பகவான் திரு இரமண மாமனிவர் நமக்கு கிடைத்தார்.

ஆயிரங்கால் கூடத்திலிருந்தபோது (அசுரத்தில், மண்டபம்), தனக்கு துன்பம் விளைவித்த சில பண்படாத சிறார்களிடமிருந்து விலகி, அப்போது பாழடைந்திருந்த இக்கருவறையில், உடையவரின் (அசுரத்தில், மூலவர்) பின்னே அமர்ந்துகொண்டார். அசுர (ஆரிய) புருடாக்களிலிருந்து 👊🏽👊🏽 வையகம் மீள வேண்டுமென்பது திருவருளின் நோக்கமாக இருந்ததால், திரு சேஷாத்ரி பெருமானால் பகவான் வெளியே கொண்டுவரப்பட்டார். இல்லையெனில், இக்கருவறையில் இன்னொரு திருமேனி சேர்ந்து போயிருக்கும். அதை வைத்து, பின்வரும் தொழிலும் நடந்து கொண்டிருக்கும்:

சுவாமியோட ஒடம்புலே பாதி தனக்கு வேணும்னு, அம்பாள் காஞ்சிவரத்துல தவமிருந்தா. அவளுக்கு காட்சி கொடுத்த பகவான், அருணாஜலத்துக்கு வரச்சொல்லிட்டார். காஞ்சிவரத்துலேர்ந்து இங்கே வர்றதுக்குள்ள அம்பாளுடைய ஒடம்புல அழுக்கேறி, பச்சையா ஆயிடுத்து. அப்படியே அம்பாள் கோயிலுக்குள்ள போறச்சே, பகவான் ஒரு பள்ளத்திலிருந்து எட்டிப்பார்த்து, நம்ம பொம்மணாட்டியோட நெலம இப்படியாயிடுத்தேன்னு வருத்தப்பட்டார். இத புரிஞ்சிண்ட அம்பாள் திரும்பி பார்த்தா. பகவான், இங்க, முன்னாடியிருக்கிற சிவலிங்கத்துக்குள்ள ஒளிஞ்சிண்டார். அம்பாள் விடல. மறஞ்சிருந்து, எப்படி தன்ன வாஞ்சையோட பார்த்தாரோ, அதே மாதிரி இன்னொரு தடவை தன்ன பார்க்கணும்னு அங்கேயே தவமிருந்தா. பகவானும் மனசு இறங்கி, இன்னொரு தடவை காட்சி கொடுத்து, வாஞ்சையோட பார்த்துட்டு, பின்னாடியிருக்கிற சிவலிங்கத்துக்குள்ள மறைஞ்சுட்டார். இந்த அடிப்படையிலதான் இங்க 2 சிவலிங்கம் இருக்கு. ஒரே கர்ப்பகிரகத்துல 2 சிவலிங்கம் இருக்குறது விசேஷம். நன்னா தரிசனம் பண்ணிக்கோங்கோ. ஓம்...

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

-- திருக்குறள் #423 (அறிவுடைமை)

oOo

உண்மைகள் எவ்வளவு தொலைவு திரிக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இவ்விடுகையை எழுதினேன்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும்: 

அசுரக்கூட்டத்திடமிருக்கும் யாவும் அவர்களுடையதல்ல. எல்லாம் நம்மிடமிருந்து சென்றவை. மேலே பூசப்பட்டிருக்கும் அசுரப்பூச்சு மட்டும்தான் அவர்களுடையது. நம் சமயத்தை எதிர்ப்பதென்பது நம் முன்னோர்களை எதிர்ப்பதாகும். வெகுவாக பாடுபட்டு அவர்கள் வெளிக்கொணர்ந்த முத்துகளை இகழ்வதாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, July 12, 2024

திருவாதவூரடிகளது திருவிடத்தின் தற்போதைய நிலை! 😞

🌺🙏🏽🙇🏽‍♂️

(தில்லையிலுள்ள திருவாதவூரடிகளின் (திரு மணிவாசகப் பெருமான்) திருவிடம்)

எப்படி போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய வளாகம், இப்படி எல்லைமீறல்களால் நிறைந்துள்ளது! விட்டால், கருவறைக்குள்ளும் புகுந்துவிடுவர்! 😡 இப்படியொரு கூட்டமெனில், இன்னொரு கூட்டம்...

பெருமான் இங்கு குடிகொண்டுள்ளார் (அசுரத்தில், சமாதியடைந்துள்ளார்) என்று தெரிந்திருந்தும், தில்லையின் கருவறைக்கு முன்னே, இறைவனுடன் இரண்டறக் கலந்தாரென்று புருடா விட்டு, மக்களை மாக்களாக்கி, ஷேமமா, சௌக்கியமா, நன்னா பருப்பு சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் வழி வகுத்துக் கொண்டுள்ளது!! 😡😡

உண்மையை மறைக்காதிருந்திருந்தால், அவ்விடத்தின் மதிப்பை மக்கள் உணர்ந்திருப்பார்கள். எல்லை மீறி உள்ளே வந்திருக்கமாட்டார்கள்.

oOo

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இம்மையே என்ற சொல்லினால் இறைவன் என்பது யாரென்று தெளிவாகக் காட்டுகிறார் பெருமான்!! 😍

🌷 இம்மை - இப்போது / தற்போது (பீட்டரில், Current).

🙏🏽🙏🏽🙏🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, July 2, 2024

திரு பேயாரிடமிருந்து / தெய்வச் சேக்கிழாரிடமிருந்து சுட்ட நாமப்பேர்வழிகள்!!


"கூண்டில் பிறக்கும் பறவைகள் பறப்பதை நோயெனக் கருதுகின்றன"!! -- இச்சொற்றொடர் பலருக்கு / பல சூழ்நிலைகளுக்கு பொருந்தும்.

காண்பானை விட காணப்படும் காட்சியே மேலானது எனக் கருதிய மாயை & மாயோன் வழிபாட்டினர், மெய்யறிவுத் தேடலை பித்துப் பிடித்தல் எனவும், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களை பித்தர்கள் என்றும் அழைத்தனர். இங்கு,

🔸 மாயை & மாயோன் வழிபாட்டினர் - கூண்டில் பிறந்தவர்கள்

🔸 மெய்யறிவுத் தேடல் - நோய்

ஆனால், பின்னாளில், மெய்யறிவுத் தேடல்தான் சரியென்று உணர்ந்த பிறகு,

🔸 "மெய்யறிவை வழங்குவதே அன்னைதான்" என்றனர் மாயை வழிபாட்டினர்! 😏 எ.கா.: சிக்கலில் சிங்காரவேலருக்கு அன்னை வேல் வழங்குதல். வேல் - மெய்யறிவு.

🔸 நாமப்பேர்வழிகள்: நித்திய சூரிகள் (மெய்யறிவாளர்கள்) பரமபதத்தில் இருந்துகொண்டு, பெருமாளை நோக்கி பல்லாண்டு இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(இதை படித்ததும் 🙄/😵‍💫/🥴 என்ற உணர்வு தோன்றினால், இன்னும் உங்களுக்கு பட்டை நாமம் சாத்தப்படவில்லை என்பது பொருளாகும். 😁)

மேற்கண்ட அக்கார அடிசிலுக்கான பொருட்களை நாமப்பேர்வழிகள் சுட்டது... திரு பேயாரிடமிருந்து (காரைக்கால் அம்மையார்)!! பேயாரின், "நான் மகிழ்ந்து பாடி, அறவா, நீ ஆடும்போது உன் திருவடியின் கீழிருக்க" என்ற வேண்டுதலையே மேற்கண்ட அடிசிலாக கிண்டியுள்ளனர். பேயாரின் வேண்டுதலை, தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பதிவு செய்துள்ளார். எனவே, சேக்கிழாரிடமிருந்து சுட்டிருக்கிறார்கள் என்றாலும் தகும்.

🌷 பேயார் (மெய்யறிவாளர்) - நித்திய சூரி
🌷 நிலைபேறு - பரமபதம்
🌷 மகிழ்ந்து பாடுதல் - பல்லாண்டு இசைத்தல்
🌷 அறவானின் ஆட்டம் - பெருமாளின் கனவு / லீலை

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, June 27, 2024

புறநானூற்றை தங்களது இனத்திற்கேற்றவாறு திருத்திய உவேசா & பரிமேலழகர்!!

யூடியூப் காணொளி: https://youtu.be/wfhd2vEQ0No


🤜🏽 வெள்ளையன் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 குறிமதத்தான் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 ஒப்பாரி மதத்தான் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 தெலுங்கன் (திராவிடியாள்) அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 வடக்கத்தான் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽🤜🏽 திரிபே வடிவான அசுரன் திரிக்காத பொருண்மையே (அசுரத்தில், விஷயமே) இல்லை.


ஓர் இனத்தை அவ்வினமே ஆண்டால்தான், அவ்வினத்தின் அடையாளங்களும், செல்வங்களும் & வரலாறும் திரிபடாமல் பாதுகாக்க முடியும்.


நம்மையாள இன்னொரு சுடர்நெறி முடியரோ (அசுரத்தில், சிவபாதசேகரன்), இருநில மடந்தையரோ வராமலா போய்விடுவார்கள்? (பேரரசர்கள் திரு இராஜராஜ சோழன் & திரு இராஜேந்திர சோழன்)


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, June 18, 2024

திரு செவிடை நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்.


ஓசூரில் உள்ள ஒரு மலையில் குடி கொண்டிருப்பவர். 

🌷 இவரொரு தான்தோன்றி (அசுரத்தில், சுயம்பு) - அதாவது, மலைக்கோயில் கருவறையில் திருநீற்று நிலையிலிருக்கும் (அசுரத்தில், சமாதியிலிருக்கும்) பெருமான் யாரோ, அவர், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்று, யாருடைய வழிகாட்டுதலுமின்றி மெய்யறிவு பெற்றவராவார்.

வெகு பழமையான இத்திருக்கோயிலில், பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரின் காலத்திலிருந்து கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அக்கல்வெட்டுகளில், "செவிடை நாயனார்" என்றே இங்கு குடி கொண்டிருக்கும் பெருமான் அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறே, நம் திருநெறியத்தமிழ் மண்ணில் குடி கொண்டிருக்கும் அத்தனை பெருமான்களும், மேன்மையான தென்தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளனர். தெலுங்கு விஜயநகர / நாயக்கர்கள் ஆட்சி காலத்தில், நம் திருக்கோயில்களுக்குள் புகுந்த அசுரர்கள், நம் பெருமான்களின் பெயர்களை அசுரப்பெயர்களாக மாற்றிவிட்டனர்! அவ்வாறு, இங்கிருக்கும் பெருமானுக்கு அவர்கள் மாற்றிய பெயர் "திரு சந்திரசூடேசுவரர்" ஆகும்.

👎🏽 சந்திரசூடேசுவரர் - மனதை தரித்திருக்கும் பெருமான். இப்பெயரை செவிடை என்ற தென்தமிழ் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கிறார்கள்.

🌷 செவிடை - செ + விடை. விடை - மனம். செ - உயர்ந்த / எளிய.

அதாவது, அப்பெருமான் எளிய / உயர்ந்த மனதினை உடையவராய் இருக்கிறார்.

🔸 எளிய மனம் - அவரை அணுகுதல் எளிதாகும். கடுமையாக நோன்புகளை நோற்கத் தேவையில்லை. வெகுவாக உடலை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. உண்மையான தேடுதலிருந்தால் போதும். மெய்யறிவுப் பாதையில் திருப்பிவிடுவார்.

🔸 உயர்ந்த மனம் - எவ்வளவு கொடியவனாக இருந்தாலும், அவருக்கே தீங்கிழைத்திருந்தாலும், அவரை நாடினால் போதும், உய்வதற்கு வழிகாட்டிவிடுவார்.

🌷 செவிடு -> செவிடை என்றாகியிருக்கலாம்.

செவிடு என்பது 360 நெல் மணிகளை கொண்ட ஓர் அளவு.
360 நெல் மணிகள் - 360 பாகைகள்
360 பாகைகள் - ஒரு வட்டம்
வட்டம் - முழுமை
முழுமை - குறைவில்லாமை
குறைவில்லாமை - மாசில்லாமை

அதாவது, செவிடை நாயனார் ஒரு மாசிலாமணி ஆவார்.

இவ்வாறு, நமது பெருமான்களின் திருநெறியத்தமிழ் பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும், கரையேறிவிடலாம். ஆனால், இவ்வாறு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே, நமது பெருமான்களின் பெயர்களை அசுரத்திற்கு மாற்றியுள்ளனர்!

oOo

2001/2002-ஆம் ஆண்டு வரை, இத்திருக்கோயிலின் நெடுமாடத்திற்கு (அசுரத்தில், கோபுரத்திற்கு) முன்புறம், ஏறக்குறைய 15 அடி உயரமுள்ள, சுண்ணாம்பால் செய்யப்பட்ட விடையின் சிலையிருந்தது. 


அச்சமயத்தில், அருகேயிருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தொழில் சற்று தொய்வடைந்திருந்தது. அதை சரி செய்வதற்காக, அந்நிறுவனத்தின் முதலாளியான வேணு சீனிவாசன், ஒரு கூமுட்டை கேரள செய்வினைக்காரனை (அசுரத்தில், மந்திரவாதியை) வரவழைத்துள்ளார். அக்கூமுட்டை, விடையின் பார்வை தொழிற்சாலையின் மீது படுவதால்தான் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கதை விட்டு, அதை நீக்கிவிடும்படி அறிவுருத்தியுள்ளான். இவரும் அதை நம்பி, தொன்மையான அப்பெரிய விடையை நீக்கிவிட்டு, கல்லாலான சிறிய விடையை நிறுவி, அதற்கொரு கூடமும் (அசுரத்தில், மண்டபம்) கட்டிக் கொடுத்துள்ளார்! அறிவாளி!!

சைவத்தில் விடை என்பது மாயோன் வழிபாட்டில் பெருமாளை குறிக்கும். அதாவது, மனமாகும். ஒருவேளை, விடைக்கு பதிலாக, அங்கு பெருமாள் சிலை இருந்திருந்தால் அகற்றியிருப்பாரா? 😏

"வேணு சீனிவாசன்" என்று அவரது பெற்றோர்கள் அவருக்கு பெயரிட்டதற்கு பதிலாக, "வேணு முட்டாள்வாசன்" என்று பெயர் வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்! 😄

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, June 12, 2024

தினமலருக்கே ஒழு!!


வாட்ஸ்அப்-பில் தடங்கள் (பீட்டரில், சேனல்ஸ்) என்றொரு பகுதியுள்ளது. அதில், நாமும் புதிய தடத்தை தொடங்கலாம். மற்றவர்களது தடங்களை தேடி, பின்தொடரலாம். அங்கு சென்று, தினமலரின் தடத்தை தேடிப்பார்க்கவும். தமிழில் தேடினாலும் சரி, பீட்டரில் தேடினாலும் சரி, கிடைக்காது! ஏன்? தொழிற்நுட்பக் கோளாறா?

இல்லை. தினமலர் காபாகூபா கூடாரத்தில் இல்லை (காட்டுமிராண்டிகள், பாவாடைகள், கூவஞ்சட்டைகள் & பான்பராக் சட்டைகள்). எனவே, இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்!

தினமலருக்கே இந்நிலையென்றால்... 😒

🔸 குறிமதத்தின் இரமலான் திருவிழாவின் போது, வாட்ஸ்அப், சிறப்பு ஒட்டிகளை (பீட்டரில், ஸ்டிக்கர்ஸ்) வெளியிட்டது. ஆனால், அதற்குப் பின்னர் வந்த எந்த இந்து சமய திருவிழாவிற்கும் அத்தகைய சிறப்பு ஒட்டிகளை வெளியிடவில்லை!

🔸 தினமலரை இருட்டடிப்பு செய்வது போன்று, பல மாதங்களுக்கு முன்னர், பிரவீன் மோகன் என்ற புகழ்பெற்ற ஆய்வாளரின் யுடியூப் தடத்திற்கும் தொல்லை கொடுத்தனர். அவரது காணொளிகளை யுடியூப் நிறுவனம் நீக்குமாறு செய்தனர்.

🔸 ராஃபா பகுதியை இஸ்ரவேல் தாக்கிய போது, அதற்கான குறியீட்டை (பீட்டரில், ஹேஸ்டேக்) வையகம் முழுவதும் பேசுபொருளாக்கினர். ஆனால், அண்மையில், ரியாசி மாவட்டத்தில் இந்துக்கள் மீது குறிமத வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியபோது, அது பேசுபொருளாகாதவாறு பார்த்துக் கொண்டனர்.


🔸 இன்று, எல்லா வகையான ஊடகங்களிலும் செயலிகளிலும், பாரதத்தின் அடையாளங்கள் என்று வரும்போது, குறிமத & ஒப்பாரி மதக் கட்டிடங்களையே காட்டுகின்றனர். எங்கேயாவது, எப்போதாவது, போனால் போகிறதென்று நமது திருக்கோயில் ஒரு மூலையில் காட்டப்படுகிறது. (நடுவண் அரசின் செயலிகளிலும் இதே நிலைதான்!!)


இவையெல்லாம், 2.25 நாட்களில் தங்களது முதலாளிகளுக்கு 30-38 இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த இருவருக்கு கொஞ்சம் கூட தெரியாதென்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால், 2.25 நொடியில் தீர்வு கண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்! 😏

oOo

எவ்வாறு தினமலரின் வாட்ஸ்அப் தடத்தை பின்பற்றுவது?

அவர்களது இணையதளத்திற்கு சென்று, அங்கு கிடைக்கும் வாட்ஸ்அப் இணைப்பை சொடுக்கினால், அவர்களது தடத்தில் இணையலாம்.

oOOo

அஷ்டாவக்கிர கீதை #18.32 - சிறு விளக்கம் 🙏🏽

எனக்கு தெரிந்தவரொருவர், அஷ்டாவக்கிர கீதை என்னும் இரண்டன்மை நூலில் (அசுரத்தில், அத்துவைதம்), செய்யுள் 18.32ல் இருமுறை வரும் "dull-witted" என்ற சொற்றொடரைப் பற்றி கேட்டிருந்தார். அவருக்காக அடியேன் எழுதிய சிறு விளக்கம். 🙏🏽

oOo


🔸 அஷ்டாவக்கிர கீதை #18.32:

Hearing the ultimate Truth, the dull-witted man is bewildered. The wise man hearing the Truth retreats within and appears dull-witted.

🔸 தமிழ் மொழி பெயர்ப்பு:

அறியாமையில் இருப்பவர்கள், பேருண்மையைப் பற்றி கேட்டவுடன் திகைப்படைகிறார்கள். அறிவு முதிர்ந்தவர்களோ, கேட்டவுடன் தம்மில் நிலைபெற்று (தம்முள் ஆழ்ந்து), பைத்தியக்காரர்களை போன்று காட்சியளிக்கிறார்கள்.

- 1st dull-witted - அறியாமையில் இருப்பவர்கள்
- 2nd dull-witted - பைத்தியக்காரர்கள்

🔸 சில எடுத்துக்காட்டுகள்:

🌷 தொடக்க கால பகவான் திரு இரமண மாமுனிவர் - கல் போன்று தோற்றமளிப்பார். கல்லடிக்கு ஆளானார். 

🌷 பகவான் வரலாற்றில் வரும் திரு மஸ்தான் சுவாமிகள் - சோம்பி கிடப்பது போன்றிருப்பார். வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக இப்படி செய்கிறாரென்று கருதி, அவரது பெற்றோர்களே அவரை அடித்திருக்கிறார்கள்!!

🌷 திரு கரபாத்திர சுவாமிகள் - தனது இறுதி காலத்தில், அவரது அறையின் காலதர் (அசுரத்தில், சாளரம்) வழியாக, எப்போதும் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்

🌷 திரு பூண்டி மகான் (திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள பூண்டி. சென்னைக்கு அருகிலுள்ள பூண்டி அல்ல. ) - ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தவர், உடல் இறக்கும் வரை அவ்விடத்திலிருந்து நகரவேயில்லை. அனைத்தும் அவ்விடத்திலேயேதான்!

🌷 திரு சதாசிவ பிரம்மேந்திரர் - ஆடையின்றி திரிந்தவர். ஏளனத்திற்கு ஆளானவர்.

🌷 தொன்ம கதைகளில் வரும், திரு ஜட பரதர் - இவரது இயற்பெயர் "பரதர்". எப்போதும் கட்டை போன்று கிடந்ததால், "ஜட" என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

"இவ்வளவுதான் உண்மை" என்பதை உணர்ந்ததும், முதிர்ந்த நிலையில் இருப்பவர்கள் அப்படியே அடங்கிவிடுகிறார்கள். வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, நடப்பதை நடக்கவிட்டு, மனதில் சிறிதும் முனைப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள், மேலும், மெய்யறிவு நிலையைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள், மேற்கண்ட பெருமான்களை பைத்தியக்காரர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள் என்று கருதியிருப்பார்கள். சில சமயம், அவர்களது தோற்றத்தைக் கண்டு, அருவருப்பு அடைந்து, அவர்களை விரட்டவும் செய்வார்கள். அத்தகைய பெருமான்களையே "...retreats within and appears dull-witted" என்ற சொற்றொடர் குறிப்பிடுகிறது.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️