Thursday, June 25, 2026

அனுவாவி என்ற பெயரின் உட்பொருள்


அனுவாவி - கோவைக்கருகில் மருதமலைத் தொடரின் வடக்குப்பகுதியில் இருக்கும் திருக்கோவிலாகும். இதன் தலபுருடாவை இணைப்புப் படத்தில் காணலாம்.

🔸 அனுவாவி - அனு+வாவி - இரண்டுமே அசுரச் சொற்களாகும்.

🔸 அனு - எதிர் செயல் / பிறகு.

🔸 வாவி - நடைகிணறு / நீர்நிலை - இங்கு மனதை குறிக்கும்.

எனில், அனுவாவி என்பது மனதிற்கு எதிரானது / மனதை கடந்தது என்று பொருள் கொள்ளலாம்.

மனதிற்கு எதிரானது எது? மெய்யறிவு!

மனதை கடந்த பிறகு இருப்பது எது? உள்ளபொருள்!

அதாவது, அங்கு குடிகொண்டிருக்கும் பெருமானை பற்றிக் கொண்டால், தேவையான தெளிவு பெற்று, மனதை கடக்கலாம்.

இப்படி பொருள் காண்பதை விட்டுவிட்டு, இராமாயணம், இலக்குவன், அனுமன், சஞ்சீவினி என பல டுபாக்கூர் பொருட்களை போட்டு அசுர அல்வாவை கிண்டியள்ளனர்!! 👊🏽👊🏽

மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு!
தலபுருடா நமக்கும் சமயத்திற்கும் கேடு!!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Wednesday, June 10, 2026

வினைமுறைகளின் உட்பொருளை உணராமல் செய்தால்...


🌷 பால்குடம் சுமத்தல்:

பால்குடம் சுமப்பவர், நடந்து சென்று கொண்டிருந்தாலும், குடத்திலிருக்கும் பாலானது தளும்பி, வெளிவராமல் பார்த்துக்கொள்வார். அதாவது, எந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவரது கருத்தானது பால்குடத்தின் மீதேயிருக்கும். இது போன்று, நமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், "நாம் இவ்வுடல் அல்ல" என்ற உண்மையின் மீது கருத்தாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு போதும் அதை மறவாதிருக்கவேண்டும்.

🌷 காவடி தூக்குதல்: 

🔸 காவடி = நமது பிறவி.
🔸 காவடி தூக்குதல் = இப்பிறவியை சுமத்தல்.
🔸 காவடியை சுழற்றுதல் = இப்பிறவியை நாமே இயக்குதல்.
🔸 காவடியை எதுவரை தூக்குகிறோம்? பழநி முருகப் பெருமானை காணும் வரை.
🔸 பழநி முருகப் பெருமான் என்பதென்ன? பழநி - பழம்+நீ - நீயே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.

நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு கிட்டும்வரை, இப்பிறவியை நாம் சுமக்கிறோம் என்ற உணர்விருக்கும். பின்னர் அது நீங்கிவிடும். பிறகு, வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்போம்.

இவ்வாறு வினைமுறைகளை பற்றி சிந்தித்து தெளிந்தால் நமக்கு பயன் கிட்டும். அல்லாமல், செக்கு மாடு போன்று, வினைமுறைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அசுரருக்கு பயன் கிட்டும்! 😏

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️