Wednesday, June 12, 2024

தினமலருக்கே ஒழு!!


வாட்ஸ்அப்-பில் தடங்கள் (பீட்டரில், சேனல்ஸ்) என்றொரு பகுதியுள்ளது. அதில், நாமும் புதிய தடத்தை தொடங்கலாம். மற்றவர்களது தடங்களை தேடி, பின்தொடரலாம். அங்கு சென்று, தினமலரின் தடத்தை தேடிப்பார்க்கவும். தமிழில் தேடினாலும் சரி, பீட்டரில் தேடினாலும் சரி, கிடைக்காது! ஏன்? தொழிற்நுட்பக் கோளாறா?

இல்லை. தினமலர் காபாகூபா கூடாரத்தில் இல்லை (காட்டுமிராண்டிகள், பாவாடைகள், கூவஞ்சட்டைகள் & பான்பராக் சட்டைகள்). எனவே, இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்!

தினமலருக்கே இந்நிலையென்றால்... 😒

🔸 குறிமதத்தின் இரமலான் திருவிழாவின் போது, வாட்ஸ்அப், சிறப்பு ஒட்டிகளை (பீட்டரில், ஸ்டிக்கர்ஸ்) வெளியிட்டது. ஆனால், அதற்குப் பின்னர் வந்த எந்த இந்து சமய திருவிழாவிற்கும் அத்தகைய சிறப்பு ஒட்டிகளை வெளியிடவில்லை!

🔸 தினமலரை இருட்டடிப்பு செய்வது போன்று, பல மாதங்களுக்கு முன்னர், பிரவீன் மோகன் என்ற புகழ்பெற்ற ஆய்வாளரின் யுடியூப் தடத்திற்கும் தொல்லை கொடுத்தனர். அவரது காணொளிகளை யுடியூப் நிறுவனம் நீக்குமாறு செய்தனர்.

🔸 ராஃபா பகுதியை இஸ்ரவேல் தாக்கிய போது, அதற்கான குறியீட்டை (பீட்டரில், ஹேஸ்டேக்) வையகம் முழுவதும் பேசுபொருளாக்கினர். ஆனால், அண்மையில், ரியாசி மாவட்டத்தில் இந்துக்கள் மீது குறிமத வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியபோது, அது பேசுபொருளாகாதவாறு பார்த்துக் கொண்டனர்.


🔸 இன்று, எல்லா வகையான ஊடகங்களிலும் செயலிகளிலும், பாரதத்தின் அடையாளங்கள் என்று வரும்போது, குறிமத & ஒப்பாரி மதக் கட்டிடங்களையே காட்டுகின்றனர். எங்கேயாவது, எப்போதாவது, போனால் போகிறதென்று நமது திருக்கோயில் ஒரு மூலையில் காட்டப்படுகிறது. (நடுவண் அரசின் செயலிகளிலும் இதே நிலைதான்!!)


இவையெல்லாம், 2.25 நாட்களில் தங்களது முதலாளிகளுக்கு 30-38 இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த இருவருக்கு கொஞ்சம் கூட தெரியாதென்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால், 2.25 நொடியில் தீர்வு கண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்! 😏

oOo

எவ்வாறு தினமலரின் வாட்ஸ்அப் தடத்தை பின்பற்றுவது?

அவர்களது இணையதளத்திற்கு சென்று, அங்கு கிடைக்கும் வாட்ஸ்அப் இணைப்பை சொடுக்கினால், அவர்களது தடத்தில் இணையலாம்.

oOOo

அஷ்டாவக்கிர கீதை #18.32 - சிறு விளக்கம் 🙏🏽

எனக்கு தெரிந்தவரொருவர், அஷ்டாவக்கிர கீதை என்னும் இரண்டன்மை நூலில் (அசுரத்தில், அத்துவைதம்), செய்யுள் 18.32ல் இருமுறை வரும் "dull-witted" என்ற சொற்றொடரைப் பற்றி கேட்டிருந்தார். அவருக்காக அடியேன் எழுதிய சிறு விளக்கம். 🙏🏽

oOo


🔸 அஷ்டாவக்கிர கீதை #18.32:

Hearing the ultimate Truth, the dull-witted man is bewildered. The wise man hearing the Truth retreats within and appears dull-witted.

🔸 தமிழ் மொழி பெயர்ப்பு:

அறியாமையில் இருப்பவர்கள், பேருண்மையைப் பற்றி கேட்டவுடன் திகைப்படைகிறார்கள். அறிவு முதிர்ந்தவர்களோ, கேட்டவுடன் தம்மில் நிலைபெற்று (தம்முள் ஆழ்ந்து), பைத்தியக்காரர்களை போன்று காட்சியளிக்கிறார்கள்.

- 1st dull-witted - அறியாமையில் இருப்பவர்கள்
- 2nd dull-witted - பைத்தியக்காரர்கள்

🔸 சில எடுத்துக்காட்டுகள்:

🌷 தொடக்க கால பகவான் திரு இரமண மாமுனிவர் - கல் போன்று தோற்றமளிப்பார். கல்லடிக்கு ஆளானார். 

🌷 பகவான் வரலாற்றில் வரும் திரு மஸ்தான் சுவாமிகள் - சோம்பி கிடப்பது போன்றிருப்பார். வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக இப்படி செய்கிறாரென்று கருதி, அவரது பெற்றோர்களே அவரை அடித்திருக்கிறார்கள்!!

🌷 திரு கரபாத்திர சுவாமிகள் - தனது இறுதி காலத்தில், அவரது அறையின் காலதர் (அசுரத்தில், சாளரம்) வழியாக, எப்போதும் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்

🌷 திரு பூண்டி மகான் (திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள பூண்டி. சென்னைக்கு அருகிலுள்ள பூண்டி அல்ல. ) - ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தவர், உடல் இறக்கும் வரை அவ்விடத்திலிருந்து நகரவேயில்லை. அனைத்தும் அவ்விடத்திலேயேதான்!

🌷 திரு சதாசிவ பிரம்மேந்திரர் - ஆடையின்றி திரிந்தவர். ஏளனத்திற்கு ஆளானவர்.

🌷 தொன்ம கதைகளில் வரும், திரு ஜட பரதர் - இவரது இயற்பெயர் "பரதர்". எப்போதும் கட்டை போன்று கிடந்ததால், "ஜட" என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

"இவ்வளவுதான் உண்மை" என்பதை உணர்ந்ததும், முதிர்ந்த நிலையில் இருப்பவர்கள் அப்படியே அடங்கிவிடுகிறார்கள். வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, நடப்பதை நடக்கவிட்டு, மனதில் சிறிதும் முனைப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள், மேலும், மெய்யறிவு நிலையைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள், மேற்கண்ட பெருமான்களை பைத்தியக்காரர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள் என்று கருதியிருப்பார்கள். சில சமயம், அவர்களது தோற்றத்தைக் கண்டு, அருவருப்பு அடைந்து, அவர்களை விரட்டவும் செய்வார்கள். அத்தகைய பெருமான்களையே "...retreats within and appears dull-witted" என்ற சொற்றொடர் குறிப்பிடுகிறது.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, May 29, 2024

மோடி ஜி, மோடி பாபா... சுவாமி மோடி? 🤭


"ஹிட்லர் உமாநாத்" என்ற திரைப்படத்தில் நடிகர் திலகமும், சுருளி ராஜனும் நடித்திருப்பார்கள். ஒரு தொழிற்சாலையில், கடைநிலை ஊழியராக தனது வாழ்வை தொடங்கும் சிவாஜி, தனது உழைப்பால், நேர்மையால் படிப்படியாக உயர்ந்து, அந்நிறுவனத்தின் முதலாளியாக ஆகிவிடுவார். சுருளிராஜனோ பின்வரும் வழியை தேர்ந்தெடுத்து, இறுதி வரை கடைநிலை ஊழியராகவே இருப்பார்:

- குடிசையில் வாழ்ந்து வந்த உமாநாத் பதவி உயர்வு பெற்றவுடன் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவார். அவரது குடிசைக்கு குடி வரும் சுருளிராஜன், "இந்த குடிசையில இருந்துதான் உமாநாத் உயரப் போனான். நானும் இங்கேயிருந்து, வாழ்க்கையில மேல போகப் போறேன்." என்பார்!

- குடிசைக்குள் படுத்து கொண்டிருக்கும்போது, கூரையில் சொருகப்பட்டிருக்கும் ஓர் அலுமினியத் தட்டு அவரது கண்ணில் படும். அதையெடுத்து, "இதுல சாப்புட்டுத்தான் உமாநாத் மேல போயிருக்கிறான். நானும் இதுல சாப்பிட்டு மேல போகப் போறேன்." என்பார்!

☺️

இது போன்று, "சுவாமி விவேகானந்தர் வடக்கிருந்த இடத்தில், நாமும் வடக்கிருந்தால், அவரைப் போல நாமும் புகழடைவோம்." என்று நம்ம ஜி எண்ணிவிட்டார் போலிருக்கிறது! 😁

நம்ம ஜி ஏற்கனவே "வோர்ல்ட் ஃபேமஸ்" -தான். ஆனால், சுவாமிகள் போன்ற ஃபேமஸ் இல்லை. "ஏழு பிறவிக்கும் வில்லன்டா"-வகை ஃபேமஸ்!! 😄 அதை மாற்றுவதற்கான "சுருளிராஜன்" முயற்சியாக இப்போதைய வருகை இருக்கலாம்.

oOo

"தியானம்" என்ற அசுரச்சொல்லின் நேர் திருநெறியத் தமிழ்ச்சொல் "சிந்தனை" ஆகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் வாழ்விலிருந்து ஓர் அருமையான நிகழ்வு:

ஒரு நாள், ஓர் ஏழு வயது நிரம்பிய சிறுவன் பகவானிடம் வந்து, "பகவானே, எனக்கு சிந்திக்க (தியானிக்க) கற்றுத் தரவேண்டும். எனது வீட்டில் கேட்டால், 'இப்போது அது பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை. நேரம் வரும்போது தெரிந்து கொள்வாய்.' என்கிறார்கள்." என்று கூறினான். பகவானும், "சரி. இப்படி என் பக்கத்தில் அமர்ந்து கொள். நான் சொல்லிக் கொடுக்கிறேன்." என்றார்.

சற்று நேரத்தில், ஓர் அன்பர் ஒரு வாளி நிறைய தோசைகள் கொண்டு வந்தார். எல்லோருக்கும் அவை பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒரு தோசையை எடுத்து, அச்சிறுவனிடம் கொடுத்த பகவான், "இதோ பார்! நான் விரலை உயர்த்தி, 'உம்' என்று சொல்லும் வரை சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும். அதற்கு முன்னர் முடிக்கக்கூடாது. நான் சொல்லும் போது, தட்டில் மீதமும் இருக்கக் கூடாது." என்றார். அதற்கு தலையாட்டிய சிறுவன், பகவானை பார்த்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான். தொடக்கத்தில், பெரிய பெரிய துண்டுகளாக சாப்பிட்டவன், பின்னர், சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட்டான். பகவான் விரலை உயர்த்தி "உம்" சொன்னவுடன், மீதமிருந்த தோசைத்துண்டை வாயில் போட்டு முடித்துக்கொண்டான்.

அவனைப் பார்த்து பகவான் சொன்னார், "இப்போது நீ என்ன செய்தாயோ, அதற்கு பெயர்தான் சிந்தனை (தியானம்)! என் மீது கருத்தை வைத்துக்கொண்டு, செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாய். இதுபோன்று, உனது தன்மையுணர்வின் மீது கருத்தை வைத்துக் கொண்டு, அன்றாட வாழ்வை வாழ்ந்து கொண்டிரு." 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

மேற்கண்ட நிகழ்வை, உளுத்தறிவு கொண்டு ஏடாகூடமாக சிந்தித்தால், "ஒன்றை நினைத்து ஒன்றை செய்வதே சிந்தனையாகும் (தியானமாகும்)" என்ற முடிவு கிடைக்கும்! 😜 இது அப்படியே நம்ம ஜி-க்கு பொருந்தும்.

நம்ம ஜி-யின் 24x7 பணியோ நாட்டின் முதலமைச்சர். அவரது 24x7 சிந்தனையோ:
- வெளிச்சம் நல்லா விழுந்திருக்குமா
- கேமரா ஆங்கிள் சரியா இருக்குமா? 
- தலைமுடி சரியா படிஞ்சிருக்கா? 
- பளிச்சுன்னு இருக்கேனா?
- இதுக்கு எத்தன லைக் கிடைக்கும்?
...
...

இவ்வகையில், நம்ம ஜி எப்போதும் சிந்தனையில்தான் (தியானத்தில்தான்) இருக்கிறார்! 😃

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, May 23, 2024

நித்ய சாசுவத அசுராசுர யுத்தம்! 😜


இன்று, பெண்குறியை (நாமம்) வரைவதில் தொடங்கி, பலவற்றிற்கு அடித்துக் கொள்ளும் இவர்கள், இதற்கு முன்னர், பௌத்த மொட்டைகளாக இருந்தபோது எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரை, எப்படி மொட்டையடிப்பதென்றா? 😀

அதற்கும் முன்னர், வாயில் போடவேண்டியதை நெருப்பில் போட்டு (வேள்வி), கரியாக்கி கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரிடம், எப்படி படங்காட்டலாம் என்றா? அல்லது, அசுரச் செய்யுட்களை (அசுரத்தில், மந்திரம்) உருட்டுவதிலா? 😃

எல்லாவற்றிற்கும் முன்னர், அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? வேட்டையாடிய பனிச்சிறுத்தை, பனிக்கரடிகளை பங்கு போட்டுக் கொள்வதிலா? 😄

😆

💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றி விட்டாயா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?
💥 நாம & மொட்டை மதங்கள் = ஏமாற்று வேலைகள்!

வடக்கிலிருந்து வந்த அம்மணம் (சமணம்), மொட்டை (பெளத்தம்), மொட்டையிலிருந்து தோன்றிய பெண்குறி (நாமம்) & கரியாக்குதல் (வைதீகம்) என எதுதான் ஏமாற்று வேலையில்லை? 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

மோடி பாபா!! 😃


ஜி,

"மோடி ஜி"-ன்ற நிலையிலிருந்து "மோடி பாபா"-ங்கற நிலைக்கு, நீங்க நகர முயற்சிக்கிறீங்கன்றது நல்லா தெரியுது. ஆனா, இன்னும் பயிற்சி எடுக்கணும், ஜி. ஏன்னா, நீங்க மட்டுமில்லை, உங்க நண்பரான அமெரிக்க புறம்போக்கும் (பில் கேட்ஸ்) இறைவனின் படைப்புதான். உங்க ஊரு மாலிக்காஃபூரும் இறைவனின் படைப்புதான். எங்க ஊரு இராமசாமியும் இறைவனின் படைப்புதான். தூசு முதல், நீங்க ஒக்காந்து தேச்சுட்டிருக்குற கட்டிடம் வரைக்கும், எல்லாமே இறைவனின் படைப்புதான். வேணும்னா, உங்க பூசாரி கூட்டத்துக்கிட்ட கேட்டுப் பாருங்க, ஜி. படங்காட்டுறதுக்குனே பொறந்தவங்க. நல்லா சொல்லிக் கொடுப்பாங்க.

அப்புறம் ஜி, நீங்க குறிப்பிட்ட "இறைவனின் திருப்பணி"-ங்கறது இதுதானே:

- தெற்கினுடைய செழிப்பை வடக்கிற்கு மாற்றுவது
- பணம் படைத்த பொதுமக்களிடமிருந்து கறந்து, பரம ஏழைகளான அம்பானி & அதானி வகையறாக்களுக்கு கொடுப்பது

சரியா, ஜி? மன்னிக்கவும். சரியா, பாபா? 😜

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽

"தமிழ் தான் எனது மூச்சு, பேச்சு, வாட்சு" என்று ரீல் விட்ட உயிரிகள், இன்று, "ஒடிசாவை தமிழன் ஆளலாமா?", "தொலைந்து போன பூரி கோயிலின் கருவூலச் சாவிகள் தமிழ்நாடு சென்றிருக்கும்", "உ.பி. தலைவர்களை தமிழ்நாட்டில் கிண்டலடிக்கிறார்கள்" என்று பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

இனி என்ன செய்தாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்துவிட்டதால், இருக்கும் வடக்கத்திய ஓட்டு வங்கியையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு இறங்கியிருக்கிறார்கள்.

இவ்விரு உயிரிகளால் இந்து சமயத்திற்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு... கோவிந்தா.. கோவிந்தா!! 😮‍💨

oOOo

Wednesday, May 22, 2024

எச்சில் இலைகளின் மேல் புரண்டால் நோய்தான் வரும்!!


அசுரத்தில், உச்சிஷ்டம் = தென்தமிழில், எச்சில்.

🌷 பகவானது உச்சிஷ்டம் = பகவானிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகள்.

அறிவுரைகள் என்பது சொற்றொடர்கள். சொற்றொடர்கள் என்பது ஒலிக்கோர்வைகள். ஒலிக்கோர்வைகள் பயணிக்க காற்றுவேண்டும். பகவானது வாயிலிருந்து காற்று வெளிப்படும்போது, முதலில், அவரது எச்சில்பட்டு, பிறகே வெளிப்படுகிறது. எனவே, அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை, அவரிடமிருந்து வெளிப்பட்ட எச்சில் என்று கூறினார்கள். "அவரது எச்சிலை உண்டேன்" என்று சொல்வதால் செருக்கு குறையும் என்று கருதினார்கள்.

🌷 பகவானது உச்சிஷ்டத்தை உண்டேன் = பகவானது அறிவுரைகளை உள்வாங்கினேன் / படித்தேன்.

🌷 பகவானது எச்சில் இலையில் புரண்டேன் = பகவானது அறிவுரைகளின் படி, ஒவ்வொரு நொடியும் வாழ்ந்தேன் / பகவானது அறிவுரைகளில் மூழ்கிக் கிடந்தேன் / பகவானது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பெரியவர்கள் சொன்ன அறிவுரைகளின் உட்பொருளையுணர முயற்சிக்க வேண்டுமேயொழிய, அவ்வறிவுரைகளை அப்படியே செயல்படுத்த முயற்சிக்கக்கூடாது.

மேலும், பிராமணன் என்ற சொல், பகவான் போன்ற மெய்யறிவாளர்களை குறிக்கும். ரிஷிவர்ஷாவிலருந்து (இன்றைய இரஷ்யா. குறிப்பாக, உஸ்பெக் & கஸக் பகுதிகள்.) வந்த அசுரக்கூட்டத்தை குறிக்காது.

🌷 பிராமணனது எச்சிலில் புரளு = மெய்யறிவாளர் காட்டிய வழியில் பயணி / அவரது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிரு.

(இவையாவும் அசுரக்கூட்டத்தின் பெரியோர்களுக்கு தெரியாது போலிருக்கிறது! 😏 தெரிந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான இவ்வினைமுறையை (அசுரத்தில், சடங்கை) தடுத்து நிறுத்தி, மக்களை உய்வடையச் செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்! 😜)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, May 16, 2024

கம்பர் பெருமானுக்கும் குறிமதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது?


மற்றெல்லா போட்டிகளுக்கும் வயது வரம்பு உண்டாம். குறிமத போட்டிக்கு மட்டும் கிடையாதாம்! 😏

ஒப்பாரி மதம், ஈன வெங்காய மதம், அம்மண மதம், மொட்டை மதம் என எல்லாம் எங்கே போயின? ஊடகங்களை, திரை & விளம்பரத் துறைகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது போல, பேச்சுப் போட்டிகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் குறிமதத்தினர் கொண்டுவந்துவிட்டனரா?

இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தவேண்டிய தலையெழுத்து திரு கம்பவாரிதி ஐயாவுக்கு! 😒

oOo

கம்பர் பெருமானை 🌺🙏🏽🙇🏽‍♂️ இராமனின் கதைக்காக நாம் அறிந்திருக்கக்கூடாது. அவரது தென்தமிழுக்காக அறிந்திருக்கவேண்டும். பொய்பிளை அன்னைத்தமிழுக்கு மாற்றிக்கொடுத்த திரு ஆறுமுக நாவலரை எவ்வாறு அறிந்திருக்கிறோம்? பொய்பிளுக்காகவா? என்றுமுள தமிழுக்காக! தென்னாடுடைய கடவுளின் சமயத்திற்காக!! இவ்வாறே, அசுரர்களின் ஒரு பிரிவினர் கேட்டுக்கொண்டனர் என்பதற்காக, வான்மீகி இராமாயணத்தை திருநெறியத் தமிழுக்கு மாற்றிக்கொடுத்த கம்பர் பெருமானை, இராமாயணத்தோடு இணைத்து அறியக்கூடாது. அவரது தீந்தமிழுக்காக அறிந்திருக்கவேண்டும்.

பெண்குறி (நாமம்) மதத்தின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு இருந்திருந்தால், அவற்றை கடைப்பிடித்திருந்தால், நாட்டரசன்கோட்டையில் உள்ள அவரது திருவிடத்தை (அசுரத்தில், சமாதியை), ஓர் இராமனின் வடிவமல்லவா அணி செய்து கொண்டிருக்கவேண்டும்? தென்னாடுடையவனின் சின்னமல்லவா (அசுரத்தில், சிவலிங்கம்) அணி செய்துகொண்டிருக்கிறது!!

oOo

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

-- கடவுள் வாழ்த்து, கம்பராமாயணம்

இன்னாருக்குப் பிறந்து, இன்னாரை மணமுடித்து, இன்னாரை கொன்று, இன்ன நாட்டினை ஆண்டு, மடிந்த ஒருவரை கம்பர் பெருமான் வணங்கவில்லை. தனக்குவமை இல்லாத உள்ளபொருளையே வணங்குகிறார்.

oOo

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

-- திருக்குறள் #588

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻