Showing posts with label நெரூர். Show all posts
Showing posts with label நெரூர். Show all posts

Wednesday, May 22, 2024

எச்சில் இலைகளின் மேல் புரண்டால் நோய்தான் வரும்!!


அசுரத்தில், உச்சிஷ்டம் = தென்தமிழில், எச்சில்.

🌷 பகவானது உச்சிஷ்டம் = பகவானிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகள்.

அறிவுரைகள் என்பது சொற்றொடர்கள். சொற்றொடர்கள் என்பது ஒலிக்கோர்வைகள். ஒலிக்கோர்வைகள் பயணிக்க காற்றுவேண்டும். பகவானது வாயிலிருந்து காற்று வெளிப்படும்போது, முதலில், அவரது எச்சில்பட்டு, பிறகே வெளிப்படுகிறது. எனவே, அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை, அவரிடமிருந்து வெளிப்பட்ட எச்சில் என்று கூறினார்கள். "அவரது எச்சிலை உண்டேன்" என்று சொல்வதால் செருக்கு குறையும் என்று கருதினார்கள்.

🌷 பகவானது உச்சிஷ்டத்தை உண்டேன் = பகவானது அறிவுரைகளை உள்வாங்கினேன் / படித்தேன்.

🌷 பகவானது எச்சில் இலையில் புரண்டேன் = பகவானது அறிவுரைகளின் படி, ஒவ்வொரு நொடியும் வாழ்ந்தேன் / பகவானது அறிவுரைகளில் மூழ்கிக் கிடந்தேன் / பகவானது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பெரியவர்கள் சொன்ன அறிவுரைகளின் உட்பொருளையுணர முயற்சிக்க வேண்டுமேயொழிய, அவ்வறிவுரைகளை அப்படியே செயல்படுத்த முயற்சிக்கக்கூடாது.

மேலும், பிராமணன் என்ற சொல், பகவான் போன்ற மெய்யறிவாளர்களை குறிக்கும். ரிஷிவர்ஷாவிலருந்து (இன்றைய இரஷ்யா. குறிப்பாக, உஸ்பெக் & கஸக் பகுதிகள்.) வந்த அசுரக்கூட்டத்தை குறிக்காது.

🌷 பிராமணனது எச்சிலில் புரளு = மெய்யறிவாளர் காட்டிய வழியில் பயணி / அவரது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிரு.

(இவையாவும் அசுரக்கூட்டத்தின் பெரியோர்களுக்கு தெரியாது போலிருக்கிறது! 😏 தெரிந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான இவ்வினைமுறையை (அசுரத்தில், சடங்கை) தடுத்து நிறுத்தி, மக்களை உய்வடையச் செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்! 😜)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻