Friday, August 21, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #61

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸முக்குணம் ... பாதமலை

மனதின் மூன்று குணங்களையும், உடலின் ஐம்புலன்களையும் அடக்கி, தகுந்த பக்குவ நிலையை அடைந்தோர் உள்ளத்தே புகுந்து உலாவும் இறைவன்.

ஏற்கனவே வீட்டிலிருப்பவர் மீண்டும் வீட்டிற்குள் எப்படி புக முடியும்? தன்மையுணர்வு என்பது புதிதாகவா நமக்குள் வருகிறது? நம்மை நாம் உணராத பொழுது என்று ஏதேனும் உள்ளதா? நம்மை நாம் எப்பொழுதுமே உணர்ந்திருந்தாலும், "இது தான் நாம்" என்று அறிவதில்லை. இந்த அறிவு தான் நமக்குள் புக வேண்டியது. இதுவே மெய்யறிவு. இவ்வறிவு கிடைப்பதையே - உட்புகுதலையே - "உள்ளத்தே புக்கு" என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது இறைவன் எங்கே உலாவ முடியும்? உலா எனில் மகிழ்ச்சியுடன் சுற்றிவருதல். இங்கு முனைப்பு அற்றிருத்தலைக் குறிக்கும். மெய்யறிவில் நிலைபெற்றவுடன் தானாகவே முனைப்பு என்பது போய்விடும். பின்னர் வாழ்க்கை என்பது... உலா வருதல் தான்!! மீதமிருக்கும் ஊழ்வினைப்படி வருவதை துய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

🔸தாய்வயிற்றில் ... பிறவாதமலை

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது தாய் மட்டும் எங்கிருக்க முடியும்? அவரும் இறைவனுக்குள் தான்! பார் எனும் தமிழ் சொல் குறிக்கும் உலகமும் (ஆரியச் சொல்லான "லோக"த்திலிருந்து வந்தது) இறைவனுக்குள் தான். தனக்குள் இருப்பவற்றில தான் எப்படி வந்து பிறக்க முடியும்? எனவே, இறைவன் பிறப்பற்றவாராகிறார். பிறப்பில்லா ஒன்று இறக்கவும் முடியாது. எனவே, இறைவன் இறப்புமற்றவராகிறார். சொற்களை சற்று மாற்றிக்கொண்டால், இறைவன் தொடக்கமற்றவர் முடிவுமற்றவர் என்றாகும். பிறப்பற்ற, இறப்பற்ற, தொடக்கமற்ற & முடிவற்ற பொருள் எப்படியிருக்கும்? என்றும் இருக்கும்! இதனால்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 இறைவனை  [என்றும்] உள்ளபொருள் என்றழைத்தார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, August 19, 2020

முளைப்பாரி / முளைப்பாலிகைச் சடங்கின் ஆன்மிக அடிப்படை

முளைப்பாரியைப் பற்றி ஏதேச்சையாக இணையத்தில் தேடிய போது கிடைத்த கட்டுரைகள் அனைத்தும் அதை உழவுடன் மட்டுமே தொடர்பு படுத்தி, ஆன்மிக அடிப்படை சற்றும் இல்லாததுபோல் காட்டியிருந்தன. சில கட்டுரைகள் "பகுத்தறிவு" கண்ணாடி வழியாக ஆராய்ந்திருந்தன! 😁

ஆன்மிகம் தான் முளைப்பாரியின் அடிப்படை! பெண்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது. பிறப்பறுக்கும் மெய்யறிவுக்கு எதிரானது. உலக வாழ்க்கையைப் போற்றுவது. அவ்வாழ்க்கைக்கு அடிப்படையான ஆசைகளை ஊக்குவிப்பது.

🔸#முளைப்பாரி - மண்ணில் முளைத்திருக்கும் நாற்றுகள். பாரி - மண். பாரியாள் - மனைவி. மண், தன் மீதும் விழும் மற்றும் தனக்குள் இடப்படும் விதைகள் வளர இடங்கொடுக்கும். மனைவி, கணவர் தனக்குள் இடும் விந்து வளர இடம் கொடுப்பவர்.

🔸#முளைப்பாலிகை - மண்ணும் அதை தாங்கியிருக்கும் பாத்திரமும் (மண் குடம், மூங்கில் / பனையோலைக் கூடை) பாலிகையாகும். முளைப்பாரி என்பதை விட முளைப்பாலிகை என்பதே சரி.

🔹பாத்திரம் - நம் உடல்
🔹வளமான மண் - நல்ல மனது
🔹இடப்படும் நல்விதைகள் - நல்ல ஆசைகள்

🔸முளைப்பாலிகையை பூசையறையில் இருட்டானப் பகுதியில் பகலவனின் ஒளி தீண்டாத வகையில் வைத்து வளர்ப்பர்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வோம். அது, பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 உடலுடன் இருந்த காலம். அச்சமயம், திருவருணையில், பெரும் கனவுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவரது கனவு: தனது மகன் மெக்காலே கல்வியை நன்கு படித்து, மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தில் நன்கு பேசி, பாரதக்கொல்லிகளான வெள்ளையர்களின் தாயகமான இங்கிலாந்து சென்று, பொய் பேசவும் பணம் கறக்கவும் கற்று (அதாவது, பாரிஸ்டர் பட்டம் பெற்று), தாயகம் திரும்பி, பெரும் பொருள் ஈட்டி, வாழ்வின் அனைத்து வசதிகளையும் பெற்று, நிம்மதியாக வாழவேண்டும் என்பது.

இவர் தனது மகனை பகவானின் அருகில் செல்லவிடுவாரா? அப்படியே செல்ல நேர்ந்தாலும் பகவானின் அறிவுரைகளைப் படிக்கவோ சிந்திக்கவோ விடுவாரா?

இதைத்தான் "பகலவனின் ஒளி படாமல் இருட்டில் வைத்து முளைப்பாலிகையை வளர்க்க வேண்டும்" என்பது குறிக்கிறது.

🔹பகலவன் - பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்

🔹பகலவனின் ஒளி - நமக்குள் உதிக்கும் மெய்யறிவு அல்லது பகவான் போன்றோரின் அறிவுரைகள்.

🔹இருட்டு - மெய்யறிவைப் பற்றிய அறிவின்மை. அறியாமை.

🔸9 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - 9 விதைகள் நமது உடலிலுள்ள 9 துளைகளைக் குறிக்கும். எனில், முளைப்பாலிகை என்பது நமது உடலைக் குறிக்கும். செழித்து வளரும் பயிர்கள் என்பது நம் உடலைக் கொண்டு இவ்வுலகில் நாம் விளைவிக்கும் நல்விளைவுகள். பாலிகையைத் தாங்கும் பெண் என்பவர் உலகை இயக்கும் இறையாற்றல் - காளியன்னை!

🔸21 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - நமது உடலிலுள்ள 5 உணரும் பொறிகளையும், அவற்றின் மூலம் கிடைக்கும் 5 உணர்வுகளையும், 5 தொழிற்கருவிகளையும், உடலினுள் இயங்கும் 5 காற்றுகளையும் மற்றும் மனதையும் குறிக்கும். மொத்தத்தில், நமது உடலைக் குறிக்கும். மேலேச் சொன்ன மீதம் யாவும் இங்கும் பொருந்தும்.

🔸சில ஊர்களில், அம்மன் கோயிலுக்கு அருகில், பகலவனின் ஒளி புகாவண்ணம் ஒரு கீற்றுக்குடிசையை நன்கு கட்டி, அதில் ஊராரின் முளைப்பாலிகைகளை வைத்து பராமரிப்பர். இதற்கென்று நல்ல பக்குவமுள்ள ஒரு பெண்ணை நியமிப்பர். அவர் அம்மனின் தீவிர பத்திமையராக இருப்பார். மிகவும் சுத்தமானவராக இருப்பார். அக்குடிசையில் தங்கியிருக்கும் வரை தலைவாராமல், தலைக்கு எண்ணெய் தடவாமல், எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருப்பார்.

பல துளைகளைக் கொண்ட கீற்றுக்கொட்டகை என்பது சற்று பெரிய 9 துளைகளையும், எண்ணற்ற வியர்வைத் துளைகளையும் கொண்ட நமது உடலுக்கு சமம். கொட்டகையினுள் வைத்துப் பராமரிக்கப்படும் முளைப்பாலிகைகள் என்பவை நமக்குள் இருக்கும் எண்ணற்ற எண்ணக்குவியல்களுக்கு சமம். பராமரிக்கும் பெண் என்பவர் காளியன்னைக்கு சமம். (ஒப்பனையற்ற அவரது கோலத்தைப் பற்றி பிறகு பார்ப்போம்)

🔸9 அல்லது 10ஆம் நாள், முளைப்பாலிகைகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்று, அம்மனின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு, கோயில் வளாகத்திலேயே பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்துவிட்டு, படைத்ததை எல்லோருக்கும் பிரித்து வழங்கி விட்டு, முளைப்பாலிகைகளை நீர் நிலைகளில் விட்டுவிடுவர்.

🔹நமது பண்டைய மன்னர்கள், தங்களை தங்களது குல தெய்வத்தின் அடியவர்களாக, பணியாளர்களாக கருதிக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். (முற்காலச் சோழர்கள் - உய்யக்கொண்டான் திரு உச்சிநாதர் / கற்பகநாதர் 🌺🙏🏽, பிற்காலச் சோழர்கள் - திரு கூத்தப்பெருமான் 🌺🙏🏽, பாண்டியர்கள் - திரு சொக்கநாதப் பெருமான் 🌺🙏🏽, சேதுபதிகள் - இராமேச்சுரம் திரு இராமநாதப் பெருமான் 🌺🙏🏽). இவ்வாறே இவர்களும் (பாலிகைகளை சுமந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்) தங்களை அம்மனின் அடியவர்களாக கருதிக் கொண்டு, வாழும் வாழ்க்கையை அம்மனின் திருப்பணியாக கருதி வாழவேண்டும் என்பதே வளர்த்த முளைப்பாலிகைகளை அம்மனின் பாதங்களில் வைப்பதின் பொருள்.

- முளைப்பாலிகைகள் - நமது உடல்

- அம்மனின் பாதத்தில் வைப்பது - நம்மை அம்மனின் பணியாளனாகக் கருதுவது

🔹பிறந்துவிட்டோம். வளர்ந்துவிட்டோம். ஆசைகளை, குறிக்கோள்களை வளர்த்துக்கொண்டோம். உழைக்கிறோம். போராடுகிறோம். பொருளோ, அறிவோ, பாடமோ சம்பாதிக்கிறோம். சம்பாதித்ததை (பொங்கியதை) தன்னோடு மட்டுமே வைத்துக் கொள்ளாமல் ஏனையோருக்கும் பிரித்துக் கொடுப்பதே பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்குவது.

🔹எவ்வளவு வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தாலும் ஒரு நாள் இறக்கவேண்டிவரும். எவ்வளவு பாடுபட்டு சம்பாதித்திருந்தாலும், சம்பாதித்தவற்றை எவ்வளவு போற்றிப் பாராட்டிப் பாதுகாத்திருந்தாலும் அனைத்தும் ஒரு நாள் நம்மைவிட்டு விலகிவிடும். இவையே முளைப்பாலிகைகளை நீர்நிலைகளில் விடுவதின் பொருள்.

இதை உணர்ந்து கொண்டால், உணர்ந்ததை என்றும் நினைவில் கொண்டால் சுயநலம், அகந்தை, பேராசை போன்றவற்றை ஒதுக்கி, முறையுடன் நீதியுடன் அடக்கத்துடன் எளிமையாக அமைதியாக வாழ்வோம்.

(இன்று ஆறுகள் இல்லாததால் கிணறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் விடுகின்றனர். ஆறுகளில் விடுவதே சரி. ஆற்றுநீர் காலவெள்ளத்திற்கு சமம். காலவெள்ளத்தில் தோன்றும் குமிழ்கள் போன்றது படைப்பு. பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காலபைரவர்.)

oOOo

மீண்டும் ஒரு முறை சுருக்கமாக...

முளைப்பாலிகை திருவிழா உணர்த்துவது:

🔹உலகை பரிபாலிப்பது காளியன்னை
🔹 உலகில் காணப்படுபவை யாவும் ஏதாவது ஒரு உடலால் விளைந்தவையே
🔹 விளைவு செயலிலிருந்தும், செயல் எண்ணத்திலிருந்தும் தோன்றுகிறது. ஆகையால், நமக்குள் நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும்.
🔹 வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, அகந்தையற்று தன்னலமற்று பொறுப்புடன் வாழ்ந்து, கிடைப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.

oOOo

வடக்கிருந்து சமாதி நிலையடையும் போது உலகத்தோற்றம் மறைந்து கருப்பாக இருக்கும். நம்மிடம் இன்னமும் பழவினைகள் மீதமிருப்பின், அவற்றைக் கொண்டு நம்மை சமாதி நிலையிலிருந்து வெளியே தள்ள இறையாற்றல் முயற்சிக்கும். இன்னதென்று உணரமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்து அச்சமூட்ட முயற்சிக்கும். பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கிய பெரியவர்கள் இத்தோடு புறமுகமாகிவிட்டார்கள் என்பது என் கருத்து. இதனால் தான், கருப்பு நிறத்தையும், அதில் கொடுமையான உருவங்களையும் தோற்றுவித்த இறையாற்றலை முடிவாகக் கருதி, கருப்பாயி (கருப்பு + ஆயி - காளியன்னை) என்று பெயரிட்டு, பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கியுள்ளனர்.

இன்னும் சற்று தாக்குப் பிடித்திருந்தால், முயற்சித்திருந்தால் அடுத்த நிலைக்கு சென்றிருப்பர். காட்சிகளை விட காண்பவனே உயர்ந்தவன். மேற்சொன்ன காட்சிகளைக் கண்ட தாமே என்றுமுள்ள மெய்ப்பொருள் (சிவம்) என்பதை உணர்ந்திருப்பர். பெண்தெய்வ வழிபாட்டுப் பிரிவை உருவாக்காமல், ஏற்கனவே இருந்த சிவ (மெய்ப்பொருள்) வழிபாட்டையேக் கடைபிடித்திருப்பர்.

(இங்கே உணர வேண்டிய மிக முக்கியமான செய்தி: மத & கருத்து உரிமை!! குறையுள்ளது என்று தெரிந்தும் அன்றைய சமயப்பெரியவர்கள் பெண்தெய்வ வழிபாட்டை அனுமதித்திருக்கிறார்கள். இதுவே பாலைவன மதங்களாக இருந்திருந்தால்...? ஒரு கூட்டம் வெட்டியே அழித்திருக்கும்! இன்னொன்று நயவஞ்சகமாக ஏமாற்றி முடித்திருக்கும்!!)

இந்தப் #பெண்தெய்வ #வழிபாடு பிற்காலத்தில் மூன்றாக பிரிந்துவிட்டது:

🔹 காளியம்மன், மாரியம்மன், அங்காளம்மன், ...
🔹காமாட்சியம்மன், மீனாட்சியம்மன், கோமதியம்மன், விசாலாட்சியம்மன், லலிதா திரிபுரசுந்தரி, ...
🔹 பெருமாள் (பெண்தெய்வ வழிபாட்டில் எந்தக் கோட்பாட்டைப் பெண்ணாகக் கருதினரோ அதை வைணவம் ஆணாக மாற்றிக்கொண்டது)

oOOo

கருப்பு நிறம், கொடுமையான அச்சமூட்டும் காட்சிகள் போன்றவை காளியன்னையின் அடையாளங்கள் என்பதால் தான் முளைப்பாலிகை குடிசையை பராமரிக்கும் பெண் (காளியன்னையாகக் கருதப்படுபவர்) திருவிழா காலம் முழுவதும் தலைவிரி கோலமாக, எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Saturday, August 15, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #60 - செறிவு, விள்ளு, யாது - விளக்கம்

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கள்ளப் புலவேடர் ... கருத்துமலை

ஐம்புலன்களை அடக்கி, பக்குவமடைந்து, உலகம் எனும் மாயையிலிருந்து தெளிந்தோர் நிலைபெறுவதற்காக (செறிவாக - திண்ணியராக - திடமாக - அசைவற்று நிற்க) மலர்ந்த பெருமான்.

எப்போது நிலைபெறுவோம்? நாம் யாரென்று உணர்ந்த பிறகு. எப்போது நாம் யாரென்று உணர்வோம்? உலக காட்சி நீங்கிய பிறகு. இந்த உலக காட்சி நீங்குதலையே "விள்ள" (மலர்ந்த) என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். உலக காட்சிகள் நீங்குவது என்பது கிட்டதட்ட ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களைக் கழட்டுவது போலிருக்கும். (இதை வைத்தே திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கத்து மூலவரின் கீழ் சமாதியாகி இருப்பவர்) "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கவேண்டும் என்பது என் கருத்து)

🔸யாது இருக்கக் ... மருத்துமலை

யாது என்ற சொல் ஐயம், மயக்கம் மற்றும் நினைவு போன்ற பொருட்களில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் யாரென்று ஐயமற தெரிந்துகொள்ளாத வரை, உலக காட்சிகளைக் கண்டு மயங்கும் வரை (உண்மையென்று நம்பும் வரை), பழவினைகள் மீதமுள்ள வரை உடல் & உலக காட்சிகள் தோன்றிக்கொண்டுதானிருக்கும்.

காட்சிகள் தோன்றுவது எதற்காக? ஒரு முறை பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽 இத்தகைய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "காண்பான் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார்!! 👌🏽👏🏽

இவ்வகையில், காட்சிகளின் தோற்றம் என்பது நாம் நம்மை உணர்வதற்காக, அதில் நிலைபெறுவதற்காக, பிறப்பறுப்பதற்காக. பிறப்பு எனும் நோயை, காட்சிகளின் மூலம் குணப்படுத்துவதால் இறைவனை தெய்வ மருத்துவன் என்றழைக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, August 13, 2020

திருச்சத்திமுற்றம் - பெயர் விளக்கம்

(தினமலர் - ஆன்மீக மலர் - 17/07/2020)

#திருச்சத்திமுற்றம் என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், அன்பின் காரணமாக உமையன்னை பெருமானுக்கு முத்தம் கொடுத்தாராம்! இதனால் இத்தலம் "சக்தி முத்தம்" என்று அழைக்கப்பட்டதாம்!! பின்னர், மருவி, சத்திமுற்றம் என்றாயிற்றாம்!!! 😝

மெக்காலே கல்வியும் பகுத்தறிவும் அவற்றின் உச்சநிலையை அடைந்து விட்டதற்கு இந்த பெயர் விளக்கத்தை விட சிறந்த சான்று இருக்கமுடியாது. 😁

தில்லைக் கூத்தப்பெருமான் 🌺🙏🏽 ஆடும் மேடை எதைக் குறிக்கிறதோ, எந்த அரங்கத்திற்கு திருவரங்கம் பெருமாள் 🌺🙏🏽 நாதராக இருக்கிறாரோ அதையே தான் சக்தி முற்றமும் குறிக்கிறது. நாம் வாழும் அண்டமே அது!!

இப்போது நாம் அண்டத்திற்குள் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இது உண்மையல்ல. அனைத்தும் நம்முள் இருக்கின்றன. சமாதியில் இதை உணர்வோம். எல்லாம் நமக்குள் நடப்பதைப் பார்ப்போம். இதை திரையில் தோன்றும் காட்சிகளாக, நீரில் தோன்றும் குமிழிகளாக, மேடையில்/அரங்கத்தில் அரங்கேறும் நடனமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் பெருமான்கள். திருச்சத்திமுற்றத்தில் சமாதியாகியிருக்கும் பெருமானோ அல்லது அவருக்குப் பின் தோன்றிய பெரியவர்களோ, ஒரு பெரிய வீட்டின் முற்றத்தில் நடைபெறும் விழாவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

#சத்திமுற்றம் = சக்தி முற்றம் = நாம் வாழும் அண்டம்

oOOo

பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே

-- அப்பர் 🌺🙏🏽 தேவாரம் 4.96.3

பொழிப்புரை: மெய்யறிவில் நிலைபெற்றவர் உள்ளத்தில் இருப்பவராய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக்கொழுந்துப் பெருமானே! 🌺🙏🏽 பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க, மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக. தலைவனே! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Wednesday, August 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் - #59 - வடக்கிருத்தல், மலைமாது, ஒரு பாகம் - சிறு விளக்கம்

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #59

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மேலோட்டமாகப் பார்த்தால் உமையன்னை இடப்பாகம் பெற்ற வரலாற்றைப் பற்றி பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽 என்று தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பல காலம் கடுமையாக வடக்கிருக்கும் ஒருவர், முதலில் நிர்விகற்ப சமாதியைப் பெற்று, இறுதியில் சகஜ சமாதியில் நிலை பெறுவதைப் பற்றி பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.

🔸தனித்திருந்து - உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருந்து

🔸கரைஇலா மாதவம் - ஆற்றின் நீரோட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போல் விடாது செய்யப்படும் வடக்கிருத்தல்.

நம் தலையானது உடலின் வடக்குப் பகுதியில் இருப்பதாக கணக்கு. நமது கவனத்தை உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் நம் தலை / முகப்பகுதியிலேயே வைத்திருப்பதற்குப் பெயர் தான் #வடக்கிருத்தல் (ஆரியத்தில், #தவம்). எப்படி எக்கணமும் கவனத்தை தலையிலேயே வைத்திருப்பது? நம் மீது - நம் இருப்புணர்வின் மீது - கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் முடியும். இவ்வாறு நம் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருப்பதே சும்மா இருத்தல், தானாய் இருத்தல், தன்னை நாடுதல், தன்னாட்டம், ஆத்மவிசாரம் (ஆரியம்) என பலவாறாக அழைக்கப்படுகிறது.

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽

🔸#விரவி - கலந்து. "நாம் வேறு உலகம் வேறு" என்ற துய்ப்பை நீக்கி, "நாமும் உலகமும் ஒன்றே" / "நாமே உள்ளபொருள்" என்ற துய்ப்பைக் கொடுத்தலே விரவுதல்.

🔸ஒரு பாகம் மலைமாது பெற பாலித்து

🔹#மலைமாது - சீவன். விழிப்பு நிலையில் சீவன் தலையிலிருப்பதாக கணக்கு. இங்கு மலை என்பது தலையைக் குறிக்கும். மெய்யறிவு பெறும் வரை மாது. பெற்ற பின், அப்பன்!

🔹ஒரு பாகம் - இடப்பாகமோ வலப்பாகமோ அல்ல. அசைவற்ற பாகம் - அசைவற்ற நிலை. மேற்சொன்ன "விரவி" நிலைக்குப் பின், நாம் யாரென்றும், உலகின் தன்மை என்னவென்றும் உணர்ந்து கொள்வோம். முயற்சிகளற்று (அசைவற்று) இருப்போம். இந்நிலையை நாம் அடைவதற்கு உதவிய "விரவுதலே" அருள் பாலித்தலாகும்.

🔸மாக மலை - வானளாவிய உயர்ந்த மலை

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, July 28, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #58 - குன்றம் குனிக்குமலை - சிறு விளக்கம்

நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #58

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸நீலமலை தேடரிதாய் நின்றமலை

நீலமலை - பெருமாள். நான்முகனும் பெருமாளும் பெருமானின் முடி-அடியைத் தேடிய கதையில் வரும் பெருமாள். இங்கு பெருமாள் அகந்தையைக் குறிக்கிறார். அகந்தையால் மெய்யறிவை அடையமுடியாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸நின்றதழல் கோலமலை

மேற்சொன்ன "அடிமுடி காணா அண்ணாமலை" கதையில் பெருமான் நெருப்புத் தூணாக நின்ற கோலம்.

🔸#குன்றம் #குனிக்குமலை

முப்புரம் எரித்த கதையில் பெருமான் மேருமலையை வளைத்ததைப் பாடுகிறார்.

#முப்புரம் #எரித்த கதை: புவியைத் தேராக்கி, மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை நாணாக்கி, பெருமாள் கொடுத்த "தீர்ந்து போகாத அம்பாரத்துணியுடன்", மூன்று பறக்கும் கோட்டைகளில் சுற்றி வந்த மூன்று அரக்கர்களுடன் பல காலம் பெருமான் போரிடுகிறார். ஒரு சமயத்தில், "தாங்கள் கொடுத்த பொருட்களால்தான் பெருமானால் போரிடமுடிகிறது" என்று தேவர்கள் அகந்தை கொள்கின்றனர். இதையுணர்ந்த பெருமான், போரிடுவதை நிறுத்திவிட்டு, புன்முறுவல் பூக்கிறார். முப்புரமும் எரிந்து சாம்பலாகிவிடுகிறது!

இது மிகப்பழமையான கதை. பெருமான் புரிந்த "#அட்டவீரட்ட" செயல்களுள் (8 வீரச்செயல்களுள்) ஒன்று. பல திருத்தலங்களின் தலவரலாறாக உள்ளது. பல வடிவுகளில் உள்ளது. நான் மேற்கண்ட வடிவை எடுத்துக் கொண்டேன்.

🔹3 பறக்கும் கோட்டைகள் - முப்புரம் - கனவு, நனவு & தூக்கம்
🔹தேரான புவி - நம் உடல்
🔹நாணான வாசுகி - மூச்சுக்காற்று
🔹வில்லான மேருமலை - சீவன் / மனம்
🔹பெருமாள் வழங்கிய தீராத அம்பாரத்துணி - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள் வழங்கிய அறிவுரைகள். பெருமாள் உயிரற்றதைக் குறிக்கிறார். உயிரற்றது என்பது ஐம்பூதங்களின் கலவை. உள்ளபொருளேயான பகவானிடமிருந்து ஒர் அறிவுரை வெளிப்பட்டிருந்தாலும், வெளிப்பட்ட பின் அது உயிரற்றதாகிவிடுகிறது. எனவே, எல்லா அறிவுரைகளும் பெருமாளின் கூறுகளாகின்றன. பெருமாள் வழங்கியவையாகின்றன.

எல்லாவற்றிற்கும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: இங்கு போரிடும் சிவபெருமான் யார்?

நாமே அது! நாமே உள்ளபொருள்!! இதை நாம் உணர்வதில்லை. பல காலம், வடக்கிருக்கிறேன் பேர்வழியென்று, பல சர்க்கஸ் வேலைகளை செய்துகொண்டு, உடலைக் கெடுத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில், "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு தானாய் இருப்போம் - தன்மையுணர்வில் நிற்போம். இத்தோடு எல்லாம் முடிந்தது. இதைத்தான் "பெருமான் புன்முறுவல் பூத்து முப்புரம் எரித்தார்" என்று மேலே உருவகப்படுத்தியுள்ளனர்!

முப்புரம் எரிப்பு என்பது வடக்கிருந்து மெய்யறிவு பெறுதல். குன்றம் குனித்தது என்பது மனதை அழிப்பது.

🔸மூலமலை அந்தமலை

உள்ளபொருளான பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முன்னரும் இருக்கும். எல்லாம் அழிந்த பின்னரும் இருக்கும். என்றும் இருக்கும்.

🔸சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய் வந்தமலை

#குரு #நமச்சிவாயர் 🌺🙏🏽 தனது மெய்யாசிரியரான குகை நமச்சிவாயருக்கு 🌺🙏🏽 அடுத்தபடியாக அதிகம் குறிப்பிடுவது திரு சுந்தரமூர்த்தி நாயனாரைத்தான் 🌺🙏🏽!!

நாயனாருக்காக, அவர்தம் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது சென்று அவரது கோபத்தை தணித்த பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளரைக் 🌺🙏🏽 குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 27, 2020

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க!!

🙏🏽 இந்த இடுகை எல்லோருக்கும் ஏற்றதல்ல. சமயக் குறியீடுகளைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் தாம் மேற்கொண்டு படிக்கவேண்டும். ஏனையோர், தக்க துணையுடன் படிக்கவேண்டும். இல்லையேல், தயவு செய்து வெளியேறுங்கள். நன்றி.

🙏🏽 மேலும், இது சற்று நீண்ட இடுகை. பொறுமையுடன் படியுங்கள். தொடக்கத்தில் அருவெறுப்பும் கோபமும் தோன்றலாம். ஆனால், போகப்போக வியக்கச் செய்யும். மலைக்கவும் வைக்கும்.

oOOo

நமது உடல், நாம் காணும் உலகம் எல்லாம் தோற்ற மாத்திரமே. உண்மையல்ல. நாமே (நமது தன்மையுணர்வே) என்றும் மாறாத, அழியாத உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள். இந்த பேருண்மையை எவ்வளவு நன்றாக விளக்கினாலும், எத்தனை விதமாக விளக்கினாலும், திரும்ப திரும்ப எடுத்துக் கூறினாலும் மக்களுக்குப் புரிவதில்லை என்பதால், நேரடியாகவே நாம் யார் என்ற அறிவைப் பெற பல உத்திகளை அறிவுருத்திவிட்டுச் சென்றுள்ளனர் நம் மாமுனிவர்கள். (3 உத்திகளை மட்டும் இங்கு பார்ப்போம்)

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 அறிவுருத்தியது 2 உத்திகள்: தன்னாட்டம் & மலைவலம். புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - வைத்திருப்பதே தன்னாட்டம். ஒரு நிறைமாத பேரரசி எவ்வாறு நடைபழகுவாரோ அவ்வாறு அண்ணாமலையாரை வலம் வருதல் மலைவலம். இப்படிச் செய்தால், ஒரு சமயத்தில், உடலுணர்வு அற்றுப்போகும். உடலுணர்வு அகன்றால் மீதமிருப்பது என்ன? நாம்!!

அடுத்து, காசியில் திரு விசுவநாத சிவஅடையாளத்தின் (சிவலிங்கம்) கீழ் சமாதியாகி இருக்கும் திரு நந்திதேவர் 🌺🙏🏽 அறிவுருத்திய கங்கையில் முழுகுதல். கங்கை நீர் குளிர்ச்சியானது. அந்நீரில் மூழ்கினால், குளிர்ச்சி மிகுதியால், முதல் ஒரு சில கணங்களுக்கு, நமது உடலுணர்வை இழப்போம். உடலுணர்வை இழந்தால் மீதமிருப்பது என்ன? நாம்!!

இவ்வாறே காவடி தூக்குதல், அழகு குத்துதல், தீ மிதித்தல், பால்குடம் சுமத்தல், தீச்சட்டி ஏந்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், உடல் உறுப்புகளை வெட்டிக் கொள்ளுதல் (கபாலிகர்கள்), திருத்தலப் பயணம் என எல்லா உத்திகளையும் சரியாக செய்தால், நாம் யார் என்ற அறிவைக் கொடுக்கும். இது போன்றொரு உத்திதான் உடலுறவு! உடலுறவின் முடிவில் ஆணிடமிருந்து "விந்து வெளிப்படும்போது" ஆண் தனது உடல் & உலக உணர்வை இழந்து தானாக இருக்கிறான். இந்த துய்ப்பு விந்து வெளிப்படும்வரை தான். வெளிப்படுவதற்கு முன்னரோ, பின்னரோ கிடைக்காது.

தன்மையுணர்வாம் இறையுணர்வை துய்க்க எத்தனையோ எளிய உத்திகள் இருந்தும் இந்த உத்தி புகழ் பெற்றுவிட்டது! எங்கும் பரவிவிட்டது!! தொன்றுதொட்டு வழக்கிலிருந்த சமயங்களின் குறியீடுகளுக்கும் புதிய பொருள்களைக் கற்பித்தது. இம்முறையில் இறையுணர்வை துய்ப்பதற்கென்றே எகிப்து, கிரேக்க, ரோமானிய நாடுகளிலுள்ள வழிபாட்டுத்தலங்களில் பெண்களை "சேவையில்" அமர்த்தியிருக்கின்றனர்! தகுதியானவர்கள், இறையுணர்வு தேவைப்படும்போதெல்லாம், அங்கு சென்று, அப்பெண்களைப் புணர்ந்துள்ளனர்!! (அவ்வளவு தூரம் இறையுணர்வுத் தாகம்! 😏 இதுவே, அத்தலங்களில், வாட்டசாட்டமான பூசாரிகளை அமர்த்தி, கைகளில் தேங்காய்களைக் கொடுத்திருந்தால்... ஒரு பயலுக்கும் இறையுணர்வு துய்ப்பே தேவைப்பட்டிருக்காது. 😂)

✴️ #முகம்மதியம்

மேற்சொன்ன "விந்து வெளிப்படுதல்" தான் இம்மதத்தின் அடிப்படை!


❇️ மசூதியிலுள்ள #மினார்

மகுதிக் கட்டிடங்களிலேயே மிக உயரமானதாக இருக்கும். விரைத்த ஆணுறுப்புக்கு சமம். அக்காலத்தில், தொழுகைக்கு முன், ஒருவர் இதன் உச்சிக்குச் சென்று குர்ஆன் வாசகங்களை உறக்கச் சொல்லுவார். இன்று ஒலிப்பெருக்கிகள் அவ்விடத்தை எடுத்துக்கொண்டன. மினாரிலிருந்து ஒலி வெளிவருவதென்பது ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவருவதற்கு சமம். விந்து வெளிப்படும்போது ஆணுக்கு மெய்யறிவு கிடைக்கிறது (கவனமாக இருந்தால்). இது போன்றே, மினாரிலிருந்து ஒலி வெளிப்படும்போது, அதை கவனமாக, பொருளணர்ந்து கேட்போருக்கு மெய்யறிவு கிடைக்கும் என்பது பொருள்.

உயரமான மினார் குறிக்கும் இன்னொரு பொருள்: இறைவன் படைப்பில் ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

❇️ #மகுதி

தொழுகை நடத்தப்படும் பகுதி. பெண்ணுறுப்புக்கு சமம். நுழைவாயிலின் தோற்றம் பெண்ணுறுப்பைக் தலைகீழாக கவிழ்த்தது போலிருக்கும். பானை கவிழ்க்கப்பட்ட கோபுரமும் மகுதியின் உட்பகுதியும் பெண்ணுறுப்பின் உட்பகுதிக்கு சமம். மசூதிக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். ஆணுக்கு எப்போது மெய்யறிவு கிடைக்கிறது? விந்து வெளிப்படும் போது. விந்து எங்கு வெளிப்படுகிறது? பெண்ணுறுப்புக்குள். எப்போது வெளிப்படுகிறது? புணர்ச்சியின் இறுதியில். எனில், பெண்ணுறுப்புக்கு சமமான மசூதியினுள் நடத்தப்படும் தொழுகை புணர்ச்சிக்கு சமம்.

(இந்த தலைகீழ் பெண்ணுறுப்புக் குறியீட்டை முகம்மதியர்களின் கட்டிடங்கள் அனைத்திலும் காணலாம். இன்று, பொருட் செலவு, திறனின்மை போன்ற காரணங்களால் நுழைவாயில் தவிர மீதமுள்ள பகுதிகள் செவ்வகமாகிவிட்டன.)

❇️ முகம்மதிய ஆண்

இன்று பலவிதமான உடைகள் அணிந்தாலும், இவர்களது பாரம்பரிய உடை என்பது தலை முதல் கணுக்கால் வரை வெள்ளைநிறத்தினதாக இருக்கும். பாலைவனப்பகுதியினர் தலையில் #குல்லா/துணி & உடல் முழுவதும் மூடிய வெள்ளை அங்கி அணிந்திருப்பர். நம் தென்நாட்டினர் தலையில் குல்லா, வெள்ளைச் சட்டை, வெள்ளை லுங்கி அணிந்திருப்பர். வடநாட்டினர் வெள்ளை குல்லா, குர்தா, முழுகாற்சட்டை அணிந்திருப்பர்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: ஒரு முகம்மதிய ஆண் விருத்தச்சேதனம் செய்யப்பட்ட (முன்தோல் நீக்கப்பட்ட) ஆணுறுப்புக்கு சமம். தலை, விருத்தச்சேதனம் செய்யப்பட்ட பகுதி.


🔹வெள்ளை #வட்டக்குல்லா, வெள்ளை ஆடை

உடலுறவு முடிந்து, விந்துவெளிப்பட்ட பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்புக்கு சமம். ஆணுறுப்பு முழுவதும் வெள்ளையாகியிருக்கும். தலையிலிருக்கும் குல்லா, ஆணுறுப்பின் முன் பகுதியில் சிறிது தங்கியிருக்கும் விந்துக்கு சமம். இவையெல்லாம் "அவர் இறையுணர்வு பெற்றவர்" என்பதற்கு சமம்.


🔹வட்டக்குல்லாவிற்கு பதிலாக வெள்ளை துணி கட்டியிருப்பின்

விந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்று பொருள். விந்து வெளிப்படும்வரை தான் இறையுணர்வு கிடைக்கும் என்று முன்னமே பார்த்தோம். அதாவது, "இந்த நபர் இறையுணர்விலேயே இருக்கிறார்" என்பது பொருள்.

🔹வெள்ளைத் துணிக்கு பதிலாக சிவப்பு/கருப்பு கட்டங்கள் போடப்பட்டத் துணி கட்டியிருப்பின்

மேற்சொன்ன பொருள் தான். வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்பு முழுதும் வெள்ளைவெளேரென்றா இருக்கிறது? முன் பகுதி சிவப்பு-வெள்ளையாகவும், ஏனைய பகுதி கருப்பு-வெள்ளையாகவும் தானே இருக்கிறது? அதாவது, "வெள்ளைத்துணி கட்டியவரைக் காட்டிலும் இவர் இன்னும் சரியானவர் (துல்லியமானவர்)" என்று பொருள்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & வெள்ளை லுங்கி

இவற்றை தென்பாரத முகம்மதியர்களிடம் காணலாம். ஆங்கில எழுத்தான 'V'யை தலைகீழாக போட்டது போல் லுங்கியை மடித்துக்கட்டியிருப்பார்கள். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், அவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்புத் தெரியும். இந்த பெண்ணுறுப்பு போன்ற அமைப்பு, லுங்கியைக் கட்டியிருப்பவரின் ஆணுறுப்புடன் மோதிக்கொண்டிருக்கும். அதாவது, "உடலுறவிலேயே இருப்பவர் - இறையுணர்விலேயே இருப்பவர்" என்று பொருள்.

இந்த உடையமைப்பு இன்னொரு பொருளையும் தரும்: உடலின் மேல் பகுதி ஆண். கீழ் பகுதி பெண். அதாவது, ஆணும் பெண்ணும் இணைந்ததே படைப்பாகும். ஆணில்லாமல் பெண்ணில்லை. பெண்ணில்லாமல் ஆணில்லை. ஆனால், ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & பல வண்ண லுங்கி

இந்த உடையமைப்பையும் தென்பாரத முகம்மதியர்களிடம் மட்டுமே காணலாம். மேற்கண்ட "வெள்ளை லுங்கி" கொடுக்கும் இரு பொருள்கள் இதற்கும் பொருந்தும். அவற்றுடன் வெள்ளைச் சட்டை & வண்ண லுங்கி உணர்த்துபவை:

- மேல் பகுதி - இறைவன், கீழ் பகுதி - அவரது படைப்பு.
- இறைவனையும் அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கவியலாது.
- வண்ணமயமான படைப்பு, தூய இறைவனிடமிருந்து தோன்றினாலும் படைப்பு தாழ்ந்ததே. இறைவனே உயர்ந்தவன்.

(இவர்களது உடைகள் இவர்களது மத நம்பிக்கையை உணர்த்துவதற்காக மட்டுமல்லாது, இவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன)

❇️ முகம்மதிய பெண்

ஆணைப்போன்றே பெண்ணின் உடையமைப்பும் இன்று வெகுவாக மாறிவிட்டது. பெண்ணின் பாரம்பரிய உடை முழுக்கருப்பாகும். உச்சந்தலை முதல் பாதம் வரை முழு உடலையும் மறைத்திருக்கும். முகம்மதிய ஆண் புணர்ந்து முடித்த ஆணுறுப்புக்கு சமம் எனில் பெண் எதற்கு சமம்? பெண்ணுறுப்புக்கு சமம். புணரப்பட்டதா (இறையுணர்வு பெற்றவரா), புணரப்படாததா (இறையுணர்வு பெறாதவரா) என்ற கேள்விகளுக்கு இடமில்லை.

கருப்பு நிறத்திற்கு பதில் வெள்ளை, நீலம், ரோஜா, ஊதா என எந்த நிற ஆடையாக இருந்தாலும் ஒரே பொருள் தான். பெண்ணுறுப்புத் தான்.

பிள்ளைகள் பெற்று, உடலமைப்பு சற்று மாறிய பெண்ணை, முழுகருப்பு உடையில், சற்று தூரத்திலிருந்து கவனித்தால் இவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்பு தெரியும்.

இவர்களது சமூகங்கள் சிலவற்றில், திருமணமாகி, பிள்ளைகள் பெற்று, சற்று வயதானவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருப்பார்கள். இளம் பெண்கள் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள். இங்கு வெள்ளை ஆடை, உடலுறவு முடிந்து, விந்து வெளிப்பட்டு, அதனுடன் பெண்ணுறுப்பு திரவமும் சேர்ந்து வெள்ளையாகத் தோன்றும் பெண்ணுறுப்பைக் குறிக்கும். அதாவது, "இறையுணர்வு பெற்றவர்" என்பது பொருள்.

❇️ #பிறைநிலா

ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவரும் திறப்பின் வடிவு. விந்து வெளிப்படும் போது இறையுணர்வு கிடைக்கிறது. எனவே, இந்த திறப்பு இறையுணர்வு வெளிப்படும்/கிடைக்கும் இடமாகிறது.

கங்கையாற்றை எங்கு தொட்டாலும் புனிதம் என்றாலும் சிலர் ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மூழ்குவதை மேலானதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் தேவப்பிரயாகை வரை செல்கின்றனர் (இங்கு தான் கங்கை என்ற பெயரை ஏற்கிறார் கங்கையன்னை). இன்னும் சிலர் கங்கோத்திரி செல்கின்றனர். வெகு சிலரோ மேற்கொண்டு பயணித்து கோமுகம் செல்கின்றனர். கோமுகம் போன்றது பிறைநிலா.

உடலுறவு முடிந்து விந்து வெளியேறிய ஆண்குறி, விந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஆண்குறி, விந்து வெளிப்படும் திறப்பு என்று துல்லியமாக்கி இருக்கிறார்கள். பிறைநிலா இறையுணர்வு வெளிப்படும் இடம். துல்லியமான இறையுணர்வுவைக் குறிக்கும்.

இதனுடன் ஒரு விண்மீனையும் சேர்த்திருப்பார்கள். பிறைநிலா ஆணுறுப்பின் திறப்பு எனில் விண்மீன் பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள திறப்பு (செர்விக்ஸின் திறப்பு). இதனால்தான் பிறைநிலாவைப் பெரிதாகவும் விண்மீனைச் சிறியதாகவும் (ஆண் உயர்ந்தவன்), கிட்டதட்ட பிறைநிலவுக்குள் விண்மீன் வருவது போன்றும் (ஆணின் ஆதிக்கத்தின் கீழ் பெண்) சித்தரித்திருப்பார்கள்.

(பெண்ணுறுப்பின் உள்திறப்பை வீண்மீனாக சித்தரித்தது தவறு என்பது எனது கருத்து. இத்திறப்பும் பிறைநிலா போன்றுதானிருக்கும். இல்லை, திறப்பை மட்டும் கணக்கிடாமல் சுற்றியிருக்கும் பகுதிகளையும், அதிலும் அவை சற்று சுருங்கியிருக்கும்போது கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிக்கொள்ளலாம்.)

பிறைநிலா & விண்மீன் குறியீடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பயனில் இருந்தாலும், முகம்மதியம் மேற்சொன்ன பொருளில் பயன்படுத்த ஆரம்பித்தது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான். வெகுவாக பயன்பாட்டிற்கு வந்தது சென்ற நூற்றாண்டில் தான். இவற்றிலும், பிறைநிலாதான் எல்லா இடங்களிலும் இருக்கும். விண்மீன் ஆங்காங்கே தானிருக்கும்.

✴️ #கிறித்தவம்

முகம்மதியத்தின் முன்னோடிகளில் ஒன்று. அதை விட காலத்தால் 6 நூற்றாண்டுகள் முந்தையதாக இருந்தாலும், ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது 4ஆம் நூற்றாண்டில் தான். அதன் பிறகே இதன் குறியீடுகள், சின்னங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும். உருவாக்கப்பட்டதில் ரோமானிய-கிரேக்கர்களின் பங்கும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

உடலைக் குறிக்கும் குறுக்கைக்கு அடுத்ததாக இவர்கள் அதிகமாக பயன்படுத்தும் குறியீடு தலைகீழ் பெண்ணுறுப்பு. முகம்மதியக் குறியீடுகளில் ஆண், பெண் இரண்டுமிருக்கும். கிறித்தவக் குறியீடுகளில் பெண் மட்டும்தானிருக்கும். இவர்களது சர்ச்சுகள், கல்விச்சாலைகள், நீதிமன்றங்கள், அரண்மனைகள், இல்லங்கள் என எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பைக் காணலாம். இத்தாலிய வாடிகன் சர்ச்சின் முன்னுள்ள மக்கள் கூடும் பகுதி அப்படியே ஒரு பெண்ணுறுப்புக்கு சமம். இவர்களைப் பொறுத்தவரையில், படைத்தவர் ஆண், படைப்பனைத்தும் பெண், படைப்பில் நடக்கும் தொழில்கள் அனைத்தும் புணர்தலாகும். எனவே எங்கும் பெண்ணுறுப்பு குறியீடு.

இவர்களது பழங்கால சர்ச்சுகளின் உள்ளமைப்பு அப்படியே பெண்ணுறுப்பின் உள்ளமைப்பிற்கு சமமாக இருக்கும். பெண்ணுறுப்புவாயின் தோற்றத்தையே மேற்கூரைக்கும் பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களிடமிருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்டுவதற்காக, முகம்மதியம், கவிழ்க்கப்பட்ட பானை போன்ற அமைப்பை மேற்கூரைக்கு பயன்படுத்தியிருக்கும். பெண்ணுறுப்பின் உட்புற இறுதிப்பகுதி சற்று விரிந்திருக்கும். இதையே முகம்மதியம் கவிழ்த்த பானையாக மாற்றியிருக்கிறது. சர்ச்சுக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். இறையுணர்வு பெறப்படுவது அதற்குள் தான். எனவே, இவர்கள் மினார் என்று தனியாக ஒரு பகுதியை வைத்துக்கொள்ளவில்லை.

#பாதிரி #உடை அணிந்தோர் அனைவருமே புணரப்பட்ட / புணர்ச்சியில் இருக்கின்ற பெண்ணுறுப்புகளுக்கு சமம். அதாவது, இறை சிந்தனையில் இருப்பவர்கள் - இறையுணர்வைத் துய்ப்பவர்கள் - இறைவனால் புணரப்படுபவர்கள் (பட்டவர்கள் அல்ல; படுபவர்கள். தொடர்ந்து இறையின்பம் பெறுபவர்கள்.)

oOOo

பாலைவன மதங்களின் குறியீடுகள், சின்னங்கள், உடைகள், கட்டிடங்கள் போன்றவை உணர்த்தும் உட்பொருள்களைப் பற்றி மட்டும் சற்று எழுதியிருக்கிறேன். இவை சரியா, உயர்ந்ததா, சிறந்ததா என்றோ, யார் இவர்களுக்கு இவ்வாறு வடிவமைத்து கொடுத்திருப்பார்கள் என்றோ, இவற்றால் அவர்கள் பண்பட்டிருக்கிறார்களா என்றோ எழுத முயலவில்லை. இந்த நீண்ட இடுகையை நான் எழுதியதற்கு காரணம் பின்வரும் 2 கேள்விகள்:

👊🏽 வட்டக்குதத்தை வல்வேல் காக்க என்பதற்கே பொங்கிய ஆச்சாரக் கூட்டம் இப்போது இந்த பாலைவன மதங்களைப் பற்றி எப்படி பொங்குமாம்?

👊🏽 "பானையைக் கவிழ்த்தது போலிருந்தால் அது மசூதி, உயரமாகக் கட்டியிருந்தால் அது சர்ச்சு, அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்!" என்று கெக்கலித்த "சாதி எதிர்ப்பாளரான" ஒரு வீரப்"பறையர்" இப்போது பாலைவன மதங்களைப் பார்த்து எப்படி கெக்கலிப்பாராம்?

oOOo

சேரிள முலைமார் திருவேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
அசுரர் குடிகெடு"க்க" ஐயா வருக 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

✴️ இணைப்பு படங்கள்:

1. முகம்மதிய மசூதி - மினார், பானை கோபுரம், பிறைநிலாச் சின்னம், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'U' போன்றவை)

2 - 4. முகம்மதிய ஆண் & பெண்கள்

5. வானிலிருந்து வாடிகன் சர்ச்சின் தோற்றம் - மக்கள் கூடும் முன்பகுதி பெண்ணுறுப்புக்கு சமம்.

6. சர்ச்சின் உட்புறம் - பெண்ணுறுப்பான வஜினா போன்று நீண்டிருத்தல், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'V' போன்றவை). அவற்றிலுள்ள செதில் போன்ற அமைப்புகள் பெண்ணுறுப்புவாயிலுள்ள தோல் மடிப்புகளுக்கு சமம்.

7. விதவிதமான உடையணிந்த பாதிரிகள் - இவர்களது உடைகள் எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும், இவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், இவர்கள் இறைவனால் புனரப்படும் பெண்ணுறுப்புகள். இறையுணர்வில் திளைப்பவர்கள்.