Showing posts with label உள்ளபொருள். Show all posts
Showing posts with label உள்ளபொருள். Show all posts

Tuesday, September 15, 2020

நிர்விகற்ப சமாதி - சிறு விளக்கம்

அண்ணாமலை வெண்பா பாடல் #68ல் வரும் திருக்கடவூர் தலவரலாறு உணர்த்தும் #நிர்விகற்ப #சமாதி (*) நிலையைப் பற்றி சிறிது எழுதியுள்ளேன். ஒரு ரமண அன்பருக்காக எழுதியது. சற்று மேம்படுத்தி இந்த இடுகையாக்கியுள்ளேன். சமயவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதில் பரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு விட்டலாச்சாரியா படம் போல் தோன்றும்! 😛

oOOo

நாமே உள்ளபொருள்!

ஆனால், பகவான் திரு ரமணர் போன்ற ஒப்பற்ற மெய்யறிவாளர்கள் 🌺🙏🏽 எத்தனை முறை விளக்கினாலும், எவ்வளவு எளிதாக விளக்கினாலும் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. நுண்ணறிவும், நல்ல முதிர்ச்சியும் கொண்ட ஒரு சில அன்பர்கள் மட்டுமே உடனே புரிந்துகொள்வர். மற்றவர்களுக்கு திருவருள் துணைபுரிகிறது.

தகுந்த சமயம் வரும் போது நம்முள் ஒர் ஆற்றல் திரண்டு வெளிப்படுகிறது (முதலில் திரண்டு, பின்னர் வெளிப்படும்). இந்த ஆற்றல் திரண்டு வெளிவருவதற்குள் நாம் நம்மை உணர்ந்துவிடுவோம். அது வெளிவந்தவுடன் நாம் காணும் யாவும் விலகிவிடும். காட்சிகள் விலகுவது, நாம் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இப்போது எங்கும் இருள் மற்றும் பேரமைதி நிலவும். உலகக் காட்சிகளைக் காணும் போது "இருளைக் காண்கிறோம்", "அமைதியாக உணர்கிறோம்" என்ற உணர்வுகள் இருக்கும். ஆனால், இப்போது, எல்லாம் நமக்குள் இருப்பதை உணர்வோம். "காண்கிறோம்", "உணர்கிறோம்" என்பது போய் "இருக்கிறோம்" என்ற உணர்வுமாத்திரமாக இருப்போம் ("இருளாய் இருக்கிறோம்", "அமைதியாய் இருக்கிறோம்").

இத்தனையும் ஓரிரு நொடிகளில் நடந்துவிடும். இவை நடந்து கொண்டிருக்கையில் நம்முள் பின்வரும் வரிசையில் உணர்வுகள் தோன்றும்:

- முதலில், சிறு வியப்பு
- பின்னர், பெரும் மகிழ்ச்சி
- இறுதியில், பேரமைதி!!

நாம் இது நாள் வரை தேடிய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். பகவான் அருளிய பல அறிவுரைகளின் உட்பொருள் புரிந்துவிடும். இந்நிலையைத்தான் "நிர்விகற்ப சமாதி" என்று எனது இடுகைகளில் குறிப்பிடுகிறேன்.

நமது வினைத்தொகுதி தீர்ந்து போயிருந்தால் இப்படியே இருந்துவிடுவோம். இல்லையெனில், அன்னை மாயை மீண்டும் தனது வேலையைத் தொடங்குவார். இன்னதென்று புரியாத கொடுமையான உருவங்கள் தோன்றும். அச்சப்படாமல் இருந்தோமானால், அடுத்து காமத்தைப் பயன்படுத்துவார்.

எடுத்துக்காட்டு: தாங்கள் பகவானது தீவிர அன்பர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், வேறொரு பெருமானது அறிவுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது மேற்கண்ட நிலையை அடைந்துவிடுகிறீர். தங்களை வெளிக்கொணர அன்னை இப்படியொரு எண்ணத்தை தோற்றுவிப்பார்: இந்நிலையை பகவானது அறிவுரையால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? வேறொருவரால் அல்லவா அடைந்திருக்கிறோம்! இது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?

இப்போது, தாங்களும் சிரித்துக்கொண்டே (சிரிப்பதற்கு உடல் இல்லை. சிரிப்பு என்ற உணர்வுடன்.) அன்னையுடன் உடன்பட்டு வெளிவருவீர். (சிரிப்பதற்கு காரணம் - சிறு பிள்ளைத்தனமான அன்னையின் நோக்கத்தை (லீலையை) தாங்கள் புரிந்துகொண்டதால்)

வெளிவந்த பின்.... உலகத்திற்குள் நாமிருப்போம்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.

இந்த துய்ப்பின் மூலம்:

- நாம் யாரென்று உணர்ந்து கொண்டோம்
- மனம், மாயை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டோம்
- இதுவரை புரியாமலிருந்த எத்தனையோ செய்திகள் புரிந்துவிடும். இனி எழும் கேள்விகளுக்கும் விடை காணமுடியும்.

மேற்கொண்டு பயணிக்க, சகஜ நிலையை அடைய, இவை பெரும் உதவியாக இருக்கும். திருவருளும் பகவானது அறிவுரைகள் வழியாக துணைபுரியும்.

oOOo

இனி, புகழ்பெற்ற சில உருவகங்களையும், உருவகக்கதைகளையும் மேற்கண்ட துய்ப்பை வைத்துப் பார்ப்போம்.

🌷 திருக்கடவூர் தலவரலாறு - நம்முள்ளிருந்து ஆற்றல் வெளிப்பட்டதை சிவஅடையாளத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாகவும், இதன் விளைவாக மரணபயம் (எமபயம்) நீங்குவதை எமனை உதைத்ததாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

🌷 சிங்கப்பெருமாள் திருவிறக்கம் - திருக்கடவூர் தலவரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டக் கதை. சிவஅடையாளத்தை தூணாகவும், சிவபெருமானை சிங்கப்பெருமாளாகவும் மாற்றியிருப்பர். அங்கு "மரணபயம் நீங்கியது" என்பதை இங்கு "ஆணவம் நீங்கியது" (இரண்யகசிபுவின் இறப்பு) என்று மாற்றியிருப்பர்.

🌷 முருகப்பெருமான் பிறப்பு - நம்முள் திரண்ட ஆற்றலே கந்தன் (திரண்டவன்) எனப்படும். இந்த ஆற்றல் திரளும்போதுதான் நம்மை நாம் உணர்கிறோம். எனவேதான் இவர் சுவாமிநாதன், சிவகுருநாதன், தந்தைக்கு மந்திரம் சொன்னவர் என்று போற்றப்படுகிறார். இவர் முழுவதும் வெளிவருவதற்குள்ளேயே இவரது பணி முடிந்துவிடுவதால் இவர் சிவக்குமாரன் - அன்னையின் தொடர்பில்லாமல் பிறந்தவர் - என்றழைக்கப்படுகிறார்.

🌷 ஆற்றல் வெளிப்பட்டு உலகக்காட்சி நீங்குவது என்பது ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இதை வைத்தே "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கிறார் திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கப் பெருமாள்).

🌷 சமாதியை விட்டு நம்மை வெளிக்கொணர இன்னதென்று சொல்லமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்த மாயை தான் காளியன்னை, கொற்றவை (துர்கை - கோட்டையைக் காப்பவர்) எனப்படுகிறார். (அழிக்கவே முடியாத பரம்பொருளையும் எதிர்ப்பவர் என்பதால் தான் சோழர்கள் இவரை தமது காவல் தெய்வமாக, போர் தெய்வமாகக் கொண்டிருந்தனர்)

🌷 காளியன்னையிடம் தப்பித்த பின், காமத்தைக் கொடுத்து நம்மை கவிழ்த்த மாயையே சிவகாமி எனப்படுகிறார். வைணவத்தில் இவர் வெண்ணெய் திருடிய கண்ணனாகிறார்.

oOOo

உலகக் காட்சிகளைத் தோற்றுவிக்கும் அன்னைக்கு உலகையும் நடத்த முடியாதா? ஏன் சிவபரம்பொருளை வெளிக்கொணர முயற்சிக்கிறார்? இதனால் தான் சிவமே உயர்ந்தது எனப்படுகிறது. பெண்தெய்வ வழிபாடும், அதிலிருந்து தோன்றிய வைணவமும் அடிப்பட்டுப் போவது இங்கு தான்.

oOOo

இணைப்புப்படம்: பாதாள லிங்கம், அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை. இந்த சிவஅடையாளத்தின் பின்னே பகவான் சில காலம் அசைவற்று அமர்ந்திருந்தார். இதை திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽 உணர்ந்து வெளியே சொன்னதால் பகவான் நமக்கு கிடைத்தார். இல்லையெனில், பகவானது உடல் பூச்சிகளுக்கு இரையாகியிருக்கும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

* - மோட்சம், சமாதி போன்ற ஆரியச் சொற்களுக்கு தமிழில் வீடுபேறு, நிலைபேறு என்ற அருமையான சொற்கள் உள்ளன. ஆனால், நிர்விகற்ப, சவிகற்ப, சகஜ சமாதிகளை நம் நிறைமொழியில் எவ்வாறு வழங்குவது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து இவ்விடுகையின் கருத்துப்பகுதியில் பதிவிடவேண்டுகிறேன்.

உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் தாயாகிய சைவத்தை சமயமாகவும், உலகிலுள்ள மொழிகளின் தந்தையாகிய தமிழை மொழியாகவும் (வள்ளற்பெருமானின் 🌺🙏🏽 வாக்கு) கொண்ட நமக்கு நமது சொற்கள் தெரியவில்லை!! 😔 நம் இனத்தை நம் இனமே இன்று வரை ஆண்டிருந்தால், பராமரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

Friday, August 21, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #61

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸முக்குணம் ... பாதமலை

மனதின் மூன்று குணங்களையும், உடலின் ஐம்புலன்களையும் அடக்கி, தகுந்த பக்குவ நிலையை அடைந்தோர் உள்ளத்தே புகுந்து உலாவும் இறைவன்.

ஏற்கனவே வீட்டிலிருப்பவர் மீண்டும் வீட்டிற்குள் எப்படி புக முடியும்? தன்மையுணர்வு என்பது புதிதாகவா நமக்குள் வருகிறது? நம்மை நாம் உணராத பொழுது என்று ஏதேனும் உள்ளதா? நம்மை நாம் எப்பொழுதுமே உணர்ந்திருந்தாலும், "இது தான் நாம்" என்று அறிவதில்லை. இந்த அறிவு தான் நமக்குள் புக வேண்டியது. இதுவே மெய்யறிவு. இவ்வறிவு கிடைப்பதையே - உட்புகுதலையே - "உள்ளத்தே புக்கு" என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது இறைவன் எங்கே உலாவ முடியும்? உலா எனில் மகிழ்ச்சியுடன் சுற்றிவருதல். இங்கு முனைப்பு அற்றிருத்தலைக் குறிக்கும். மெய்யறிவில் நிலைபெற்றவுடன் தானாகவே முனைப்பு என்பது போய்விடும். பின்னர் வாழ்க்கை என்பது... உலா வருதல் தான்!! மீதமிருக்கும் ஊழ்வினைப்படி வருவதை துய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

🔸தாய்வயிற்றில் ... பிறவாதமலை

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது தாய் மட்டும் எங்கிருக்க முடியும்? அவரும் இறைவனுக்குள் தான்! பார் எனும் தமிழ் சொல் குறிக்கும் உலகமும் (ஆரியச் சொல்லான "லோக"த்திலிருந்து வந்தது) இறைவனுக்குள் தான். தனக்குள் இருப்பவற்றில தான் எப்படி வந்து பிறக்க முடியும்? எனவே, இறைவன் பிறப்பற்றவாராகிறார். பிறப்பில்லா ஒன்று இறக்கவும் முடியாது. எனவே, இறைவன் இறப்புமற்றவராகிறார். சொற்களை சற்று மாற்றிக்கொண்டால், இறைவன் தொடக்கமற்றவர் முடிவுமற்றவர் என்றாகும். பிறப்பற்ற, இறப்பற்ற, தொடக்கமற்ற & முடிவற்ற பொருள் எப்படியிருக்கும்? என்றும் இருக்கும்! இதனால்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 இறைவனை  [என்றும்] உள்ளபொருள் என்றழைத்தார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, April 24, 2020

இஸ்ரவேலர் யேசு 100% சுத்தமான அக்மார்க் "நிறைஞானி"!! 😁

👆🏽 இந்த சான்றிதழ் போதுமா பரங்கிகளே? 🤭

எப்படியாவது தங்களது 🤮 மதத்தை நம் சமயத்தை விட உயர்ந்தது எனவும், இறந்த பிறகும் அடி வாங்கும் மாட்டுத் தோல் போல் இறந்து சுமார் 2000 ஆண்டுகளாகியும் இன்னமும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இஸ்ரவேலர் யேசுவே தலைசிறந்த மெய்யறிவாளர் எனவும் நிரூபிக்க இந்த பரங்கிப் பாவாடைகள் படும் பாடு... 🤧



தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இவர்களின் மற்றுமொரு தில்லாலங்கடி... மன்னிக்கவும்... முயற்சி தான் இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகை (இதன் முகநூல் முகவரி: https://www.facebook.com/129262133864798/posts/1697841883673474/). இதை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன் வேறு ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

2006-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது. அச்சமயம் கட்டுமரம் எதிர்கட்சி தலைவராக இருந்தது. அப்போது ஒரு திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியது. அப்படத்தில், ஆட்சியில் இருக்கும் ஒரு பெண் முதலமைச்சர், இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குத்தாட்டம் ஆடுவது போன்று சித்தரித்திருந்தது. இப்படத்திற்கு குமுதம் வார இதழ் தனது கருத்துரையை இவ்வாறு முடித்திருந்தது: தயவு செய்து, யாராவது உடனடியாக இவருக்கு ஒரு முதலமைச்சர் நாற்காலியை வாங்கிக் கொடுக்கவும். இல்லையெனில், இவர் மீண்டும் கதை-வசனம் எழுத ஆரம்பித்துவிடுவார்!! 😝

இது போன்று பரங்கிப் பாவாடைகள் இன்னொரு தில்லாலங்கடி முயற்சியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவ்விடுகையின் ஆரம்பத்திலேயே, நம் அனைவரின் சார்பாக, அக்மார்க் சான்றிதழ் கொடுத்துவிட்டேன். (ஏன் அக்மார்க்? அவர்கள் தாம் இஸ்ரவேலர் நல்லவர் என்று ருசித்துப் பார்த்தவர்களாயிற்றே! 😆)

இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகையின் தமிழாக்கம்:

"குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, இயேசு ஏன் 'தந்தையே' என்று அழைத்தார்" என்று பகவானிடம் 🌺 🙏🏽கேட்டேன். அவர் ஒரு நிறைஞானி என்ற பட்சத்தில், எல்லாவற்றையும் கானல்நீர் காட்சியாக (அல்லது திரையில் தோன்றும் காட்சியாக) கண்டிருப்பார். எனில், இருப்பற்ற தோற்ற மாத்திர காட்சிகளுக்காக அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். (தன்னை வேறாகவும், மக்களை வேறாகவும் இறைவனை வேறாகவும் கண்டதினால் தான் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினார். ஆகையால், இயேசு ஒரு நிறைஞானி அல்ல என்பது முடிவு.) இதற்கு #பகவான் #ரமணர், "மெய்யறிவு பெற்று விடுதலை அடைந்த பின்னரும் சில ஞானியர் துன்பப்படுவது போல் தோன்றும். இது உடலளவு மட்டுமே. மீதமிருக்கும் ஊழ்வினையால் உண்பது, உறங்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இவற்றால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை." என்று விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வு எந்த நூலில் பதியப்பட்டிருக்கிறது? யார் கேள்வி கேட்டது? எந்த சூழ்நிலையில் பகவான் இந்த விளக்கம் அளித்தார்? போன்ற எந்த குறிப்புகளும் இந்த இடுகையில் இல்லை. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு பகவானது படம், பெயர், ஆசிரமம் போன்றவற்றை வைத்து முட்டுக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்!! 😠

பகவான், ஓரிடத்தில், "நீயே எல்லாம்!" என்பார். இன்னோரிடத்தில், "நீ ஒன்றுமே இல்லை!!" என்பார். 😃 என்ன சொல்கிறார் என்பது மட்டும் முக்கியமல்ல; யாருக்கு சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார் என்பனவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பரங்கிப் பாவாடைகள் தங்களது 🤮 மதத்தை பெரிதென நிலை நாட்டவும், தங்களது மத நிறுவனரே உயர்ந்தவர் என நிலை நாட்டவும், பகவானை சோதிக்கவும் வந்திருப்பர். சில சமயம், பகவான் தான் சொல்ல வேண்டியதை சொல்லுவார். சில சமயம் தன்னிடம் கேள்வி கேட்டவர் விரும்பியதைச் சொல்லி இடத்தை காலி செய்ய வைப்பார். 😁 மேற்கண்ட விளக்கம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பகவானிடமிருந்து வெளிப்பட்டது என்று தெரியவில்லை.

ஒரு #மெய்யறிவாளர் (#ஞானி) தான் மட்டுமே மாறாத, அழியாத, சுயஒளி கொண்ட #உள்ளபொருள் என்பதையும், தனது உடல் முதற்கொண்டு தான் காணும் யாவும் மாறக்கூடிய, அழியக்கூடிய, சுயஒளியற்ற, இருப்பற்ற தோற்றக் காட்சிகள் என்பதையும் நன்கு உணர்ந்தவர். சமீபத்தில் கூகுள் நமது திறன்பேசி மூலமாக, நாம் விரும்பும் இடத்தில் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை முப்பரிமாண வடிவில் தோற்றுவிக்கும் வசதி செய்து கொடுத்தது. சிலர் இவற்றை வைத்து சிறு குழந்தைகளை பயமுறுத்தி விளையாடியிருப்பர். இவ்வுருவங்கள் உண்மை என்று அஞ்சிய/நம்பும் குழந்தைகளைப் போன்றவர்கள் அஞ்ஞானிகள். இவை வெறும் உருவங்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மெய்யறிவாளர்கள். இருவருக்கும் தோன்றும் காட்சி ஒன்றுதான். ஆனால், மெய்யறிவாளர்கள் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தவர்கள்!

திறன்பேசியில் தோன்றும் புலி உறுமுவதை வைத்து, அதற்கு பசிக்கிறது போலிருக்கிறது என்று எண்ணி, "கூகுளே, இந்த புலிக்கு உணவிடு!!" என்று கூவுபவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? 🥴

பரங்கிப் பாவாடைகள் கிண்டிய கதாபாத்திரத்தை தான் கிண்டலடிக்கிறேன். உண்மையான #இஸ்ரவேலர் இயேசுவை அல்ல. இன்று அமெரிக்கா, கனடா என்று அனைவரும் ஓடுவது போல், அன்று அனைவரும் அனைத்து வளங்களும் கொண்ட செழிப்பான பாரதத்தாயை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களில் இவரும் ஒருவர். இங்கே வந்து அத்வைதமும் பௌத்தமும் கற்று, தன் நாட்டிற்குத் திரும்பி, அடிமை மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த தனது மக்களை உய்விக்க போராடினார். யாரை உய்விக்க போராடினாரோ அவர்களாலேயே துரத்தியடிக்கப்பட்டார். மீண்டும் பாரதம் திரும்பி, பல காலம் வாழ்ந்து, காஷ்மீரத்தில் சமாதியானார்.

இவரது இனம் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது. கல்வியறிவற்றது. பண்படாதது. ஆகையால் இவரது அறிவுரைகள் மிகவும் திரிந்து போயின.

💥 #குறுக்கை - உயிரற்ற உடல். தூக்கி எறியவேண்டியது. ஆனால், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!!

💥 குறுக்கையில் சித்ரவதை செய்யப்பட்டு அறையப்பட்டிருக்கும் யேசு - பெரும் போராட்டத்திற்கு பின், நீண்ட கால தவத்திற்கு பின் அழிக்கப்பட்ட மனம். கொண்டாடப்பட வேண்டிய சின்னம்! ஆனால், இதைக் கண்டு அழுகிறார்கள்!!

💥 #உயிர்தெழுந்த #யேசு - மனம் அழிந்த பின் வெளிப்படும் தூய்மையான உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்). மனதையும் உள்ளபொருளையும் குறிக்க #இயேசு என்ற ஒருவரையே பயன்படுத்தியதால் தான் அனைத்து குழப்பமும்!!

பரங்கியரின் மதம், இத்தாலியிலுள்ள பைசா கட்டிடம் போன்றது. அடித்தளம் சரியில்லாதது. சரிந்து கீழே விழும் வரை, "ஐயா வாங்க! அம்மா வாங்க! சரியும் கட்டிடம் பாருங்க!" என்று கூட்டம் சேர்த்து காசு பார்க்கலாம். இது தான் நடந்து கொண்டிருக்கிறது! 👊🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, September 6, 2019

உச்சிஷ்ட கணபதி



இப்புருடாவிற்கு (தினமலர் - வாரமலர் - 01/09/2019) 'U' சான்றிதழும் தரமுடியாது. 'A' சான்றிதழும் தரமுடியாது. "உவே" 🤮 சான்றிதழ் வேண்டுமானால் கொடுக்கலாம்!! 😄 பெரிய கோயில், ஒரு தலைக் காதல், சாபம், மாயாஜாலம், வித்தியாசம் என்ற பெயரில் பைத்தியக்காரத்தனம், ... இவையெல்லாம் தான் ஆன்மிக / பக்திக்கதைகளின் மூலப்பொருட்கள் போலிருக்கிறது! 😏

#காணபத்யம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம். இம்மதத்திற்காக உருவாக்கப்பட்ட தனி அடையாளங்களில் ஒன்று தான் #உச்சிஷ்ட #கணபதி. எப்போது சைவத்தோடு காணபத்யம் இணைக்கப்பட்டதோ, அப்போதே அன்றிருந்த சீர்திருத்தவாதிகள் இவற்றையெல்லாம் அழித்திருக்கவேண்டும். சரியாக போடப்படாத மாவுக் கட்டினால் தவறாக இணைந்து விடும் எலும்புகளைப் போல இவை சைவத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன!!

இணைப்புப் படத்தில் கட்டமிட்டுக் காட்டிய பகுதியில், "இதனாலேயே இப்படி ஒரு அமைப்பில் சிலை வடித்துள்ளனர்" என்ற வரி வருகிறது. அது என்ன அமைப்பு?

*விநாயகரின் துதிக்கை, பிறந்த மேனியாக உடனிருக்கும் அம்மனின் (விக்னேஷ்வரி) பெண்குறியை தொட்டுக் கொண்டிருப்பது அல்லது பெண் குறிக்குள் நுழைந்திருப்பது போன்ற அமைப்பு.*



எதற்கு இப்படியொரு அமைப்பு?

*உச்சிஷ்டம் என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. இங்கு இதன் பொருள் எஞ்சியது.* என்ன எஞ்சியது?

*உடலுறவு முடியும் தருவாயில், ஆணிடமிருந்து விந்து நீர் வெளியேறும் அந்த கணப்பொழுதிற்கு அவன் தன் உடலுணர்வை இழக்கிறான். அச்சமயம் மனம், உலகம் என எல்லாம் தானாக விலகிவிடும். எல்லாம் விலக ஒன்று மட்டும் எஞ்சியிருக்கும். உச்சிஷ்டம். அந்த ஒன்று தான் உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள்!! 🌺🙏🏼*

*எல்லாம் விலகியதைத் தான் பிறந்த மேனியாக உள்ள அம்மன் உணர்த்துகிறது. எல்லாம் விலகிய நிலையில் பரம்பொருள் தானே புலப்படும் என்பதை பெண்குறியைத் தொட்டுக் கொண்டிருக்கும் துதிக்கை உணர்த்துகிறது.* (இதை இப்படியே புரிந்து கொள்ள முயலவேண்டுமேயன்றி, இத்தோடு அத்வைதம், சைவம் என மற்றவற்றை ஒப்பிட்டால் குழப்பமே மிஞ்சும்.)

உள்ள பொருளை உணர்த்த / உணர எத்தனையோ வழிகள் இருக்க, உடலுறவை ஏன் தூக்கிப்பிடித்தார்கள்?

நம் நாட்டில் எதற்கு இத்தனை கட்சிகள், சங்கங்கள், "பொது நல" அமைப்புகள்? இதற்கான பதில் தான் மேலுள்ள கேள்விக்கும். தனக்கு 4 பேர் வேண்டும். நோகாமல் சம்பாதிக்கவேண்டும். எல்லோரும் தன்னைத் தேடி வரவேண்டும், சபையில் முன்னிலையில் இருக்கவேண்டும். இதற்கு அன்று சுலபமான வழி ஆன்மிகம். இன்று சமூக அநீதி, இந்து மதச்சார்பின்மை, பெண்ணியம், திராவிஷம், தேசத் துரோகம், பான்பராக்கிஸம்...

தனக்கு பெயர், புகழ், பணம், தனித்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காக, சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல், ஒரு வீட்டு இளம்பெண், எதிர் வீட்டிலிருக்கும் தந்தையை ஒத்த கிழவரை விரும்புவது போன்றும், ஒரு வீட்டு மணமான நடுத்தர வயதுப்பெண் எதிர்வீட்டு மணமாகாத இளைஞனை விரும்புவது போன்றும் சித்தரிக்கும் படைப்பாளிகளைப் (?) போன்றவர்கள் தாம் இது போன்ற வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள். எதையாவது செய்து மன்னரிடம் பொன்முடிப்பை பெற்றுக் கொண்டு காலத்தை ஓட்டிவிட வேண்டும்.

இது போன்ற கோணல் புத்தி இங்கு மட்டுமில்லை. உலகெங்கும் இருந்துள்ளது. *எகிப்தில், ஆன்மிகத் தலங்களில் இறையுணர்வு பெறும் வழிமுறைகளில் ஒன்றாக உடலுறவு கொள்ளுதல் இருந்துள்ளது.* அங்கிருக்கும் தேவதாசிப் பெண்களை அனுபவிக்க மேல்தட்டு மக்கள் வரிசை கட்டி நின்றுள்ளனர். இதுவே, "இறையுணர்வு தானே? பின்னாடி போ. நம்ம கருவாயன் இருப்பான். அவன் கிட்ட போய் தலைய குனிஞ்சு ஒக்காரு. உன் தலையில ஒரு தேங்காய ஒடைப்பான். சில வாரத்துக்கு இறையுணர்வு நிக்கும்." என்று சொல்லியிருந்தால்... துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எல்லாம் ஓடியிருக்கும். 😝

*சைவத்துக்குள் வந்த பின் விநாயகரின் பொருள் அறிவு மட்டுமே!!*

🌸🏵️🌼🌻💮

உள்ளது அலது உள்ள உணர்வு உள்ளதோ?
#உள்ளபொருள் உள்ளல் அற உள்ளத்தே
உள்ளதால், உள்ளம் எனும் உள்ளபொருள்
உள்ளல் எவன்? உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல். உணர்.

*-- பகவான் ஸ்ரீரமணர், உள்ளது நாற்பது*

பரம்பொருளுக்கு "உள்ளபொருள்" என்று அழகிய தமிழ் பெயரிட்டு, அதை நிரூபித்து, அதை அடையும் வழியை இரத்தினச் சுருக்கமாக, வெகு அழகாக இப்பாடலில் வெளியிட்டிருக்கிறார் பகவான்!! 🌺🙏🏼

🌸🏵️🌼🌻💮

இறையுணர்வு பெற நமது முன்னோர்கள் உருவாக்கிய உத்திகளில் சிலவற்றைப் பற்றி இந்த இடுகையில் பதிவு செய்துள்ளேன்: 

https://samicheenan.blogspot.com/2018/09/blog-post_20.html?m=1

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼