Sunday, May 8, 2016

திராவிடர்களின் பூர்வீகம் சிந்து சமவெளியாம்!! 😂


(தினமலர் - சென்னை - 08/05/2016)

அடுத்து, திராவிடர்கள் சுமேரியாவிலிருந்து குடியேறியவர்கள் என்பர் (ஆதாரம்: மொட்ட சிவா எழுதிய, கிறுக்குப் பதிப்பக வெளியீடான டுபாக்கூர் புத்தகம்). 😂😂

இறுதியாக, எச்சம் மச்சம் விகுதி தகுதி என ஏதாவது காரணம் காட்டி 'சு'-வைக் கழட்டிவிட்டு தமிழர்கள் மேரியர்கள் என்பர் (ஆதாரம்: கெட்ட சிவா எழுதிய, தி பிந்து வெளியீடான ஜிங்குச்சான் புத்தகம்). 😂😂😂

💥 லெமூரியா கண்டத் தத்துவம் என்னவாயிற்று?
💥 ஆப்பிரிக்கா & அண்டார்டிகா தத்துவம் என்னவாயிற்று?
💥 "கல் தோன்றி மண் தோன்றா... " கணக்கு என்னவாயிற்று?
💥 தென்மதுரை எங்கே போயிற்று?
💥 தமிழனின் வருடப்பிறப்பு கணக்கு சிந்து சமவெளிக்கு எப்படி ஏற்புடையதாகும்? (பூமத்தியரேகைக்கு அருகில் இருந்தால் தான் இந்த கணக்கு சரி வரும்)
💥 அவன் நாட்டில் ஓடிய பஃருளி எங்கேயிருந்தது? சிந்து சமவெளியிலா? (பஃருளி - பல துளி; சிந்து - சில துளி; சிந்துவோடு ஒப்பிடுகையில் பஃருளி மிகப்பெரிய ஆறு)

உலகின் மூத்தக்குடியான தமிழன் தோன்றியது இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே. அப்பகுதியெல்லாம் கடல் கொண்டுவிட்டது. கீழிருந்து வடக்கு நோக்கிச் சென்றது நம் மூத்தக்குடி.

சிந்து சமவெளி நாகரிகம் தமிழனதே. ஆனால், அங்குத் தோன்றி தெற்கே பரவவில்லை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கிப் பரவியது.

தமிழன் உலகின் மூத்தக்குடி, தமிழ் உலகின் மூத்தமொழி - என்பனவெல்லாம் இவர்களுக்கு பிரச்சினையில்லை. இவர்கள் குறி வைப்பதெல்லாம் தமிழனின் சமயத்தை! அவனது சமயத்தின் உருக்குலைந்த எச்சமே இன்றைய இந்து சமயம்! இந்த மிச்சத்தை அழிக்கத் தானே இத்தனைப் பாடுகள். 😉 "தமிழனது மதம் சமணம்" என்ற பிட்டைப் போட்டுப் பார்த்தார்கள். அவ்வளவாக வேலை செய்யவில்லை. ஆகையால், இந்த புது பிட். 😡

இவர்களுக்கென்றே சில கல்வி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும், பதிப்பகங்களும் உள்ளன. கருங்காலிகளை அடையாளம் கண்டு முனைவராக்குவார்கள், குறும்பட இயக்குனராக்குவார்கள். அவர்கள் வழியாக இவர்கள் விதைக்க விரும்புவதை "ஆராய்ச்சி" கட்டுரைகளாக, குறும்படங்களாக வெளியிடுவார்கள். அவற்றை உலகின் முக்கிய கல்விக்கூடங்களுக்கும் (😛), சந்தைகளுக்கும் எடுத்துச் செல்வார்கள். கல்வித் தந்தைகளின், அறிவுஜீவிகளின் பார்வையில் படும்படி செய்வார்கள். பின்னர், அந்த தந்தைகளின் மற்றும் ஜீவிகளின் வழியாக "பெரும் உண்மைகளை" வெளியிடுவார்கள். 😜 நாமும், மேற்கத்தான் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம் பிள்ளைகளுக்கு "அறிவை" ஊட்டுவோம். தமிழன்டா!! 😝

posted from Bloggeroid

"Let's talk about sex"!!

☝ இது இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளிவந்த ஒரு நற்செய்தி! 😀 (m.thehindu.com/features/magazine/these-initiatives-are-pushing-the-boundaries-of-the-discourse-on-sexuality/article8565359.ece)



சில வாரங்களுக்கு முன்னர் தான் "திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓர் அறையில் தங்கினால் என்ன குற்றம்?" என்ற ரீதியில் ஒரு நற்செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது, இப்படி ஒரு நற்செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும், நற்செய்தியின் நடுவில் ஒரு அற்புதமான வரைபடத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை தனியாக மறுபடியும் இணைத்துள்ளேன். பெரிதுபடுத்திப் பார்க்கவும். "இந்த கருமத்தை துறவி. வேலன்டைன் ஆசிர்வதிக்கிறார்" என்று ஒரு வாசகம் வேறு அதில் இடம் பெற்றுள்ளது. பரங்கி மதத்தினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? 😡



இந்த நற்செய்தி வெளியிட எவ்வளவு பணம் பெற்றார்கள் என்று தெரியவில்லை. அல்லது, இவர்களது குடுமி பரங்கிகளிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. 😕

இதோடு, பிப்ரவரி 2, 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றத்தில் மெக்காலேஎன்னுமொரு பரங்கி தாசிமகன் ஆற்றிய உரையையும் இணைத்துள்ளேன். 😤 அதில் சிவப்பு அடிகோடிட்ட ஒரு வரி தான் இது போன்ற நற்செய்திகள் வெளியாவதின் மூலகாரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.



300 வருடங்களாக நேரடியாகவும், இன்று வரை மறைமுகமாகவும் ஆண்டும், சுரண்டியும், அழித்தும் வெறி தீரவில்லை போலிருக்கிறது. மீதமுள்ளதையும் அழிக்கத்தான் அவ்வப்போது இப்படி நற்செய்தி விதைகளை 💣 தூவி வருகிறார்கள் என்று தோன்றுகிறது!!

(இணைப்புகள்: The Hindu - Sunday Magazine - சென்னை - 08/05/2016 & தாசிமகன் மெக்காலேவின் உரை)

posted from Bloggeroid

Thursday, May 5, 2016

🎶 கனிந்த உன் வேணுகானம் ....


(www.independent.co.uk/news/science/free-will-could-all-be-an-illusion-scientists-suggest-after-study-that-shows-choice-could-just-be-a7008181.html)

இந்த ஆராய்ச்சி எல்லாம் என்றோ நம் மூதாதையர் முடித்து விட்டனர். அருமையான விடையும் கண்டறிந்தனர். தாங்கள் கண்டதை நமக்கு ஒரே வார்த்தையில் ஒரு ரத்தினம் போல் விட்டுச் சென்றனர். அவ்வார்த்தை - பிரகிருதி / இயற்கை!

இந்த அண்டம் (அணு முதல் கருந்துளை வரை) தானாக இயங்குகிறது. அதன் பிரதிபலிப்பாகிய பிண்டம் எனும் நம் உடலின் இயக்கமும் அவ்வாறே. தானாக இயங்கினாலும் தாறுமாறாக இயங்காமல், ஒரு வரைமுறையின் படிதான் இயங்குகிறது. அதாவது, விதிப்படிதான் இயங்குகிறது. (உடனே நம் சிந்தனை "தலைவிதி"-யை நோக்கிப் பாயும்! 😀 விதி என்பதற்கு Rule என்றும் பொருள் கொள்ளலாம்.)

உயிருள்ளவைகள் புரியும் வினைகளும், அதனால் விளையும் எதிர்வினைகளும் அவ்வாறே. எல்லாம் ஒரு ஒழுங்குடன் நடந்தாலும், எல்லாம் தோற்றமாத்திரமே!

நான் இந்த இடுகையை எழுதவில்லை. எழுதியது பிரகிருதியே. நீங்கள் இதைப் படிக்கவில்லை. படிப்பது பிரகிருதியே. 😂😂

நம் சமய அடிப்படைகள் தெரியாத ஒருவர் இதைப் படிக்க நேர்ந்தால், கேனப்பயல் என்று கிண்டலடிக்க வாய்ப்புண்டு. 😉

அப்படிப்பட்டவர்களுக்கும், "மேற்கே சரி" என்னும் அறிவுஜீவிகளுக்கும் பகவான் ஸ்ரீரமணரின் இந்த வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்கும்: "அவரவர் பிராரப்தம் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மெளனமாய் இருக்கை நன்று."



பிரகிருதி என்னும் இயற்கையின் செயல்பாட்டையும், நாம் எப்படி வாழ வேண்டும் என்னும் சூட்சுமத்தையும் ஒருங்கே வெளியிட்டிருக்கிறார் பகவான். அவர் குறிப்பிடும் மெளனம் வாய் மூடிய மெளனமன்று. எண்ணங்களற்ற மெளனம். கண்ணபிரானின் கையிலிருக்கும் புல்லாங்குழல் போன்று நாமிருக்க வேண்டும். கானம் எழுவது நம்மால் அல்ல என்பதை உணரவேண்டும். முழுவது உணருவது என்பது ஞானமடைந்த பின்னர் தான். ஆனால், இதையெல்லாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே, வாழ்க்கை கண்ணன் எழுப்பும் வேணுகானம் தான்!! 😍



எல்லாம் சரி. இதற்கும் இணைக்கப்பட்டிருக்கும் பரங்கி இணையப் பக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இங்கே சொல்லப்பட்டவைகளை பரங்கி ஒப்புக் கொள்வானா? என பல கேள்விகள் எழும்.

அதெப்படி பரங்கி ஒப்புக்கொள்வான்? யேசுநாதரை மேற்கோள் காட்டியிருந்தால் பரவாயில்லை. மேற்கோள் காட்டியிருப்பது ஸ்ரீரமணரையும் & கண்ணபிரானையும் அல்லவா. 😜

கிழக்கிலிருந்து சுட வேண்டியது. சுட்ட இடம் அழிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது. சுட்டதை பிட்டு பிட்டாக பிரித்துக் கொள்ளவேண்டியது. விதவிதமான பெயர்களை வைத்துக் கொள்ளவேண்டியது. ஒவ்வொன்றாக வெளிவிடவேண்டியது. அவர்களுக்கு அவர்களே புகழாரம் சூட்டிக் கொள்ள வேண்டியது. அதற்கு Copyright/left/top/bottom பெற்றுக் கொள்ளவேண்டியது. உலகத்தின் தலையில் கட்டவேண்டியது. கிடைக்கும் வருமானத்தில் "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என தானும் அழிந்து உலகையும் அழிக்கவேண்டியது! 😡😡😡

posted from Bloggeroid

Wednesday, May 4, 2016

Ungrateful World!! 🌏

From WhatsApp:

One night, just before the shopkeeper was about to close the shop, a dog came into the shop.

There was a bag in its mouth. The bag had a list of items to be bought and money. The shopkeeper took the money and kept the items in the bag.

Immediately, The dog picked up the bag of items and left. The shopkeeper was surprised and went behind the dog to see who the owner was.

The dog waited at the bus stop. After sometime, a bus came and the dog got into the bus. As soon as the conductor came, it moved forward to show his neck belt which had money and the address as well. The conductor took the money and put the ticket in his neck belt again.

When it reached the destination, the dog went to the front and wagged his tail indicating that he wanted to get down. The moment the bus stopped, it got down. The shopkeeper was still following it.

The dog knocked on the door of a house with its legs. Its owner came from inside and beat it with a stick.

The shocked shopkeeper asked him "why are you beating the dog?", to which the owner replied, "he disturbed my sleep. It could have taken the keys with it."

This is the truth of life. There is no end to the expectations people have from you. The moment you go wrong, they start pointing at our mistakes. All the good done in the past is forgotten. Any small mistake committed then gets magnified. This is the nature of this material world.

👊 👏👌👍

posted from Bloggeroid

Monday, May 2, 2016

Sunday, May 1, 2016

🔯 பானக நரசிம்மர் - மடக் மடக் டமக் டமக் 🔯


(தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 23/04/2016)

இது போன்ற அறிவுகெட்ட கதைகளால் தான் நம் சமயம் கேலிக்குள்ளாகிறது! 😠 பெரும்பாலான இந்துக்கள் சமயமூடர்களாகவும், சில சமயம் தாம் சார்ந்த சமயத்தை எள்ளி நகையாடும் கருங்காலிகளாகவும் இருப்பதற்கும் இந்தக் கதைகளும் இதைப் புனைந்த சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட மனிதர்களே காரணம்!!

💥 "பானகால நரசிம்மர்" - தெலுங்கில் பானகாலு என்பதையே தமிழில் பானகால என எழுதியிருக்கிறார்கள். சரியான தமிழ் பெயர் "பானக நரசிம்மர்". பெயர்களை சரியாக தமிழுக்கு மாற்றாமல் வெளியிடுவது என்பது விற்பனை யுக்திகளுள் ஒன்று. கடவுளை விற்பது பரங்கியரின் வேலை. 😝 இந்த ஈன வேலையை நாம் செய்யத் தேவையில்லை.

💥 "தல வரலாறு" என்பது பெரும்பாலும் "தல புருடா"! சில சமயம் ஏதாவது உண்மை அதில் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும், "டுஷ்" (கண்டசாலாவின் இசை - தந்திரக் காட்சிகளுக்கு உபயோகப்படுத்துவது 😂) காட்சிகள் தான் நிறைந்திருக்கும். நம் மக்களை என்றோ சமயமூடர்களாக்கி விட்டனர். மூடர்களை வழிநடத்தவும் கவர்ந்திழுக்கவும் உபயோகப்படுவது டுஷ் விஷயங்களும் பயமுறுத்தல்களும் ("சாமி கண்ணை குத்திடும்") தான்! (மற்ற மதங்களிலும் இதே கதைதான்) 😂😂

💥 "பாதி மாயம். மீதி பிரசாதம்." என்பது திருநெல்வேலி அல்வா. 😛 சிலை "மடக் மடக்" என்று சப்தமிட்டாலும் சரி, "டமக் டமக்" என்று சப்தமிட்டாலும் சரி, இதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை. இது சிலை செய்தவரின் திறமையையும், சிலையை ஸ்தாபித்தவரின் திறமையையும் காட்டுகிறது. சிலைக்கு கீழே பானகத்தை வெளியேற்ற / உறிஞ்ச வழி செய்திருப்பார்கள். மலைப்பகுதி என்பதால் சுலபமாக வெளியேறும் / உறிஞ்சப்படும்.

💥 "நரசிம்மம்" என்ற பெயரை பெரும்பாலும் நரன் + சிம்மம் என்று பிரித்து "பாதி மனிதன் + பாதி மிருகம்" என்று பொருள் கொள்வர். ஆனால், உண்மை அதுவல்ல.

ந + ர + சிம் + ஹ என்பதே சரியாக பிரிக்கும் முறை.

ந - இல்லை
ர - காமம் / பாசம் / பற்று
சிம் - பிளத்தல் / பலி கொள்ளுதல்
ஹ - சிவபெருமான் (பரமன்) (#)

"எல்லா பற்றுகளையும் விட்ட ஜீவனை, பரமன் தானாகவே ஆட்கொள்ளுவான்" என்பதே சரியான பொருள். இதையே தான் நரசிம்ம அவதாரக் கதை உணர்த்துகிறது. (##)

இப்படி ஞானமடைதல் நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக விளக்கியிருப்பார்கள். உதாரணத்திற்கு சில....

💮 திருவரங்கத்தில் நரசிம்மத்திற்குப் பதிலாக, பெருமாளிடமிருந்து கிளம்பிய ஒரு பெண் சக்தி அசுரன் முரனைக் கொன்றது என்பார்கள். மூலவர் அரங்கநாதரின் சிலைக்கு கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைநாதரின் விளக்கமாக இது இருக்கலாம்.
💮 சைவத்தில் சிவபெருமானே வெளிப்படுவதாக வரும். திருக்கடவூரில் மார்க்கண்டேயருக்கு அருள, சிவபெருமானே வெளிப்பட்டு எமனை அழித்தார் (எமபயம் / உயிர்பயம் போக்கினார்) என்பார்கள். இந்த விளக்கம் மூலவர் அமிர்தகடேஸ்வரரின் கீழ் சமாதியாகியிருக்கும் மார்கண்டேய மகரிஷியின் விளக்கமாக இருக்கலாம்.
💮 கெளதம புத்தர் விளக்கும் சூன்ய / நிர்வாண நிலையும் இதுவே. 6 வருடங்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து ஒன்றும் நடக்காமல், இறுதியில் கயாவில் 6 நாட்கள் தீவிரமாக ஆன்மவிசாரம் (தன்னாட்டம்) மேற்கொண்டு நிர்வாண நிலையை (ஞான நிலையை) அடைந்தார்.
💮 ஜென் பௌத்தத்தின் நிறுவனரான போதிதர்மரின் (இவர் தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்) போதனைகள் யாவும் அத்வைத ஞான நிலையைப் பற்றியே பேசுகின்றன.
💮 மேற்கில், "யேசுநாதர் இறந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார்" என்பதும் இதுவே. அதாவது, மூன்று நாட்கள் தொடர்ந்த தீவிர சாதனையின் இறுதியில் தனித்துவம் இழந்து பரமனில் கலந்து விடுகிறார். அதாவது, ஜீவன் மரித்து சிவமாக வெளிப்படுகிறார்.

நரசிம்ம அவதாரம் ஆந்திராவில் உள்ள அகோபில மலைக்குகையில் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது, அங்கே வசித்த மகான்கள் யாராவது இந்தக் கதையை புனைந்திருப்பார்கள். அல்லது, அங்கே ஞானமடைந்த மகான், தான் ஞானமடைந்த விதத்தை இப்படி விளக்கியிருப்பார். இந்த விளக்கம் / உருவகம் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலமாயிருக்கும். அதனால் தான் ஆந்திராவில் நரசிம்மர் கோயில்கள் அதிகம். பின்னர், ஏனைய இடங்களுக்கு பரவியிருக்கும்.

ஒரு கோயிலுக்கு செல்கிறோம் என்றால் அங்கு சமாதியாகியிருக்கும் மகானை வணங்க அல்லது அங்கேயுள்ள இறைவனின் பெயர் / சிலை, கோயிலின் அமைப்பு வழியாக நம் முன்னோர் நமக்கு சொல்ல வந்த உண்மைகளைப் பற்றி சிந்திக்க என்பன போன்ற குறிக்கோள்களுடன் சென்றால் நமக்கு லாபம். அதை விட்டு "மடக் மடக்" சப்தம், சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது, தங்க கோயில், வைர அங்கி, மிளகாய் யாகம் போன்ற விற்பனை யுக்திகளுக்காக செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் இல்லை.

கோயிலுக்குச் செல்வது என்பது நம் உடலேக் கோயில் என்று உணர. இறைவனை வணங்குவது என்பது நம்முள் உறையும் இறைவனை உணர. 👍

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌞

🌸🌹🍀🍁🌺🌻🌼

# - இங்கே, சிவன் எப்படி வந்தார்? "நரசிம்மர் சிவாம்சம் பொருந்தியவர்", "இவரை வணங்க ஏற்ற நேரம் சிவனுக்குரிய பிரதோஷ காலம்" என்பன போன்ற செய்திகளை நினைவு கூர்ந்து பாருங்கள். இவர் யார் என்று புரியும். எப்படி மவுனராகம் கதையை சுட்டு சில மாற்றங்களை செய்து ராஜா ராணி என்று வெளியிட்டு காசு பார்த்தார்களோ, அப்படியே சைவ / அத்வைத உண்மைகளை எடுத்துக் கொண்டு சில தகிடுதத்தங்களை சேர்த்து வைணம் / விசிஷ்டத்வைதம் என்று காசு பார்த்துவிட்டார்கள். ஞாபகமிருக்கட்டும், நாமம் என்பது ஏமாற்று வேலைக்கு சமம். "பட்ட போட்டுட்டாங்களா?" என்று யாரும் கேட்பதில்லை. "நாமம் போட்டுட்டாங்களா?" அல்லது "நாமம் போட்டுட்டியா?" என்று தான் கேட்பர். 👊

🌸🌹🍀🍁🌺🌻🌼

## - நரசிம்ம அவதார நிகழ்வு - ஜீவன் சிவமாக மாறும் ஞானமடைதல் நிகழ்ச்சியாகும்.

⚡ இரண்யகசிபு - "நான் இவ்வுடல்" என்ற நுண்ணிய அகந்தை.

⚡ பிரஹலாதன் - அகந்தையிலிருந்து பிறந்த ஜீவன். இங்கே, கூர்ந்த அறிவும், தெளிந்த மனதும், பொறுமையும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதாவது, அறிவு முதிர்ந்த ஜீவனைக் குறிக்கும்.

⚡ நரசிம்மம் - தொடர்ந்த முயற்சியில் இருக்கும் ஜீவன், ஒரு நிலையில் தன் இயலாமையை உணர்ந்து முயலாமல் நிற்கும். இப்படி நிற்பதே சரணாகதி எனப்படும். இவ்வாறு நின்ற ஜீவனை, பரமன் - சிங்கம் போல் - பாய்ந்து வந்து, மீதமிருக்கும் அகந்தையை அழித்து ஆட்கொள்ளும். அதாவது, உள்ளிருந்து வெளிவரும் தெளிவினால், அறிவு தெளிவடையும். "நான் இவ்வுடல்" என்ற அகந்தை அழிந்து "நான் நானாக" நிற்கும். இந்நிகழ்வுக்கு ஞானமடைதல் என்று பெயர்!!

இங்கே பகவான் ஸ்ரீரமணரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்:

"ஞானமடையும் போது, ஞானம் சிறிது சிறிதாக கிடைக்குமா அல்லது ஒரேடியாக கிடைக்குமா?" என்று ஒர் அன்பர் கேட்க, அதற்கு பகவான் பதிலாக கேட்ட கேள்வி: "இருட்டறையில் விளக்கேற்றும் போது, இருள் மெல்ல மெல்ல விலகுமா அல்லது ஒரேடியாக விலகுமா?".

வெளிச்சம் கண்ணிமைக்கும் நேரத்தில் அறையெங்கும் பாய்ந்து இருட்டை போக்கும். அங்ஙனமே, உள்ளிருந்து சிங்கம் போல் பாய்ந்து வெளிவரும் தெளிவு, "நான் இவ்வுடல்" என்ற அகந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து, ஞானத்தைக் கொடுக்கும்.

இது விசிஷ்டத்வைதக் கதை என்பதால், ஞானமடைந்த பிறகும், பரமனும் (நரசிம்மம்) ஜீவனும் (பிரஹலாதன்) தனித்தனியாகவே இருக்கின்றன. இதுவே, அத்தைவதக் கதையானால் அகந்தை அழிந்து ஜீவன் சிவனாகியிருக்கும். இதை, பகவான் ஸ்ரீரமணரின் பாடல் வரிகள் விளக்கும்:

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற!
உபாதி உணர்வே வேறு உந்தீபற!!

posted from Bloggeroid