Showing posts with label யேசுநாதர். Show all posts
Showing posts with label யேசுநாதர். Show all posts

Friday, December 23, 2016

உச்சந் தொட்ட ஊழியம்

அப்படிப் போடு அரிவாளை!! 😂

என்னமாக ஊழியம் செய்திருக்கிறார்கள்! 😱 "டெசம்" என்ற பரங்கி வார்த்தையிலிருந்துத் தான் "தசம்" என்ற நம் வார்த்தை வந்ததாம். விட்டால், ஞானி யேசு பாரதம் வந்தது அத்வைதம் கற்க அல்ல, அத்வைதம் போதிக்க என்பார்கள் போலிருக்கிறது!! 😛

ஐரோப்பிய மொழிகள் இந்தோ-ஆரியப் பிரிவைச் சேர்ந்தவை. நமது மொழிகளை அடிப்படையாகக் கொண்டவை. நமது தசமம் தான் அங்கு டெசம் ஆகியிருக்கிறது.

மேலும், முற்காலத்தில் நமது வருடப்பிறப்புகளைப் போன்றே அவர்களது வருடப் பிறப்பும் ஏப்ரல் 1 அன்று துவங்கியிருக்கிறது. இதை ஜனவரி 1க்கு மாற்றிய பின்னரும் ஏப்ரல் 1ஐ வருடப்பிறப்பாகக் கொண்டாடியவர்களை கூலிக்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று பறையடித்துள்ளார்கள் பரங்கி மன்னர்கள். எனில், டிசம்பர் எங்ஙனம் 10-வது மாதமாக இருந்திருக்க முடியும்?

ஒரு அறிவியலும் கிடையாது. ஒரு மன்னர் வருவாராம். தன் பெயரில் ஒரு மாதத்தை ஏற்படுத்துவாராம். அதிக நாட்களை ஒதுக்கிவிடுவாராம். நாய் வாந்தி எடுத்தது போன்றிருந்த அவர்களது வருட கணக்கு சரியானது நம்முடன் 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் மீண்டும் தொடர்பு ஏற்பட்ட பின்னரே. 😠

அவர்களது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் மேம்பட்டது நம்மிடமிருந்து சுட்ட விஷயங்களால் தான்.

சுட்டது தான் சுட்டார்கள். சரியாக சுட்டார்களா? நம் ஆத்மாவை ஆதாம் என்றாக்கினார்கள். ஜீவனை ஏவாள் ஆக்கினார்கள். பிப்பல மரத்தை ஆப்பிள் மரம் ஆக்கினார்கள். "உயிர் உடலை வைத்திருக்கிறது" என்பதை "உடல் உயிரை வைத்திருக்கிறது" என்றாக்கினார்கள். 😜

"அப்பனே முருகா" என்று நாம் அழைப்பது போல் இறையுணர்வை "தந்தையே" என்றார் ஞானி யேசு. இதை உணராமல், இறையுணர்வை பரம பிதா என்றும், இவரின் தந்தை என்றும் தவறாக (அல்லது தப்பாக) கடக்கால் போட்டுவிட்டார்கள். 😝

*"இயற்கைக்கு மாறாக எதுவுமே நடக்காது" என்பார் பகவான் ஸ்ரீ ரமணர். நாம் எப்படி பிறந்தோமோ அப்படித்தான் பகவான் ஸ்ரீரமணரும் பிறந்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பிறந்தார். பகவான் புத்தரும் பிறந்தார். ஞானி யேசுவும் பிறந்தார். "ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார்" என்பதற்குப் பொருள், அவர் பிறந்தது கன்னி லக்கினத்தில். அந்நேரத்தில் அந்த லக்கினத்திலும் எந்த ஆண் கோள்கள் இல்லை. அந்த லக்கினத்தையும் எந்த ஆண் கோள்களும் பார்க்கவில்லை. ஆகையால், ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார்!!*

*மறுபிறவி கொள்கையை ஞானி யேசு போதிக்கவில்லை. ஏனெனில், மறுபிறவியை போதித்தால் பாவம், புண்ணியம் போன்றவற்றையும் போதிக்க வேண்டி வரும். மனிதப் பிறப்பின் குறிக்கோளாகிய ஞானமடைவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனிதர்கள் மெத்தனமாக இருந்து விட வாய்ப்புள்ளது. அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஒரே பிறப்பு, இறுதி நாள் என்றெல்லாம் பயமுறுத்தினார். இவராவது மறுபிறவியை மறுத்தார். பகவான் புத்தரோ இவ்வுலகையே மறுத்தார்; உன்னை மட்டும் கவனி என்றார். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வீணாகக் கூடாது என்பதற்காகவே இம்மகான்கள் இவ்வாறு போதித்தார்கள். ஆனால், விளைவு? இறுதி நாளை வைத்து ஹாலிவுட் பணம் சம்பாதித்தது தான். 😂😂*

(இணைப்பு: தினமலர் - சென்னை - 23/12/2016)

Wednesday, August 10, 2016

கண் திறந்த யேசுநாதர் சிலை 😂


இதுவே இங்கே சாய்பாபா படங்களிலிருந்து விபூதி வெளிவந்தாலோ, பிள்ளையார் சிலைகள் பால் குடித்தாலோ, மூடநம்பிக்கை, முட்டாள்தனம், அறிவிலிகள் என்றெல்லாம் படம் காட்டியிருப்பார்கள் இந்த பரங்கி பன்னாடைகள்!! 😂

அங்கே நடந்தால் Miracle! அதை ஆராயும் முண்டங்களுக்கு Paranormal Investigators என்று பட்டம்!! 😠

எனக்கென்னவோ இதே "அற்புதம்" இங்கே நடந்திருந்தாலும் இந்த பன்னாடைகள் ஏற்றுக் கொண்டிருக்காது என்றே தோன்றுகிறது. 😕

யேசுநாதருக்கும் இந்தியாவுக்கும் உள்ளத் தொடர்புகளை (அவர் கற்றது காசியில் அத்வைதம் & திபெத்தில் பெளத்தம்; போதித்தது அத்வைதம்; மன்னர் சாலிவாகனன் சபையை அலங்கரித்தது; மற்றும் பல) மறைத்தும், மறுத்தும் வரும் திமிர் பிடித்த கூட்டம் தானேயிது! 😡

posted from Bloggeroid

Monday, May 30, 2016

🔯 வைணவ வழியில் பரங்கிகள் 💒


(தினமலர் - வாரமலர் - சென்னை - 29/05/2016)

முதலில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

இன்று சில ஆயிரம் பாதையோர உணவகங்கள் சென்னையில் உள்ளன. பெரும்பாலானவை சுகராமற்ற முறையில் / சூழ்நிலையில் இயங்குகின்றன. இதனால் சுகாதாரப் பிரச்சினைகளும், உடல் உபாதைகளும், தலைமுறைகளை பாதிக்கக் கூடிய வியாதிகளும் உருவாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இன்றைய முதல்வர் இப்படி இயங்கும் உணவகங்களை ஒழித்துக்கட்ட முயல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதனால் பாதிப்படையும் அந்த வியாபாரிகள் முதல்வரின் நடவடிக்கைகளைப் பற்றி தம் மக்களுக்கு, சொந்தங்களுக்கு என்ன கூறுவர்? " நாங்கள் சீர்கேட்டை விளைவிக்கும் பண்டங்களை விற்றோம். முதல்வர் நடவடிக்கை எடுத்தார்." என்றா கூறுவர்? 😉

இப்படிப்பட்டது தான் வைணவரின் திரைக்கதைகள். வைணவம் என்பது ஏமாற்றுவேலை. இன்று வரை யாராவது யாரையாவது ஏமாற்றினால் என்ன சொல்கிறோம்: நாமம் போட்டுட்டியா? அதாவது, நாமம் என்பது ஏமாற்றுவேலை! வைணவம் என்பது ஏமாற்றுவேலை!! இந்த ஏமாற்றுக்காரர்களை அன்றைய மன்னர் அழிக்க முயன்றது சரியே. 👍

உயிரிலிருந்து உயிரற்றது தோன்றியது என்பது சைவம் / அத்வைதம். உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்பது வைணவம் / விசிஷ்டத்தைவதம். இந்த வாதம் ஏமாற்று வேலை என்பதால் தான், நம் முன்னோர் வைணவத்தை ஏமாற்று வேலை என்று ஒதுக்கியும் தாழ்த்தியும் வைத்தனர். கொள்கைகளால் உயர முடியாது என்பதால் தான் வைணவம் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், நிலைநிறுத்திக் கொள்ளவும், வளரவும் உபயோகப்படுத்திய உத்திகள் - உணர்ச்சிவசப்பட வைக்கும் கதைகள், உருக வைக்கும் பாடல்கள், நெகிழ வைக்கும் அலங்காரங்கள் & விழாக்கள், சப்பு கொட்ட வைக்கும் தின்பண்டங்கள் மற்றும் தேசத்துரோக வேலைகள் (சோழர்களை விழ வைத்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பது என் கருத்து). 😝

எல்லாம் சரியாக இருக்கும் போது வைணவம் என்று ஒரு பிரிவை ஏன் ஆரம்பிக்க வேண்டும்? இதற்கு அன்று இந்தியாவை பிரித்த ஜின்னா முதல் இன்றைய தேர்தலில் உருவான நாய்குடை கட்சிகளின் தலைவர்கள் வரை மேற்கோள் காட்டலாம். தனக்கு சாமரம் வீச, கூஜா தூக்க, கால் பிடித்துவிட, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிலைநாட்ட .... 😝😝

சரி, இந்த வைணவ குப்பையை பரங்கிகள் ஏன் ஆராய்கிறார்கள்? 😕

💥 ஒரே ஒரு காரணத்திற்காக: 1000 வருடங்களுக்கு முன்னர் வரையில் பெருவாரியான மக்களால் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட ஒரு பொய் /குப்பை எவ்வாறு இன்று சைவத்திற்கு / உண்மைக்கு சமமானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பது தான்!!! 💥

இதற்கு முழுமையாக விடை தெரிந்தால், அதே தகிடுதத்தங்களை உபயோகப்படுத்தி அவர்களது Brand-க்கும் சம அந்தஸ்து பெற்றுவிடலாமே. எவ்வளவு காலம் தான் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்தும் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களே, பாவிங்க", "நடக்காதவர்கள் நடக்கிறார்கள், பேசாதவர்கள் பேசுகிறார்கள் ..."), அரசாங்க சலுகைகளை பெற்றுத் தந்தும் காலம் தள்ள முடியும்? என்று Self-Sustainable ஆவது? 😂😂

🌸🌹🍀🍁🌺🌻🌼

இணைப்பில் இருக்கும் திரைக்கதையில் கூரத்தாழ்வார் பேசும் வசனத்தை ("நாலுரானை மன்னியுங்கள்...") படித்ததுமே பரங்கியரின் போட்டுக் கொடுக்கும் யுக்திதான் எனக்குத் தோன்றியது. Same pinch! 😁

ஆனால், அந்தப் பரங்கி அதற்கு வேறு அர்த்தம் கொடுத்துள்ளது. அதற்குத் தெரியுமா யேசுநாதர் கற்றது அத்வைதம் (காசியில்) & பௌத்தம் (திபெத்தில்), போதித்தது அத்வைதம் ("நானும் என் தந்தையும் ஒன்றே" - ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே) மற்றும் சமாதி அடைந்தது காஷ்மீரம் என்று?

கட்டுரையின் இறுதியில் அந்துமணி பரங்கிகளுக்கு தெரிந்துள்ளது கூட நமக்குத் தெரியவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். இந்நிலைக்கு முக்கிய காரணம் 300 வருட பரங்கியரின் நேரடி ஆட்சியும், இன்று வரை நடக்கும் மறைமுக ஆட்சியும் தான். பொறுக்கி மெக்காலேவின் பாராளுமன்ற உரை ஒன்று போதுமே இவர்கள் தான் காரணம் என்பதற்கு.

இதெல்லாம் அந்துமணிக்குத் தெரியாமல் இருக்கலாம். லென்ஸ் மாமாவுக்குமா தெரியவில்லை? இல்லை, அக்கரச்சி மை அழகில் மயங்கிவிட்டாரா? 😉

posted from Bloggeroid

Sunday, May 1, 2016

🔯 பானக நரசிம்மர் - மடக் மடக் டமக் டமக் 🔯


(தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 23/04/2016)

இது போன்ற அறிவுகெட்ட கதைகளால் தான் நம் சமயம் கேலிக்குள்ளாகிறது! 😠 பெரும்பாலான இந்துக்கள் சமயமூடர்களாகவும், சில சமயம் தாம் சார்ந்த சமயத்தை எள்ளி நகையாடும் கருங்காலிகளாகவும் இருப்பதற்கும் இந்தக் கதைகளும் இதைப் புனைந்த சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட மனிதர்களே காரணம்!!

💥 "பானகால நரசிம்மர்" - தெலுங்கில் பானகாலு என்பதையே தமிழில் பானகால என எழுதியிருக்கிறார்கள். சரியான தமிழ் பெயர் "பானக நரசிம்மர்". பெயர்களை சரியாக தமிழுக்கு மாற்றாமல் வெளியிடுவது என்பது விற்பனை யுக்திகளுள் ஒன்று. கடவுளை விற்பது பரங்கியரின் வேலை. 😝 இந்த ஈன வேலையை நாம் செய்யத் தேவையில்லை.

💥 "தல வரலாறு" என்பது பெரும்பாலும் "தல புருடா"! சில சமயம் ஏதாவது உண்மை அதில் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும், "டுஷ்" (கண்டசாலாவின் இசை - தந்திரக் காட்சிகளுக்கு உபயோகப்படுத்துவது 😂) காட்சிகள் தான் நிறைந்திருக்கும். நம் மக்களை என்றோ சமயமூடர்களாக்கி விட்டனர். மூடர்களை வழிநடத்தவும் கவர்ந்திழுக்கவும் உபயோகப்படுவது டுஷ் விஷயங்களும் பயமுறுத்தல்களும் ("சாமி கண்ணை குத்திடும்") தான்! (மற்ற மதங்களிலும் இதே கதைதான்) 😂😂

💥 "பாதி மாயம். மீதி பிரசாதம்." என்பது திருநெல்வேலி அல்வா. 😛 சிலை "மடக் மடக்" என்று சப்தமிட்டாலும் சரி, "டமக் டமக்" என்று சப்தமிட்டாலும் சரி, இதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை. இது சிலை செய்தவரின் திறமையையும், சிலையை ஸ்தாபித்தவரின் திறமையையும் காட்டுகிறது. சிலைக்கு கீழே பானகத்தை வெளியேற்ற / உறிஞ்ச வழி செய்திருப்பார்கள். மலைப்பகுதி என்பதால் சுலபமாக வெளியேறும் / உறிஞ்சப்படும்.

💥 "நரசிம்மம்" என்ற பெயரை பெரும்பாலும் நரன் + சிம்மம் என்று பிரித்து "பாதி மனிதன் + பாதி மிருகம்" என்று பொருள் கொள்வர். ஆனால், உண்மை அதுவல்ல.

ந + ர + சிம் + ஹ என்பதே சரியாக பிரிக்கும் முறை.

ந - இல்லை
ர - காமம் / பாசம் / பற்று
சிம் - பிளத்தல் / பலி கொள்ளுதல்
ஹ - சிவபெருமான் (பரமன்) (#)

"எல்லா பற்றுகளையும் விட்ட ஜீவனை, பரமன் தானாகவே ஆட்கொள்ளுவான்" என்பதே சரியான பொருள். இதையே தான் நரசிம்ம அவதாரக் கதை உணர்த்துகிறது. (##)

இப்படி ஞானமடைதல் நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக விளக்கியிருப்பார்கள். உதாரணத்திற்கு சில....

💮 திருவரங்கத்தில் நரசிம்மத்திற்குப் பதிலாக, பெருமாளிடமிருந்து கிளம்பிய ஒரு பெண் சக்தி அசுரன் முரனைக் கொன்றது என்பார்கள். மூலவர் அரங்கநாதரின் சிலைக்கு கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைநாதரின் விளக்கமாக இது இருக்கலாம்.
💮 சைவத்தில் சிவபெருமானே வெளிப்படுவதாக வரும். திருக்கடவூரில் மார்க்கண்டேயருக்கு அருள, சிவபெருமானே வெளிப்பட்டு எமனை அழித்தார் (எமபயம் / உயிர்பயம் போக்கினார்) என்பார்கள். இந்த விளக்கம் மூலவர் அமிர்தகடேஸ்வரரின் கீழ் சமாதியாகியிருக்கும் மார்கண்டேய மகரிஷியின் விளக்கமாக இருக்கலாம்.
💮 கெளதம புத்தர் விளக்கும் சூன்ய / நிர்வாண நிலையும் இதுவே. 6 வருடங்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து ஒன்றும் நடக்காமல், இறுதியில் கயாவில் 6 நாட்கள் தீவிரமாக ஆன்மவிசாரம் (தன்னாட்டம்) மேற்கொண்டு நிர்வாண நிலையை (ஞான நிலையை) அடைந்தார்.
💮 ஜென் பௌத்தத்தின் நிறுவனரான போதிதர்மரின் (இவர் தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்) போதனைகள் யாவும் அத்வைத ஞான நிலையைப் பற்றியே பேசுகின்றன.
💮 மேற்கில், "யேசுநாதர் இறந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார்" என்பதும் இதுவே. அதாவது, மூன்று நாட்கள் தொடர்ந்த தீவிர சாதனையின் இறுதியில் தனித்துவம் இழந்து பரமனில் கலந்து விடுகிறார். அதாவது, ஜீவன் மரித்து சிவமாக வெளிப்படுகிறார்.

நரசிம்ம அவதாரம் ஆந்திராவில் உள்ள அகோபில மலைக்குகையில் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது, அங்கே வசித்த மகான்கள் யாராவது இந்தக் கதையை புனைந்திருப்பார்கள். அல்லது, அங்கே ஞானமடைந்த மகான், தான் ஞானமடைந்த விதத்தை இப்படி விளக்கியிருப்பார். இந்த விளக்கம் / உருவகம் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலமாயிருக்கும். அதனால் தான் ஆந்திராவில் நரசிம்மர் கோயில்கள் அதிகம். பின்னர், ஏனைய இடங்களுக்கு பரவியிருக்கும்.

ஒரு கோயிலுக்கு செல்கிறோம் என்றால் அங்கு சமாதியாகியிருக்கும் மகானை வணங்க அல்லது அங்கேயுள்ள இறைவனின் பெயர் / சிலை, கோயிலின் அமைப்பு வழியாக நம் முன்னோர் நமக்கு சொல்ல வந்த உண்மைகளைப் பற்றி சிந்திக்க என்பன போன்ற குறிக்கோள்களுடன் சென்றால் நமக்கு லாபம். அதை விட்டு "மடக் மடக்" சப்தம், சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது, தங்க கோயில், வைர அங்கி, மிளகாய் யாகம் போன்ற விற்பனை யுக்திகளுக்காக செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் இல்லை.

கோயிலுக்குச் செல்வது என்பது நம் உடலேக் கோயில் என்று உணர. இறைவனை வணங்குவது என்பது நம்முள் உறையும் இறைவனை உணர. 👍

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌞

🌸🌹🍀🍁🌺🌻🌼

# - இங்கே, சிவன் எப்படி வந்தார்? "நரசிம்மர் சிவாம்சம் பொருந்தியவர்", "இவரை வணங்க ஏற்ற நேரம் சிவனுக்குரிய பிரதோஷ காலம்" என்பன போன்ற செய்திகளை நினைவு கூர்ந்து பாருங்கள். இவர் யார் என்று புரியும். எப்படி மவுனராகம் கதையை சுட்டு சில மாற்றங்களை செய்து ராஜா ராணி என்று வெளியிட்டு காசு பார்த்தார்களோ, அப்படியே சைவ / அத்வைத உண்மைகளை எடுத்துக் கொண்டு சில தகிடுதத்தங்களை சேர்த்து வைணம் / விசிஷ்டத்வைதம் என்று காசு பார்த்துவிட்டார்கள். ஞாபகமிருக்கட்டும், நாமம் என்பது ஏமாற்று வேலைக்கு சமம். "பட்ட போட்டுட்டாங்களா?" என்று யாரும் கேட்பதில்லை. "நாமம் போட்டுட்டாங்களா?" அல்லது "நாமம் போட்டுட்டியா?" என்று தான் கேட்பர். 👊

🌸🌹🍀🍁🌺🌻🌼

## - நரசிம்ம அவதார நிகழ்வு - ஜீவன் சிவமாக மாறும் ஞானமடைதல் நிகழ்ச்சியாகும்.

⚡ இரண்யகசிபு - "நான் இவ்வுடல்" என்ற நுண்ணிய அகந்தை.

⚡ பிரஹலாதன் - அகந்தையிலிருந்து பிறந்த ஜீவன். இங்கே, கூர்ந்த அறிவும், தெளிந்த மனதும், பொறுமையும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதாவது, அறிவு முதிர்ந்த ஜீவனைக் குறிக்கும்.

⚡ நரசிம்மம் - தொடர்ந்த முயற்சியில் இருக்கும் ஜீவன், ஒரு நிலையில் தன் இயலாமையை உணர்ந்து முயலாமல் நிற்கும். இப்படி நிற்பதே சரணாகதி எனப்படும். இவ்வாறு நின்ற ஜீவனை, பரமன் - சிங்கம் போல் - பாய்ந்து வந்து, மீதமிருக்கும் அகந்தையை அழித்து ஆட்கொள்ளும். அதாவது, உள்ளிருந்து வெளிவரும் தெளிவினால், அறிவு தெளிவடையும். "நான் இவ்வுடல்" என்ற அகந்தை அழிந்து "நான் நானாக" நிற்கும். இந்நிகழ்வுக்கு ஞானமடைதல் என்று பெயர்!!

இங்கே பகவான் ஸ்ரீரமணரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்:

"ஞானமடையும் போது, ஞானம் சிறிது சிறிதாக கிடைக்குமா அல்லது ஒரேடியாக கிடைக்குமா?" என்று ஒர் அன்பர் கேட்க, அதற்கு பகவான் பதிலாக கேட்ட கேள்வி: "இருட்டறையில் விளக்கேற்றும் போது, இருள் மெல்ல மெல்ல விலகுமா அல்லது ஒரேடியாக விலகுமா?".

வெளிச்சம் கண்ணிமைக்கும் நேரத்தில் அறையெங்கும் பாய்ந்து இருட்டை போக்கும். அங்ஙனமே, உள்ளிருந்து சிங்கம் போல் பாய்ந்து வெளிவரும் தெளிவு, "நான் இவ்வுடல்" என்ற அகந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து, ஞானத்தைக் கொடுக்கும்.

இது விசிஷ்டத்வைதக் கதை என்பதால், ஞானமடைந்த பிறகும், பரமனும் (நரசிம்மம்) ஜீவனும் (பிரஹலாதன்) தனித்தனியாகவே இருக்கின்றன. இதுவே, அத்தைவதக் கதையானால் அகந்தை அழிந்து ஜீவன் சிவனாகியிருக்கும். இதை, பகவான் ஸ்ரீரமணரின் பாடல் வரிகள் விளக்கும்:

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற!
உபாதி உணர்வே வேறு உந்தீபற!!

posted from Bloggeroid