Showing posts with label நியூட்டன். Show all posts
Showing posts with label நியூட்டன். Show all posts

Wednesday, March 1, 2023

நியூட்டனுக்கு முன்னாடியே நமக்கு ஈர்ப்பு விசைய பத்தி தெரியறதுக்கு வாய்ப்பே இல்லீங்க!



காட்டுமிராண்டி குறிமதத்தான்களின் வருகையைத்தான் "1197ல் எல்லாம் முடிஞ்சு போச்சு"-ன்னு சொல்றாருங்க.

அப்புறம், இவரு சொல்றது சரியாப்படலீங்க!

17ம் நூற்றாண்டுலதான் நியூட்டன் ஐயா பொறக்குறாருங்க. மெக்காலே தொர 19ம் நூற்றாண்டுல பொறக்குறாருங்க. அப்புறம், காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் நமக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது 20ம் நூற்றாண்டுலைங்க. நியூட்டன் ஐயா கண்டுபுடிச்சி, மெக்காலே தொர கல்வித்திட்டம் போட்டு, மக்களாட்சி வந்து, உத்தமருங்க ஆட்சில உக்காந்து, சாதிய வெச்சு மேல வந்தவங்க புத்தகம் எழுதி, அத நாம தொறந்து, சாதிகள் இல்லையடி பாப்பான்னு படிச்சு, பொறவுதானுங்க ஈர்ப்பு விசைய பத்தி தெரிஞ்சுகிட்டோம். எப்புடி 12ம் நூற்றாண்டுலேயே நம்மாளுங்க ஈர்ப்பு விசைய பத்தி சண்ட போட்டிருக்க முடியும்?

எல்லாத்தும் மேல, நேர்மையா போர் செஞ்ச வாஸ்கோட காமா நம்மள கண்டுபுடிச்சதே 16ம் நூற்றாண்டோட தொடக்கத்துலைங்க. அதுவரைக்கும் நம்மள பத்தி நமக்கே தெரியாதுங்க. அப்புறம் எப்புடி ஈர்ப்பு விசைய பத்தி நாம தெரிஞ்சுகிட்டிருக்கமுடியுங்க?

இவரு சொல்றது தப்புங்க. பகுத்தறிவோட சிந்திக்கணுமுங்க!!

😂😂✊🏽👊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽😌

Tuesday, June 22, 2021

மாவீரன் அலெக்ஸாண்டர் @ பேட்டை தாதா அலெக்ஸு புராணம்!! 😁

https://www.bbc.com/tamil/india-57500238

ஒரு திரைப்படத்தில், தனது மாமனை ஏமாற்றுவதற்காக, ஜனகராஜ் பெயர்களை மாற்றி மாற்றிப் பேசுவார். சாலையை தண்டவாளம் என்றும், கால்வாயை கடல் என்றும், ஊர் பெரியவர்களை பன்றி என்றும் மாற்றி மாற்றிப் பேசுவார். இது போன்று, பரங்கியரும் உலகை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசுவர்!

> தங்களுக்குள் அடித்துக்கொண்டதை முதல் உலகப் போர் என்றும்,

> பேட்டை தாதாவை உலகை ஆண்டவன் என்றும் (நம்ம அலெக்ஸு தான்),

> மன்னர் புருசோத்தமனையும் அவரது வீரர்களையும் பார்த்தவுடனேயே ஒரு மடக்கு ஆமணக்கு எண்ணெய் குடித்தவனைப் போல வயிறு கலங்கி நின்றவனை மாவீரன் என்றும் (அலெக்ஸேதான்),

> மன்னரிடம் தோற்று நுரையீரல் பங்க்சர் ஆனவனை வெற்றி பெற்றவன் என்றும் (அட, மறுக்காவும் நம்ம அலெக்ஸுதாங்க),

> ஜேப்படி தொழில் செய்வதற்காக ஒரு குஜராத் மாலுமியின் துணைகொண்டு பாரதம் வந்து சேர்ந்தவனை "பாரதத்தைக் கண்டுபிடித்தவன்" என்றும் (பொறுக்கி #வாஸ்கோடகாமா) கதை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாம் எதற்காக? மனதளவில் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்காக! இன்னொரு முறை 3,375 லட்சம் கோடிகள் கொள்ளையடிப்பதற்காக!! குளித்து விட்டு வந்து கால் நீட்டி அமர்ந்து, நியூஸ் ஆஃப் தி வோர்ல்ட் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பாரதியர் (இந்தியர்) கால் நகங்களை வெட்டி விடும் பேரின்ப வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்காக!!!

oOOo

பரங்கியர்களின் பிட்டுகளுக்கு இப்போதெல்லாம் எதிர்வினைகள் நிறையவே வெளிவருகின்றன. இந்நேரம் பரங்கியரது நிலை "உள்ளத்தை அள்ளித்தா" திரைப்படத்தில் வரும் "டெம்போ எல்லாம் வச்சி கடத்திகிட்டு வந்திருக்கோம்ய்யா. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கய்யா!" நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன் 😍:

"முகம்மதியர வச்சி, உருதுல எழுதி, மொழி பெயர்ப்பெல்லாம் செஞ்சிருக்கோம்ய்யா. கொஞ்சம் பாத்து கமெண்ட்டு போடுங்கய்யா. நெறைய லைக்கும் குடுங்கய்யா." 😂😂

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽💪🏽💪🏽😌

Tuesday, June 15, 2021

விடுதலை (!?) அடைந்து 74 ஆண்டுகளாகியும் நம்மை விட்டகலாத அடிமைத்தனம்!!


இந்த காணொளியைப் பார்த்து முடிக்கும் போது: நம்மில் பலருக்கு வாயெல்லாம் பல்லாகிவிடும்! அடுத்து நம்மவர்கள் செய்யும் செயல்: அந்த காணொளியை தங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது!! இதற்கும் அடுத்து சிலர் செய்யும் செயல்: தங்களுக்கு பிடித்தமான நபரை அழைத்து, அந்த காணொளியைப் பற்றி பேசி மகிழ்வது!!! 😏

எல்லாம் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!! 😔

இது போன்றொரு நிகழ்வு பரங்கி நாட்டில் நிகழுமா? அப்படியே நிகழ்ந்தாலும் அதன் பின்விளைவு மேற்கண்டது போலவா இருக்கும்? 

ஒரு எடுத்துக்காட்டிற்காக, ஒரு பரங்கி தலைமையாசிரியர், "விசுவாமித்திரர் என்பவர் யார்?" என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். "பூமிக்கும் பகலவனுக்கும் இடையேயுள்ள தூரம் 108 பூமிகள் என்றும், பூமிக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள தூரம் 108 நிலவுகள் என்றும் முதன்முதலில் கண்டுணர்ந்து தெரிவித்தவர். மேலும், திரிசங்கு என்ற விண்மீனின் நகர்வு இயற்கைக்கு மாறுபட்டதாக உள்ளது என்பதையும் கண்டுணர்ந்து தெரிவித்தவர். திருமறைக்காடு (வேதாரண்யம்) திருக்கோயில் மூலவரின் கீழ் சமாதியாகி உள்ளவர்." என்ற பதிலை எந்த பரங்கி மாணவனிடமிருந்தாவது எதிர்பார்க்க முடியுமா?

பெரும்பாலும், திமிருடன், "காட்டான்களைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்?" அல்லது "காட்டானகளைப் பற்றி நான் அறிந்துவைத்திருப்பேன் என்று எப்படி நீங்கள் எண்ணலாம்?" என்ற பதில்கேள்வி வரும்!! 

500 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால், இன்னமும், அந்த பன்னாடைகள் "பூமி தட்டையானது", "பூமியைத்தான் பகலவன் சுற்றி வருகிறது" என்று அறிவாளித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும்.

"விடுதலை" என்ற பூ சுற்றப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கருங்காலிகளும், நயவஞ்சகர்களும், படங்காட்டிகளும், கொள்ளையர்களுமே நமக்கு ஆட்சியாளர்களாக அமைந்ததால், இன்று வரை கெப்ளர், நியூட்டன், கலிலியோ போன்ற திருட்டுப் பயல்களை மேதாவிகளாகவும், திப்பு சுல்தான் என்ற வெறி பிடித்த கொடிய விலங்கை விடுதலைப் போராட்ட வீரனாகவும் "அறிந்து" வைத்திருக்கிறோம். 😠

Thursday, September 10, 2020

தமிழரின் உறவுமுறை இரோகுவோயிஸ் முறையைச் சார்ந்ததாம்!! 😛

ஐசக் நியூட்டன் என்ற பரங்கி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவரே புவியீர்ப்பு விசையைக் "கண்டுபிடித்தவர்" (!?). நாம் வாழும் புவியும், ஏனைய கோள்களும் பகலவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதும், நம் புவி தன் மீதுள்ள பொருட்களை தன்னிடமே வைத்திருப்பதும் ஒரு ஈர்ப்பு விசையால் தான். இந்த ஈர்ப்பு விசை நியூட்டன் "கண்டுபிடித்த" ஈர்ப்பு விசையைச் சார்ந்ததே!! 😁 விண்ணிலுள்ள ஏனைய கோள்களும், விண்மீன் குடும்பங்களும் "இவரது" ஈர்ப்புவிசையைக் கொண்டே சுற்றி வருகின்றன!!! 😜

😂😂😂😂🤣

நம் இனம் உலகின் மூத்த இனமாகும். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும், மேற்கே தென் அமெரிக்கா வரையிலும் என்றோ ஆமைவழிப்பாதையில் திரைகடலோடிய இனம் நம் இனம். நிறைமொழியில் பேசும் இனம். உலக மதங்களின் தாயாகிய சைவத்தை சமயமாகக் கொண்ட இனம். அன்னை என்ற உறவு முறைக்கு நாம் வைத்த "அம்மா" என்ற சொல் தான் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மருவி வழங்கப்படுகின்றது. இவ்வளவு பெருமைகளைக் கொண்ட நம் இனத்தின் உறவுமுறை, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரோகுவோயிஸ் என்ற பரங்கி "ஆராய்ந்தறிந்த" உறவுமுறையைச் சார்ந்ததாம்!!

எப்படியிருக்கிறது விக்கிப்பீடியா-வில் கிடைக்கும் இந்த பிட் / ஊழியம்? யாருடையது யாரைச் சார்ந்தது?

ஒரு தலைமுறைக்கு முன்னாள் வரை இத்தகைய பிட்டுகளைத் தயாரிக்கும் ஊழியத்தைச் செய்தது பான்பராக் சட்டைகள். இன்று, மக்கள்தொகை பெருக்கத்தாலும், மெக்காலே கல்வியின் வளர்ச்சியாலும் பிட் தயாரிப்பு ஊழியத்தை பான்பராக் சட்டைகள் மட்டுமல்லாது பாவாடைகளும், கூவஞ்சட்டைகளும் செய்கின்றன.

ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிட் தயாரிப்பு ஊழியத்திற்கு பொரை வீசுவது தசமபாகம் பெறும் பாவாடை தொழிற்கூடங்களும், உலகக்கொல்லிகளான வெள்ளையர்களும் தான்.

பாரம்பரிய ஊடங்களை தன் கையில் வைத்திருக்கும் இந்த கூட்டம் இப்போது விக்கிப்பீடியா போன்ற இணைய நிறுவனங்களையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன.

oOOo

கெப்ளர், நியூட்டன், எடிசன் என பெரும்பாலான பரங்கிகளும் திருட்டுப்பயல்கள் தாம். மற்றவருடைய, குறிப்பாக நம் முன்னோர்களின், கண்டுபிடிப்பை தமதாக்கிக் கொண்டவர்கள்.

வெள்ளையன் = உலகக் கொள்ளையன், நயவஞ்சகன், நச்சு உயிரி, திமிர் பிடித்தவன், ஆணவம் கொண்டவன். ஐம்பூதங்களையும் மாசுபடுத்தியவன். இவன் நுழைந்த துறை உருப்படாது. இவனது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் தூக்கி எறியப்பட வேண்டியவை. இவனது அறிவியல் அழிவியல் என்றழைக்கப்பட வேண்டும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Sunday, March 20, 2016

இன்னொரு பரங்கி அல்வா!! 😝



இந்தப் பரங்கிகளின் "கண்டுபிடிப்புகள்" எல்லாம் இவர்கள் இந்தியாவுடன் மீண்டும் தொடர்பு கொண்ட பிறகே. அதாவது, பொறுக்கி காமா இந்தியாவைக் "கண்டுபிடித்தப்" பின்னரே. 😂

இந்தியாவில் சகஜமாக இருந்த விஷயங்களைக் கூட தங்களது கண்டுப்பிடிப்பாக பிரகடனப்படுத்தி காசும் பேரும் பார்ப்பதில் கில்லாடிகள் இவர்கள். அவ்வகையில், இந்த நியூட்டன் எந்த இந்தியனின் மடியில் கை வைத்தான் என்றுத் தெரியவில்லை. 😠

ஒவ்வொரு வெளியீட்டிற்கும் ஒரு திரைக்கதை பிட் வேறு போடுவார்கள். இங்கே "நியூட்டன் வெளியிடத் தயங்கியதாகவும், அவனது நண்பன் ஹேய்லி வெளியிட உதவியதாகவும்" போடப்பட்டிருக்கும் பிட் போல. 😀

"Massive celestial bodies are attracted powerfully towards the Earth by her own force (gravity), and they appear to fall as a result of such attraction, but when equal forces act on a body in space from all sides, how can it fall?" - Siddhaantha Shiromani - Bhuvanakosha - 6 (528 AD)

கி.பி. 528-ல் எழுதப்பட்ட சித்தாந்த சிரோமணி என்ற நூலில் புவனக்கோசம் எனும் பகுதியின் 6-வது செய்யுளில் கோள்களின் ஈர்ப்பு விசைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நியூட்டன் தனது அல்வாவை தயாரித்தது 1100 வருடங்களுக்குப் பிறகே!

இணைப்பு: தினமலர் - சென்னை - 20/03/2016

posted from Bloggeroid