இந்த காணொளியைப் பார்த்து முடிக்கும் போது: நம்மில் பலருக்கு வாயெல்லாம் பல்லாகிவிடும்! அடுத்து நம்மவர்கள் செய்யும் செயல்: அந்த காணொளியை தங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது!! இதற்கும் அடுத்து சிலர் செய்யும் செயல்: தங்களுக்கு பிடித்தமான நபரை அழைத்து, அந்த காணொளியைப் பற்றி பேசி மகிழ்வது!!! 😏
எல்லாம் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!! 😔
இது போன்றொரு நிகழ்வு பரங்கி நாட்டில் நிகழுமா? அப்படியே நிகழ்ந்தாலும் அதன் பின்விளைவு மேற்கண்டது போலவா இருக்கும்?
ஒரு எடுத்துக்காட்டிற்காக, ஒரு பரங்கி தலைமையாசிரியர், "விசுவாமித்திரர் என்பவர் யார்?" என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். "பூமிக்கும் பகலவனுக்கும் இடையேயுள்ள தூரம் 108 பூமிகள் என்றும், பூமிக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள தூரம் 108 நிலவுகள் என்றும் முதன்முதலில் கண்டுணர்ந்து தெரிவித்தவர். மேலும், திரிசங்கு என்ற விண்மீனின் நகர்வு இயற்கைக்கு மாறுபட்டதாக உள்ளது என்பதையும் கண்டுணர்ந்து தெரிவித்தவர். திருமறைக்காடு (வேதாரண்யம்) திருக்கோயில் மூலவரின் கீழ் சமாதியாகி உள்ளவர்." என்ற பதிலை எந்த பரங்கி மாணவனிடமிருந்தாவது எதிர்பார்க்க முடியுமா?
பெரும்பாலும், திமிருடன், "காட்டான்களைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்?" அல்லது "காட்டானகளைப் பற்றி நான் அறிந்துவைத்திருப்பேன் என்று எப்படி நீங்கள் எண்ணலாம்?" என்ற பதில்கேள்வி வரும்!!
500 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால், இன்னமும், அந்த பன்னாடைகள் "பூமி தட்டையானது", "பூமியைத்தான் பகலவன் சுற்றி வருகிறது" என்று அறிவாளித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும்.
"விடுதலை" என்ற பூ சுற்றப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கருங்காலிகளும், நயவஞ்சகர்களும், படங்காட்டிகளும், கொள்ளையர்களுமே நமக்கு ஆட்சியாளர்களாக அமைந்ததால், இன்று வரை கெப்ளர், நியூட்டன், கலிலியோ போன்ற திருட்டுப் பயல்களை மேதாவிகளாகவும், திப்பு சுல்தான் என்ற வெறி பிடித்த கொடிய விலங்கை விடுதலைப் போராட்ட வீரனாகவும் "அறிந்து" வைத்திருக்கிறோம். 😠
No comments:
Post a Comment