Thursday, February 3, 2022
திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!
Thursday, May 9, 2019
என்றுமுள தென் தமிழ்!! 😍
நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்
-- #கம்பராமாயணம்
பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினார். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் (என்றுமுள) இனிய/அழகிய (தென்) தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவராகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தார்.
"என்றுமுள" வேண்டிய தமிழ் இன்று? 😔
🥀🍃🍂🍂🍃🥀
ஆங்கிலேயர்களாலும், ஆரியர்களாலும் அழிந்தது போக மீதமிருப்பதை அழிக்க ஒரு பெரும் கருங்காலி கூட்டம் கடினமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறது! வள்ளுவத்திற்கு முதலில் சமணச் சாயம் பூசி, தற்போது அதற்கு "இளம் வேதாகமம்" என்று பெயரும் வைத்துவிட்டது. ஆளுடையபிள்ளை முதல் வள்ளற்பெருமான் வரை அன்னைத் தமிழின் இறைத்தன்மையைப் போற்றிய அனைத்து அருளாளர்கள் & உரையாசிரியர்கள் மீதும் சேற்றை தெளித்துவிட்டது. மீதமிருப்பது தொல்காப்பியமும் ஐந்திரமும் மட்டுமே. இவ்விரண்டு நூல்களும் வெகு பழமையானது என்பதால், வள்ளுவத்துக்கு பயன்படுத்திய உத்தியை இங்கு பயன்படுத்த முடியாது என்பதால், இவற்றை மட்டம் தட்டும் ஊழியத்தில் இறங்கிவிடும்.
"#மெய்யின் #இயக்கம் #அகரெமாடு #சிவணும்" என்று தொல்காப்பியத்தில் வருவதாலும், இதே கருத்து அதற்கும் வெகு பழமையான ஐந்திரத்திலும் வருவதாலும் ("#மெய்யொளி #உயிரொலி #சிவணுதல் #இயல்பே"), "#தொல்காப்பியர் ஐந்திரத்திலிருந்து சுட்டவர்; சுய அறிவு கிடையாது." என்று சேறு தெளித்துவிடும். #ஐந்திரம் நமது நூலாக இருந்தாலும் ஆரியரும் அதன் புகழ்பாடுவர். மேலும், "சிவணுதல்" போன்ற சொற்களும் உடைத்தது. இவை போதாதா? ஆரிய, பார்ப்பனிய, ஏதேச்சாதிகார, ஆதிக்க சாதிவெறி கொண்ட, ... என்று பட்டங்கள் கட்டிவிடும்!! 😏
பின்னர், இறைத்தன்மையையும் சுய மதிப்பையும் இழந்த அன்னை தமிழ் ஆசீர்வாதமாய் இருக்கும்!! 🥴
🥀🍃🍂🍂🍃🥀
"மெய்யொளி உயிரொலி சிவணுதல் இயல்பே" - ஒளி போன்ற உடலும், ஒலி போன்ற உயிரும் இணைவது என்பது இயற்கையே என்கிறார் ஐந்திரத்தின் ஆசிரியர் #மயன் (#மாயாசூரன், #தேவசிற்பி, #விஸ்வகர்மா என்பன இவரது மற்ற பெயர்கள். இவர் மாமன்னர் இராவணின் மாமனார் என்பார் மறைந்த திரு. வை. #கணபதி #ஸ்தபதி அவர்கள்.). உடலியக்கத்தைப் பற்றி பேசும் இந்த செய்யுள் வரியை அடிப்படையாகக் கொண்ட தொல்காப்பிய சூத்திரம், "மெய்யின் இயக்கம் அகரெமாடு சிவணும்", தமிழ் எழுத்துக்களைப் பற்றி பேசுகிறது - மெய்யெழுத்துக்கள் தனித்து இயங்காது; உயிரெழுத்துக்களோடு இணைந்தால் தான் இயக்கம் பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்டு உள் சென்றால் இயற்கையன்னையும் தமிழன்னையும் வேறுவேறல்லர் என்பதை உணர்வோம்! 😍 இயற்கையின் இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழை நன்றாக கற்றாலே போதும் என்பதையும் உணர்வோம்!! 🥰 இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன் என்பதால், இறைவனை உணர - மெய்யறிவு பெற - செய்ய வேண்டியதெல்லாம் "தமிழைக் கசடற கற்றலே" என்பதும் தெளிவாகும்!!! 😌
(#கசடற #கற்றல் என்றவுடன் பெண்டிங்க் / மெக்காலே முறையில் முனைவர் பட்டங்கள் வாங்கி குவிப்பதல்ல! 😁 #கல்வி எனில் கல் + வி = அசையாது + விடாது = நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றல் = #நிலைபேறு. இப்படி தமிழைக் கற்க வேண்டும்.)
🎉🎇🎆🎆🎇🎊
"மெய்யொளி உயிரொலி... " - இவ்வுலகம் ஒலிஒளியால் ஆனது என்பதை விளக்கவே கூத்தப் பெருமானின் 🌺🙏🏼 மேலிரு கைகளில் டமருகமும் (ஒலி) நெருப்பும் (ஒளி) உள்ளது. இவ்வுருவின் கண்ணாடி பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட பெருமாள் 🌺🙏🏼 உருவில் ஒலியும் ஒளியும் இடமாறியிருக்கும் (சக்கரம் - ஒளி - வலப்புறம்; சங்கு - ஒலி - இடப்புறம்).
🎉🎇🎆🎆🎇🎊
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
-- #மனோன்மணீயம்
நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠
ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்!
Saturday, August 6, 2016
தலைவர் மாற்றிப் படித்துவிட்டார் என்று நினைக்கிறேன்!! 😉

(தினமலர் - சென்னை - 06/08/2016)
கடந்த 69 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி மற்றும் இடஒதுக்கீடு திட்டங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை பட்டியலிட்டுவிட்டார்!! 😂
💥 பல ஜாதி மாணவர்கள் கடினமாகப் போராடுகையில், சில ஜாதி மாணவர்கள் சுலபமாக கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இடம்பெற முடிவதால், மாணவர்களிடையே பாகுபாடு, சலிப்பு மற்றும் சோர்வு.
💥 பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு, மொழிக்கு இந்தியக் கதவுகளைத் திறந்துவிட்டதால் குருவந்தனம் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாமல் போய்விட்டது. ஆசிரியர்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. அடாவடி செய்யும் மாணவனை கண்டிக்க இயலாமல் அதே சமயம் தமது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் ஆசிரியர்கள் சலிப்பும் சோர்வும் அடைந்துள்ளனர்.
💥 ஊரை அடித்து உலையில் போட்ட அரசியல்வியாதிகள் கையில் கல்வி மாட்டிக்கொண்டதால், அது வியாபாரமாகி, மீள முடியாத நிலைக்குச் சென்று, நமக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தன்னைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதால் ஆசிரியையைக் கொல்லும் மாணவனும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவனோடு ஓடிப்போகும் ஆசிரியையும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவியை கர்ப்பமாக்கும் ஆசிரியனும், 5வது மாடியிலிருந்து நாயை தள்ளிவிட்டு சிரித்து மகிழும் மருத்துவனும் தான் கடந்த 69 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி திட்டத்தால் விளைந்த சிறந்த விளைவுகள்!! 😡😡😡
கல்வியைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அருமையான விளக்கம்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது!! 👏👌👍
இந்த இரத்தின வார்த்தைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாக்கப்படும் எந்த கல்வி திட்டமும் வியாபாரமே - மெக்காலே திட்டமே!
posted from Bloggeroid
Wednesday, April 6, 2016
கல்வியாளர்களா அல்லது மனநல மருத்துவமனைகளுக்கு ஆள் சேர்க்கும் பிரதிநிதிகளா? 😠

இந்த தினமலர் செய்தியிலுள்ள திரு. நெடுஞ்செழியனை மட்டும் குறிப்பிட்டு இதை எழுதவில்லை. இது போன்று பேசும் அனைவரையும் சேர்த்தே எழுதுகிறேன்.
ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் முதலில் என்ன செய்தார்கள்? அல்லது இவர்களது பிள்ளைகள் என்ன செய்தார்கள்? +1 & +2 பாடங்களை "ஆராய்ந்து, பகுத்தறிந்து, சிந்தித்து" தான் படித்தனரா? அப்படி படிக்கத்தான் முடியுமா? அப்படி ஆராய்ந்து, பகுத்தறிந்து, சிந்தித்து எழுதினால் அந்த வினாத்தாள் "தகுதியான" ஆசிரியரிடம் செல்லும் என்பது என்ன நிச்சயம்? மதிப்பெண் எனும் மண்ணாங்கட்டியைத் தவிர வேறு சிந்தனை தோன்றிவிடக் கூடாது என்ற ஒரே குறிக்கோளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டவையே +1 & +2 பாடத்திட்டங்கள். இந்த சுமை போதாதாம். பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டுமாம். எதற்கு? மனநல காப்பகத்தில் இடம்பெறவா? 😤
இந்த கல்வியாளர்கள் எல்லாம் பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே. இந்நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் "+2 மதிப்பெண்களே வாழ்க்கையே நிர்ணயிக்கும்" என்பது தமிழ் படங்களில் இறுதியில் காட்டப்படும் "சுபம்" அல்லது ஆங்கிலப் படங்களில் இறுதியில் காட்டப்படும் "They lived happily ever after" என்ற வார்த்தைகளுக்கு சமம் என்று. நல்ல மதிப்பெண்கள், நல்ல கல்லூரி, நல்ல வேலை என எதுவும் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதமில்லை என இவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஆயிரங்களில் சம்பாதிப்போரே தினமும் 10-12 மணி நேரம் செலவிட வேண்டும். எனில் லட்சங்களிலும் கோடிகளிலும் புரள ஒருவர் இழக்க வேண்டிவரும் நேரம், ஆற்றல் மற்றும் மன நிம்மதியை கணக்கிடவே முடியாது. வாழ்க்கை நரகமாகும். 60-களில் அடைய வேண்டிய மனச்சோர்வையும் உடல் தளர்ச்சியையும் 40-களிலேயே அடைய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை இழந்து அடையப்படும் செல்வம் எதற்கும் உதவாது.
🌸🌹🍀🍁🌺🌻🌼
(குறை கூறும் நான் தீர்வும் கூற வேண்டும் என்ற நோக்கில் மீதத்தை எழுதியிருக்கிறேன்.)
இந்த மெக்காலே, ஆட்டு மந்தை, Pressure Cooker படிப்பு பெரும்பாலும் உருவாக்குவது இரு வகையான மனிதர்களைத் தான்:
💥 தன் வாழ்க்கைக்காக மற்றவரைச் சார்ந்திருப்போர் மற்றும்
💥 தன் வாழ்க்கைக்காக மற்றவரை தன்னைச் சாரவைப்போர்
முன்னவன் அடிமை! பின்னவன் கிரிமினல்!!
சமூக முக்கோணம் தொடர்ந்து செழிப்புடன் நிலை பெற்றிருக்கக் காரணம் சார்பு வாழ்க்கை வாழ தயாராகவிருக்கும் அடிமைகள் தான். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையைச் சார்ந்தே வாழ வேண்டும். அப்படி அவனை வாழவைப்பது பெற்றோரின் / சமூகத்தின் / அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும்.
புகழ் பெற்ற ஒரு பற்பசை நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வியாபாரம் ஒரு நிலையிலேயே நின்று விட்டது. அவர்களால் முடிந்ததை எல்லாம் முயன்றுவிட்டு, ஒரு மேதாவியை அழைத்து வந்தனர். அவனும் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு அந்நிறுவனத்திற்கு கொடுத்த பதில்: "தங்கள் பொருளில் ஒரு குறையும் இல்லை. தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பற்பசை டியூபின் வாயை பெரிதாக்குவது மட்டுமே!!"
அதன்படி அந்நிறுவனம் செய்ய, வியாபாரம் பல மடங்கு பெருகியது. எல்லோரும் அந்த மேதாவியை புகழ்ந்தார்கள். என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு மகா கிரிமினல். 😛 ஒரு பட்டாணி அளவு எடுக்க வேண்டிய பற்பசையை டபுள்பீன்ஸ் அளவு எடுக்க வைத்தான். நம்மை தேவைக்கு அதிகமாக செலவு செய்யவைத்தான். அதனால், புவி வெப்பமடையச் செய்தான். இயற்கையை அழித்தான். இவனையே இச்சமூகம் வெற்றி பெற்றவனாகப் பார்க்கிறது. இவனையே இக்கல்வியாளர்களும் முன்மாதிரியாக வைக்கிறார்கள். தான் வாழ பிறரையும் இயற்கையையும் அழிக்கும் இவனல்ல இன்றைய தேவை.
நாம் வாழும் இந்த பூமித்தாய் காப்பாற்றப்படவேண்டும் என்பதே இன்றைய தேவை. அதற்கும் தேவை தன்னைச் சார்ந்த - சுயசார்பான - வாழ்க்கை முறையே. நமது தேவைகள் எவ்வளவு குறைவான தூரம் பயணிக்கிறதோ, நமது தேவைகளை எவ்வளவு தூரம் நாமே பூர்த்தி செய்து கொள்கிறோமோ அவ்வளவு தூரம் புவியின் வெப்பம் குறையும். அவ்வளவு தூரம் இயற்கை காப்பாற்றப்படும். இதற்கான கல்வியும், இந்த கல்வியை முன்வைக்கும் கல்வியாளர்கள் மட்டுமே இன்றும் நமக்குத் தேவை.
இறுதியாக, சுயசார்பு என்பது பயணிக்கும் வாகனம் போல. அதற்கு இலக்கு?
நம் மூதாதையரின் இலக்கு தான் - வீடுபேறு அல்லது பிறவாமை!!
posted from Bloggeroid