Thursday, February 3, 2022

திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

-- திருக்குறள் #834 (அதிகாரம்: பேதைமை)

பொருள்: நன்கு கற்றும், கற்றதை உணர்ந்தும், உணர்ந்ததை பிறர்க்கு எடுத்துக் கூறுமளவுக்கு வளர்ந்தும், தனது அகந்தையை ஒழிக்காமலிருக்கும் அறிவிலிகளை விட இழிந்த அறிவிலிகள் இல்லை.

🔸 தானடங்கா என்ற சொல்லே இக்குறளின் தலையாயச் சொல்லாகும்.

🔸 தானடங்கா - தானடங்குதல் - அகந்தையடங்குதல். "நான் இன்னார்" என்ற அகந்தையடங்கினால் மீதமிருப்பது? நான் என்ற தன்மையுணர்வு மட்டுமே. இதுவே சிவமெனப்படும். இந்நிலையில் நிற்றலே சிவநிலை.

🔸 தானடங்கத் தேவை? கல்வி (இன்றைய மெக்காலே கல்வியல்ல! 😊)

🔸 கல்வி என்ற சொல்லை கல்+வி எனப் பிரித்தால், கல் போன்று அசைவற்று, உருக்கொளாது அல்லது வெளிப்படாதிருத்தல் என்ற பொருள் கிடைக்கும்.

🔸 கல்வி என்ற சொல்லுக்கு சுவாமி விவேகானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ கொடுக்கும் பொருள்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் முழுமைத்துவத்தை வெளிப்படுத்துவது.

oOo

இங்க எனக்கொரு பகுத்தறிவு டவுட்டு: 2000ம் வருசங்களுக்கு முன்னாடி, நம்ம திருவள்ளுவரும், ஒரு பரங்கியரும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருல, "முஸ்தஃபா முஸ்தஃபா ..." பாடிகிட்டு ஆடிகிட்டு, சுத்தி வரும்போது, அந்த பரங்கியர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தாருன்னு "ஆராய்ச்சி" செஞ்சவங்க சொன்னாங்களே. அப்படின்னா, திருவள்ளுவர் அகந்தையடங்குதல் பத்தியா எழுதியிருப்பாரு? "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா"-ன்ற ஒப்பாரிய பத்தியில்ல எழுதியிருப்பாரு? 🤔

😜

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment