Friday, March 11, 2016

செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காளின் புகழ்பெற்ற எச்சில் பாட்டு

அக்காள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோட்டையில் வாழ்ந்தவர். திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாளின் சிஷ்யை. ஒரு ஆடி அமாவாசையன்று குற்றாலம் செண்பக அருவிக்கு மேலுள்ள காட்டில் காற்றோடு கலந்தார் என்பது செவிவழிச் செய்தி. உள்ளத்தை உருக்கும் அவர்தம் சரிதையை தனி இடுகையாக பின்னொரு நாளில் வெளியிடுகிறேன்.


அக்காளின் இந்தப் பாடல் ஆசாரத்தைக் கிண்டலடிக்கிறது என்றே உலகம் அறியும். ஆனால், என் நினைவில் இப்பாடல் நிற்பது இதில் வரும் "சில்லெச்சில் மூர்த்தி கையில்" என்ற வார்த்தைகளுக்காக.

சில்லுயிர் - நுண்ணுயிர்
சில்லெச்சில் - நுண்ணுயிரியின் எச்சில்

காற்றில் சில்லுயிர்கள் உள்ளன. அதன் எச்சிலும் உள்ளது. நாம் சுவாசிக்கும் போது, உண்ணும் போது, நீர் அருந்தும் போது, பேசும் போது என பல வழிகளில் அவையும் அவற்றின் எச்சிலும் நம்முள் நுழைகின்றன. இயற்கை இவ்வாறு இருக்கையில், தீட்டு ஆசாரம் என ஊரை ஏமாற்றுவானேன்?

இது சொற்றொடரின் விளக்கம்.

சரி, அக்காளுக்கு நுண்ணுயிர் பற்றிய அறிவு எங்கிருந்து வந்தது. அக்காளின் காலம் கிட்டதட்ட நுண்ணுயிரிகளை கண்டுபிடித்ததாக (?) நம்பப்படும் அண்டோனி வான் லியுவென்ஹோயெக்கின் (Antonie van Leeuwenhoek) காலத்தோடு ஒத்துப்போகிறது. ஒரு வேளை, அக்காள் அன்டோனியிடமிருந்து தெரிந்து கொண்டிருப்பாரோ? 😂

நம்மிடமிருந்து தெரிந்து கொண்டு தான் "கண்டுபிடித்ததாக" பிட்டைப் போட்டிருப்பான் இந்தப் பரங்கி. உலகை அழிப்பதற்கு அடுத்து பரங்கிகளுக்கு கைவந்த கலை இன்னொருவரின் உழைப்பை தனதாக்குவது. 😬

அக்காளின் கண்டுபிடிப்பு எனச் சொல்ல வரவில்லை. அக்காள் அன்றைய பாமர மக்களின் மொழியில், நடையில் பாடியிருக்கிறார். ஆகையால், நுண்ணுயிரிப் பற்றிய அறிவு அன்று பாமரரிடமும் இருந்தது என்பது என் கூற்று. 👊💪👍👌👏

இனி பாடலைப் பார்ப்போம்.

🌸🌹🍀🍁🌺🌻🌼

எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே

சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே

மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே

தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே

நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே

அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே

எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே

ஈசர் ஒருவர் உண்டே எச்சிலில்லாத வஸ்து தான் பாடக
வாசகரும் காணா ஜோதி- பராபரமே

🌸🌹🍀🍁🌺🌻🌼

🔯 ஸ்ரீஆவுடையக்காளுமாயான ஏகன் அனேகன் திருவடிக்கு சமர்ப்பணம் 🔯

posted from Bloggeroid

No comments:

Post a Comment