Monday, April 4, 2022
🌚🌝 மறைமதி & நிறைமதி முழுக்குப் பூசைகள்!!
Monday, August 5, 2019
கிரிவலம் தெரியும். அது என்ன மரிவலம், நரிவலம்ன்னுட்டு? 🤔
மெழுகுவர்த்தி மட்டும் தான் புடிச்சுட்டு வரலாமா? இல்ல, மரியாள் விளக்கு, பிணக்குறியீடு விளக்கெல்லாம் கூட புடிச்சிகிட்டு வரலாமா? மெழுகுவர்த்தில கெமிக்கல் அதிகமாயிடுச்சு. அதான். 😁
"2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா"ன்ற ஒப்பாரி ட்ரூப் எல்லாம் உண்டா? போரடிக்கக் கூடாது, இல்லீங்களா? 😜
திருவண்ணாமலையில அடிக்கொரு லிங்கமாம். பர்வதமலையில சாணுக்கொரு லிங்கமாம். இங்க எப்புடி? அடிக்கொரு பாவாடையா? இல்ல, சாணுக்கொரு பாவாடையா? 😝
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
இவர்களை விட, இஸ்ரவேல் அத்வைதி யேசுவைத் தான் சொல்லவேண்டும்!!
பாரதம் வந்தோமா, அத்வைதம், பௌத்தம் கற்றோமா, ஒரு வழியை இறுகப் பிடித்தோமா, மெய்யறிவு பெற்றோமா, உடலை விட்டோமா என்றில்லாமல், தனது இனமக்களை உய்விக்கிறேன் பேர்வழியென்று, குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போன்று, மூடர்களிடம் போய் அத்வைதத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் கரடியாய் கத்தியும், சுற்றியிருந்த கூட்டம் கண்டது இவருக்கு கிடைத்த ரொட்டியையும், ஒயினையும் தான்:
இத பாரு மச்சான், இப்புடி புரியாதபடிக்கு பேசுனா, நமக்கு சாப்பாடு, ஒயினு, ஒத்தாசைக்கு 4 தடியனுங்க கெடப்பாங்க. ஜாலியா காலத்த ஓட்டிடலாம். என்ன சொல்ற?
இவர்களது மொத்த சித்தாந்தமும் இவ்வளவு தான்!! 🤑🤑🤑
Tuesday, October 23, 2018
ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்!! 🌸🙏
"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது" என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!
லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு
தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.
இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?
அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!! 😉)
இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔
நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)
மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)
இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும். 👏👌👍
ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும். 👏👏👌👌👍👍
இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏
அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.
🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த ஒப்பனை உணர்த்தும் பேருண்மைகளை உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.
🔯 திருச்சிற்றம்பலம் 🔯
🌸🏵🌹🌺💮🌻🌷🌼
💥 நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂
💥 அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑
posted from Bloggeroid