Showing posts with label பெளர்ணமி. Show all posts
Showing posts with label பெளர்ணமி. Show all posts

Monday, November 14, 2016

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக விளக்கம்

இன்று #ஐப்பசி #பெளர்ணமி! #சிவன் கோயில்களில் #அன்னாபிஷேகம் நடக்கும்.

*"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது"* என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!

லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு

தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.

இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?

அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (*முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!!* 😉)

இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔

நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)

*மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)*

*இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும்.* 👏👌👍

*ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும்.* 👏👏👌👌👍👍

இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏

அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், *அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.*

🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த அலங்காரம் உணர்த்தும் பேருண்மைகளை  உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 13/11/2016)

🌸🏵🌹🌺💮🌻🌷🌼

💥 பி.கு. #1: நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂

💥 பி.கு. #2: இணைப்புக் கட்டுரையில் சிவப்பு கட்டமிட்டதை மட்டும் படித்தால் போதும். மீதம், பக்கம் நிரப்புவதற்காக, சென்ற வருட கட்டுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக எழுதப்பட்டுள்ளது.

💥 பி.கு. #3: அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑