Showing posts with label சிவபெருமான். Show all posts
Showing posts with label சிவபெருமான். Show all posts

Wednesday, October 27, 2021

அந்தணர் & பிராமணர்: ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல!!




பெரும்பாலான தொன்ம வரலாறுகளில், செவிவழிச் செய்திகளில், தல புருடாக்களில் இறைவன் "முதிய அந்தணராக வந்தார்" என்ற வரியைக் காண முடியும். இது பற்றி ஓர் அன்பர் பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ வருத்தப்பட்டார் (அதாவது, "வேறு சாதியினர் வடிவில் இறைவன் தோன்றமாட்டாரா?" என்பது அந்த அன்பர் கேட்க வந்த கேள்வி). அதற்கு பகவான், ஆறுதலாக, அக்கதைகளில் பதிவாகியிருக்கும் செய்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.

அந்தணர் என்றதும் ஒரு குறிப்பிட்ட ஒப்பனை / இனம் நம் மனதில் தோன்றுவது போல் நமக்கு கொம்பு சீவி வைத்துள்ளனர். இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த கைங்கர்யமாகும்.

அந்தணன் என்ற சொல்லுக்கு அறவோன், தூயவன், பிராமணன், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் காண்பவன் என்று பல பொருட்கள் உண்டு. இவையனைத்துமே சிவபெருமானைக் குறிக்கின்றன.

🔹அறவோன் எனில் அற வடிவினன் அல்லது அறத்தினின்று வழுவாதவன். அறம் எனில் நீதி. நீதிக்கு இறைவன் என்றொரு பொருள் உண்டு. காரைக்கால் அம்மையார் 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவனை "அறவா" என்றழைக்கிறார்.

🔹தூயவன் எனில் மாசு சிறிதும் அற்றவன் என்று பொருள். மாசு என்பதற்கு மாயை, இருள், கருமை, விபரீதம் என்று பல பொருட்கள் உள்ளன. இவையனைத்துமே உடல் அல்லாத நம்மை, நாம் உடலாகக் கருதும் தன்மையைக் குறிக்கும். இந்த மயக்கம் தீர்ந்தவரே தூயவன். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று மாசிலாமணி (மாசு இல்லா மணி).

🔹பிராமணன் எனில் பிரம்மமாய் இருப்பவன். பிரம்மம் எனில் என்றும் மாறாதது. சிவதத்துவம் மாறாததை / அசைவற்றதைக் குறிக்கும். சக்தி / பெருமாள் தத்துவம் மாறுவதை / அசைவதைக் குறிக்கும்.

🔹சிவபெருமான் எனில் சிவநிலையில் உள்ள பெருமான். காண்பானிலிருந்து காட்சி வேறுபடாமலிருக்கும் நிலையே சிவநிலை. மொத்த அண்டமும் தானாக தோன்றும் இந்த நிலையில் பிறவுயிர்கள் மட்டும் பிரிந்து தனியாக தோன்றுமா? எவ்வுயிரையும் தன்னுயிராக உணர சிவநிலையில் உள்ள பெருமான்களால் மட்டுமே முடியும். இவர்களே உண்மையான அந்தணர்கள்.

எனில், சிவபெருமான் அந்தணனாகத்தான் தோன்ற முடியும். பிறவுயிர்களை தன்னிலிருந்து வேறாகக் காண்பவர் சிவபெருமான் அல்லர். ஆகையால், சிவபெருமான், அந்தணன் & பிராமணன் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழியாகும். சிவபெருமானை - சிவநிலையில் இருப்போரை - குறிக்கும் சொற்களாகும். ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, October 4, 2018

மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மாறுபட்ட கற்பனைகள்!!

கலையார்வம், மேலான கற்பனைத்திறன், மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கவேண்டும் போன்ற காரணங்களால், பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எதையாவது செய்து வைக்கிறார்கள். அது "எம்மதமும் சம்மதம்" போன்ற கூமுட்டைத்தனத்தில் போய் முடிந்துவிடுகிறது!! 🙁 (சாப்பாடும் சாக்கடைகளும் எவ்வாறு ஒன்றாகும்? 😠)

இணைப்புப் படத்தில் சிவபெருமானையும் அனுமாரையும் சமமாக்கியிருக்கிறார்கள். சிவபெருமான் மனமழிந்த மெய்ஞானியைக் குறிக்கிறார். அனுமார் மனதைக் குறிக்கிறார். எவ்வாறு மனமும், மனமழிந்து வெளிப்படும் மெய்யறிவும் ஒன்றாகும்? முன்பெல்லாம் இது போன்று மாறுபட்ட படைப்புக்களை உருவாக்குபவர்கள் தங்களது வேலையைத் துவங்கும் முன்னர் அப்பகுதி சமயப் பெரியோர்களை சந்தித்து, அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களது படைப்புக்களை மாற்றிக் கொள்வர். இன்று? 😰

சைவத்தில் பெண் தத்துவமாகக் கொள்ளப்படுவது வைணவத்தில் ஆண் தத்துவமாகிவிடும். சைவத்தைச் சார்ந்த மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் பச்சைப்பட்டு உடுத்துவார். வைணவத்தைச் சார்ந்த ஸ்ரீகள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்துவார்.

பச்சை நிறத்தை அனுமாருக்குத் தந்து, அனுமன் சிவாம்சம் உடையவர் என்று கதை விட்டு, சிவதத்துவத்தை அனுமார் அளவிற்கு இறக்க முயற்சி செய்தது எல்லாம் பிற்காலத்தில் தான். சைவர்கள் அறிவை உருவகப்படுத்த பிள்ளையாரை உருவாக்கினார்கள். இம்முயற்சி பெரும் வெற்றி பெறவே, போட்டிக்காக வைணவர்கள் உருவாக்கியது தான் அனுமார். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டார்கள். இதைத் தான், "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற பழமொழி வாயிலாக பதிவு செய்து வைத்தார்கள். 👏👌👍💪

இந்த அடிப்படைச் செய்திகள் எதுவும் தெரிந்து கொள்ளாமல், வெறுமனே இருவரும் சம்மணமிட்டு வடக்கிருக்கிறார்கள் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இரு தத்துவங்களையும் அருகருகே வைத்துவிட்டார் இந்த படைப்பாளி என்று தோன்றுகிறது. மேலும், பெரும்பாலான மனிதர்களைப் போன்று, இறையுருவங்களை தத்துவங்களாகக் காணாமல் உயிருள்ள உடல்களாகக் காணும் தவற்றையும் செய்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது. இந்த ஒரு தவறை நாம் செய்யாதிருந்தாலே போதும், உறுதியாக கரையேறி விடுவோம். நமது சமயமும் வலுப்பெற்று விடும். 💪

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

கூகுள்+ பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

முகநூல் பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

🌸🏵🌹🌻🌺🌷🌼

posted from Bloggeroid

Monday, June 27, 2016

🌸 திருநீற்றைப் / விபூதியைப் பற்றி சில தகவல்கள் 🌸

சைவச் சின்னங்களுள் ஒன்று. திருநீறு எனில் "மதிப்பிற்குடைய / ஞான செல்வம்" (திரு+நீறு). விபூதி எனில் "மேலான செல்வம்" (வி+பூதி). இது, இரு வகையில் மேலான செல்வத்தைக் குறிக்கும்.

🔯 தத்துவ ரீதியில்:

*ஒரு பொருள் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு, சில சமயம், அதன் உருவம் கலையாமல் சாம்பல் அப்படியே இருக்கும். உருவம் கலையாதிருப்பதால் மட்டும் அப்பொருளினால் எந்த உபயோகமும் கிடையாது. அவ்வாறே, ஞானமடைந்த பின் (சிவ நிலையை அடைந்த பின்), ஞானிக்கு (சிவனுக்கு) இவ்வுலகம் எரிந்து முடிந்து சாம்பல் உரு கலையாமல் இருப்பது போல் தோன்றும் (தோற்றமாத்திரமே; இருப்பற்றது; சுயப்பிரகாசமற்றது). இக்காரணத்தினால் தான் "சிவன் சுடுகாட்டில் வாழ்பவர்" எனப்படுகிறார்!!*

அதாவது, ஞானிக்கு (சிவனுக்கு) தன்னைத் தவிர மற்றனைத்தும் கலையாத சாம்பால் உரு போன்று, கானல் நீர் காட்சி போன்று, கனவு போன்று , பொய்யென்றுத் தோன்றும்!

🔯 மருத்துவ ரீதியில்:

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் விபூதி நல்ல கிருமிநாசினி!

மறைந்த மராத்திய பேராசிரியர் தபோல்க்கரின் ஆய்வின்படி, முழுவதும் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் சாம்பலில் இருக்கும் மேன்மையான சத்துக்கள் (மேலான செல்வங்கள்) மட்டுமே மண்ணிலிருந்து தாவரங்களால் உறிஞ்சப்பட்டவை. இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும். நம் உடலுக்கும் மிகக் குறைவாகவே தேவைப்படும். நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது தோலின் மூலம் சிறிதளவு அந்தச் சத்துக்கள் ஈர்த்துக் கொள்ளப்படும். அது போதுமானது.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

இந்த மருத்துவ ரீதியான பயன் நமக்கு உடனடியாகப் புரியும். தத்துவ ரீதியான பயன்? ஞானிக்கு (சிவனுக்கு) உலகம் எப்படித் தோன்றினால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

*நம் சமயத்தில் இருக்கும் பெரும்பாலான சமாச்சாரங்களைப் போன்று தான் இதுவும்: விபூதியை இட்டுக் கொள்வது, நம்மைப் பார்த்து மற்றவர்களும் மற்றவரைப் பார்த்து நாமும், மேற்சொன்ன பேருண்மைகளை மறவாதிருக்கவும் & இடைவிடாது சிந்திக்கவும் தான்!*

இந்த பேருண்மைகளை என்றும் மறவாது, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருத்தால் இறுதியில் அதுவாகவே (சிவனாகவே) மாறிவிடுவோம் ("எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற கோட்பாட்டின் படி).


💠 "மந்திரமாவது நீறு" என்கிறார் ஆளுடையப்பிள்ளையார். மந்திரம் எனில் சிந்தனையைத் தூண்டக்கூடிய கருவி. இது சொல், சொற்றொடர், பொருள், அடையாளம், ஜீவன், எண்ணம், செயல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால், பிள்ளையாரின் வார்த்தைகளை இப்படி மாற்றலாம்: "சிந்திக்கத் தூண்டுவது நீறு". எதை சிந்திக்கத் தூண்டுகிறது நீறு? *மேற்சொன்ன பேருண்மைகளை!!*.

💠 "விபூதியை கீழே சிந்தாதே" என்பர் நம் பெரியோர். இதுவும் தத்துவ ரீதியில் சொல்லப்பட்டதே. "பாடுபட்டு அடைந்த மேலான ஞானத்தை இழந்து விடாதே" என்பதே இதன் பொருள். ஞானம் என்பது அறிவு. என்ன அறிவு? "நான் இவ்வுடலல்ல என்ற *அனுபவ* அறிவு". இவ்வனுபவம் கிட்டும் போது உலகம் இருப்பற்று போகும் - கலையாத சாம்பல் உரு / சுடுகாடாகி விடும். இந்த நிலையை அடையும் ஜீவன் சிவனாகிறான். இப்படி சிவநிலையை அடைந்த பின்னும் சிலர் மீண்டும் உலகமாயையில் சிக்கிவிடுவர். ஞானானுபவம் ("நான் இவ்வுடலல்ல" என்ற அனுபவம்) ஸ்திரமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீரமணர்!


பகவானின் எச்சரிக்கைக்கு உதாரணமாக மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை சிறிது பார்ப்போம். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயிலில்) முதல் ஞானானுபவம் பெற்று பின்னர் இழந்துவிடுகிறார் (விபூதியை சிந்திவிட்டார்!!). பின்னர், அழுதுபுலம்பி அவ்வனுபவத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார். இரண்டாவது முறையாக திருக்கழுகுன்றத்தில் சிறிது நேரம் கிடைக்கப் பெறுகிறார். இறுதியில், சிதம்பரத்தில் அவரது ஞானம் (சிவானுபவம் / ஞானானுபவம் / இறையனுபவம்) ஸ்திரமாகிறது. சீவத்தன்மை முற்றிலும் நீங்கப்பெறுகிறார் - சிவமாகிறார். இதையே "இறைவனோடு கலந்தார்" என்கிறோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

விபூதியை வாங்குவதிலும் மிகுந்த கவனம் தேவை! நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறே பூசிக்கொள்ள உகந்தது. தமிழகத்தில் மிகப் பிரபலமான விபூதி தயாரிப்பு நிறுவனம், பழைய காகிதங்களையும் மற்றும் குப்பை காகிதங்களையும் வாங்கி, எரித்து சாம்பலாக்கி பின்னர் அதனுடன் வாசனை வேதியல் பொருட்களைச் சேர்த்து "ஸ்பெஷல் விபூதி" என்று மக்களை ஏமாற்றுகின்றது!! ஆகையால், விசாரித்து வாங்கவும். நன்கு தெரிந்த அர்ச்சகரிடமிருந்து அபிஷேக விபூதி பெற்றாலும் கூட, தயவு செய்து பிரசாதமாக வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம்.

🔥 வெளிப்புறத்தில் தரமான திருநீற்றைப் பூசி மருத்துவப் பயன்களைப் பெறுவோம்
🔥 உள்புறத்தில் சரியான தவமியற்றி இறைவனடி எனும் திருநீற்றினைப் பெறுவோம்
🔥 பிறப்பறுப்போம்
🔥 பிறவிப்பயனையடைவோம்

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid