Showing posts with label அனுமார். Show all posts
Showing posts with label அனுமார். Show all posts

Saturday, December 1, 2018

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!! 😀


மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது "திரு" என்றாகும் வாய்ப்புள்ளது (திரு - நிலைத்த; நிலைபேறு - மெய்யறிவு - இறை)!!

"ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்." என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா - பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் - பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் "மனதை அழி" என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்


🌸🙏🌸🙏🌸


__(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)__

posted from Bloggeroid

Thursday, October 4, 2018

மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மாறுபட்ட கற்பனைகள்!!

கலையார்வம், மேலான கற்பனைத்திறன், மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கவேண்டும் போன்ற காரணங்களால், பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எதையாவது செய்து வைக்கிறார்கள். அது "எம்மதமும் சம்மதம்" போன்ற கூமுட்டைத்தனத்தில் போய் முடிந்துவிடுகிறது!! 🙁 (சாப்பாடும் சாக்கடைகளும் எவ்வாறு ஒன்றாகும்? 😠)

இணைப்புப் படத்தில் சிவபெருமானையும் அனுமாரையும் சமமாக்கியிருக்கிறார்கள். சிவபெருமான் மனமழிந்த மெய்ஞானியைக் குறிக்கிறார். அனுமார் மனதைக் குறிக்கிறார். எவ்வாறு மனமும், மனமழிந்து வெளிப்படும் மெய்யறிவும் ஒன்றாகும்? முன்பெல்லாம் இது போன்று மாறுபட்ட படைப்புக்களை உருவாக்குபவர்கள் தங்களது வேலையைத் துவங்கும் முன்னர் அப்பகுதி சமயப் பெரியோர்களை சந்தித்து, அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களது படைப்புக்களை மாற்றிக் கொள்வர். இன்று? 😰

சைவத்தில் பெண் தத்துவமாகக் கொள்ளப்படுவது வைணவத்தில் ஆண் தத்துவமாகிவிடும். சைவத்தைச் சார்ந்த மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் பச்சைப்பட்டு உடுத்துவார். வைணவத்தைச் சார்ந்த ஸ்ரீகள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்துவார்.

பச்சை நிறத்தை அனுமாருக்குத் தந்து, அனுமன் சிவாம்சம் உடையவர் என்று கதை விட்டு, சிவதத்துவத்தை அனுமார் அளவிற்கு இறக்க முயற்சி செய்தது எல்லாம் பிற்காலத்தில் தான். சைவர்கள் அறிவை உருவகப்படுத்த பிள்ளையாரை உருவாக்கினார்கள். இம்முயற்சி பெரும் வெற்றி பெறவே, போட்டிக்காக வைணவர்கள் உருவாக்கியது தான் அனுமார். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டார்கள். இதைத் தான், "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற பழமொழி வாயிலாக பதிவு செய்து வைத்தார்கள். 👏👌👍💪

இந்த அடிப்படைச் செய்திகள் எதுவும் தெரிந்து கொள்ளாமல், வெறுமனே இருவரும் சம்மணமிட்டு வடக்கிருக்கிறார்கள் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இரு தத்துவங்களையும் அருகருகே வைத்துவிட்டார் இந்த படைப்பாளி என்று தோன்றுகிறது. மேலும், பெரும்பாலான மனிதர்களைப் போன்று, இறையுருவங்களை தத்துவங்களாகக் காணாமல் உயிருள்ள உடல்களாகக் காணும் தவற்றையும் செய்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது. இந்த ஒரு தவறை நாம் செய்யாதிருந்தாலே போதும், உறுதியாக கரையேறி விடுவோம். நமது சமயமும் வலுப்பெற்று விடும். 💪

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

கூகுள்+ பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

முகநூல் பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

🌸🏵🌹🌻🌺🌷🌼

posted from Bloggeroid

Wednesday, December 28, 2016

அனுமன் பிறந்த நாள்

முதலில் கீழே இணைக்கப்பட்டிருக்கும் புருடாவைப் படியுங்கள். பின்னர் இதைப் படிக்கவும்.

இன்று அனுமன் ஜெயந்தி. இதையொட்டி ஒருவர் எனக்கு கீழேயுள்ள புருடாவை அனுப்பினார். அவருக்கு நான் கொடுத்த பதிலடி தான் இந்த இடுகை.

அனுமன் என்று எந்த Neanderthal-லும் இல்லை.  அனுமன் என்ற உவமை உருவாக்கப்பட்ட நாள் இது. பிறந்த நாள்.

முதலில் சைவர்கள் பிள்ளையாரை உருவாக்கினர். பிள்ளையார் அறிவைக் குறிப்பவர். அறிவுக்கு அடிப்படை ஞாபக சக்தி. அறிவுடையவன் பலம் பொருந்தியவன். இதற்கு அடையாளமாக யானை முகத்தைக் கொடுத்தனர். யானைக்கு ஞாபக சக்தி மிக அதிகம். மேலும், பலம் பொருந்தியது. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது.

இது மன்னரிடமும், மக்களிடமும் ஹிட் ஆனது. இதைக் கண்ட வைணவர்கள், நாங்களும் செய்து காட்டுகிறோம் என்று எதையோ செய்யப் போய் அனுமனை உருவாக்கினார்கள். "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிற்று" என்ற முதுமொழி இவர்களின் பித்தலாட்டத்தைக் காட்டும்.

அனுமன் மனதைக் குறிப்பவர். மனம் வாயு பூதத்தை அடிப்படையாகக் கொண்டது. வாயு ஓரிடத்தில் நிற்காது. மனமும் சதா சலித்துக் கொண்டே இருக்கும். இதைக் குறிக்க குரங்கை எடுத்துக் கொண்டனர். குரங்கும் ஓரிடத்தில் இருக்காது. கிளைக்கு கிளை தாவும். மனம் பலம் பொருந்தியது. "மனம் நினைத்தால்", "மனது வைத்தால்" ஆகிய சொற்றொடர்கள் மனதின் பலத்தைக் காட்டும். அனுமனும் பலம் உள்ளவராகக் காட்டப்படுவது இதனாலேயே. மனம் நினைத்தால் அடுத்த விநாடி நாம் இமய மலையில் இருக்கலாம். அனுமன் ஒரு அடியில் இலங்கைக்கு தாவியது போல.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சாதாரணமாக ஒருவர் ஏமாந்தால் நாம் கூறுவது, "நாமம் போட்டுட்டாங்களா உனக்கு". ஏமாற்றியவரிடம் நாம் கூறுவது, ''நாமம் போட்டுட்டியா அவனுக்கு". ஆக, நாமம் ஏமாற்று வேலை. அதாவது,  வைணம் என்பது ஏமாற்று வேலை.

இந்த ஏமாற்றுகாரர்களுக்கு மன்னனின் (சோழர்கள்) அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சலில் அவர்களது "புனித நூல்களில்" (?)  சிவ தத்துவத்தை தாழ்த்தி எழுதி மகிழ்ந்து கொண்டார்கள்.

சிவம் - சக்தி என்பது வைணவத்தில் லஷ்மி - விஷ்ணு என்று மாறும். அதாவது, சைவர்கள் உயிர் - மெய் என்பதை வைணவர்கள் மெய் - உயிர் என்பர். உயிரிலிருந்து உயிரற்றது தோன்றிற்று என்பது சைவம். உயிரற்றதிலிருந்து உயிர் உண்டாயிற்று என்பது வைணவம். இதனால் தான் வைணவம் ஏமாற்று வேலை என்று சொல்லப்பட்டது.

சைவர்கள் வைத்திருந்ததை, உருவாக்கியதை வைணவர்கள் சிறிது மாற்றி அல்லது எதையாவது சேர்த்து "நாங்க ஒசத்தியாக்கும்" என்றனர். உ.ம். சைவத்தில் 5 பிரகாரம் என்பது வைணவத்தில் 7 பிரகாரம்.

சிதம்பரம் தல வரலாற்றில் நடராஜ பெருமானின் திருநடனத்தை நினைத்துப் பார்த்ததால் மகா விஷ்ணுவின் எடை அதிகமாயிற்று என்று வரும். இதற்குப் போட்டியாகத் தான் சிவபெருமான் பெருமாளுக்கு சேவை செய்ய நினைத்ததாகவும், அதனால் அனுமனாக அவதரித்தார் என்றும் பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இந்த பிட்டின் மூலம் சிவ தத்துவத்தை ஒரு படி இறக்கி மன தத்துவத்தோடு (அனுமனோடு) சமப்படுத்தியிருக்கிறார்கள். Criminals!!

வைணவத்தில் மகாலட்சுமி தான் சிவதத்துவம். ஏற்கனவே, மகாலட்சுமியை இறக்கி மகாவிஷ்ணுவின் பாதத்தில் வைத்திருக்கிறார்கள். அது போதாது என்று மேலும் கீழிறக்க முயற்சிக்கிறார்கள். மகாலட்சுமி எழுந்து உதைக்காமல் இருந்தால் சரி. 😂😂

"பொய்யைச் சொல். திரும்பத் திரும்பச் சொல். உண்மையாகும்." என்பதே வைணவர்களின் அடிப்படை யுக்தியாகும்.

ஒரு காலத்தில் தீண்டத்தகாத மதமானது இன்று இந்து மதத்தின் பெரும் பிரிவு. வெட்கக்கேடு. 😡

தீண்டத்தகாத மதம் எப்படி இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியானதாக மாறிற்று என்று பரங்கியர் ஆராய்ச்சி செய்து வருவதாக கேள்விப்பட்டேன். ஏதற்கு என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். 😉

🌸🌹🍀🍁🌺🌻🌼

அனுமன் ஜெயந்தி 09-01-2016

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.   பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி   குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க   வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு   நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே   வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம்   ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த   ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற   எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது   முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும்   உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க   வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத   சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக  விளங்குபவர்  ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர்  விரும்பி அமுது  செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை  மாருதிக்கு சாத்தி  வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து  அடியார்களுள்  அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக  சந்தோஷங்களையும்  சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம்  தொடங்கும் முன்னர் பக்தர்களை  ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது  அவருக்கு தெரியும்.