Thursday, February 27, 2025

தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா


இது இவரது கருத்தல்ல. திருவரங்கம் திருக்கோயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ள "கோயிலொழுகு" (நாமாசுரர்கள் (#) எழுதியது) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் இவர் கூறியிருக்கிறார். இது, பெரும்பாலும், உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)

இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!

oOo

இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.


இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!

திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:

> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது

மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.

மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.

oOo

சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:

🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,

🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.

மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.

(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)

oOo

இன்று,

💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?

நேற்று,

💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, February 18, 2025

கும்பத் திருவிழா: சிறு விளக்கம்


😔 கும்பத் திருவிழா நெரிசலில் சிக்கி 30+ பேர் இறப்பு!


😔 டில்லி தொடரி நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் இறப்பு!

😔 300 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

😔 பிரயாக்ராஜ் ஆறுகள் குளிக்க தகுதியற்றவை - நடுவண் மாசுக் கட்டுப்பாடு வாரியம்

ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரு குறிப்பிட்ட நீர் நிலையில் மூழ்கியெழுந்தால் வீடுபேறு கிட்டுமென்று நம்புவது முட்டாள்தனம்!!

🌷 கங்கை - வெள்ளை.
🌷 யமுனை - கருப்பு.
🌷 கங்கையும் யமுனையும் கலக்குமிடம் - வெள்ளையும் கருப்பும் கலக்குமிடம் - ஒளியும் இருளும் கலக்குமிடம்.
🌷 வெள்ளை / ஒளி - நாம் - நமது தன்மையுணர்வு (சிவம்).
🌷 கருப்பு / இருள் - நம்மைத் தவிர மீதமனைத்தும் - மனம், உடல், வையகம் என மொத்த படைப்பு (அன்னை).
🌷 கங்கை+யமுனை = வெள்ளை+கருப்பு = ஒளி+இருள் = உணர்வு+படைப்பு = நாமெடுத்திருக்கும் பிறவி. அல்லது, நாம் வாழும் வாழ்க்கை!

🌷 காளை வீடு (அசுரத்தில், ரிஷப இராசி) - நிலைத்த வீடுகளிலொன்று (அசுரத்தில், ஸ்திர இராசி).
🌷 வியாழன் (அசுரத்தில், குரு) - இறையருள் / மெய்யாயரின் அருட்பார்வை (அசுரத்தில், குருவின் அருட்பார்வை).

🌷 கூடுதுறையில் (அசுரத்தில், சங்கமத்தில்) மூழ்கியெழும்போது, அதுவரை உண்ட ஒரு காய்கறியை, "இனி உண்ணமாட்டேன்" என்று உறுதி பூண்டல்:

🔸 காய்கறி - காய் - அசுரத்தில், காயம் - உடல்.
🔸 காயை விடுதல் - காயத்தை விடுதல் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை விடுதல்.

(உறுதி பூணாமல் வெறுமனே மூழ்கியெழுந்தாலும் இவ்விளக்கம் பொருந்தும்.)

🌷 இறுதியாக, யாவற்றையும் இணைப்போம்: காளை வீடு + வியாழனின் பார்வை + மூழ்கியெழுதல்:

ஒரு சமயத்தில், இறையருளால், அல்லது, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானின் அருட்பார்வையால், "நாம் இவ்வுடலல்ல" என்ற அறிவு தோன்றும். அப்போது அவ்வறிவை இறுகப் பற்றிக்கொண்டு, வாழ்வை உதறிவிடவேண்டும்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்" என்பது போல, செய்யும் வினைமுறைகளின் (அசுரத்தில், சடங்குகளின்) பொருளுணர்ந்து செய்தால் பயன் விளையும். இல்லையெனில், பொருட்செலவு, வீண் அலைச்சல், உயிரிழப்பு, நோய் தொற்று... போன்றவைதான் விளையும்!!

oOOo

அருள் நிறைவான அமுதக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, December 15, 2024

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 திருநெறியத் தமிழர்களின் தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும்.

🪔 "தொல் கார்த்திகை நாள்" என்று திரு ஆளுடைய பிள்ளையாரால் (அசுரத்தில், திருஞானசம்பந்தரால்) சிறப்பிக்கப்பட்ட திருநாள்.

🪔 ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது திரு கண்ணபெருமானின் திருநாளோடு இணைத்துக்கொண்டார்கள் (அசுரத்தில், தீபாவளி - அவர் மெய்யறிவு பெற்ற நாள்).

🪔 விளக்கீடு உணர்த்தும் உட்பொருட்களில் ஒன்று:

இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற பொய்யறிவை ஒதுக்கி, புறமுகமாக செல்லும் நமது கருத்தை நம் மீது (நமது தன்மையுணர்வின் மீது) நிறுத்தி, நாமே அழிவற்ற, இரண்டற்ற, தன்னொளி கொண்ட மெய்ப்பொருள் என்ற உண்மையை உணர்வதுதான், "புவியின் இதயம்" என்றழைக்கப்படும் திரு அண்ணாமலையாரின் மீது ஏற்றப்படும் விளக்கை காண்பதின் பொருளாகும்.

oOo

அனைவருக்கும் இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

🪔🎉🎊☀️

கருணாகரமுனி இரமணாரியன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, December 11, 2024

பகுத்தறிவு பல்லிளித்தபோது... 😜



"வீட்டிற்குள் துறவிகளின் காலடி பட்டால், அரச பதவி கிடைக்கும்!" என்று, ஒரு கூமுட்டை சோதிடன் சொன்னதை நம்பி, 3 துறவிகளை வரவழைத்து, வழிபாடு செய்திருக்கிறார் "பகுத்தறிவு பகலவன்" பரம்பரையின் அடுத்த மன்னரான உதயநிதி!! 🤦🏽😁

🌷 வீடு - நாம்.

🌷 வீட்டிற்குள் - நமக்குள்.

🌷 துறவி - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட, "நான் யார்?" போன்ற பொன்னான அறிவுரை!

🌷 அரச பதவி - "நான் யார்?" என்று சிந்தித்துக் கொண்டிருந்தால் என்னவாகும்? பற்றுகள் நீங்கும். மெய்யறிவு கிட்டும். மனம், உடல் & வையகம் ஆகியவற்றின் பொய்த்தன்மை புரியும். தேவையென்பதே இருக்காது. தேவையில்லை எனில் கவலையில்லை. கவலையில்லை எனில்... மன்னரைப் போல் வாழலாம்!!!

அதாவது, மெய்யறிவு பெறுவதே அரச பதவி பெறுவதாகும்!

2026ல் வெற்றி பெறுவதற்கு கூமுட்டை சோதிடர்களை நம்புவதை விட, களநிலவரமறிந்து, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொள்கைகளையும், கூட்டணியையும் மாற்றியமைத்து, மகா மெகா ஊழல்களை குறைத்து, அரசுப்பொறியின் (அசுரத்தில், அரசு இயந்திரத்தின்) தரத்தை உயர்த்தி, "கொல்டிகள் முன்னேற்றக் கழகம்" என்ற முத்திரையை நீக்கி, அன்னைத் தமிழுக்காக, திருநெறியத் தமிழர்களுக்காக உண்மையாக உழைத்தாலே போதும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, December 5, 2024

மெய்யியலா? கண்கட்டும் தொழிலா?



அவ்விடத்தில், பகவான் திரு இரமண மாமுனிவர் இருந்திருந்தால், "என்ன ஓய், எதற்கு இத்தனை சர்க்கஸ் வேலை பண்றீர்?" என்று கேட்டிருப்பார்! 😁

அவர்கள் வரையும் திருத்திகிரி (அசுரத்தில், ஸ்ரீசக்கிரம்) என்பது, ஒரு வகையில், மொத்த படைப்பை குறிக்கும். இன்னொரு வகையில், நம்மை குறிக்கும் - நமது தன்மையுணர்வு, நமது மனம் & நமது உடல்.

திருத்திகிரிக்கு நிகரான இறைவடிவம் - திரு உமைமுருகுஇறைவன் (அசுரத்தில், சோமாஸ்கந்தர்):

🌷 இறைவன் - தன்மையுணர்வு
🌷 முருகன் - மனம் 
🌷 உமையம்மை - உடல் & வையகக் காட்சிகள்

"பிரஸ்டீஜ்" என்ற அமெரிக்க திரைப்படத்தில், கண்கட்டுத் தொழிலை பற்றிய ஓர் அருமையான உரை இடம் பெற்றிருக்கும்: புரியாத வரையில்தான் மக்கள் அதற்காக அலைவார்கள். கெஞ்சுவார்கள். ஆனால், புரிந்துவிட்டால்... அந்த நொடியிலிருந்து அதை மதிக்கமாட்டார்கள்!

இதே அடிப்படையில்தான் அசுரர்களும் தொழில் செய்கிறார்கள். ஆனால், கண்கட்டும் தொழிலா திருவினையாக்கும் முயற்சி (மெய்யியல்) என்பது? 😒

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, November 24, 2024

"கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநர்" என்ற கருத்தின் உட்பொருள்


இராமாயணம் என்பது மெய்யியல் குறியீடுகளின் தொகுப்பு என்ற உண்மை தெரிந்திருந்தால், இந்த ஆளுநர் கேலிக்கு உள்ளாகியிருப்பாரா? இவரது "கற்பித" அறியாமைக்கு யார் பொறுப்பு? 😏

oOo

மொத்த இராமாயணத்தை சுருக்கினால்: உடலின் (இராவணன்) தொடர்பு ஏற்பட்டவுடனேயே மனம் (இராமன்), தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால், மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல்- வையகக் காட்சியை பற்றியும் தெரிந்து கொண்டு அடங்குகிறது. அடங்கியவுடன், குளுமையை / நிம்மதியை திரும்பப் பெறுகிறது.

oOo

இராமாயணம் என்பது எம்சியு (மார்வெல் சினி மேடிக் யுனிவர்ஸ்) போன்றொரு கதைத் தொகுப்பாகும். ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியே அணுக வேண்டும். ஓரிடத்தில், இராமன் என்பது மனதை குறித்தால், இன்னொரிடத்தில் உள்ளபொருளை குறிக்கும். பொதுவாக,

🔸 இராவணன் - உடல்
🔸 இராமன் - மனம்
🔸 இலக்குவன் - அறிவு
🔸 சீதை - நிம்மதி

இராவணன் என்பது உடலெனில், அவரது உடன்பிறப்புகள்...

🔸 கும்பகர்ணன் - விழிப்புணர்வு
🔸 விபீடணன் - வலு

🌷 கும்பகர்ணன் - 6 மாதம் தூக்கம், 6 மாதம் விழிப்பு

இன்று, பல மணி நேரம், இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். அன்று, கதிரவன் தோன்றுவதில் தொடங்கி, கதிரவன் மறைவதோடு நாள் முடிந்துவிடும். பின்னர், ஓய்வு & உறக்கம். அதாவது, அரை நாள் உழைப்பு; அரை நாள் ஓய்வு. இதையே, "கும்பகர்ணன் 6 மாதம் தூங்கினார். 6 மாதம் விழித்திருந்தார்." என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 கும்பகர்ணன் - கருவிகள்

கருவி என்றதும் கத்தி, கத்திரிக்கோல், திருப்புளி என்று எண்ணிக்கொள்வோம். ☺️ இங்கு, கருவி என்பது நமது அறிவு, மனம், கை-கால் போன்ற உடலுறுப்புகளை குறிக்கும். விளைவுகளை ஏற்படுத்தும் யாவும் கருவிகள் என்று கொள்ளலாம்.

எ.கா.: இவ்விடுகையை எழுதத்தூண்டியதால் ஆளுநரின் பேச்சு ஒரு கருவியாகிறது. இவ்விடுகை சில விளைவுகளை ஏற்படுத்துமானால் இதுவும் ஒரு கருவியாகும்.

விழித்திருக்கும்போது, நமது சொல், செயல், சிந்தனைகளைக் கொண்டு பல விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதையே "கும்பகர்ணன் பல கருவிகளை படைத்தார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷கும்பகர்ணன் - தொழிற்நுட்ப வல்லுநர்

நமக்கு வாய்த்திருக்கும் கருவிகளையும் (அறிவு, மனம், உடல்), நமக்கு வந்துசேரும் மற்றவரது கருவிகளையும் (சொல், செயல் & எழுத்து) கொண்டு பல கருவிகளை (விளைவுகளை) நாம் படைக்கிறோம் என்பதையே "கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநராக விளங்கினார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 விபீடணன் - இராமன் பக்கம் வருதல்

இளம் வயதில் உடல் வலுவாக இருக்கும். ஆண்டுகள் உருண்டோடி, உடல் தளரத் தொடங்கியதும், மனம் வலுப்பெறத் தொடங்கும். 

அல்லது, இறையருளால், இளம் பருவத்திலேயே மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, நல்லறிவு கிடைத்ததும், உடலைப் பேணுவதை குறைத்துக் கொண்டு, மனதை சீர் செய்யத் தொடங்குவோம். இதனாலும் மனம் வலுப்பெறத் தொடங்கும்.

இவ்வாறு, உடல் வலுவிழந்து, மனம் வலுப்பெறுவதையே, "விபீடணன் (வலு) இராவணனிடமிருந்து (உடல்) இராமன் (மனம்) பக்கம் வந்தான்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 மொத்தத்தில், இராமாயணம் என்பது பிறப்பு முதல், மெய்யறிவு அடையும் வரையிலான நமது வாழ்க்கைப் பயணமாகும்!

oOo

இராமாயணத்தை வரலாறு / உண்மை என்ற கண்ணோட்டத்தில் அணுகினால்... "மோகன்தாசும், ஜவகரும் போராடி, நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள்", "இராமசாமி சாதியை ஒழித்தான்", "தட்சிணாமூர்த்தி தமிழர்களுக்காக உழைத்தான்" என்ற வகையை சேர்ந்ததாகும்!! 😏

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 18, 2024

துலாக்கோல் திங்கள் சோற்று முழுக்கு (அசுரத்தில், ஐப்பசி மாத அன்னாபிடேகம்)


நேற்று துலாக்கோல் திங்களின் நிறைமதி திருநாள் - நமது திருநெறியத் திருக்கோயில்களில் சோற்று முழுக்கு கொண்டாடப்படும் நன்னாள்!

🌷 தாயின் கருவறை முதல் தற்போது வரை நமதுடல் எதனால் ஆகியிருக்கிறது? உணவால்.

🌷 நாம் இறந்த பிறகு நமதுடல் என்னவாகிறது? தீக்கு உணவாகிறது. அல்லது, மண்ணுக்கு உணவாகிறது.

🌷 ஒரு நுண்ணோக்கி வழியாக நம்மைச் சுற்றியுள்ள காற்றுவெளியை பார்க்க நேர்ந்தால், அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும்? கோடானகோடி உயிரிகள் சுற்றிக் கொண்டிருக்கும்; ஒன்று இன்னொன்றிற்கு உணவாகி கொண்டிருக்கும்.

மொத்தத்தில், படைப்பு = உணவாகும் / சோறாகும்!

இதையுணர்த்தவே, இன்று, நம் சுடர்நெறி திருக்கோயில்களில் சோற்று முழுக்கு திருவிழாவை நடத்துகிறார்கள்.

> உடையவர் = மொத்த படைப்பு.
> ஒரு பருக்கை = ஓர் உயிரினம் / ஒரு விண்மீன் குடும்பம் / ஒரு விண்மீன் கூட்டம்.

இத்திருவிழாவை காண்பதால், மேற்சொன்னதை உணர்வதால், என்ன பயன் கிட்டும்? நமது செருக்கு அடங்கும்.

இத்திருவிழா நம் தமிழ்நாட்டுக்கே உரியதாகும். எனில், மேற்கண்ட பேருண்மையை உணர்ந்த பெருமான் ஒரு தென்தமிழராவார். அல்லது, அப்பெருமான் தொல் தமிழ்நாட்டில் திருவிடம் கொண்டுள்ளார் என்று கருதலாம். அவர் யாரென்று தெரிந்திருந்தால், இத்திருவிழாவை அப்பெருமானின் திருவிடத்தோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். தெரியாததனால், பொதுவாக, அனைத்து திருக்கோயில்களிலும் கொண்டாடுகிறார்கள்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻